(உலகத்தார் உண்டென்பது) யார் பொதுமகன் என கருதபடார்

閲覧: 4 回
最初の未読メッセージにスキップ

Saravana Rajendran

未読、
2009/05/04 8:50:472009/05/04
To: Rajendra Saravana

(உலகத்தார் உண்டென்பது) யார் பொதுமகன் என கருதபடார்

மும்பை

,சித்திரை.21

இந்த சூழலில் இந்த குறள் எவ்வளவு அழகாக பொருந்தும் எனபது தொடர்ந்து சிலரது மடலை படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.ஒரு செய்தியை பொதுவாக நமக்கு சுற்றி உள்ளவர்கள் கூறும் போது அது இல்லை இதுதான் என்று கூறுபவர்களை ஒன்றும் செய்ய முடியாதப்பா? அவர்கள் பொதுமகன் என்று கருதப்படாமல் அவர்களை பேய் என்று சொல்லலாம் என திடீர் என்று ஒரு குண்டை தூக்கி போடுகிறார் வள்ளுவர் பிரான்

உலகத்தார்

உண்டென்பது இல் என்பான் வையத்து

அலகையா

வைக்கப்படும்(850)

சிங்கள

ராணுவத்திற்கு இந்திய அரசு வழங்கி வரும் உதவி, ஆயுதம், அந்த மண்ணில் சென்று போரிடும் இந்திய வீரர்கள் , அந்த சமர்களத்தில் உயிரிழந்து வரும் இந்திய வீரர்கள், காயமடைந்து வரும் போர் வீரர்கள் என தொலைக்காட்சி, பத்திரிக்கை, இணையம் மூலமாக செய்திகள் வெளிவந்து கொண்டு இருந்தன. ஆனால் சிலர் இது பொய் செய்தி ஜோடனை செய்தி அப்படி இப்படி என்று பதில் எழுதி வந்தனர்.

மார்ச்

மாத இறுதியில் சில மேலை நாட்டு பத்திரிக்கைகள் ஈழமண்ணில் இந்திய படைகள், கொழும்பு கடைவீதிகளில் பொருட்கள் வாங்கும் இந்திய ராணுவ வீரர்கள், இந்திய ராணுவ வீரர்களின் வருகைக்காகவே பல விமானங்கள் தாமத படுத்தபடுவது களத்தில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க செல்லும் இந்திய மருத்துவகுழு என பிட்டு பிட்டு வைத்தது.

கடந்த

மாத இறுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முழுக்க நனைந்த பிறகு முக்காடு ஏன் என்ற நினைப்பில், ஈழத்தில் போரின் பின்னனியில் நாங்கள் நின்றோம். இந்திய ராணுவத்தால் தான் இவ்வளவு முன்னேற்றம் என்று போட்டு உடைத்துவிட்டார்(source:-N D T V 23\04\09)

இந்த நிலையில் சிங்கள அரசும் வாழ்க இந்தியா இந்தியாவிற்கு நன்றிகள், இந்தியா இல்லாமல் எதுவும் நடக்காது என்று கூறிவிட்டது. இப்போது அன்று பதில் அளித்தவர்கள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை. ஒரு சாதாரன உண்மை சிலருக்கு புரிவதில்லை, ராஜபக்சே என்னும் மனிதர் தனது அரசியல் எதிர்கால ஸ்திரதன்மைக்கு விடுதலை புலி ஒடுக்குதல் என்ற ஒரு பாதையை தேர்தெடுத்தார்.

திக்கு முக்கு தெரியாத காட்டில் முட்டி கொண்டு இருந்தவருக்கு காங்கிரஸ் என்னும் உளுத்துபோன புளிய மரம் அடைக்கலம் கொடுத்தது. மகிந்தாவிற்கு தெரியாமலா காங்கிரஸ் என்னும் அரசு ஒன்றும் சர்வாதிகார மன்னன் அல்ல எப்போதும் இந்திய ஆட்சி கட்டிலில் அமர்ந்து இருக்க காங்கிரஸ¤ம் தனது ஆட்சி முடியும் முன்பே சிங்களதேசத்தில் புலிகளை ஒடுக்கிவிட்டு இதோ உலகம் முழுவதும் தீவிரவாதத்தை ஒடுக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி என்று பறை சாற்றி அதில் ஓட்டு வாங்கலாம் என்று பார்த்தது.

ஆனால்

தினை ஒன்று போட வினை ஒன்று விதைத்த கதையாய், காதோடு காதுவைத்தார்போல் முடிந்து விடலாம் என்று ஆரம்பித்த ஒரு போர் இன்று உலகம் முழுவதும் எதிர்ப்பலையில் சிங்களமும் தனது பெயரை கொடுத்துக்கொண்டு தனக்கு ஆதரவு தந்த காங்கிரஸையும் தென் இந்தியாவில் பாதாளத்திற்கு தள்ளி விட்டது(குறிப்பாக தமிழகத்தில்) . எந்த ஒரு ராணுவமும் நாங்கள் மக்களை கொன்றோம் என்று சொல்லுமா? நீ யார் கூட போரிடுகிறார்.

மக்களால் அமைக்கபட்ட ஆதரவு அளிக்கப்பட்ட ஒரு அமைப்பு அந்த அமைப்பு ஏன் உருவானது உனது முன் ஆட்சி புரிந்தவர்களின் குசும்பு தனம். எத்தனை இழப்புக்கள் அத்தனையும் குன்றிலிடை விளக்கு ஆனால் இங்கு நம்முள் சிலர் இல்லை இல்லை சிங்கள அரசு செய்வது தான் சரி மற்றவர்கள் எல்லாம் இந்தியாவின் பரம எதிரிகள் என்று இறையாண்மைக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்றும் , இந்தியாவை விட்டு வெளியே போ, அங்கே போய் சோறாக்கி போடு என்று சொல்பவர்களை வள்ளுவனின் கூற்றுப்படி அலகை(பேய்) என்று கருதலாமா??



--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
全員に返信
投稿者に返信
転送
新着メール 0 件