திருவனந்தபுரம் : மதம் பிடிக்கும் யானையைக் கட்டுப்படுத்தும் புதிய கருவியை கேரளாவை சேர்ந்த இன்ஜினியர் கண்டுபிடித்துள்ளார்.
கேரளாவில்
கோயில் திருவிழாக்கள், விவசாயப் பணிகளில் யானைகள் அதிகளவில்
பயன்படுத்தப்படுகின்றன. உடல் நலக் குறைவு, கூட்டத்தால் அலர்ஜி, சத்தம்
ஆகியவற்றால் பாதிக்கப்படும் யானைகள் அதை வெளிப்படுத்த வழியின்றி,
வன்முறையில் இறங்குகின்றன. இதுபோன்ற சம்பவங்களால் பாகன்கள், அப்பாவி
மக்கள் பலர் கடந்த சில ஆண்டுகளில் பலியாகினர்.
இதையடுத்து, மதம் பிடிக்கும் மனநிலைக்கு வரும் யானையின் வேகத்தைக் குறைக்கும் கருவியை கண்டுபிடிப்பதில் கேரளாவை சேர்ந்த மாத்யூ என்பவரின் சென்சோ இன்ஜினியரிங் நிறுவனம் ஈடுபட்டது. வயலன்ட் எலிஃபென்ட் கன்ட்ரோல் கியர் என்ற கருவியை இப்போது தயாரித்துள்ளது.இதுபற்றி அந்நிறுவன இன்ஜினியர் ஜேம்ஸ் ஜார்ஜ் கூறியதாவது:
Ôதனது நிலையை சொல்ல முடியாத சூழ்நிலையில் யானைக்கு மதம் பிடிக்கிறது. அது கலவரத்தில் இறங்கும்போது வேகத்தைக் குறைக்க இந்த கருவி உதவும். 6 முதல் 8 கிலோ எடையுள்ள இதை யானையின் பின்னங்கால் ஒன்றில் கட்டி விட வேண்டும். அதிலிருக்கும் நைலான் ஒயரை, மற்றொரு காலில் கட்ட வேண்டும்.
கருவியுடன் தொடர்புடைய ரிமோட்டை பாகன்
வைத்திருக்கலாம். யானைக்கு மதம் பிடித்து ஓடத் தொடங்கினால், ரிமோட் பட்டனை
அழுத்த வேண்டும். கருவி வேலை செய்து, யானையின் பின்னங்கால்கள் வேலை
செய்யாமல் செய்யும். அதனால் ஓட முடியாது.
யானை மிகவும் புத்திசாலி. காலை நகர்த்த முடியாது எனத் தெரிந்தால், ஓட முயற்சித்து விழுந்து காலை சேதப்படுத்திக் கொள்ள நினைக்காது.
அப்படியே நின்று விடும். பிறகு, மதம் பிடித்த யானைக்கு தேவையான விஷயங்களை கவனித்தால், அதை சரி செய்து விடலாம் என்றார்.
இந்தக்
கருவியின் விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்ற போதிலும், அது
ரூ.25,000 வரை விற்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
http://www.dinakaran.com/highdetail.aspx?id=1001