கலாச்சார சீரழிவிற்கு வழிகாட்டும் இணைய தளங்கள்
பாரதம் பெண்களை தெய்வமாக மதிக்கும் கலாச்சாரம் கொண்ட நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. நாம் வசிக்கும் இந்த குறுகிய வாழ்க்கை சக்கரத்தில் தனி மனித வாழ்க்கையிலும் சரி சமூகத்திலும் சரி பெண்களை பங்கை பிரித்து பார்க்க முடியாது. அதனால் தான் நாம் வீட்டில் ஏற்றும் விளக்கு முதல் உலகின் மூன்று பகுதியில் இரண்டு பகுதியாக விளங்கும் கடலை கூட அன்னை என்று வழங்கி வருகிறோம். நதிகள் அனைத்தும் பெண்களில் பெயரில், கலைகள் அனைத்தும் பெண்களின் பெயரில் வழங்கி வருகிறோம் கலையின் தெய்வமாக வாணி என்ற பெண் தெய்வத்தையும் செல்வத்தின் தெய்வமாக அலைமகள், என்ற
பெயரிலும் மற்றும் சக்தி என அனைத்திற்கும் பெண்களின் பெயர்தான். இந்தியா மட்டும் மல்ல உலகம் முழுவதும் ஆண்மையை விட பெண்மை உண்ணதமானது இதற்கு யாரும் எதிர்வாதம் செய்ய முடியாது. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே சிவசேனாவின் 12 கோட்பாடுகளின் ஒரு பெண் 1000 அறிவாளிகளை உருவாக்க முடியும் ஆகையால் மராட்டியர்கள் அனைவரும் தங்களது பெண்குழந்தைகளின் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுங்கள். பெண்களுக்கு ஆங்கிலம் கற்றுகொடுங்கள், மராட்டிய பெண்கள் அனைவரும் அலுவலகங்களில் தலைமை அதிகாரியாகவும், கட்டளைதாராகவும் இருக்கவேண்டும், பெண்களுக்கு தரும் மரியாதை நமது மராட்டியர்களுக்கு தரும் மரியாதை என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்திய துணைகண்டத்தின் ஒவ்வொரு மாநிலமும் பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் வேளையில் நவீன சாதனங்களின் வரவால் பெண்களை மட்டமாக சித்தரிக்க துவங்கிவிட்டனர். அந்த செயலின் ஆரம்பமும் இந்தியாவின் தான் என்பது வெட்ககேடான ஒரு விடயம். அயல் நாடுகளில் இருந்து வெளிவரும் வயது வந்தோர்களுக்கான இணையதளங்கள் பெரும் பாலும் அந்த நாடுகளின் அனுமதிபெற்றே வெளிவருகின்றன. மேலை நாடுகளில் இதற்கு என்றே பதிவு எண் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இதற்கு இன்றுவரை அனுமதியில்லை. அப்படி வழங்கினால் கட்டுபடுத்த கலாச்சார சீரழி ஏற்படும் என்ற ஒரு எண்ணம் கூட அரசிடம் இருக்கலாம். ஆனால் அரசு யோசனை செய்து கொண்டு இருக்க இருக்க தொழில் நுட்பவளர்ச்சி சில மட்டரக மனிதர்களை எங்கோ அழைத்து சென்று விட்டது. அதன் விளைவுதான் சிலவருடங்களுக்கு முன்பு கைதாகி இன்றும் உள்ளே இருக்கும் பிரபல மருத்துவர் அவர் உள்ளே இருக்கிறார் ஆனால் அவர் நடத்தி வந்த இணையதளம் இன்னும் இயங்கி கொண்டு தான் இருக்கிறது. சைபர் கிரைமிடம் விசாரித்தால் அது இயங்கும் நாட்டில் அதற்காக தடை எதுவும் கிடையாது. அது போல் அந்த இணையதளம் நடத்துபவர் இவர்தான் என்று எங்களால் நிறுபிக்க முடியவில்லை. தற்போது அவருக்கு கிடைத்திருக்கும் தண்டணை (பிசிக்கல் கிரைம்) என்று சொல்லப்படும் செயல் குற்றம் தான், மற்ற இணையதள குற்றம் பற்றி இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது.. இந்த வழக்கில் அவருக்கு விடுதலை கிடைக்க 99% வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே ஆயிரக்கணக்கான வயதுவந்தோருக்கான இணையதளங்கள் இந்திய பெண்களை மையமாக வைத்து ஆரம்பித்து விட்டது. சமீபத்தில் அக்ஷா.கொம் என்ற இணையதள இணைப்பு நிறுவனம் இந்திய பெண்களை மையமாக கொண்டு சுமார் 28 ஆயிரம் இணையதளங்கள் தற்போது புழக்கத்தில் இருப்பதாகவும் இவற்றில் சுமார் 2000-ற்கும் மேற்பட்டவைகள் தொடர்ந்து பார்க்கபடுவதாகவும் அதிர்ச்சியான தகவல் தெரிவிக்கிறது. ஆனால் இவைகள் அனைத்தும் அயல் நாடுகளில் இருந்து இயக்கபடுகின்றன.?????????????????? இந்த நிலையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக குடும்ப பெண்களை ரகசியமாக மொபைல் போனில் படம் எடுப்பது, பெண்களுக்கு போதை பொருள் கொடுத்து மயக்கி/மிரட்டி/ நட்போடு பழகி அவர்களை படம் எடுத்து மின்அஞ்சலிலும் , குறும்பட காணொலியாகவும் அனுப்பும் பயங்கரம் நடந்து வருகிறது. இதில் தெரியும் ஆண்களையாவது கைது செய்யகூடாது என்று கேட்டால் எந்த ஆதாரத்தை கொண்டு அவர்களை கைது செய்ய ,
சைபர் குற்றங்களில் பொருளாதார குற்றம் மட்டும் தான் இதுவரை பொது தண்டனை பிரிவில் சேர்க்கபட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சாட்சிகளின் வாக்குமூலம் மிகவும் அவசியம். ஆனால் இது போன்ற படங்களில் வரும் பெண்கள் புகார் செய்வதில்லை அப்படியே செய்தாலும் அந்த ஆண்தான் படத்தில் இருப்பவர் என்று எப்படி நிறுபிக்க முடியும் இது போன்ற நொய்டாவில் (2007) இரண்டு கல்லூரி மாணவர்கள் ஒரு பெண்ணின் புகாரின் பேரில் கைது செய்யபட்டு நிதிமன்றம் கொண்டு செல்லபட்டனர் இறுதியில் அந்த படத்தில் இருப்பவர் நாங்களே இல்லை என்று சொல்ல அதற்கு எதிரான சரியான வாதங்கள் இருந்தும் இணையதள படங்களை முக்கிய சாட்சியாக கோர்ட் ஏற்றுகொள்ளவில்லை. இரண்டு மாணவர்களும் வெளியே வந்தார்கள் அதன் பிறகு டில்லி, சண்டிகர் போன்ற வடமாநில பெருநகரங்களில் இந்த குற்றங்கள் அதிமாகி கொண்டே வருகிறது. அரசு பொருளாதார மேம்பாட்டில் முணைப்பாக இருக்கிறது. இங்கே ஒரு கலாச்சார சீரழி மறைமுகமாக நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த வருடம் வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் இந்திய பெண்கள் மோசமானவர்கள் என அவர்களது நன்பர்கள் கூற விவாதம் செய்துகொண்டிருந்த போது அவர்கள் காண்பித்த இணைய தளம் அவரை மட்டுமல்ல முழு இந்தியாவையுமே அதிர்சியடைய வைத்தது. ஆம் சவிதாபாபி(சவிதா அண்ணி) என்ற பெயரில் 2007- ஆரம்பங்களில் கணனி திரைகளில் பிரவுசர்களின் மூலம் வந்த ஒரு கலாச்சார சீரழிவு இணையதளம். அப்படி என்னதான் இந்த இணையதளத்தில் இருக்கிறது. முழுமையான இந்திய கலாச்சாரத்தில் வாழும் நடுத்தர குடும்பபெண் ஒருவர் (அசையா வரைபடம்) சித்திரமாக வரையபட்டு இருக்கிறார்.. திருமணம் முடிந்த இவர் பலருடன் பல்வேறு சமயங்களில் தவறாக ஈடுபடுவது போல் காட்டி இருந்தனர். அது மட்டுமல்ல இந்த சித்திரகதை இலவசமாக 8 இந்திய மொழிகளிலும் கட்டணமாக 3 அயல் நாட்டுமொழிகளிலும் வந்தது.
அதாவது ஒரு நடுத்தர இந்தியபெண் இப்படித்தான் இருப்பார் என்று சித்திரம் மூலமாக உலகிற்கு காட்டி இந்திய பெண் இனத்தை உலகின் முன் கேவல படுத்த நினைத்த மட்டமான சிந்தனை கொண்டு சிலரின் நடவடிக்கைகளின் ஆரம்பிக்க பட்ட இணையதளம் அதிர்ச்சி தரும் விடயமாக கூகுள் தேடுதலில் 88 4800, யாகூ தேடுதலில் 42 1000, இதற தேடுதல் வலைதளங்களில் சுமார் 20000 மாக காட்டபடுகிறது அதாவது சுமாராக ஒரு நாளைக்கு 15000 பேர்வரை பார்வையிடும் இணையதளமாக மாறிவிட்டது. இந்த நிலையில் மும்பையை சேர்ந்த சில பத்திரிக்கைகள் இது குறித்து மத்திய அரசின் கலாச்சார அமைச்சத்திடமும், செ ஒ துறையிடமும் இது குறித்து விளக்கம் கேட்ட எப்போதும் போல் அமைச்சகம்
வெளிநாட்டு விவகாரம் என்று ஒதுங்கிவிட்டது.. இந்த இணையதளம் குறித்து குறிப்பாக மும்பை பத்திரிக்கைகள் கடுமையாக அரசை கடிந்து கட்டுரைகள் வெளியிட்டன. அதன் பிறகு பல சமூக சேவை நிறுவனங்களும் அரசி வற்புறுத்த ஜூன் மாதம் இணைய தளம் தடைசெய்யபட்டது. மற்றநாடுகளில் தெரிகிறதா என்று தெரியவில்லை. இந்த நிலையில் இந்த இணையதளம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் பெயரை கெடுப்பதற்காக வெளியிடபடுவதாக செய்திகள் வந்தன. இந்தியாவில் இருந்துதான் சில குழுக்கள் இயக்குகின்றன என தெரிந்து சைபர் கிரைம் வலைவிரிக்க அனைவரும் தப்பிவிட்டனர். :( அதாவது வலுவான சட்டம் இல்லை ஏன் என்றால் இந்த இணைய தளத்தில் எந்த பெண்களையும் குறிப்பிடவில்லை என்பதும் முக்கியமான ஒரு நிகழ்வு ( இது முழுக்க முழுக்க செயற்கை கதாபாத்திரம் என்பதால் சட்டம் ஒன்றும் செய்யாமல் போய் விட்டது. தேஷ்முக் என்ற பெயர் கொண்ட ஒருவர் கண்கானிப்பாளராக இருப்பது போல் காட்டபட்டுள்ளது. நமது நாட்டில் கலாச்சாரசீரழிவு எந்த அளவிற்கு கிழ்த்தரமாக போய்க்கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஒரு முக்கிய சான்று. அதைவிட முக்கியமான ஒன்று சேவ் சவிதாபாபி என்ற இணைய தளம் ஆரம்பித்து சவிதாபாபியை மீண்டும் கொண்டு வேறு ஒரு பாபி உருவத்தில் கொண்டு வரபோகிறார்களாம்.
பட்டுக்கோட்டையார் சொல்வதை போன்று திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் இவர்களை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்கள் செய்யும் இந்த கலாச்சார சீரழிவு நமது நாட்டு பெண்களை உலகம் எந்த அளவிற்கு கண்கொண்டு பார்க்கும் என்று நினைத்து பாருங்கள்.
வெறும் சவிதாபாபியை மட்டும் தடைசெய்து அரசு தூங்கி விடக்கூடாது. அப்படி இருந்தால் இனி இந்தியாவிற்கு சுற்றுலா வருபவர்களின் பார்வை கூட வேறுமாதிரி போய்விடும். "சட்டத்தின் பிடியில் தப்பினாலும் இறுதிநாளின் தீர்ப்பு ஒன்று இருக்கிறது, ஏன் என்றால் இவர்கள் பெற்ற தாயை பழிக்கும்" கூட்டதை சேர்ந்தவர்கள் goldentamilworld (yahoo groups)
tamilzan google groups
|