சாபங்களும் அதன் விளைவுகளும்

12 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Jun 28, 2009, 2:12:00 AM6/28/09
to Rajendra Saravana





                                  புனித சவேரியாரின் காலத்தில் நடந்த ஒரு கொடுமைக்கு இதை எழுதுபவரே சான்றாக இருக்கிறார். சவேரியார் காலத்தில் உயர் சாதியினரின் வயலில் வேலை பார்க்கும் ஏழைகள் மிகவும் கடுமையாக துண்புறுத்த பட்டனர். வயல்வெளிகளில் பணிபுரிபவர்கள் குறிப்பிட்ட பகுதியில் அவர்களுக்கு கொடுத்த பணியை அன்று பொழுது சாய்வதற்குள் வேலை செய்து முடிக்க வேண்டும் அப்படி செய்யாதவர்களுக்கு விசித்திரமான தண்டனை ஒன்று கொடுத்து வந்தனர். நிலங்களை குத்தகைக்கு எடுத்து பராமரிப்பவர்களிடம் சொல்லி சரியாக வேலை செய்யாத அனைவரையும் நிலத்தில் படுக்க வைப்பார்கள்(அது பெண்கள் ஆனாலும் சரி குழந்தைகள் ஆனாலும் சரி). அவர்களின் கரங்களை நீட்ட சொல்லி கரங்களின் மீது குதிரைகளின் மீதமர்ந்து கைகளை நசுக்கிவிடுவர். சிலருக்கு விரல்கள் நசுங்கி விடும் சிலருக்கு கரங்கள் நசுக்கி விடும். அந்த காயங்கள் ஆற வெகுநாட்கள் ஆகிவிடும். அந்த காலத்தில் பிஸியோ தொராபி யாரும் இல்லாததால் அவர்களுக்கு விரல்களை , கை மூட்டுகளை அசைக்க சொல்லி யாரும் கூறுவதில்லை, வலியால் காயமுற்றவர்கள் விரல்களை, மூட்டுக்களை அசைக்காமல் இருப்பதால் அவை வாழ்நாள் முழுவதும் மடக்காமல் போய்விடும். இந்த கொடுமைகளை கண்டு கண்ணீர் விட்ட சவேரியார் அவர்களை கடவுள் மன்னிப்பாராக என்று சொல்லி விடுவார்.

ஆனால் அந்த ஏழைகள் எங்களின் கரங்களை சிதைத்தவர்களின் வம்சம் விரல்களில் , கரங்களில் மொழி இல்லாமல் பிறக்கட்டும் என்று சாபம் இட்டார்கள். இதனை தொடர்ந்து அந்த கொடுமைகள் செய்த குடும்பங்களின் குழந்தைகளை இந்த சாபம் பீடிக்க ஆரம்பித்தது. நாளைடைவில் அவர்களின் கண் முன்னே அவர்களுக்கு பிறக்கும் பேரக்குழந்தைகள் கைகளில் மொழி மடக்கும் பகுதி இல்லாமல் நீண்ட எலும்புகளாய் பிறக்க ஆரம்பித்தன. அந்த குழந்தைகள் எந்த ஒரு செயலும் செய்ய இயலாது. சாப்பாடு கூட சாப்பிட இயலாது. இந்த கொடுமைகளை காண சகிக்காத அந்த குடும்ப பெண்கள் பல தான தர்மங்கள் செய்ய ஆரம்பித்தனர். இதன் பயணாக சாபம் கொஞ்சம் கொஞ்சம் குறைய துவங்கியது. சுமார் 4 தலைமுறைகளுக்கு பிறகு அனைத்து விரல்களிலும் மொழி இல்லாமல் பிறக்க ஆரம்பித்தது.

எனது தந்தையாருக்கு 10 விரல்களிலும் மொழியில்லாமல் பிறந்தார். எனது தாத்தாவும் அதே போல்தான். எனது அன்னையை பெற்ற பாட்டி மதுரை புதூர் மாதா கோவில், அழகர் கோவில், மதுரையில் உள்ள தர்க்காகளுக்கு சென்று தான தர்மங்கள் செய்ததால் எனது சகோதரனுக்கும் சகோதரிக்கும் விரல்கள் சரியாக இருக்க பிறந்தனர். ஆனால் அந்த கொடுமைகளின் அடையாளங்கள் மறைந்து விடக்கூடாது என்பதற்காக எனக்கு இரண்டு சுண்டு விரலிலும் மொழிகள் இல்லை. இதனால் எனக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. அதே நேரத்தில் எனது சித்தப்பாவின் குழந்தைகள் மூத்த அண்ணாவை தவிர அனைவருக்கு 4 விரல்களில் மொழி இல்லை.

அவர்களின் பெண் குழந்தை ஒருவருக்கு சுண்டு விரல் தவிர மற்ற விரல்களில் மொழி இல்லை. மும்பையில் இருந்த அவரை தமிழகத்தில் திருமனம் செய்து கொடுத்தனர். (அவர் வாளியை தூக்கும் போது, கோலம் போடும் போது பார்க்க பரிதாபமாக இருக்கும்)

பொதுவாக ஆண்களின் வாரிசிற்குத்தான் இந்த சாபம் தொடரும் என்பார்கள் ஆனால் அந்த சகோதரியின் ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண்குழந்தை இருவருக்கும் என்னை போன்றே ஒரு சுண்டு விரலில் மொழி இல்லாமல் பிறந்து இருக்கிறது. நானும் முதலில் இவற்றை ஜீன் குறைபாடு என்று நினைத்து கொண்டேன்.

 

சிறுவயதிலும் பெரியவன் ஆனதும் எங்களது குடும்பு உறுப்பினர்கள் சொல்லும் போது .

எனது பாட்டி(அம்மாவை பெற்றவர்கள் மதுரையில் எங்களின் சாபம் தீரவேண்டி அழகர் வரும் போது அவருடன் வரும் மக்களுக்கு உணவு, குடிக்க தண்ணீர், போன்றவற்றை கொடுப்பார்கள். அவர்கள் மறைந்த பிறகு எனது பெரியம்மா பெரியப்பா மதுரை கே. புதூர் (கோசாகுளம் புதூர்) டி.ஆர். காலனியில் அழகர் நுழையும் போது ராஜரத்தினம் சிதம்பர வடிவு மண்டப படி அமைத்து வருடாவருடம், அழகர் வரும் போது எதிர்சேவை செய்வார்கள். கடவுள் இருப்பார் இல்லை அது வேறு விடயம்

ஆனால் மனிதர்களை துண்புறுத்தும் போது அவர்கள் விடும் கண்ணீர் இன்று 17 தலைமுறை கடந்தும் சாட்சியாக நிற்கிறது.


 
goldentamilworld (yahoo groups)
 
tamilzan  google groups


Yahoo! recommends that you upgrade to the new and safer Internet Explorer 8.



--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Reply all
Reply to author
Forward
0 new messages