நினைவு பகுதியில் இருந்து மைக்கேல் ஜாக்சன்

11 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Jun 28, 2009, 2:33:15 AM6/28/09
to Rajendra Saravana, K R Mani
நினைவு பகுதியில் இருந்து மைக்கேல் ஜாக்சன்

மும்பை,ஆனி.13

 

சேட்டைக்கார பையன் என்று பள்ளிக்கூடம், பள்ளிக்கூடமாக பந்தாடிய சமயம், அந்த வருடம் தரையிறங்கியது மதுரை பசுமலை சி.எஸ். உயர் நிலைப்பள்ளியில், அழகான பள்ளிக்கூடம் பழைய தேவாலயத்தை பள்ளிக்கூடமாக மாற்றி இருந்தார்கள். (கத்தோலிக்க பிராட்டஸ்டாண்டுகள் சண்டை போலும் ) விடுதியில் கொடைக்கானலில் இருந்து வந்திருந்த பணக்கார பையன்கள். வாக்மேன் காதுமாட்டிகள் சகிதமாக பசுமலை மேல் விடுமுறை நாட்களில் நடப்போம்.

 

டேய் எனக்கும் குடுடா என்று கேட்டு ஒற்றை காதில் மாட்டி கேட்ட ஆங்கில் பாடல் பீட் இட் ஆம் இதுதான் நான் முதல் முதலாக கேட்ட மைக்கல் ஜாக்சன் பாடல் முதல் முதலாக கேட்ட ஆங்கில பாடலும் இதுதான். தலைமுதல் கால்வரை தன்னாலேயே ஆட ஆரம்பித்தது.

அதன் பிறகு 90 களின் லதா அக்கா கொடுத்து விட்டு சென்ற டேப் ரிக்கார்டர், அதில் மதுரை மங்கம்மாள் சத்திரத்தின் முன்பு விற்கும் லேபில் இல்லாத கேசட்டுகளில் மைக்கேல் ஜாக்சன் பாட்டாக கேட்டு வாங்கி சென்று கேட்டு மகிழுவோம். மைக்கேல் ஜாக்சனின் பாடல் கேட்கும் போதெல்லாம் தன்னாலேயே உடல் ஆட்டம் போடும். ஒன்றும் விளங்காது

 

அப்பொழுதெல்லாம் மை நேம் இஸ் சரவணா மட்டும் தான் புரியும், ஏதோ பாடுகிறேர் டக், டச், டொய்ங், டம் என்று இசைசத்தங்கள் வரும் இருப்பினும் ரொம்ப பிடிக்கும்.மெட்ராசை தாண்டி இசை உலகம் என்று தெரியாது, நமக்கு தெர்ந்ததெல்லாம் இளையராஜா, எம்.எஸ்.வி, டி.எம்.எஸ், எஸ்.பி, ஏசுதாஸ், ஜானகி, சித்ரா, அவ்வளவுதான் இந்திபாட்டு கூட காதில் விழுந்ததில்லை.

 

அப்படி இருக்க உலகின் மறுபகுதியில் இருக்கும் மைக்கல் ஜாக்சனுக்கும் இந்த வரிசையில் உயரிய இடம் கொடுத்து இருந்தேன். ஆங்கில பாடகர் யார் என்று கேட்டல் மைக்கேல் ஜாக்சன் வேறு யாருமே இல்லை என்ற நினைப்பும் கூட, மும்பை வந்து ரூயா கல்லூரியில் படித்து கொண்டிருந்த காலம், சில மராட்டியர்கள் மைக்கேல் ஜாக்சன் யேனார்(வரப்போகிறார்) என்றார்கள். நமது சின்ன வயது ஐகான் அல்லவா அந்த நாளை எதிர்பார்த்து இருந்தோம். மும்பை சாகர் விமான நிலையம் போலிஸ்காரர் அவர் ஜாக்சனை பார்க்கும் ஆசையில் எங்களை விரட்டினார். மூன்று மணிநேர காத்திருப்பிற்கு பிறகு பல கார்கள் சொயிங் சொயிங் என்று போனது அதில் எந்த காரில் மைக்கல் ஜாக்சன் போனார் என்று தெரிவில்லை, போலீஸ் காரரும் சேர்ந்து முழித்தார். மறுநாள் மதியம் ஒபராய் ஓட்டல் , மரைன்டிரவ் முழுவதும் கூட்டம் கடலை விற்கும் பையன் முதல் சீப் எக்ஸிகியூட்டீவ் வரை மைக்கல் ஜாக்சனின் ஒரே ஒரு தடவை பார்க்க காத்து இருந்தனர்.

 

எங்களின் ஆசையை வீனடிக்க வில்லை. பால்கணியில் வெள்ளைச்சட்டையின் மீது கருப்பு நிற ஜாக்கேட் போட்டு கொண்டு நாலா பக்கமும் பறக்கும் முத்தங்களை சிதரடித்தார் எல்லோரும் ஜாக்கி, ஜாக்கி என்றார்கள் அப்போதுதான் தெரியும் அவரை எல்லோரும் ஜாக்கி என்று அழைப்பார்கள் என்று நானும் கூட்டத்தோடு கூட்டமாக ஜாக்கி என்றோன். இந்திய நடிகர்களை போல் பந்தா காண்பிக்காமல் நிதானமாக அனைவருக்கு இடது வலது என திரும்பி கை அசைத்தார். கூட்டம் கத்தி கொண்டே இருந்தது. அப்போது அந்த 3 மாடி பால்கணியில் தனக்கே உரித்தான பிரேக் ஸ்டெப்களை சிலவற்றை வீசினார். .

 

இந்த நிகழ்ச்சியை பல மாதங்களாக கல்லூரியில் எல்லோரும் சொல்லி கொண்டே இருந்தார்கள் வராதவர்கள் பாவம் செய்தவர்கள் போல் கேட்டனர். சுமார் அரை மணி நேரம் நிதானமாக போஸ் கொடுத்தார். கூட்டம் கூடிகொண்டே போனது யாரோ சண்டாளன் வி..பி வர அவரிடம் என்னமோ சொன்னார்கள், கையில் ஒரு ஸ்பீக்கர் வைத்து கொண்டு நமஸ்தே மும்பைக்கார் என்றார்(வந்தது கட்சி ஆட்களாக இருக்கும் போல). பிறகு ஆங்கிலத்தில் .லவ் மும்பை என்று

சொல்லிவிட்டு ஒரு பிரேக் போட்டு விட்டு உள்ளே சென்றார்.

 

அந்த .....வ்(aooaw) சூப்பர் அதை எதிர்பார்தோம். அன்றே அந்தேரி ஸ்பேர்ட்ஸ் காம்பிளக்ஸிற்கு ஓடினோம். நன்பரின் புண்ணியத்தில் ஓசியில் ஒரே ஒரு கூப்பன் கிடைத்தது. ஏதோ சுவர்க்கத்தின் பாஸ்போர்ட் போல நினைத்து கொண்டு சென்றேன். 2 மணிக்கெல்லாம் உள்ளே விட ஆரம்பித்துவிட்டார்கள். நம்ம ஊர் ஆர்க்கேஸ்ட்ரா போல் டக், டக் மைக் டெஸ்டிங் எல்லாம் கிடையாது. சரியாக 7 1/2 இருக்கும் திரை விலக்க பட்டது சில நிமிடம் மயான அமைதி புகை மூட்டமாக இருக்க வி போல ஒரு கதவு இடைவெளியில் இருந்து புகைகளின் இடையில் வெளியே வந்தார். (ஏன் இவ்வளவு கஷ்டப்படனும்) ஏதோ சொன்னார்.

 

எல்லொரும் பீட் இட் பீட் இட் என கத்த அவர் கடி சோக் அடித்த ஹவ் பீட் இட் தே ஆர் ஆல் மை பிரன்ட்ஸ் என்று சொல்ல ஒரு சிரிப்பலை, அடுத்த நிமிடம் நம்ம பாட்டி சொல்வது போல் வலிப்பு வந்து விட்டது அவருக்கு மட்டும் அல்ல அங்கு இருந்த அனைவருக்கும் தான், எல்லோருடைய எதிர்பார்பை நிரகரிக்க வில்லை. பீட் இட் பாடலை பாடினார். அதன் பிறகு ......வ் (aooaw) ஹிஸ்டரி, சுமார் 1 அரை மணி நேரம் நேரம் போனதே தெரியவில்லை.

சில பெண்கள் அவருடன் ஆட மேடைக்கு ஏற திமு திமு வென முன்னால் இருந்த பலர் ஏற முயன்றனர். ஆனால் முடியவில்லை இறுதியில் நமஸ்தே இந்துஸ்தான், என்று சொல்லிவிட்டு போய்விட்டார். மறுநாள் முதல் வெகு நாட்கள் மைக்கல் ஜாக்சன் தான இசைக்கு மொழி நாடு கருப்பு சிகப்பு என்று எதுவுமே கிடையாது உதாரணம் மைக்கேல் ஜாக்சன் (just beat it)

 
goldentamilworld (yahoo groups)
 
tamilzan  google groups


ICC World Twenty20 England '09 exclusively on YAHOO! CRICKET--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
michael-jackson.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages