பொருள் கருவி காலம் வினை

20 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
May 3, 2009, 2:58:56 AM5/3/09
to Rajendra Saravana

  பொருள்கருவி காலம் வினை
மும்பை,சித்திரை.20
 
ஒரு செயலை செய்வத்ற்கு முன்பு, அந்த செயலை செய்வதற்கு செல்வம்(பொருள்), அந்த செயலை செய்வதற்கு உரிய கருவி, சரியான காலநிலை, தெளிவான செயல்முறை, மற்றும் இடம் போன்றவற்றை நன்கு ஆராய்ந்து செயலில் இருங்க வேண்டும் என்று கீழுள்ள குறளில் வள்ளுவன் கூறியுள்ளான்.

 

பொருள்கருவிகாலம்வினைஇடனோடைந்தும்

இருள் தீர எண்ணிச் செயல்(675)


இன்றைய சூழலில் சிங்கள அரசாங்கம் இந்த குறளுக்கு நல்ல எடுத்துக்காட்டு, என்னை பொருத்தவரை சிங்கள அரசாங்கம் தன்னுடைய மத புத்தகமான திரிரத்தினத்தை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு திருக்குறளை சிறிது நாளுக்கு படித்தால் தெளிவு பெரும் என்பது என் ஐயாப்பாடு.

 

பவுத்தம் என்ன சொல்கிறதோ அந்த அகிம்சையை தூக்கி பரனில் போட்டுவிட்டு ரத்த வெறி கொண்டு தமிழரை வேட்டையாடி வருகிறது. பிறகு எதற்கு தம்மம் சொன்ன பாதை,


இந்த குறளில் வள்ளுவன் சொல்லுவது என்ன ஒரு செயலில் இறங்கும் மேற்சொன்ன ஐந்தை மட்டும் கவனத்தில் கொண்டால் நிச்சயமாக வெற்றிபெருவாய்.

 

சிங்களவன் போர் தொடுக்கும் போது அவனிடம் பொருள் இல்லை, உலக நாடுகளிடம் கெஞ்சி கொஞ்சி வாங்க வேண்டி இருந்தது. கருவி இந்தியா, சீனா, பாகிஸ்தான், மற்றும் பல நாடுகளிடம் இருந்து தவனை முறையில் பெறவேண்டி இருந்தது. காலநிலை சிங்களவனின் குருட்டு கணிப்பு தை முடிவதற்கு எல்லாம் முடித்து விடுவோம் பிறகு மாசி பங்குனி சித்திரை வெயிலில் கோடை வாஸ்தலம் சென்று ஓய்வெடுப்போன் என்று தவறான கணிப்பு, செயல்முறை 30 ஆண்டுகாலாமாக செய்யாத செயல்முறையை 7 மாதங்களுக்கு முன்பு போர்நிறுத்த அறிவிப்பு விட்டுவிட்டு எப்படி செயல்படுத்த முடியும், 7 வருடமாக ஈராக் பாகிஸ்தானில் உலகின் மிகப்பெரிய  பலம் வாய்ந்த நவீன தொழில் நுட்பம் நிறைந்த அமேரிக்க கூட்டுப்படை ராணுவமே தலையை சொரிந்து கொண்டு இருக்கும் போது கொக்கு வேட்டைக்கு செல்லும் குரவன் போல் துப்பாக்கியை தூக்கிகொண்டு சென்ற ராணுவத்திற்கு எப்படி ஒரு பல வாய்ந்த நுட்பமான கட்டமைப்பு கொண்ட அமைப்பை வெற்றிகொள்ள முடியும்.


வள்ளுவனின் குறளின் படி பார்த்தால் சிங்கள படை ஒரு புல்தடுக்கி பைல்வான்கள் தான். ஒரு நாட்டின் ராணுவத்தை எப்படி குறைசொல்லாம் என்று கேட்கலாம் மக்களை அநியாயமாக கொன்று குவிக்கும் ராணுவத்தை குறை சொல்லாமல் என்ன தம்ம(பவுத்த நெறியில் வழக்கபடும் ஒரு பாராட்டு பத்திரம்) வீர சக்கரமாக கொடுத்து வாழ்த்த முடியும்.

 

உங்களில் மடல்கள் சேமித்து வைத்திருந்தால் ஏப்ரல் மாத  மடல்களை மட்டும் பாருங்கள் சிங்களவனின் செய்திகள் வயிறு குலுங்க சிரிப்பை வரவழைக்கும் செய்தியாக இருக்கும்.

 
 


ஏப்ரல் 7 புதுக்குடியிருப்பு வீழ்ந்தது என்று சிங்களம் அறிவித்தது. அடுத்த நாள் மகிந்தா அறிவிக்கிறார். இதோ இன்னும் 6 கிமி தான் உள்ளது. 1500 கிமி ஒன்றறை மாதங்களுக்குள் பிடித்த சிங்கள படை 6 கிலோ மீட்டரை இன்னும் பிடிக்க முடியவில்லை. எப்ரல் மாதம் எல்லாம் பரபரப்பாக இந்திய டி.வி சேனல்கள் சிங்கள் ராணுவம் அதோ போய்விட்டது. இதோ போய்விட்டது பிரபாகரன் அங்கே உட்கார்ந்து இருக்கிறார். இங்கே உட்கார்ந்து இருக்கிறார் என்று டால் அடித்தது. கடந்த ஜனவரிக்கு பிறகு(கிளிநொச்சி வீழ்ந்தற்கு பிறகு) மறந்து போன சிங்கள் செய்திகள் மீன்டும் நினைவிற்கு வந்தது. இந்திய மீடியாக்கள் இந்திய கிரிக்கேட் பொர்டு போன்ற ஒரு கட்டுப்பாடு இல்லாத அமைப்பு, ஒரு சில விடயங்களில் அரசின் பேச்சை கேட்கும் அனால் சிக்கிரமே அதை மறந்துவிடும்.


கொஞ்சி கூத்தாடி சிங்கள ஊடகத்துறை இந்தியன் மீடியாக்களுக்கு செய்தி கொடுத்தது. ஆனால் ரொம்பநாள் இதையோ ஓட்டினால் மக்கள் செய்தி சேனலை மாற்றி விடுவார்கள் என்று சொல்லி இதோ சிங்கள அரசின் செய்தியை 10- 11 ஆக போட்டு வருகிறது. அதுவும் கடந்த சில வாரங்களாக 3 ,3 படகுகளில் கடற்புலிகள் வருகிறார்கள் அவர்களின் படகுகளை சுட்டு விட்டோம் 32 புலிகள் பலி நகைப்புக்குறிய செய்தி அவர்கள் என்ன சகுனம் பார்த்து வருபவர்கள் 3 3 படகாக செல்லுங்கள் அட சிங்களவன் தான் கேனத்தனமாக இந்த செய்தியை கொடுக்கிறான் என்றால் அதை போடும் நீங்களாவது இதே செய்தியை தானே சில நாட்களுக்கு முன்பு போட்டோம் மீண்டும் அதே செய்தியா என்று கேட்க்கவேண்டாம்.


முதலில் 20000 பேர் இருக்கிறார்கள் என்றார்கள். அதன் பிறகு 45000 பேர் எங்களிடம் புகலிடம் தேடிவந்தார்கள் என்கிறார்கள். இந்தியன் மீடியக்களோ லட்சக்கணக்கானோர் விடுதலைபுலிகளிடம் இருந்து தப்பித்து வந்தனர் என்கிறனர். உடனே ஒரு படம் ஒரு கூட்டத்தினரை ஆயிதம் ஏந்திய சிலர் பிடித்து வைத்து இருப்பது போன்று அந்த படத்தை நிமிடத்திற்கு ஒருதரம் இந்தியன் மீடியாக்கள் எல்லாம் காண்பித்தது. இத்தனை வருடமாக போர் புரிகின்ற சிங்கள ராணுவமே ஒரு விடுதலை புலிகளையாவது உயிருடன் பிடித்து அவர்களை களத்திலேயே வைத்து போட்டோ எடுத்து பொட்டதுண்டா. செத்து போன பெண்புலியுடம் அசிங்கள் செய்கிறார். முடமாகி நோய்வாய்ப்பட்டு இருந்த வர்கள் இதோ களமாடும் புலி சரணடைந்தனர் என்று உலகம் எல்லாம் செய்தி வெளியிடுகிறார்.


இதோ இறுதியாக ஆனந்த சங்கரி தமது இனத்தின் மீது இரக்கம் கொண்டு உண்மையை போட்டு உடைத்து விட்டார். இன்னும் 150000 பேர் புலிகளின் பாதுகாப்பில் இருக்கின்றனர் என்று சொல்லிவிட்டார். இப்போது என்ன செய்யபோகிறாய். சொல்வது புலிகளின் தரப்பு என்றால் மறுப்பு தெரிவித்து அறீக்கை விடுவாய், ஆனால் உனது  சேவகரே சொல்லிவிட்டார்.


எல்லாவற்றிற்கு மேலக ஒரு முக்கியமான செய்தி புதுக்குடியிருப்பில் நுழைந்த உடன் இந்திய ராணுவம் உடனடியாக களத்தில் இருந்து விலகிவிட்டது. காரணம் 1,உலக  தலைவர்கள் அதிக அளவில் ஈழப்பகுதிக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். 2, உலக மீடியாக்கள் பல இந்திய ராணுவம் களத்தில் இருப்பதை ஆதாரத்தோடு வெளியிட்டுவிட்டது. 3, தேர்தலில் காங்கிரஸ் தோல்வி நிச்சயம் ஆகிவிட்டது அடுத்த முறை ஆட்சியில் அமர்பவர்கள் எதன் அடிப்படையில் சிங்கள ராணுவத்துடன் இனைந்து போராட சென்றனர் என்று விசாரனை கமிசன் அது இது என்று வைத்துவிட்டால் பிரச்சனை ஆகிவிடும். 4, சீனம் அதிக அளவில் சிங்கள விடயத்தில் மூக்கை நுழைக்க ஆரம்பித்து விட்டது. இப்படி பல பிரச்சனைகள் காரணமாக திடீரென  விலகிவிட நேற்றுவரை இந்திய ராணுவம் என்னும் யானை மீது அமர்ந்து போரிட்ட சிங்களவனுக்கு தீடிர் என்று கீழே சென்று போரிட  தைரியம் இல்லாமல் , கடந்த சில வாரங்களாக மீண்டும் தினமும் 100‍ ற்க் கணக்கில் வீரர்களை இழந்து வருகிறது.

 

நேற்றுவரை எந்த செல் அடித்தாலும் வெளிவுலகிற்கு தெரியாமல் புலிகளின் பெய் பிராச்சாரம் என்றூ சொல்லி வந்த சிங்களம் இன்று உலகின் முன்னனி செய்தி நிறுவனங்கள் எக்குதப்பாக கேள்வி கேட்க்க தினறிக்கொண்டு இருக்கிறது.


எப்போது இந்தியாவிக் தேர்தல் முடியும் எப்போது காங்கிரஸ் மீன்டும் ஆட்சி யேறும் மீண்டும் பையா காரர்கள் வருவார்கள் என்று தினம் தினம் சிங்கள ராணுவ அமைச்சர் கொத்தபாயாவின் சிந்தனை படி வெறும் 300 புலிகளிடம் செத்துகொண்டு இருக்கின்றனர்.


--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-

Reply all
Reply to author
Forward
0 new messages