எதிர்கால மின் உலகம்

22 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Jul 6, 2009, 4:50:54 AM7/6/09
to Rajendra Saravana


எதிர்கால மின் உலகம்

 

                                                 நமது தாத்தாவின் காலத்தில் டிரான்ஸிஸ்டர் பெட்டிகளில் கட்டை பேட்டரி எனப்படும் செல்களை பார்த்திருப்போம். இவற்றில் உள்ள கார்பன் ஸ்டிக்(கரிக்குச்சிகளில்) நேர் மின்அணுக்கள் அதனை சுற்றி மெல்லிய அறிதிற்கடத்தா வேதியல் முலாம் பூசி வேதிபொருட்கள் அடங்கிய கரிம துகள்களை போட்டு அதை அடைத்து விடுவார்கள். இந்த துகள்களில் எதிர் மின்னேற்றம் பொதிந்து இருக்கும். அதன் பிறகு அமிலங்களில் நேர் மின் எதிர் மின் துகள்களை பொதிந்து பேட்டரிகளாக பயன்படுத்தினர். ஆனால் இவைகள் மீள் மின் ஏற்றம் செய்ய முடியாதவைகளாக இருந்தன. இவற்றை ஒருமுறை பயன்படுத்திய பிறகு அவற்றை தூக்கி எரிந்து விட வேண்டும். (இந்த பேட்டரிகளால் சுற்றுப்புற சூழல் கேடு ஏற்படுவதில்லை).

 

ஹிட்லர் காலத்தில் ஒரு புரட்சி நடந்தது. எலக்ட்டான் மின் துகள்களை நேரடியாக மின் ஏற்றம் எப்படி செய்யலாம் என்று ஆராய்ச்சி நடந்து எதற்கு தெரியுமா எதிரி படையினரை மின்சார தாக்குதல் கொடுத்து செயல் இழக்க செய்வதற்காக இந்த ஏற்பாட்டை செய்தனர். ஆனால் இந்த செயல் தோல்வியில் முடிந்தது.

 

அதன் பிறகு இந்த சோதனை 2000 வரை செய்ய வில்லை. இந்த நிலையில் 80 செல்லுலார் உலகம் தோன்றியது. இதற்கு முதலே கம்பி இல்லா தொலைபேசி, வாக்கி டாக்கி போன்றவை தோன்றிவிட்டன. ஆனால் இவை யாவற்றிலும் இருந்து புதிதாக உருவான ஒரு பரிமானம் செல்லுலார் போன் உலகம்.

 

பின்லாந்தில் முழுமையாக்கபட்ட செல்லுலார் புரட்சி இன்று எங்கோ சென்று விட்டது. இந்த செல்லுலார் போன்களுக்கு மின்சாரம் தேவை.  பேட்டரிகள் தயாரிக்கும் பணி நாளொரு சோதனை மூலம் தினமும் ஒவ்வொரு சோதனைகளில் மின்சார சேமிப்பு பேட்டரிகள் வருடத்திற்கு புதிய பரிமாணத்துடன் தோன்றிகொண்டே வந்தது. இந்த நிலையில் புதிய பரிமாணமாக (உதாரணம் லாப்டாப்) பல பொருட்கள் தோன்ற பேட்டரிகளின் அவசியம் நாளுக்கு நாள் தேவையாகிகொண்டே போனது. இதனை அடுத்து தனிம அட்டவனையில் செறிவூட்டம் அதிகமான தனிமங்கள் இந்த பரிசோதனைக்கு எடுத்து கொள்ளபட்டனர்.

 

விளைவு லித்தியம் பேட்டரிகள். லித்தியம் எளிதில் தன்னுள் பன்மடங்கு எலக்ட்ரான்களை சேமிப்பவைகள்.  உங்கள் செல்பேன் பேட்டரிகளில் உள்ளே என்ன இருக்கிறது தெரியுமா எலக்ட்ராணிக் உபகரணம் மொபைல் இனைப்பில் மின்சாரம் செலுத்தும் பேட்டரிகளில் நுணிப்பாகத்தில் மட்டும் தான் உள்ளது.

 

1, நேர் எதிர் பகுப்பான்கள்.

 

2, ஏற்றபட்ட மின்சாரம் வெளியேறாமல் கட்டுப்படுத்தும் டிவைஸ்கள்,

 

3 சரிசமமாக மின்சாரத்தை நேர் எதிராக பிரித்து சேமிப்பானில் செலுத்தும் டிவைடர்கள்,

 

4, மின் ஏற்றம் முடிந்தது என மொபைலுக்கு  அறிவிக்கும் சர்க்கியூட்டுகள் போன்றவைகள் மட்டும் தான் எலக்ட்ரான் சாதனங்கள்.

 

இவை அனைத்தும் 4 அரிசிக்குள் அடக்கிவிடலாம். மற்றவை எல்லாம் கடினமான அலுமனிய தகடுகளுக்குள் இரட்டை அடுக்கு பாதுகாப்பு பாலிமர் வலை அதன் பிறகு , லித்தியம் தகடுகள் இந்த தகடுகளில் மெல்லிய கார்பன் துகள்களால் ஆன போர்வை போர்த்தபட்டு நேர் எதிர் மின் ஒட்டம் ஒன்றாக சேர்ந்துவிடாமல் இருக்க பாலிவினைல் போர்வை போர்த்தபட்டு இருக்கும்(பிளாஸ்டிக் உரை).

 

லித்திய தணிம தகடுகளிள் குறிப்பிட்ட காலம் வரை தன்னுள் எலக்ட்ரான்களை கொடுத்து எடுத்து வைக்கும் குணமுள்ளவைகள். பொதுவாக நோக்கியா தயாரிப்புகளுக்கு (தரமானவைகளுக்கு 4 வருடம் வரை) பிற பேட்டரிகளுக்கும் இதே போல் தன்மை இழக்கும் வருடம் வரைமுறை படுத்த பட்டு இருக்கும்.

 

தற்போது புதிய கண்டுபிடிப்பு ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது. லித்தியத்தை விட புதிய எலக்ட்ரான் செறிவுள்ள தனிமங்களை துகளாக்கி அதில் நேர் எதிர் மின் செறிவூட்டம் செய்யும் போது அவை எவ்வாறு பயன்படுகிறன என்ற சோதனை இந்த சோதனை ஆச்சர்யபடும் அளவிற்கு முன்னேற்றம் கண்டு வருகிறது.

 

அதாவது நமது வீட்டு சுவர்களில் பூசும் வண்ணகலவைகளில் இந்த எலக்ட்ரான் செறிவூட்டம் கொண்ட தனிமகலவைகளை கலந்து பூசி விட்டு அந்த கலவைகளில் புறஊதா கற்றைகளை சேமித்து அவற்றின் பட்டைகளை பொதித்து விட்டால் நாம் இனி மின்சார ஒயர் மற்றும், குழாய் விளக்கு குழல் விளக்கு சமீபத்தில் வந்த சுருள் விளக்குகள் எதுவும் தேவையில்லை.

 

விரல் தடவலில் புற ஊதாகதிர் பட்டைகளில் மின்னேற்றம் பெற்று இரவில் நமது வீட்டில் பவுர்ணமி நிலவு ஒளியை கொண்டு வரலாம். குளிர்ந்த சூரிய ஒளியை கொண்டு வரலாம், கண் சிமிட்டும் நட்சத்திரத்தை கொண்டு வரலாம். வண்ணபட்டைகளின் வண்ணங்களை பொருத்து நாம் நமது எண்ணம் கேட்க்கும் நிறத்தில் வெளிச்ச வெள்ளங்களை துளியும் வெப்பம் இன்றி கொண்டு

 

வரலாம். இனி தெருவிளக்குகளில் விளக்குகள் இருக்காது தெருவிளக்காக அமைந்த கம்பங்களே

 

செறிவூட்டபட்ட மின் ஏற்ற பூச்சுகளாலும் வண்ண கதிர் பட்டைகள்(மின் ஏற்றப்பட்டவுடன் ஒளிர

 

துவங்கும்படி அமைக்கபட்டு இருக்கும்) இவைகளுக்கு மின்சார இணைப்பு மின் ஏற்றம் ஆகியவை

 

தேவையில்லை சூரியனில் இருந்து தன்னேலேயே இவை மின் ஏற்றம் பெற்றுவிடும். டில்லி பல்கலைகழக

 

மின்னியல் துறை ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது அதாவது வெட்டவெளியில் காற்றில் உள்ள

 

செறிவூட்டம் அதிகம் கொண்ட தனிம அணுக்களில் மீது மின்ஏற்றம் கொடுத்து அவற்றில் இருந்து

 

மின்ஒளிக்கதிர்களை வெளியிட ஆய்வு செய்து வருகிறது. இது வெற்றி பெற்றால் திருமன வீடானாலும் மற்ற எந்த வீடானாலும் சரி வண்ணவண்ண விளக்குகள் நமது முன்பின் அலைபாய்ந்து கொண்டு இருக்கும். சில நேரங்களில் நமது சூவாசத்தில் கூட சென்றுவிடும் இதானால் நமக்கு ஒன்றும் செய்யாது. இதனால் சுற்றுப்புற சூழல் வெப்பம் முற்றிலும் ஏற்படாது. ஆனால் இதற்கான செலவு தற்போது இதை நடைமுறைக்கு கொண்டுவரமுடியாதாவாறு செய்கிறது, எதிர்காலத்தில் அணுக்களில் மின் ஏற்றம் செய்ய எளிய சாதனம் வந்தால் இவை எல்லாம் சாத்தியம்.

இனி மின்சார ஒயர் இல்லாத  வீடுகள் சாத்தியம், அதிக காலம் காத்திருக்க வேண்டாம்.

சரி கையில் உள்ள செல்போண்கள் என்ன ஆகும் ஒன்றும் ஆகாது சிறுமிகள் காதில் போடும் தொங்கட்டானாக மாறிவிடும். நாம் யாரிடம் பேசவிரும்புகிறோமே அவரது பெயரை நமது காலரில் பொருத்தி இருக்கும் ரிஸிவர் பேடில் சொன்னால் போதும் சில மணித்துளிகளின் காதில் அவர் வணக்கம் சொல்வார்.  இது கனவு உலகமல்ல இனிவரும் புதிய நினைவு உலகம்.

அனுமின் ஏற்ற சோதனைகள் வெகுவேகமாக நடந்து வருகிறது. ஏன் ஏன்றால் குளோபல் வார்மிங் பயமுறுத்துகிறது.

 

"கோழி கூவி வெளிச்சம் வந்ததோ இல்லையோ கோழி இறகு தடவி வெளிச்சம் வரும்  இனி"

 
goldentamilworld (yahoo groups)
 
tamilzan  google groups


Love Cricket? Check out live scores, photos, video highlights and more. Click here.



--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Li-Ion_big.gif
Reply all
Reply to author
Forward
0 new messages