பலவீனமான மனது

9 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
May 3, 2009, 8:10:37 AM5/3/09
to Rajendra Saravana


 

மும்பை, சித்திரை.20

 

நமது அனைத்து வெற்றி தோல்வி, இன்ப துண்பம், இதர பிற காரணங்களுக்கு ஏது முதன்மையான காரணி. ஒரு நாளைய முடிவின் இரவில் நீங்கள் தூங்க செல்லும் போது உங்களின் நாட்குறிப்பு பக்கத்தை புரட்டுங்கள். இன்று நடந்த சம்பவம் மட்டும் எழுதுங்கள். காலையில் எழுந்தது முதல் இரவு இந்த நிமிடம் வரை என்று எழுதிபாருங்கள், சில சம்பவங்கள் அடடா நாம கொஞ்சம் அந்த கல்லை எடுத்து போட்டிருந்தா அந்த அம்மா கால் இடறி விழுந்திருக்க மாட்டாங்களே என்ற வருத்தம் வருகிறதா? நாம மட்டும் அவருக்கு வழிகாட்டாமல் இருந்தால் பாவம் அவர் வெயிலில் அலைந்திருப்பாரே என்ற சந்தோசம் வருகிறதா.

இது ஒரு உதாரணம் மட்டுமே.

இந்த சாதாரண நிகழ்வுகள் தான் உங்களில் சுக துக்கங்களுக்கு காரணமாக அமைகிறது. உங்கள் மனிபர்சை கரைக்கவும் வைக்கிறது. சமீபத்தில் பிரபலமான மனோதத்துவ நிபுனரை சந்திக்க சென்றிருந்தேன். காலையில் தனது கிளீனிக்கிற்கு புறப்பட்டு கொண்டு இருந்தவர் என்னை கண்டதும் என்னையும் அவருடன் அழைத்து சென்றார். மும்பை மஹாலட்சுமியில் இருந்து மலபார் ஹில் வழியாக 20 நிமிட கார்பயணத்தில் அரபிக்கரையின் ஓரத்தில் அமைந்திருந்த பங்களா தான் அவரது கிளீனிக்.

உள்ளே நுழைந்த உடன் 1500 மாதம் முழுவதும் தூய்மை படுத்தும் குஜராத்தி பெண். ரெபிடக்ஸ் ஆங்கிலத்தில் பேசும் 12-வது முடித்த மராட்டிபெண், டெலிபோன் ஆபரேட்டர் கம் ரிசப்சனிஸ்ட்,கம் பெண்டரி உமன் கம் நிர்வாகி கம் வாட்ச்வுமன் சம்பளம் வெறும் ரூ-2500 அந்த குஜராத்தி பெண்ணாவது இந்த கிளீனிக்கை தூய்மைபடுத்தும் முன்பே 10 வீடு, 5 ஆபீஸ் என தூய்மை படுத்தி வந்துவிடுவாள். பாவம் இந்த பெண் தான் ஒரே ஒரு கிளீனிக்கில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை குப்பை கொட்டுவார்.

மேட்டருக்கு வருகிறேன். ரிசப்சன் என்னும் சிறிய அறையை கடந்ததும் உள்ளே 4 சேபா ஒரு பார் சேர், பிளாஸ்மா டி.வி மீன் தொட்டி அடுத்த அறியில் ஒரே ஒரு சோபா இரண்டு பார் சேர் அலமாரிகளில் மென்மையான போதையை தரும் அயல்நாட்டு (மதுபானங்கள்) மருந்துகள். மேல் தளத்தில் அழகிய மீனவர் குடில் போன்று கை தேர்ந்த இண்டீரியர் டிசைனரால் செய்யபட்ட சிறிய அறை 5 பேர் விசாலமாக உட்கார்ந்து பேசலாம்.

கொஞ்சம் திகைத்து நின்றேன் அவரே சொன்னார் என்ன சரவணா திகைத்துவிட்டாய் இதுதான் மனோத்ததுவ கிளீனிக் இப்படித்தான் இருக்கவேண்டும். மருந்து மாத்திரையால் பயந்து போய்தான் எல்லோரும் இங்கு வருகிறார்கள். அவர்களுக்கு பயமுறுத்தும் மருந்துவிளம்பர படங்கள், போஸ்டர்கள் இதெல்லாம் பார்த்தால் கூட கொஞ்சம் தான் மனநோய் வந்துவிடும் அதனால் தான். அயல் நாடுகளில் எல்லாம் இதைவிட நன்றாக இருக்கும் என்றார்.

அப்போது அன்றைய ஆங்கில நாளிதழில் அவர் எழுதிய கேள்விக்கு பதில்கள் சரியாக எடிட்செய்திருக்கிறார்களா என்று பார்த்துகொண்டிருந்தவரிடம் நான் கேட்ட கேள்வி சார் மனநோய் என்பது என்ன சார் பயித்தியம் தானே என்றேன். புன்னகைத்து கொண்டே இதுவும் ஒரு வித பைத்தியம் தான் சரவணா என்று சொல்லிவிட்டு அன்று ஒரு கேள்வி பதில் பகுதியை எனக்கு வாசிக்க கொடுத்தார். கொஞ்சம் கொச்சையான சமாச்சாரம், ஒரு பெரிய அலுவலர் தனது அலுவலக பணியாளர் ஒருவரிடம் ஓரின சேர்க்கை வைத்திருக்கிறாராம். இதன் காரணமாக அவர் வீட்டில் அவரது மனைவியிடம் சரிவர பழக முடியவில்லை.

அதனால் அந்த அலுவலக பணியாளரிடமே அலுவலகத்தில் அதிக நேரம் கழிக்க வேண்டி இருக்கிறது. நான் எனது மனைவியை விவகாரத்து செய்யலாமா என்று கேட்டு எழுதி இருந்தார். அதை வாசித்த உடன் என்னிடம் கேட்டார். சரவணா இது தான் மன நோய் போதுமா என்றார்.

எனக்கு ஒரு புறம் சிரிப்பு ஒரு புறம் ஆச்சர்யம் அந்த கேள்வி கேட்ட எழுதிய நபர் பெரிய அதிகாரி என்பது உறுதி. நல்ல சம்பளம் வாங்குவார். வாழ்க்கையில் எந்த ஒரு பிரச்சனையும் சந்தித்திருப்பாரா இல்லையா என்பது சந்தேகம். ஏன் என்றால் கிரிடிட் கார்டும் ஒரு பட்டன் அமுக்கினால் பிஸ்ஸாவுடன், கிரிமிநாசினி(குளிர் பாணம்) வரும் காலம். கணனியில் அமர்ந்து சாப்பிங் செய்யும் காலம் அப்படி இருக்க தேவையில்லாத ஓரின சேர்க்கை என்ற ஒரு அசிங்கமான சமாச்சாரத்திற்காக மனைவியை விவாகரத்து செய்யலாமா என்று எழுதும் இவர் உண்மையில் மடச்சாம்பிராணியா அல்லது பயித்தியமா, என்று

புரியவில்லை.

இப்படியும் நாட்டில இருக்காங்கிளா சார் என்று கேட்டதற்கு ஆமாம் சரவணா இவர்களுக்கு பிரச்சனைகள் வருவதில்லை , இது போன்று பிரச்சனைகளை விலைக்கு வாங்குகின்றனர். நாளை அவர் உறவுவைத்திருக்கும் பணியாள் இவரை பிளாக்மெயில் செய்யலாம் அல்லது அவரது வீட்டிற்கு சென்று

அவரது குடும்பத்திற்குள் குழப்பம் விளைவிக்கலாம் தெரியுமா, இது போல் நிறைய நடக்கிறது என்றார்.

இதற்கு என்ன மருந்து சார் கொடுப்பீங்க என்று சொல்ல ஒன்றுமில்லை அவருக்கு இதனால் வரும் விளைவுகளை பற்றி சொல்லுவோம். அவரை இப்படி செய்யாதீர்கள் என்று சொல்லுவோம் என்றார். பீஸ் எவ்வளவு தெரியுமா ஆரம்ப கட்ட கன்ஸ¤லேட்டிங் 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை , சிறப்பு கன்ஸல்ட்டிங் 1 லட்சத்திற்கு மேல் ஆகலாம்.

சார் அப்ப நான் கூட மனோதத்துவ டாக்டர் ஆகலாம் என்று சொல்லி சிரித்தேன். இது போன்ற சாதாரன பிரச்சனைகளை சமாளிக்க இவர்களிடம் மனவலிமை இல்லையா சார் என்று கேட்டேன்.

அதற்கு அவரது பதில் இருக்கு ஆனால் அதை வெளியே கொண்டு வர முடிவதில்லை மனதில் ஒரு ஓரத்தில் இருக்கும் அந்த விழிப்புணர்வு உணர்வை வெளிக்கொண்டு வருவது தான் எங்களின் பணி அதாவது திரியில் குழந்தையில் கையை பிடித்து கொண்டு பட்டாசு கொழுத்தி விடுவது போன்று தான் என்றார்.

நான் உங்களை சந்திக்கும் வரை இது போன்று சாதாரனவிசயமாக இருக்கும் என்று நினைக்கவில்லை சார் என்றேன். நிசம் தான் சரவணா எனது ஆரம்பகால அனுவபவம் ஒரு பிரபல இயக்குனர் அவர் தொழிலில் ஆர்வம் திரைவுலகில் பதிய வேண்டும் என்ற ஆர்வம். இந்த நிலையில் அவருக்கு திருமனம் நடைபெறுகிறது.

ஆனால் அவருக்கு திருமன வாழ்வில் விருப்பமே இல்லை, ஏன் என்றால் அவருக்கு திரை உலகில் முன்னனியில் வரவேண்டும் என்ற வெறி. திரை உலகம் என்றுமே ஒரே தலையில் கிரீடத்தை வைக்காது இன்று நீ என்றால் நாளை பிறர் . ஆனால் அவருக்கே அந்த கிரீடம் என்றுமே தனது தலையில் தான் இருக்கவேண்டும் என்ற வெறி, இரவு பகல்பார்க்காமல் திரைஉலகமே வாழ்க்கை என்று இருந்து விட்டார்.

முடிவு அவர் எடுத்த படங்கள் வரிசையாக தோல்வியில் முடிய இறுதியில் அவரை தென் அமேரிக்காவில் உள்ள ஒரு பிரபல மனோத்துவ நிபுனரின் மேற்பார்வையில் 5 மாதம் வரை வைக்கும் அளவிற்கு போய்விட்டார். இந்தியா வந்த பிறகு அந்த ஆங்கிலேய மனோத்துவம் நிபுனரின் சிபாரிசின் பேரில் என்னிடம் ஆலோசனைகேட்க வருவார். தற்போது சினிதுறையை விட்டு விலகி பார்டிகளில் பொழுதை போக்குகிறார். படம் எடுக்க வேண்டும் என்று பேச்சை எடுத்தாலே அவரது வீட்டில் இருந்து எனக்கு போன் வந்து விடுகிறது.

அப்ப மருந்து மாத்திரை மருத்துவமனையில் அட்மிசன், சேது ஸ்டைல் எல்லாம்? அதெல்லாம் வேறுமாதிரி நோய்கள் அதுபோன்ற கேஸ் எல்லாம் எங்களிடம் வருவது கிடையாது. இது ஒன்லி மேல்மட்ட மேல்மட்ட வியாதி மட்டும் தான் எதோ ஒன்றை தேடி ஓடுபவர்கள் நாளைடைவில் அவர்களது மனநிலை டிரைவர் இல்லாத வேக ரெயில் போல் கண்ட மாதிரி ஓட ஆரம்பித்துவிடும்.

பிறகு அந்த ரெயிலை கண்ரோல் பண்ணமுடியாமல் எங்களிடம் வந்து நிற்பார்கள். இதற்கு முக்கிய காரணம் தனிமை மற்றும் ஆறுதலுக்கு யாருமில்லாத நிலை. முதலில் தனக்கு ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் யாரிடமாவது கலந்து ஆலோசிக்க வேண்டும்.

இது கட்டாயம் தேவை இதற்கு மனைவி, பெற்றோர் நல்ல நன்பர்கள் (கவனிக்க நல்ல நன்பர்கள் மட்டுமே) போன்றோர்கள் தேவை. ஆனால் வேகமான வாழ்க்கை என்று கூறிகொண்டு நல்ல நன்பர்களை விலக்கிவிடுவது. உங்களது மணிபார்சின் மீது கண்வைக்கும் நன்பர்களை பெற்றுகொள்வது. தாய் தந்தையரை விட்டு வெகுதூரம் விலகி நிற்பது.

மனைவி என்பவளையோ(கணவன் என்பவனையோ) மருந்துக்கு கூட மதிக்காதது. போன்ற பல விடயங்கள் நம்மை பலவீனமாக்கும் காரணிகள். எப்படி கணனியில் தொடர்ந்து வேலை பார்க்கும் போது அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நாம் கண்களுக்கு ஓய்வு கொடுக்கிறோமே, அதே போல் மனதிற்கும் ஓய்வு கொடுங்கள், அந்த ஓய்வு நேரத்தில் மனது தன்னுள் பதிந்து இருக்கும் நல்லது கெட்டதை வெளியெ கொண்டு வரும் அப்போது அதை அடையாளம் கண்டு நல்லவற்றை பிக்ஸ் டிபாசிட் செய்யவேண்டும் தீயவற்றை பர்மனட் டிலிட் செய்யவேண்டும்.

இப்படி செய்தால் நமக்கு நல்லது ஆனால் மனோதத்துவ டாக்டர்களுக்கு ??

, 
goldentamilworld (yahoo groups)
 
tamilzan  google groups
 Cricket on your mind? Visit the ultimate cricket website. Enter now!


--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
P MI.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages