பாதுகாப்பு எங்கே

217 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Jul 14, 2009, 11:31:37 AM7/14/09
to Rajendra Saravana, K R Mani


                  பாதுகாப்பு எங்கே(safety first)

 

நான் சென்றவருடம் வரை பணிபுரிந்த நிறுவனத்தின் முதல் கொள்கை (safety first) அந்த நிறுவனத்திற்குள் நீங்கள் நுழையும் உடனே பாதுகாப்பாளன் உங்களிடன் சில நிமிடங்கள் எங்கு எங்கு தீயனைப்பு கருவி இருக்கிறது. அவசர வழி எது, எந்த வழியாக வெளியேற வேண்டும். முதலுதவி பயிற்சி எடுத்த அலுவலர் யார் அவர் எங்கு அமர்ந்திருக்கிறார் என்பது முதல் உதவிக்கு வரும் மருத்துவர் வரை அலுக்காமல் நமக்கு சொல்வார்.

 

 அதன் பிறகு அவர் கைகளில் சிறிய புத்தகம் இருக்கும் அதில் முக்கிய அதிகாரிகளின் எண்கள்(பாதுகாப்பு) மருத்துவரின் எண்கள்(அலுவலக மருத்துவர்) அருகில் உள்ள மருத்துவமனை எண், காவல் நிலையம், மற்றும் அலுவலகத்தின் வரை படம் அவசர வழிகளுக்கான சிகப்பு கோடுகள், அபத்து நேரத்தில் அனைவரும் வெளியில் எந்த இடத்தில் சென்று நிற்கவேண்டும் என்ற முழுவிபரம் அடங்கிய சிறிய கையேடு இது ஆங்கிலத்தில் மட்டும் தான் இருந்தது

 

ஒரு முறை ஹ¤ந்தாய் நிறுவனத்தின் மும்பை அலுவகத்திற்கு சென்று இருந்தேன் அப்போது அவர்கள் அயல் நாடுகளில் பாதுகாப்பு முறை எப்படி இருக்கிறது என்று கேட்டபோது அவர்கள் எங்களின் நிறுவனத்தை போன்றே ஒரு புத்தகத்தை கொடுத்தனர். அதில் மொத்தம் 7 மொழியில் இருந்து அங்கிலம், பிரென்சு,ஜப்பானிஸ்,சீனம், கொரியன், மலாய், பிலிப்பைன்ஸி, மற்றும் அரபி இந்த புத்தகம் கையில் கிடைக்கும் அந்த நிமிடம் வரை எனது நிறுவனம் தான் உலகிலேயே தொழிலாளர் பாதுகாப்பிலும் இதர விசயத்திலும் முதலிடம் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.  அப்போது தான் தெரிந்தது நாங்கள் வெறும் பெருமைக்காகத்தான் இதை சொல்லிகொண்டு இருக்கிறோம் என்று, அதன் பிறகு நடந்த ஒரு பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் பாதுகாப்புத்துறை தலைவரிடம்  நான் ஒன்றை எடுத்துறைத்தேன்.

 

ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகாரிகள் மட்டும் தான், அவர்களுக்கு அனைத்துவசதிகளும் இருக்கிறது. அவர்கள் நேர்முகத்தேர்விற்கு வரும் போதே எங்களில் நிறுவனத்தின் சட்ட திட்டங்களை அறிந்து கொண்டு தான் வருவார்கள். இவர்கள் சரியாக 10 மணிக்கு அலுவலகம் வருவார்கள், 5 : 5.30 மணிக்கு கிளம்பி விடுவார்கள். நாம் ஆயிரக்கணக்கில் அச்சடித்து இவர்களுக்கு தரும் பாதுகாப்பு கையேடு உண்மையில் பயனில்லாத ஒன்று என்று கூறினோன்.

 

அப்படி வரும் அதிகாரிகளின் எண்ணிக்கை வெறும் 80 முதல் 90 வரை தான் ஆனால், அதிகாலை 6 மணிக்கு வரும் தூய்மைபடுத்து  குழுக்களில் பணிபுரியும் பணியாட்கள், அவர்களை அடுத்து பெண்டரி பாய் என்னும்  தேனிர் வழங்குபவர், உணவு கொண்டு வந்து கொடுப்பவர், அதற்கு பிறகு வரும் அலுவலக கடை நிலைபணியாள்(peon) மற்றும் மெயில் ரூம் பாய் இரவும் பகலும் பாதுகாவலர்களாக என சுமார் 500 பேர்வரை பணிபுரிகின்றார்கள் இவர்கள் அனைவரும் நிறுவனத்தின் நேரடி பணியாளர்கள் அல்ல அதனால் இவர்களுக்கு ஆரம்பத்தில் பாதுகாப்பு பற்றி தெரியவோ அறிந்து கொள்ளவோ வாய்ப்பில்லை. இந்த நிலையில் இவர்களுக்கு நான் அந்த பிரபல நிறுவனத்தில் பணியாற்றுகிறேன் என்று பெருமை கட்டிகொள்ள மட்டும் தான் அந்த கையேடு பயன்படும்.

 

ஏன் என்றால் அந்த நிறுவனம் இந்தியா முழுவதிலும் இருக்கிறது. கோல்கத்தா சென்னை மும்பை டில்லி என அலுவலகங்களும் சில்வாசா, பாகர்பூர்,தண்டையார்பேட்டை, பாத்தல்கங்கா மற்றும் பல்லப்கர் போன்ற நகரங்களில் தொழிற்ச்சாலைகளும் என்னற்ற சேகரிப்பு மையங்கள் (ware house), distributors மொத்த விற்பனை மையங்கள் நாடு பல இடங்களில் இதன் கிளைகள் இருக்கின்றன. மும்பை தலைமை அலுவலகத்திலேயே பலர் ஆங்கிலம் தெரியாதவர்களாக இருக்கும் பட்சத்தில் பாத்தல் கங்கா, பல்லப்கர்,பாகர்பூர் போன்ற நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள், இவைகள் அனைத்தும் நகரங்களை விட்டு தொலைவில் உள்ளன, இங்குள்ள சாதாரண பணிகளுக்கு அருகில் உள்ள கிராம மக்கள் மற்றும் சிறுநகர மக்கள் தான் வருவார், உயரதிகாரிகள் ஒரு சிலர் மட்டும் தான் technician (தொழில் வல்லுனர்களுக்கு கூட ஆங்கிலம் தத்தகா பித்தகா தான், அப்படி இருக்க இவர்களுக்கு ஆங்கிலத்தில் கையேடு கொடுத்து என்ன பயன் என்று நானும் எனது குழுவினரும் விவாதித்தோம்.

 

இறுதியாக மறுவருடம் புதிய வடிவத்தில், ஆங்கிலம் , இந்தி, மராட்டி, தமிழ், பஞ்சாபி, வங்காளி என்ற 6 மொழிகளில் புத்தகங்கள் வெளிவந்தன.  இதற்காக ஆகும் செலவு இந்த வருட வரவு செலவு திட்டத்தில் சேர்க்கவில்லை என்று வணிகதுறை அதிகாரிகளிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. பார்ட்டி என்ற பெயரில் கோடிகளை செலவழிக்கும் பொழுது பாதுகாப்பு விசயத்திற்கான இது செலவே அல்ல என வாதாட இறுதியில் அனைத்து மொழியிலும் அச்சானது. அந்த வருடத்தில் இருந்து மார்ச் மாதம் உலக பாதுகாப்பு தினத்தில் அதிகாரி மட்டம் மட்டும் அல்லாமல் அனைத்து தொழிலாளர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்கும் போட்டிகள் , அட்டைப்பட விளக்கங்கள், பாதுகாப்பு குறித்த சிறிய நாடகங்கள் என அரங்கேற்றம் செய்யபட்டது.

 

முக்கியமாக தொழிற்சாலைகளில் எண்ணெய் சிந்திதாமல் கையாள்வது எப்படி, கணமாக பொருட்களை கையாள்வது எப்படி, கட்டிட பணிகள், உயரமான இடங்களில் பணி செய்து கொண்டு இருக்கும் போது அந்த பகுதியில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன போன்றவை சொல்லித்தர பட்டது.  மேலும் மும்பை போன்ற நகரங்களில் அடிக்கடி நடக்கும் வெடிகுண்டு தாக்குதல், கலவரம், பெருமழை, போன்றவற்றில் இருந்து எப்படி பாதுகாத்து கொள்வது பிறருக்கு எப்படி உதவுதவது போன்ற பல பொது உபயோகமான தகவல்களும் சொல்லித்தரபட்டது. அயல் நாடுகளில் இருந்து ஓட்டுனர் நிபுனர்களை எங்களது அலுவலகங்களுக்கு அழைத்து எங்களது அலுவலகம் பயன்படுத்தும் கார், லாரிகள், நாங்கள் அடிக்கடி பயன்படுத்தும் டாக்ஸி டிரைவர்கள் போன்றவர்களுக்கு சிறப்பு பயிர்ச்சி கொடுக்கபட்டது. அதாவது குறைவில்லாத முழுமையான விழிப்புணர்சி அனைவருக்கும் அளிக்கபட்டது.

 

இது பன்னாட்டு நிறுவனம் என்றாலும் பாதுகாப்பு என்பது அனைவருக்கு தேவை என்ற நோக்கத்தில் மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கபட்டது.

 

அதன் பிறகு  சென்னை அல்லது பிற நகரங்களில் காரில் பயணிக்கும் போது அணிச்சையாகவே சீட் பெல்ட் தேடுவது, ஓட்டுனரையும் மொபைல் போன் அனைத்து வைக்க சொல்வது போன்ற என்னிடம் தொற்றிவிட்டது.

 

நாம் தினமும் பார்க்கிறோம், கட்டிட தொழிலாளர் மாடியில் இருந்து தவறி விழுந்து சாவு, வாகன விபத்தில், தீ, என பல விபத்துக்கள் அனைத்திற்கு ஒரே காரணம் சரியாக கையாளாகாமை , ஆம் ஒருவர் உயரமான இடங்களில் இருந்து பணியின் போது தவறி விழுகிறார் என்றால் அவரின் பாதுகாப்பு பட்டை(safety belt) எங்கே என்பது தான் முதல் கேள்வி. தீ விபத்து என்றால் அந்த அலுவலகமே அல்லது குடியிறுப்பு பகுதிகளோ அதிகம் வேண்டாம், தீ அனைக்க மணல்வாளிகளாவது இருக்கிறதா என்பது கேள்வி, நமது சமுதாயம் இது போன்ற சாதாரண விடயங்களில் அலட்சியம் காட்டுவது தனிமனிதருக்கும் அவரது குடும்பத்தருக்கும் எந்த அளவு பாதிக்கும் என்பது , இப்படி விபத்துக்கள் நடந்த பிறகு கொஞ்சநாள் புலம்பி விட்டு மீண்டும் அதே தவறுகள் செய்வதும் சமூகத்தில் மீது உள்ள பெரும் குறைபாடுகள்.

 

இதற்கு மிகப்பெரிய உதாரணம் டில்லி மெட்றொ விபத்து , ஊழல் என்பது வேறுவிடயம் அது நமது தேசிய அடையாளம் அது இல்லாமல் இது போன்ற பணிகள் நடைபெற்றால் ஊரார் சிரிப்பார்கள், ஆனால் பணி நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு முறையாக கடைபிடிக்கபட்டதா?? பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கபட்டதா என்றால் சுத்தமாக இல்லை, பல சாதாரன பணியாளர்கள் சாராயம் வேறு குடித்து விட்டு பணிசெய்ய வருகின்றனர். தலையில் உள்ள(கவசம்) ஹெல்மெட் பார்வையிட வரும் உயரதிகாரிகள் மற்றும் சூப்பர்வைசர்கள் மட்டும் தான் அனிந்திருப்பர் ஏன் மற்றவர்கள் எல்லாம் உயிரில்லாத சடங்களா என்றால் என்ன செய்ய கட்டுமான நிறுவனத்திடம் ஒரு டஜன் தலை கவசம் மட்டும் தான் இருக்கிறது என்று பதில் வருகிறது. ஒப்பந்த பத்திரங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் என்பது ஏதோ கடமைக்கு மட்டும் தான் இருக்கிறது.

 

நிறைய மாற்றம் வேண்டும் சமுதாய மட்டத்திலும் சரி அரசு மட்டத்திலும் சரி இல்லையென்றால் டில்லி விபத்துக்கள் இது ஒரு விபத்துக்காலம் என மக்கள் வருடம் தோறும் கொண்டாடுவார்கள்.

 

இறுதியாக டில்லியில் மட்டும் மெட்ரோவில் அடிக்கடி விபத்து நிகழ காரணம் என்ன? இதுவரை 4 பெரிய விபத்துக்கள் சிறியவிபத்துக்கள் என சுமார் 163 உயிரிழந்து இருக்கின்றனர் 200 பேர் பலத்த காயமடைந்து இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் சாதாரண பணியாளர்கள் ஒரு வேளை உயரதிகாரிகள் யாரும் இறந்தாலோ அல்லது காயமடைந்தாலோ பாதுகாப்பு குறித்து அரசு அலோசனை நடத்தும் என்று நினைக்கிறேன்.

 

              "குளம் உடைஞ்சு தண்ணி ஊருக்குள் போனாலும் மடையில் நின்று கும்மியடிக்கும் கூட்டங்கள்"

 
goldentamilworld (yahoo groups)
 
tamilzan  google groups


Looking for local information? Find it on Yahoo! Local



--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Bridge.jpg
D M.jpg
Delhi-Metro.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages