உலக மதங்களின் வேர்

68 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Jul 8, 2009, 11:25:36 AM7/8/09
to mumb...@gmail.com, karur...@gmail.com, tamilra...@gmail.com, K R Mani


 

உலக மதங்களின் வேர்

 

சிவா,  சைவா, சவா, ஷன் வாங், சைந்த் போன்ற போன்ற பெயர்கள் உலகெங்கும்   பயன்பட்டு வருகின்றன இந்த அத்தனை பெயருக்கும் ஒரே பொருள், Empty other wise God/Shiva/Allah   வணங்குபவர்கள்,

In India Shiva means Energy Holding god சக்தியை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு கடவுள்

 

சவா (shava) திபத்தியர்கள் என்றால் தன்னை மறந்த நிலை, இயற்கையோடு வாழும் நிலை, அனைத்திற்கு அப்பாற்பட்டு நிற்பது, அனைத்தையும் தன்னுள் அடக்குவது,

 

Middle East     ஷான் வாங் தூய்மையான போதகர் (முற்றிலும் துறந்த துறவி, அடையாளம் இல்லாதவர் (இவரை மாதிரி என்று சொல்ல முடியாதவர்-உருவமில்லாதவர்) கவலையில்லாதவர் (அதாவது தான் படைத்தது ஆடுகிறது ஆடட்டும் இறுதியில் என்னிடம் தான் வரும்) (கூத்தும் இசையும் கூத்தின் முறையும் காட்டுபவர்)

 

Saint சைந்த் -இது ஆங்கிலத்திலும் சரி லத்தினிலும் சரி கீரிஸிலும் சரி மொத்தம் 1000 மேற்பட்ட விளக்கங்கள் இருக்கிறன. அனைத்தும் சூரியன், மையமான ஒரு பொருள், அடக்கி ஆள்பவன் சூய்மையானவன்

 

 Asia Minor/ Eurasia     ஹிப்ருவில் சைன் என்றால் சூரியன் என்று பொருள் அதாவது சன் என்று சூரியனை குறிக்கும் சொல் கூட சைந்த என்பதன் கால மாற்ற சொல்,

 

திங்களை சூடியவன் என்று நாம் பொதுவாக சொல்கிறோம், திங்கள் எதற்குள் அடக்கம் ஞாயிறு இல்லை என்றால் திங்கள் உண்டா, இந்த வார்த்தைபடி பார்த்தால் திங்களை அடக்குவது ஞாயிறு துவக்கம் எங்கே? பால் வழி மண்டலத்தின் ஒரு ஓரத்தில், பால்வெளி மண்டலம் பேரண்டம், பேரண்டம் பிரபஞ்சம், பிரபஞ்சம்சிவன், சிவன். சிவன் இருந்தும் இல்லாதவன்இதைத்தான்

 

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி, உண்மையுமாய் இம்மையுமாய்

கோனாகி யான் என (கோ-King)

 

 என்று குறிப்பிடுகிறார் வள்ளார் 

 

உலகில் இறைவனை குறிக்கும் அத்தனை சொற்களும் ஒன்றை மட்டுமே மையமாக வைத்து இருக்கிறன. அதாவது ஒன்றுமில்லாதது, ஆனால் அதில் அனைத்தும் அடங்குவது. எளிமையாக சொல்லப்போனால் தீபத்தை பாருங்கள் மஞ்சள் ஒளி, அதன் கீழே இளம் சிவப்பு அதன் மெல்லிய மஞ்சள் அதன் பிறகு கரிய நிற திரி, இந்த திரி இல்லை என்றால் எண்ணை/நெய் இருந்து என்ன பயன்.

 

தற்கால அறிவியல் என்ன சொல்கிறது block hole  தத்துவம் சொல்கிறது. பிரபஞ்சம் முழுவதும் 90% கருமை வெறும் 10% மட்டும் தான் ஒளி என்கிறது. அதாவது நமது விளக்கு தத்துவம்.

 

ஹராப்பா காலமானாலும் சரி, மாயா யுகமானாலும் சரி, எகிப்திய நாகரீகமானாலும், சரி அல்லது கிரேக்கர்களின் இரும்பு ஆட்சி ஆனாலும் சரி இந்த அத்தனை நாகரீக யுகத்திலும் ஒன்று மையமாக இருந்தது அதை அவர்கள் பின் பற்றி வந்தார்கள் (கும்பிட்டு வந்தார்கள்) ஹரப்பாவில் தோன்றிய சூரிய வழிபாடு இன்று பொங்கலாக மாறி இருக்கிறது. எகிப்தின் பிரபல சூரிய கோவில் தான் முதல் முதலில் கட்டிய கோவில், ஸிபிங்ஸ் அனைத்தின் முகங்களும் சூரியனை நோக்கித்தான் இருக்கிறன. மாயா நாகரீகத்தில் சூரிய கோவில் தான் பிரதானம் இறந்தவர்களை கூட கிழக்கு நோக்கித்தான் புதைத்தனர். கிரேக்கர்களின் சன் கடவுள் தான் இன்று சன்டேவாக மாறி இருக்கிறது.

இந்துக்களின் கொள்கையின் படி

உலகமே சிவமயம் சிவமே உலக மயன் என்றால் சிவன் உருவமில்லாதவரா என்றால் இல்லை, சிவன் என்பது இல்லாதது மாற்றமில்லாது         (true-eternal/everlasting/never changing)             சும்மா ஒன்றுமில்லாத பொருளுக்கு மதிப்பு உண்டா என்றால் இல்லை, அப்படி என்றால் அந்த ஒன்றுமில்லாத பொருளில் என்ன இருக்கிறது சக்தி .

 

சூரியனை எடுத்து கொண்டால் நெருப்பு வட்டம் நமது கண்ணுக்கு தெரிகிறது. அதனுள் ஹைட்ரஜன் அணுக்கள் பிரளயம் ஹீலியம் பிறகு ஹைட்ரஜன் என சுழற்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சுழற்ச்சி தான் சக்தி (எனர்ஜி) இந்த சக்தி எனர்ஜி இல்லாமல் சூரியன் ஒரு காற்று போன பலூனாக போய்விடும். ஆனால் சூரியனின் இந்த சுழற்சி ஒரு நாள் முடிவடையும் அப்போது என்ன நிகழும் நாம் பார்க்கிறோமே கிழக்கு பகுதியில் வியற்காலையில் சிவப்பான அழகான ஒளிவட்டம் அது பல்லாயிரம் மடங்கு பெரிய உருவமான மாறிவிடும் (Dead star) அதை பார்க்க நாமெல்லாம் இருக்கமாட்டோம் ஏன் என்றால்  பூமியே இருக்காது .

 

சூரியன் தனது குடும்ப உறுப்பினர் அனைவரையும் தன்னுள் இழுத்துவிடுவான்.  பிறகு பெரிய வெடிப்பு ஒன்று நிகழும் தன்னுள் இழுத்த அனைத்து பொருட்களும் (Energy/Mass) அண்டவெளியில் வீசி எரியப்படும். இது வந்து ஒரு உதாரனம் தான் சூரியன் பிரபஞ்சம் என்று இந்த இடத்தில் வைத்து கொண்டால் இது தான் பெருவெடிப்பு கொள்கை (big bong theory) எரிய பட்ட பொருட்கள் அனைத்தும் மீண்டும் ஒன்று சேரும், பிறகு கேலக்ஸி, அதன் தூசுகள், தூசுகள் இணைந்து அழுத்ததில் வெப்பமடைந்து உருவாவது நட்சத்திரம், பிறகு மீண்டும் ஒரு உலகம்.

 

சிவம் பிரபஞ்சம் சக்தி அதன் துகள்கள், இதைதான் நாம் சக்தியில்லையேல் சிவமில்லை சிவமில்லையேல் சக்தியில்லை என்கிறோம். அப்படி என்றால் சிவன் இமயமலைக்கு ஏன் வந்தார். இந்தியாவில் மட்டும் ஏன் கும்பிட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் முதலில் கெடுத்து இருக்கும் பல மொழி விளக்கம். வார்த்தை வேறு வேறு ஆனால் அதன் பொருள் ஒன்றுதான்.

 

பிறகு ஏன் சுடுகாட்டு சாமியார் என்கிறார்கள். பேய்களுடன் உலவுகிறவன் என்கிறார்கள் என்ற கேள்விக்கு எளிய பதில் சுடு+காடு= சுடுகாடு, பிணங்களை சுடும் காடு என்று இதன் பொருள் என சின்ன குழந்தை கூட சொல்லிவிடும் ஆனால் உண்மை அதுவல்ல சூடான இடம் என்று உண்மை பொருள். பசி துகள்கள் சூடான பிறகுதானே நட்சத்திரம் உருவாகிறது. தாயின் கற்பம் என்ன -டிகிரி செல்சியஸிலா இருக்கிறது. தாயின் கற்பத்தில் 9 மாதம் இருந்த நாம் அதே அளவு சூடுடைய ஒரு அறையில் ஒரு மணிநேரம் இருந்து பாருங்கள். ஆரம்ப இடமும் சுட்டான காடுதான் (கர்ப்பபை) இறுதியில் சேரும் இடமும் சுடுகாடுதான்.

 

இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள வாழ்க்கை அதில் ஆட்ட ஓட்ட சிரிப்பு அழுகை கூப்பாடு கொண்டாட்டம், எல்லாம் யாருக்கு உட்பட்டது.

 

சிவன் எப்பயுமே கஞ்சா அடிக்கும் சாமி ஆமா கஞ்சா என்பது ஒரு போதைப்போருள் அதை இந்தியாவில் உள்ள (சோம்பேரிகள் உழைக்க பயந்து பிச்சை எடுப்பவர்கள்) சாமியார்கள் வெறுமனே இருந்தா போரடிக்கும் சாமி பேரசொல்லி கஞ்சாவாவது அடிக்கலாமே என்று இவர்களாகவே கஞ்சாவை தேர்தெடுத்தார்கள். எங்க ஊர் உய்க்காட்டன் சாமி, மாடன், சுடலை  எல்லாம் பட்டை சாராயம் அடிக்கும் (இப்ப டாஸ் மாக்).

 

நரம்புகளை மழுங்க அடிக்கும் வேதி குணங்கள் கலந்த திரவம், மற்றும் இயற்கையிலேயே சில இலைகளின் வேதியல் குணங்கள் அந்த இலைகளை உண்பதை விட அந்த இலைகளை எரித்து அதன் புகையை சுவாசித்தால் நரம்புகள் தங்களின் இறுக்கத்தை தளர்த்தி உடலுக்கு ஒரு வித உற்சாகமான நிலையை தரும். (போதை) இதைத்தான் திபெத்தியர்கள் சவா நிலை என்பார்கள்.

 

நம்ம ஊர்களிலும் சொல்வார்கள் குடிச்சு புட்டு சவம் மாதிரி கிடக்கிறான் என்று. சவா நிலையில் இருந்தாலும் உள்ளுள்ள பொருட்கள் எல்லாம் அது அதன் பணியை செய்து கொண்டு இருக்கும் சிந்தனையை தவிர சிவன் சிந்திக்க மாட்டான்.

 

சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது அதுதான் சக்தி செய்து கொண்டு இருக்கிறதே, அதாவது நம்முள் சிந்தனையாக இருப்பதுதான் சிவன் மற்றதெல்லாம் சக்தி. சிந்தனை என்பது மனது மனதில் இருக்கும் மனசாட்சி இதை சிலர் ஆண்மா என்றும் கூறுவார். பிரம்ம சக்தி என்ன சொல்கிறது நமது நெற்றியின் மத்தியில் எல்லாம் அடக்கம் என்கிறார்கள். நாம் அங்கே தானே பொட்டு வைக்கிறோம், நமது சிந்தைனையில் இறைவன் இருக்கிறார். உடலின் எந்த பகுதியில் சிந்தனை இருக்கிறதென்று தெரியாத காலம் அதனால் பொதுவாக நெற்றியை தேர்ந்தெடுத்தார்கள். ஏன் என்றால் தூங்கும் போதும் இதயம் இயங்குகிறது இயங்கும் பொருளில் சக்தி இருக்கும்(energy) 

 

ஆனால் ஆண்மா அமைதியாகி விடுகிறது. அதனால் அவர்கள் நெற்றியை தேர்ந்தெடுத்தார்கள். சமீப ஆய்வுகளின் படி சிந்தனையை தூண்டும் நரம்பு முடிச்சுகள், வலப்புற மூளை நீள்வேட்டு பாகத்தின் முன்னால் உள்ள கொழுப்பு படிவங்களில் இருந்து துவங்குகிறது என்று கண்டறிந்து விட்டனர். அதாவது நமது நெற்றியின் நேர் கோட்டு பகுதியின் பின்புறம்.

 

இதைத்தானெ ஔவை பாட்டி சிவன் தொண்டர் உள்ளங்களில் அடங்குவர் என்று சொல்லி இருக்கிறார்.

 

சிவனின் ஆரம்ப உருவம் லிங்கம், சிவனுக்கு உருவம் கொடுக்க முடியாது.  லிங்க உருவம் ஏன் தந்தார்கள். சிலர் மட்டமான உவமை சொல்வார்கள். ஆனல் உண்மை ~ஒரு நுலை எடுத்து கொள்ளுங்கள் சிவலிங்கத்தின் ஆரம்பம் என்பது லிங்கம் தாங்கும் வளையத்தின் உள்ளே இருக்கிறது. அதாவது அதன் அடி தெரியாது அதனால் லிங்கம் வெளியில் தெரியும் பகுதியில் இருந்து நூலை இணைத்து அதனை லிங்கத்தின் மீது கொண்டு வாருங்கள் முடிவு எங்கே நூல் நேராக மறுமுனைக்கு லிங்கம் தாங்கும் பகுதியில் முடிகிறது. அதாவது அதன் அடியையும் நம்மால் காணமுடியவில்லை முடியின் எல்லையையும் நாம் காணமுடியவில்லை.

 

இதைதான் அடி முடிகான அந்தகாரா (நர்மதா நதி தோன்றும்) இடத்தில் உள்ள சிவலிக்கத்தின் பெயர் அந்தகாரேஸ்வர். இந்த அந்தாகாரேஸ்வர் சன்னதியில் தான் தாழம்பு அண்ணவடிவில் முடியை காண சென்ற பிரம்மனை சந்தித்தாக சொல்கிறார்கள்.

 

உலகம் எங்கும் நாகரீகம் தோன்றிய உடன் பிரபஞ்சத்தின் சக்தியை மக்கள் உணர்ந்து கொண்டனர்.  இதனால் தான் உலகம் எங்கும் இறைவனுக்கு உருவம் தராமல் உருவமற்ற வழிபாடு தோன்றியது தோன்றியது.

 

இந்த நிலையில் தான் இந்தியாவில் (உருவமற்ற வழிபாடு) சிவகோட்பாட்டிற்கு எதிரான புதிய கோட்பாடு உறுவானது. இந்த கோடுபாடு ஏன் உறுவானது என்பதற்கு சரியான விடை கிடைக்கவில்லை. ஆனால் எளிதான ஒரு உதாரணம் என்ன வென்றால் ஒரு பிரபல கட்சி இருக்கிறது, அதில் சில பொறுப்புகளை முக்கிமானவர்கள் எதிர்பார்க்கின்றனர், அது கிடைக்காமல் போகவே தனியாக பிய்த்துகொண்டு அந்த கட்சியின் கொள்கைகளை தங்களது கொள்கைகளாக மாற்றி அதில் சில மசாலாக்களை சேர்த்து நாங்கள் தான் உண்மையான அந்த கட்சி என்கிறார்கள். பிறகு தாங்களுக்குள்ளே அடித்து கொள்கின்றனர், (Encyclopedia of ethics and world  religion: Volume 12 (Se – Vn)) வைனவம் இப்படி தோன்றியதாகத்தான் இருக்கும் என்று இந்த புத்தகம் சொல்கிறது.. 

 

இதை நிறுபிக்கும் விதமாக வைணவம் தழைத்தபிறகு சிவ கோட்ப்பாடுகளை உடைக்கும் பணி கடுமையாக நடந்து கொண்டு இருந்தன. ஆனால் இல்லாத ஒன்றை எப்படி உடைக்க முடியும் அதனால் அதை பின்பற்றும் மக்களை குழப்பும் வேலை ஜரூராக நடந்து வந்தது. சுமார் கி.மு 1200-இருந்து 900 வரைக்குள் வைணவ கோட்பாடுகள் இயற்றபட்டன. சிவ கோட்பாட்டை அறியமுடியாமல் அந்த கோட்பாட்டை தனதாக்கிகொள்ள முற்பட்டனர் ஆனால் அது இன்றுவரை முடியவில்லை.

 

கீதையில் கூட நானே அனைத்திலும் உடையவன் என்றார் கிருஸ்னர் ஆனால் அவர் எதில் என்று கூறவில்லை அதாவது பிரம்மனை படைத்ததும் நானே என்று சொன்னவர் அந்த படைக்கும் திறன் எனக்குள் எங்கிருந்து வந்தது என்று குறிப்பிடவில்லை. காரணம் எழுதியவருக்கு அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. பழைய ஏற்பாடு போலவே

 

ஆதியில் எங்கும் இருளாக இருந்தது இறைவன் வெளிச்சம் வரக்கடவது என்றார் ( ஜான் 1:1~9) என்று வருமே? அந்த இடத்தில் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் இல்லை அதாவது அந்த இறைவன் எங்கிருந்து வந்தார்.

 

இதைபோல் தான் கீதையும் நானே அனைத்தையும் படைத்தேன் நானே அனைத்திலும் உள்ளேன் உன்னை யார் படைத்தது என்ற கேள்விக்கு அங்கு பதில் இல்லை.

 

அனைத்தும் என்னுள் இருந்து வந்தது நான் யார் என்று கண்ணனால் சொல்ல முடியவில்லை அப்படி சொன்னால் அது சிவ கோட்பாடு,

 

அதை விட்டு வேறு ஒன்று புதுமையாக எழுத முயன்றார்கள் இதனால் தான் 9 அவதாரங்களை எழுதி பார்த்தார்கள் ஆனால் இறுதிவரை முடியவில்லை.

 

வைணவ கோட்பாடு உண்மைக்கும் பொய்மைக்கும் (தர்மம்-அதர்மம்) உள்ள வேறுபாடுகளை விளக்கவந்தது. ஆனால் அதை பிறகு சிவ கோட்பாட்டிற்கு எதிராக திருப்பிவிட்டார்கள் என்றும் சொல்பவருண்டு.

 

உலகின் மற்ற நாடுகளில் இந்த (சி வா, சை வா, ச வா, ஷன் வாங், சைந்த்) கோட்பாடுகளை மாற்ற விரும்பவில்லை. ஆனால் அந்த கோட்ப்பாட்டின் கிளைகளை உருவாக்கினார்கள். இதுதான் கிருஸ்தவம், யூதம், இஸ்லாம், கான்பூஸியஸ்,ஹிண்டோயிசம், சு பியிஸம், அதனால் தான் அந்த இவை இயற்கையின் கோட்பாட்டை விட்டு வெளியே சென்ற மக்களை குழப்பவில்லை,

 

திருமறையில் ஒரு வாக்கியம் வரும்

 

நீங்கள் அறிந்து கொண்ட உண்மையில் பொய்யை கலக்காதீர்கள், உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் (அல்பகரா பகுதி 1 அத்தியாயம் 2:42)

 

திருக்குரானின் இந்த ஒரு அத்தியாயமே போதும் அதாவது உண்மை நமக்கு தெரியும், நம்மால் அறிய முடியாது. நாம் இருக்கும்

 

ஜனனத்தில் இருந்து மரணம் வரை இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் நடக்கும் நன்மை தீமைகளை விளக்குவதற்காக தோன்றிய வைணவ பிற்காலத்தில் சிவ கோட்பாட்டை உடைக்க முயல இன்று இந்திய துணைகண்டம் முழுவதும் மத ஸ்தரமின்மை இன்றும் நடந்து வருகிறது. ஆரம்ப காலங்களில் சைவ வைணவர்கள் அடித்து கொண்டார்கள். அதன் பிறகு சமனர்களுடன் அடித்து கொண்டார்கள். அதன் பிறகு கி.பி க்குபிறகு வந்த மதங்களுடன் அடித்து கொள்கின்றனர். வைனவம் சிவகோட்பாட்டை உடைத்து புதிய கோட்பாட்டை உருவாக்கமுயல தோல்வியில் முடிந்தது.

 

கி.மு க்களின் முடிவில் இருந்த காலம் மிகவும் கடுமையாக இருந்தது. இந்திய வரலாற்று உரைஞர்கள் இதை மறைக்க முயற்சித்தது வரலாற்று பதிகங்களில் இருந்தே தெரிகிறது. இந்த கடுமையான நிலையில் மீண்டும் சிவத்தை உணர வைக்க ஒரு அவதாரம் வந்தது. இமயம் முதல் பொண்ணம்பல மேடுவரை வந்து வெற்றி கண்டது.

 

   தற்போது எழுதிக்கொண்டு இருக்கும் தாவோயிசம்(TAOISM) என்ற புத்தகத்தில் இருந்து (non edited)





 
goldentamilworld (yahoo groups)
 
tamilzan  google groups


Looking for local information? Find it on Yahoo! Local



--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
eye_of_god.jpg
God.JPG
hands_of_god.jpg
kailash_lingam.jpg
kahba-at-dawn.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages