என்ன செய்யபோகிறோம் (rain rain ,,,,,,,,,,,,,,,,)

11 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Jul 9, 2009, 11:40:52 AM7/9/09
to Rajendra Saravana


 

மும்பை, ஆனி. 25

 

கொடுப்பதூவும் கெட்டார்க்கு சாராவாய் மாற்றாங்கே

 எடுப்பதூவும் எல்லாம் மழை  குரள்(15)

 

    மழை உரிய காலத்தில் பெய்யவில்லை என்றால் மக்கள் துன்பப்படுவர், அப்படி துன்பப்படுபவர்களை மழை பெய்து மீண்டும் காக்கும் இயற்கை சூழல் என்றும் மாற்றமில்லாதது, இனிய வசந்தம், இத மான கோடை, இன்ப மழை , இசைவான கூதல்(குளிர்) காலம் என எப்போதும் இந்த சுழற்சி இருந்து கொண்டே இருக்கும் இதுதான் இயற்கையின் நியதி . இயற்கை இதற்காக சில சூத்திரங்களை வைத்து இருக்கிறது. அதனுடைய பணி அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். மனிதன் இயற்கையின் இந்த சூத்திரங்களை தனது முறைப்படி கூட்டல் கழித்து போட்டு பார்க்கிறான்.  இயற்கை தனது சுழற்சியை சரியாக செய்யமுடியவில்லை. விழைவு மழை குறைந்து போதல்

 

96-களில் நான் திருநெல்லையில் இருந்து மும்பை புறப்பட்டேன். அப்போதைய திருநெல்லையின் நிலை சந்திப்பில் இருந்து பஸ் சில வீனாடிகளில் சிந்துப்பூந்துறை வந்துவிடும் அதன் பிறகு பசுமைதான்.தொடர்வண்டி பாதையை கடந்த பிறகு தச்சநல்லூரில் சில காங்கிரட் மற்றும் மண் வயல்கள்(குடியிறுப்புகள்) அதன் பிறகு 20 நிமிட தாழையூத்து பயணம் வரை இரண்டு புறங்களிலும் பசுமை. தாழையூத்தை கடக்கும் சில நிமிடங்கள் மட்டும் காங்கிரட் வீடுகளுடன் சில மணல் வீடுகள் காணப்படும், அதன் பிறகு கயத்தாறு வரை வயல் வெளிகள் (வாய்க்கால் பாசணம் மற்றும் குளத்து பாசனங்களை நம்பி இருக்கும் விளை நிலங்கள்) இது

 

12 வருடங்களுக்கு முன்பு

இன்று மதுரையில் இருந்து நெல்லை செல்லும் வழியில் கோவில்பட்டியை தாண்டிய உடனேயே பிளாட்டுகள் தென்பட ஆரம்பித்து விடுகிறது. கயத்தாற்றை நெருங்கும் போது நெல்லையின் வண்ணார்பேட்டையில் செல்லும் அனுபவம் ஏன்ன ஆயிற்று அதன் பிறகு எப்போது தாழையூத்துவருகிறதென்றே தெரியவில்லை,

 

இன்று நெல்லையில் இருந்து கயத்தாறு வரை விளைநிலங்கள் அத்தனையும் அழிக்க பட்டு பிளாட்டுகள் ஆகிவிட்டன, சில பில்டர்கள் தாழையூத்தை அடுத்த பகுதிகளில் கட்டிவரும் குடியிறுப்புகளின்பெயர்கள் எல்ஸ்டா நகரம், நியூ சைனா டவுன், மார்டன் நெல்லை, சில்வர் சிட்டி மற்றும் பிராஸ் சிட்டி(தாமிரபரணி நகரம் இப்படி அல்லோலபடுகிறது)

 

இது தொழில் வளர்ச்சி 22 % உள்ள ஒரு தென் தமிழக மாவட்டத்தின் நிலை, 60 % கொண்ட கோவை, திருச்சி, போன்ற நகரங்களில் விளைநிலங்களே காணமுடியாது போயிருக்கும். மும்பை முன்பு தானேவை தொடர்வண்டி நெருங்கும் போது தான் மும்பை வாசம் அடிக்கும் ஆனால் இன்று கல்யாணை நெருங்கி கொண்டு இருந்த பொதே மும்பையின் கவிச்சை தொற்றிக்கொள்ளும். நகரம் நீண்டு விட்டது.

நாட்டின் பொருளாதார எக்ஸ்பிரஸ் மிகவும் மெதுவாக செல்கிறது Due to some reason , தொழில் வளர்ச்சி எக்ஸ்பிரஸ் மெதுவாக வேகம் பிடிக்கிறது Due to some reason , விவசாய எக்ஸ்பிரஸோ இன்னும் கரி எஞ்ஞீனில் ஓடிக்கொண்டு இருக்கிறது Due to some reason  ஆனால் மக்கள் தொகை விரைவு வண்டியோ பிரேக் இழந்த பார்முலா ஒன் வண்டிபோல் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 

பட்ஜெட்டை பார்த்தால் விவசாயத்திற்கு என்று ஒன்றும் செய்தார்போல் தெரியவில்லை. அவர்கள் கொண்டு வந்த விவசாய செலவுகள் எல்லாம் *நிலச்சுவாந்தார்களுக்கு மறைமுகமாக போய்ச்சேறும். நிலவரம் இவ்வாறு இருக்க மழை தாமதமாகிகொண்டு போகிறது. விளைவு கடந்த வருட மொத்த உற்பத்தி மற்றும் இந்த வருடம் இதுவரை ஒரு கணக்கு பார்த்தல் அதிர்ச்சி காத்து இருக்கிறது

 

` 2008 : அரிசி 51.80 ஏக்கர் 

பிற உணவு தானிய வளர்ச்சி 56.54 **பருத்தி 17.41 கரும்பு 43.54 எண்ணெய் வித்துக்கள் 68

             2009: அரிசி 38.14 ஏக்கர்                                                       பிற உணவு தானிய வளர்ச்சி 26.60       **பருத்தி            18.83     கரும்பு        42.21             எண்ணெய் வித்துக்கள்           35

 

 

 

 

 

பொருளாதார வளர்ச்சி 06-07 9.2 % 07-08 9% ***08-09 5.3 %

 

மக்களுக்கு விவசாய உற்பத்தி குறைவு பற்றிய கவலை எதுவும் இல்லை இன்று சோறு கிடைக்கிறதா என்ற கவலையும் பக்கத்து வீட்டு காரன் ஹோண்டா வாங்கினால் நான் சி.பி இசட் வாங்குவேன் என்று போட்டு போடுகிறார்கள்

இதோ ¥ட்டர் 39.9%மோட்டார் 48.3% கார் 10.9 % தொலைக்காட்சி பெட்டி 44 % மின் விசிரி 67%, வாசனை சோப்பு 81 % அழகு பொருட்கள் 77%

 

தாவது பிஸ்ஸாவும் சாண்ட்விச்சும் சாப்பிட்டு காலத்தை தள்ளுவோம் என்கிறார்கள். இதுவும்  விவசாய விளைபொருட்களில் இருந்து தானே வருகிறது. ஆனால் வெளிநாட்டில் இருந்து வருகிறது

 

என்று ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகி பட்டம் தந்தார்களோ அன்றே இந்தியாவின் ஆடம்பர உலகத்திற்கான கதவு திறந்துவிட்டது. 93 % பொருளாதார வளர்ச்சி கண்ட தைவானில் கூட விவசாய விளை நிலங்களில் கைவைக்கவில்லை.

 

இந்தியாவில் ஏரி குளங்களை கூட விட்டு வைக்கவில்லை, உங்கள் வீட்டின் அருகில் குளம் இருந்தால் போட்டோ எடுத்து வைத்து கொள்ளுங்கள் நாளை அங்கு மார்டன் லேக் சிட்டி என்ற பெயரில் குடியிறுப்பு அமைந்துவிடும்.

 

விளை நிலங்களி பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் சிறப்பு பொருளாதார(SEZ) மையமாக்கிவிட்டு இன்று நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை சிதைத்துவிட்டனர்.

 

எங்கும் காங்கிரீட்காடுகள் வளர்ச்சி கோபிள் இல்லா ஆகாய கார்போல் போய்கொண்டு இருக்கிறது. நாம் இன்னும் 5 வருடம் தான் தாக்கு பிடிப்போம். அதன் பிறகு அதன் எச்சரிக்கை மணி தான் இந்த வருட மழை தாமதம்.

 

ஜூன் முதல் நீங்கள் இந்த செய்தியை படிக்கும் நேரம் வரை மும்பை 27 % மழை பெற்று இருக்கவேண்டும். ஆனால் இதுவரை 4 % வீதம் தான் இன்னும் 20 நாட்கள் தான் இருக்கின்றன.

 

எங்கள் பாட்டனை கண்டிப்பாக பாராட்ட வேண்டும், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே எச்சரிக்கை மணி கையில் கொடுத்துவிட்டு போனதற்கு

 

பி குறிப்பு: மும்பை வாசிகள் அனைவரும் பாரீஸ் மாநகர மக்கள் போல் மாறிவருகின்றனர். தற்போது மும்பை மாநகராட்சி குடிக்க மட்டும் தான் தண்ணீர் விடுகிறது. அதனால் எல்லோரும் ஈரத்துண்டை துடைத்து கொண்டு உடலில் சென்ட் பூசிக்கொண்டு வருகின்றனர். மும்பை புறநகர் மின் தொடர் வண்டி முழுவதும் சென்ட் வாசம். மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இல்லை

 

 

 

 * ஹரியானா , பஞ்சாப், உ.பி போன்ற மாநிலங்களில் அதிகம் நிலச்சுவாந்தார்களின் நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் விவசாயிகள் தான் அதிகம்

 

** புதிய வகை ஆல்பா ரக பருத்தி எந்த வரட்சியை தாக்கு பிடிக்கும் ஆனால்   இதற்கு செயற்கை உரங்கள் கண்டிப்பாக போடவேண்டும், முக்கியமாக இது விளைவிக்கபட்ட நிலங்களில் மற்ற பயிர்களின் வளர்ச்சி அதன் பலன் மிகவும் குறைவாக இருக்கிறது. குஜராத்தில் 18 % விளை நிலங்கள் இந்த ரக பருத்தியினால் பாலைவனமாகி போனது(பிரண்டியூன் பரூச் மாத இதழ் -ஜுலை 2007 )

*** நடப்பு ஆண்டு

 
goldentamilworld (yahoo groups)
 
tamilzan  google groups
 



Yahoo! recommends that you upgrade to the new and safer Internet Explorer 8.


--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Reply all
Reply to author
Forward
0 new messages