கடுப்பேறிப்போன சிங்களம்.

4 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
May 3, 2009, 2:23:49 AM5/3/09
to Rajendra Saravana
 கடுப்பேறிப்போன சிங்களம்.
சமீப காலமாக இது நாள்வரை சிங்கள அராசாங்கத்தால் மறைத்து நாடகமாடிய பல உண்மை செய்திகள் உலக ஊடகங்கள் எங்கும் சூறைக்காற்று போல் பரவ ஆரம்பித்து உள்ளது. சீனா, யப்பான் போன்ற நாடுகள் இதுவரை முண்டு கொடுத்து வந்த நிலையில் திடிரென பின்வாங்க ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் சமீபத்திய பாதுகாப்பு வளைய தாக்குதல் ஐ. நா சபையின் ஊடகத்துறையால் வெளியிடபட்டது உலக அளவில் சிங்களத்தின் பெயரை தூற்றிவாரிவிட்டது. இதனால் சிங்கள அரசாங்கம் பயங்கர கடுப்பில் உள்ளது.
இது அந்த அரசாங்கத்தில் தலைவர்களில் பேட்டியில் சிராக புரிய ஆரம்பித்து விட்டது.
பி.பி.சி  உங்களது போர் நடவடிக்கைகள் அப்பாவி மக்களை பாதித்து உள்ளதே
ர பக்சே: மக்களை காப்பாற்றுவது மற்றும் புலிகளை ஒழிப்பது தான் எங்களின் பணி
பி.பி.சி: போர் எப்போது முடிவிற்கு வரும் மக்களுக்கு நிவாரனபனிகள் எப்போது துவங்குவீர்கள்
பி.பி.சி: போர் முடிவிற்கு வந்து விட்டது நிவாரன பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது
பாதுகாப்பு வளையத்தின் மீது தாக்குதல் தொடர்கிறதே
ர பக்சே கடுப்பாகி போகிறார். நாங்கள் பாதுகாப்பு வளைய பகுதியில் தாக்குதல் நடத்தவில்ல‌
ஐ.நா படம் வெளியிட்டு உள்ளதே
ர பக்சே:நாங்கள் நடத்தவில்லை என்றால் நடத்த வில்லை அவ்வளவுதான்
பி.பி.சி: பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை பற்றி
கேள்வியாளர் கேள்வி முடிக்கும் முன்பே
ரா.பக்சே அவர்கள் விடுதலை புலிகளை பாதுகாக்க முயற்ச்சிக்கின்றனர்.
நாங்கள் ஓயமாட்டோம் புலிகளை ஒடுக்கும் வரை ஓயமாட்டோம்
 
நேற்று சனிக்கிழமை அல்ஜசீரா செய்தி சேவையில்
இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார
கடந்த இரு தினங்களுக்கு முன், இலங்கையின் மோதல் இடம்பெறும் பாதுகாப்பு வலயத்தில், சிறிலங்கா இராணுவத்தினரின் கனரக ஆயுத பாவணையை உறுதி செய்யும் செய்மதிப்படங்கள் வெளியானதை தொடர்ந்து சர்வதேச ஊடகங்கள், வடகிழக்கில் பொதுமக்கள் உயிரிழப்புக்கள் தொடர்பாக கவனம் செலுத்த தொடங்கிவிட்டன.

நேற்று சனிக்கிழமை அதிகாலை முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அறுபதுக்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்த இராணுவத்தினரின் ஷெல் தாக்குதல்களை உறுதிப்படுத்திய ஆதாரங்களால், சிறிலங்கா அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் நம்பகத்தன்மை வாய்ந்தவை அல்ல என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் எழுப்பத்தொடங்கியுள்ளன.

நேற்று சனிக்கிழமை அல்ஜசீரா செய்தி சேவையில், முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை தாக்கப்பட்டதை அடிப்படையாக கொண்டு சிறிலங்கா இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது நாணயகாரவினால் 'கனரக ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை எனவும் விடுதலை புலிகள் இருக்கும் பிரதேசங்களை மாத்திரமே தம்மால் தாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

'மோதலில் ஈடுபட்டிருக்கும் இரு தரப்பும் எதிர் எதிர் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதனால், சர்வதேசத்திற்கு உண்மை புலப்படுவதற்காக மோதல் பிரதேசத்துக்கு சர்வதேச ஊடகவியலாளர்களை அனுமதிக்கலாமே'என கேட்கப்பட்ட கேள்விக்கு
பதில் அளித்த நாணயக்கார,

'புது மாத்தளன் பகுதிக்கு 30 ஊடகவியாளர்களை அழைத்து சென்றதாகவும், அதில் பிபிசி செய்தியாளர் உட்பட பல வெளிநாட்டு ஊடகவியளாலர்கள் அடங்குவதாகவும்' தெரிவித்தார்.

அப்போது மீண்டும், அதே போல் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும் ஊடகவியலாளர்களை அனுமதிக்கலாமே என கேள்வி கேட்கப்பட அப்படி அனுமதித்தால், அவ் ஊடகவியலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட முடியாது' என நாணயக்கார தெரிவித்தார்.

எனினும் 'காசா, ஈராக் போன்ற நாடுகளில் இடம்பெறும் மிக ஆபத்தான மோதல்களின் போதே போர்ப்பகுதிகளுக்கு தம் தரப்பிலும், மேலும் பல சர்வதேச ஊடகவியலாளர்கள சென்று வந்ததாகவும், அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும்,' அல்ஜசீரா செய்திச்சேவை விசனத்துடன் தெரிவித்தது.

'இடம்பெயரும் பொதுமக்கள் அதிகமாக காணாமற்போவது, கடத்தபடுவது, பெண்களுக்கு பாதுகாப்பின்மை என்பன தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றனவ�
� எனவும், கனரக ஆயுதங்கள் முற்றாக உபயோகிக்கப்படுவதில்லை என நீங்கள் கூறும் சொற்களை நம்ப முடியவில்லை' எனவும் செய்தியாளர் மீண்டும் கேட்க,

'நீங்களோ, அல்லது எந்த பிரிவினரும் எவ்வாறான முறைப்பாடுகளை நமக்கு எதிராக முன்வைத்தாலும், அங்குள்ள மக்களை மீட்டெடுக்கும் எமது நடவடிக்கை தொடரும்' என உரத்த தொனியில் கூறுகிறார் நாணயக்கார!
 
 


--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Reply all
Reply to author
Forward
0 new messages