![]() அன்புள்ளம் கொண்ட அனைவருக்கும், வணக்கம். எனது சிவசேனா புத்தகம் கடந்த வாரம் சென்னையில் வெளியாகி உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு இக்கட்டான சமயத்தில் எனக்கு ஆறுதல் சொல்லி எனக்கு உதவிய பேராசிரியர் திரு இளங்குமரன்(சிங்கப்பூர்) ஐயா அவர்களை நினைவு கூர்கிறேன். ஐயா அவர்களுக்கு எனது மனமொப்பிய நன்றிகள். நமது மன ஓட்டத்தில் இருந்த சிவசேனா வில் இருந்து மாறுபட்ட சிவசேனாவாக தந்துள்ளேன். சிவசேனா கட்சியை பற்றி மராட்டியில் (சிவசேனா ஆச், கால், உதாய) என தலைப்பில் திரு மனோகர் ஜோஷி எழுதிய மராட்டி புத்தகம் தான் உள்ளது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் சிவசேனா பற்றி இதுவரை புத்தகம் வெளியாகவில்லை, காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், சிவசேனா தலைவர்கள் .பல கட்சி தலைவர்களை சந்தித்தும் மற்றும் பல புத்தகங்களை படித்து , இந்த சிவசேனா மலர்ந்திருக்கிறது. http://nhm.in/shop/978-81-8493-135-8.html புணித சவேரியார்(செயிண்ட் சேவியர்ஸ்) 1500 களில் இவர் இந்தியா வராமல் இருந்திருந்தால் இன்று தென் தமிழகமான நெல்லை, தூத்துகுடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்கள் கல்வி அறிவில் மிகவும் பின் தங்கிய மாவட்ட மாக இருந்து இருந்து இருக்கும். இன்றும் ஆசியாவின் ஆக்ஸ்போர்ட் என்று பாளையங்கோட்டை அழைக்கபடுகிறது என்றால் அன்று சவேரியார் என்னும் மத போதகர், கல்விகண்ணை திறந்து வைத்தனால் தான். நான் கூட நெல்லை மாவட்டத்துகாரன் என்பதால் வரலாறு அந்த மாகானை வெறும் மத போதகராகவும், கல்லூரி ,பள்ளி பெயரளவில் மட்டும் நின்றுவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் எழுதிய இந்த புத்தகம் (புணித சவேரியார்- செயிண்ட் சேவியர்ஸ்) ஜூலை இறுதிக்குள் உங்கள் பார்வைக்கு வந்துவிடும். தாராவி அன்று முதல் இன்று வரை என்று புத்தகமும் நிறைவு பெற்றுவிட்டது. இன்னும் சில நாட்களில் வெளிவந்து விடும் அன்புடன் சரவணா இரா
|