அதிரை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வர்களில் ஒருவரும்,
தமிழ் கணினியுலகில் யூனிகோட் எனும் தானியங்கி எழுத்துரு (Font)
மேம்பாட்டிலும் இன்னும் பல கணினி சாதனைகள் படைத்தவரும்,
கல்வியாளருமான உமர் தம்பி அவர்கள் இன்று மாலை 5:30 மணியளவில்
மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.
உமர் தம்பி அவர்களின் சாதனைகள் தமிழிணையப் பயனாளர்களுக்கு
மிகவும் பயனுள்ளதாகவும், நுணுக்கமான யுக்திகளைக் கொண்டதாகவும்
உள்ளன.
வலைப்பூக்கள் என்று அறியப்படும் Blogs இல் தமிழில் எழுதப்படும் பதிவுகள்
உமர்தம்பி அவர்களின் இணைய மென்பொருள் உதவியுடன் மிகச்சிறப்பாக
அனைத்து வகை கணினியிலும் தெரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதாகும்.
உலகத் தமிழர்களின் வலைப்பூக்களை திரட்டும் தமிழ்மணம்.காம்,
(www.thamizmanam.com) உமர் தம்பி அவர்களின் செயலியைப் பயன்படுத்தும்
முன்னணி தளமாகும்.
இவற்றுடன் தமிழ் இணைய அகராதி, யூனிகோட் உருமாற்றி, தமிழ் ஈமெயிலர்,
தேனிவகை எழுத்துறுக்கள் ஆகியவை உமர் தம்பி அவர்களின் இலாப
நோக்கற்ற தனிப்பட்ட படைப்புகளாகும்.
மேலும் நமது இணைய தளத்திலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.
இவை மட்டுமின்றி தமிழாயாஹூ குரூப், மரத்தடி டாட் காம், ஈ சங்கமம் ஆகிய தமிழர்
குழுமங்களிலும் இணைய தளங்களிலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.
உமர் தம்பி அவர்களின் இணைய மென்பொருட்களை கீழ்கண்ட சுட்டிகளில் காணலாம்.
http://www.geocities.com/csd_one/UniConMagz.zip
http://www24.brinkster.com/umarthambi/tamil/ETamil_search.asp
http://www.geocities.com/csd_one/fonts/
உமர் தம்பி அவர்களின் இழப்பு அதிரைக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கும் ஏற்பட்ட
பேரிழப்பு என்றால் மிகையில்லை.
அல்லாஹ் அன்னாரின் நற்கருமங்களைப் பொருந்திக் கொண்டு, உயரிய சுவர்க்கவாழ்வை
வழங்குவானாக. ஆமீன்.
---------------------------------------------------
அருமைநண்பர் உமர்தம்பியிடம் நான் பழகியிருக்கிறேன்.
யுனித்தமிழைப் பொருத்தவரை எதைக்கேட்டாலும் உடனே
செய்து அனுப்புவார்கள். எழுத்துச்சீர்மை எழுதுருக்கள்
பலவும் அவர் எனக்குக் கொடுத்தார்.
இளம்வயதில் மறைந்த அன்னார் இழப்பு குடும்பத்தாருக்கும்,
தமிழ்கூறும் நல்கணி உலகுக்கும் ஈடுசெய்ய முடியாதது.
இறையருள் அவர் குடும்பத்தாருக்குத் துணை நிற்பதாகுக.
நண்பர் உமரையும் அவர் நினைவுகளையும்
போற்றி வணங்கும்,
நா. கணேசன்
ஹூஸ்டன், டெக்சாஸ்
உமரின் அதிராம்பட்டணம் வீட்டு போன் நம்பர்
அனுப்ப முடியுமா? நன்றி.
இறைவா,இணையம் உள்ள வரை உமருக்கு
ஒரு அழிவும் இலமேலும் சாதனைகளை படைக்கவேண்டியவனை உன்னருகில் அழைத்துகொண்டாயே. ஏன்?அவர்களது குடும்பத்திற்கு என் ஆழந்த அனுதாபங்கள்.சிவமுருகன்
On 7/13/06, Chandra sekaran < plastic...@gmail.com> wrote:அவர்களது குடும்பத்திற்கு ஆழந்த அனுதாபங்கள்.--
Chandrasekaran
உமர் அவர்களின் ஆன்மசாந்திக்கும் அவர் குடும்பத்தாருடைய ஆறுதலுக்கும் என்
பிரார்த்தனைகள்.
அன்புடன்
சேதுக்கரசி