வாளைப்போல் பகைவரை அஞ்சற்க

5 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
May 1, 2009, 2:58:37 AM5/1/09
to


வாளைப்போல் பகைவரை அஞ்சற்கமும்பை, சித்திரை.18

கொடிய வாளையொத்த கூர்மைகொண்ட  பகைவரானாலும் பயப்படாதே (ஏன் என்றால் அவனில் வெல்லும் ஆற்றல் பெற்றுவிடுவது எளிது) ஆனால் நமது கூட இருந்தே நல்லவர் போல் நடித்து வஞ்சகம் செய்வார்கள் தான் உனக்கு கொடிய பகைவர் என வள்ளுவர் பகைவர்களை பற்றி கூறுகிறார்;

வாளைப்போல் பகைவரை அஞ்சற்க  அஞ்சுக
 கேள்போல் பகைவர் தொடர்பு(882)

இன்று மேதினம் உழைப்பவர் தினம், எல்லோருக்கும் தெரிந்த தினம். ஆனால் மராட்டியர்களுக்கு இன்று மராட்டியர் தினமும் சேர்ந்து வரும். மராட்டியர் தினம் என்று எப்படி வந்தது என்றால் அதற்கு ஒரு வரலாறு உண்டு , ஒன்று பட்ட மராட்டியம் உருவாக்க மும்பை புளோரா பவுண்டன் என்ற இடத்தைல் அடக்கு முறைக்கு 127 பேர் உயிர் இழந்தனர். அவர்களின் பெயர் எல்லாம் ஹ¤த்தாத்மா சவுக்(பவுண்டன்) என்ற இடத்தில் உள்ள நினைவிடத்தில் அனைவரது பெயரும் பொறிக்கபட்டுள்ளது.. அதில் இரண்டு தமிழ் பெயரும் காணப்படுல்கிறது. ஒரு கண்ணட பெயர், 4 உத்திரபிரதேச பெயர் ஒன்று பட்ட மராட்டியம் உருவாக இவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.

ஒன்று பட்ட மராட்டிய, உருவான மேதினத்திற்கு இந்த குரளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு ஒரு வரலாற்றும் உண்மை. ஆங்கிலேயன் நமக்கு பகைவன் அவனை விரட்டி விட்டனர். அதனை அடுத்து பாகிஸ்தான் என்று ஒரு நாட்டை உருவாக்கி அங்கு பாதி பேர் சென்று விட்டனர். இந்த நிலையில் முழுக்க முழுக்க இந்தியா அரசியல் வாதிகளின் கையில் இந்தியா சென்று விட்டது. இந்திய அரசியல் வாதிகள் என்றால் ஆங்கிலேயெனை விரட்டுவதிலேயே தனது முழுப்பலனையும் இழந்து விட்டனர்.

உண்மையான தேசபக்தியாளர்கள் அவர்கள் சென்ற பிறகு தனது பையை நிறப்பும் பல தொழில் அதிபர்கள் ஆட்சி அதிகாரத்தை சூழ்ந்து கொண்டனர். தேசத்தின் வளர்ச்சிக்கு இவர்கள் தேவை என்று அன்று சர்தார் கூறினார். இதைத்தான் இன்று கூட காங்கிரஸ் ஆட்சியில் வந்தால் முதலாளிகளுக்கு நல்ல காலம் என்று வட இந்தியர் கூறுவர். ஒரு சிறிய உதாரணம் இந்த 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் அம்பானி அன்ட் பிரதர்ஸ் உலகில் நம்பர் 1 பணக்காரர்களாக மாறியது ;) .

புவியியல் அமைப்பு படி மும்பை மராட்டிய மாநிலத்தை விட்டு விலகி நிற்பது போல் தோன்றும். இந்த கணிப்பு தான் மும்பையை முதலாளிகளின் கண்களுக்கு எலியில் முன்பு கட்டிய அல்வா துண்டாக தெரிந்தது. மராட்டியத்தின் அருகில் இருந்த ஒரு மாநிலம் குஜராத் வியாபாரிகள் அதிகம் வாழும் இந்த மாநிலத்தில் அனைவருமே வியாபாரத்தில் நுணுக்கம் கொண்டவர்கள். மும்பையை இந்தியாவின் தலைநகராக்க ஒரு முறை பேச்சு எழுந்தபோது நிர்வாக சிக்கல் என்ற காரணம் கூறி தடுத்துவிட்டார்கள்.


இறுதியாக இதே நிர்வாக காரணம் காட்டி தானே(மராட்டியம்) வல்சாட்,சூரத், பரூச்(குஜராத்) போன்ற பிரதேசங்களை இனைத்து தனி மாநிலமாக ஆக்கிவிடலாம் என்று இந்திய மாநில பிரிவினையின் போது சிலர் தங்களின் எண்ணங்களை வெளியிட்டனர். அப்போதுதான் மராட்டியர்களின் மனதில் உரைக்க துவங்கியது. ஏன் எனில் இந்த தானே மாட்டும் தான் மராட்டிய மொழி பேசும் பகுதி மற்றவை எல்லாம் குஜராத் மேலும் அந்த காலகட்டங்களில் அனைத்து தொழில்களிலுமே குஜராத்திகளின் ஆதிக்கம் நிறைந்திருந்தது. இந்த நிலையில் மும்பை தங்களின் கைவிட்டு செல்வதை கண்கூடாக கண்டனர். அப்போது தான் விளங்கியது அடடா நமக்கு பகைவர்களை நாம் விரட்டி விட்டோம். ஆனால் நமக்கு உள்ளேயே நன்பராக இருந்து கொண்டு  நமக்கு ஆப்பு வைக்கிறார்கள் என்று நிலமையை புரிந்து கொண்டனர்.
ஏன் என்றால் அந்த காலகட்டத்தில் மராட்டியத்தின் பெரிய நகரம் பூனா மற்றும் நாக்பூர் இந்த இரண்டு நகரங்களுமே பழமை வாய்ந்த நகரம் ஆனால் தொழில் துவங்கவோ வியாபாரத்திற்கு சரியான ஸ்திரமில்லாத நகரங்கள். இந்த நகரங்கள் ஏதாவது ஒரு வகையில் வேறு ஒரு நகரங்களை சார்ந்து இருக்கவேண்டிய சூழல் இதனால் மராட்டியர்கள் மும்பையை எப்படியாவது கைப்பற்றவேண்டும் அநியாயத்திற்கு அருகில் உள்ளவன் பிடிங்கி கொண்டு போய்விட்டால் பிறகு நமது தலைமுறை காலம் எல்லாம் விவசாயத்திற்கு கர்னாடகத்திலும், தொழில் மூலதனத்திற்கும் குஜராத்தியிடமும் கையேந்த வேண்டும் என்ர நிலைவந்து விடக்கூடாது என்ற வேகத்தில் போராட்டத்தில் இறங்கினர். ஆனால் மத்திய அரசின் கையில் தொழில் அதிபர்கள் ஆதிக்கம் இருந்ததால் அவ்வளவு சாமாயானியத்தில் மும்பையை விட்டு கொடுக்க முன்வரவில்லை. இறுதியாக பல போராட்டங்கள் மறும் உயிரிழப்பிற்கு பிறகு மும்பை மராட்டியத்துடன் இணைந்தது. குஜராத மராட்டியம் மொழிவாரியாக பிரிக பட்டது.

அன்று மட்டும் சிவனே என்று மராட்டியர்கள் உட்கார்ந்திருந்தால் இன்று ஒரிசா, பிகார், வரிசையில் மராட்டியமும் சேர்ந்திருக்கும்
 
 
 
 
 g
 
 


 
 
goldentamilworld (yahoo groups)
 
tamilzan  google groups


Cricket on your mind? Visit the ultimate cricket website. Enter now!--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Reply all
Reply to author
Forward
0 new messages