மும்பையில் நடந்த தாராவி புத்தக அறிமுக விழா செய்தி

14 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Nov 25, 2009, 2:35:34 AM11/25/09
to Rajendra Saravana










மும்பை தாக்குதலில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் கடந்த ஆண்டு எனது நினைவுகளை எனது அனுபவங்களை மரவன் புலவு சச்சிதானந்தம் மற்றும் பத்மநாபன் ஐயாவிடன் பகிர்ந்துகொண்டபோது




   மும்பையில் ஞாயிறு அன்று நடந்த தாராவி புத்தகவெளியீட்டு விழா

  மும்பை ஜெரிமெரி தமிழ் சங்கத்தின் சார்பாக சரவணா ராஜேந்திரன் எழுதிய தாராவி என்ற புத்தக அறிமுக விழா ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கு நடைபெற்றது. விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநகராட்சி விருது பெற்ற தமிழறிஞர் ஐயா சின்னசாமி அவர்கள் பாட விழா விமர்சையாக துவங்கியது

         ஜெரிமேரி தமிழ் சங்கத்தின் செயளாளர் திரு. வ.இரா.தமிழ் நேசன் விழாவிற்கு கலந்துகொள்ள வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

தலைமை ஏற்று பேசிய ஜெரிமெரி தமிழ் சங்க முன்னாள் தலைவர் திரு.பொ வெங்கடாசலம் தாராவி புத்தகம் பற்றிய பேசிய போது “ தாராவி புத்தகம் தாராவி பற்றியது மட்டுமல்ல மும்பையில் உள்ள அனைத்து வறுமை நிலையில் வாழும் மக்களின் பிரதிபலிப்பு. தாராவி புத்தகத்தில் உள்ளது போலவே மும்பையில் உள்ள பெரும்பாலான குடிசைபகுதிகளின் நிலை இருக்கிறது.

            சிறுவயதில் மும்பையில் இருந்து வரும் பலர்  ஊரில் கழிக்கும்  குறுகிய நாட்களிலும்  பகட்டுத்தனமாக ஒரு நாடக வாழ்க்கை வாழ்ந்து கிராமத்து மக்களை மும்பை என்பது சுவர்க்கம் போல் படம் காட்டுவார்கள். ஆனால் மும்பை வந்த பிறகு இது சுவர்க்கம் அல்ல நரகம் என்று தெரியும், தாராவியை பெறுத்த வரை தமிழர்கள் அதிகம் வாழ்ந்தாலும் அனைத்து பிராந்திய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள தொழிற்கூடங்களில் அயராது உழைத்து வந்த வருமானத்தில் அழகான மும்பையை உறுவாக்கினார்கள். இவர்களின் உழைப்பில் முதலாளிகளின் வாழ்க்கை தரம் உயர்ந்தது. பலவருட போராட்ட வாழ்க்கையில் இந்த மக்களின் வாழ்க்கைதரம் இன்னும் உயரவில்லை,

             தாராவியை பற்றிய இந்த புத்தகம் நல்ல முன்னோட்டமாக இருந்தாலும் இன்னும் பல தகவல்கள் தரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்” இவ்வாறு திரு.பெ.வெங்கடாசலம் அவர்கள் கூறினார்கள்.



                தாராவி புத்தகத்திற்கு ஆய்வுறை வழங்கி பேசிய தாராவியின் மூத்தவழக்கரிஞரும் முன்னாள் ஆசிரியரும், போல்ட் இந்தியா பத்திரிக்கையின் ஆசிரியருமாகிய திரு இரா.ராஜமணி அவர்கள் பேசியபோது தாராவியை பற்றி பல அருமையாக கருத்துக்களை அவருடைய அனுபவங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டார்கள்.

                 தாராவிக்கும் தமிழுக்கும் மிக நீண்ட கால தொடர்பு உண்டு என்பதை சரவணா ராஜேந்திரன் பல வரலாற்று சான்றிதழ்களுடன் விளக்கி இருக்கிறார். இருப்பினும் இந்த புத்தத்தில் மும்பை வாழ் தமிழர்களை கலை களஞ்சியன்களை பதிவு செய்யதவறிவிட்டார். இருந்த போதிலும் இந்த புத்தகம் தாராவி தமிழர்களுக்கு ஒரு சிறந்த முன்னுரையாக எடுத்து கொள்ளாம். வி.கே மேனன் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டி இட்டார். அவரை எதிர்த்து சிவசேனா முதல் முதலாக போட்டி இட்டது.

               சிவ சேனாவின் வேட்பாளர் அந்த தேர்தலில் இழந்தார். தோல்வி அடைந்தார். வி.கே மேனன் தனது வெற்றிக்கும் மக்களுக்கு நன்றி சொல்ல தாராவி பகுதிக்கு வருகை புரிந்தார். அந்த நேரத்தில் முதல் முதலாக தாராவியில் உள்ள பல வாடிகளுக்கு அவர் செனறு பார்வை இடுகிறார். அந்த சிறு இடத்தில் பல நபர்கள் தங்கி இருப்பதையும் மனிதர்கள் வாழ வழியில்லாத ஒரு குறுகிய இடத்தில் 4,5 நபர்கள் வசிப்பதையும் அவர்கள் சந்தோசமாக இருப்பதையும் கண்டு வியந்து போனார். இந்த தாராவி தமிழர்களின் More....

மும்பை,24.
   ஜெரிமெரி தமிழ் சங்கத்தின் சார்பாக தாராவி புத்தக அறிமுக விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதிலும் அதற்காக ஆயத்த பணிகளில் ஒரு புறம் இருக்க மராட்டிய அரசின் சிறப்பு டெஃபன்ஸ் பீராஸிக்க்யூட்டர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வழக்கறிஞர் (தமிழர்தான்)திரு சுகுமாரன் ஐயா அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு என்னிடன் போனில் மரவன் புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் மும்பை வருகை புரிந்துள்ளார். சயானின் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருப்பதாகவும் உங்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.
 சாயானின் கடந்த வெள்ளி அன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மின்னஞ்சல்களில் அறிமுகமாகி இருந்த போதும் நேரில் சந்தித்தது இல்லை. அதே நேரத்தில் புகைப்படம் கூட பார்த்தது இல்லை, ஆனால் அவரது காந்தாளகம் புத்தக நிலையத்தில் இருந்து அவர் எழுதிய பல புத்தகங்களை அள்ளிகொண்டு    More.......






Reply all
Reply to author
Forward
0 new messages