கனவு மெய்படவேண்டும்(பாந்திரா ஒர்லி கடல்வழிப்பாதை(BWSL).

7 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Jul 6, 2009, 4:16:02 AM7/6/09
to Rajendra Saravana



To Late But same missing news ADD

 

கனவு மெய்படவேண்டும்(பாந்திரா ஒர்லி கடல்வழிப்பாதை(BWSL).

மும்பை, ஆனி.17

மும்பை இந்தியாவின் சாங்காய் நகரமாக மாற்றுவோம் என காங்கிரஸ் அரசாங்கம் சூழுரைக்க முதலில் மும்பையை மும்பையாக மாற்றுங்கள் பிறகு சாங்காயாக மாற்றுவோம் என எதிர்கட்சியினர் சொல்ல மும்பையின் நவீன மயம் ஆமைவேகத்தில் நகர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் பெருநகரங்களில்

ஓட்டமே ஆமை வேகத்தில் தான்?

ஏன் என்ன காரணம் டிரபிக் ஜாம்(போக்குவரத்து நெரிசல்) ஒரு நாளைக்கு 643 புதிய (4 சக்கர வாகணங்கள்) வாகணங்கள் பதிய படுகின்றன. 12000(நன்றி ஐ.டி சம்பள விகிதம் & தேடிப்பிடித்து லோன் கொடுக்கும் தனியார் வங்கிகள்) இரண்டு சக்கர வாகணங்கள் என்ன ஆகும் மும்பை . மும்பையின் உள் நகர எல்கை ஆரம்பமாகும் மாகிம்-தாராவி முதல், நரிமன் பாய்ண்ட்வரை(மேற்கு) சயான்முதல் கொலபா(மத்திய) கொலிவாடா முதல் லயன் கேட் வரை(துறைமுகம்) உள்ள நெடுங்சாலை எல்லாம் ஒரத்தில் மச்சிவீடுகளும் பிளாட்பாரங்களில் குச்சிவீடுகளும் நிறைந்து காணப்படுகிறது. குச்சிவீடுகளை உடைத்து விரட்டிவிடலாம்.

ஆனால் மச்சி வீடுகளை எண்ண செய்ய முடியும். போக்குவரத்து நெரிசல் தீர வழி என்ன?

மும்பை கழிவு நீர் வெளியேற்றும் திட்டமும் சரி , சாலை வடிவமைப்பும் சரி, இந்த முக்கியமான உள் கட்டமைப்பு இரண்டும் ஆங்கிலேயர் போட்டு தந்தது. அதாவது 1927 நான்காம் விரிவாக்கத்தின் போது ஆங்கிலேயர் போட்டுகொடுத்த ரோட்டை தான் தார் , சிமிண்ட், இதர பைபர் எல்லாம் அதன் மீது போட்டு புதிதாக்குகிறார்கள் மற்ற படி இவர்களால் ஒரு புதிய ரோட்டை கூட மும்பையில் போட முடியாது. இதே நிலைதான் கழிவு நீர் ஓடுபாதை இன்னும் பல மாநகராட்சி பொறியாளர்களுக்கு தெரியாது எந்த கழிவு நீர்குழாய் எங்கு போய் சேறுகிறது என்று ( முக்கிய வரைபடம் மிஸ்ஸிங்).

அப்படி இருக்க வாகன நெரிசலுக்கு என்ன வழி 1996-ல் ஆட்சிக்கு வந்த சிவசேனா அரசு சுமார் 100 வருடங்களுக்கு முன்பு ஸ்மித் வென்ஸ் என்ற ஆங்கிலேய சாலைபொறியாளர் பாந்திரா முதல் ஒர்லி வரை கடல் வழி பாலம் அமைக்கலாம் என்று சொன்ன யோசனையை நடைமுறைக்கு கொண்டுவர முயற்சி செய்து அதற்கான ஆலோசனைகள் நடந்து கொண்டு இருக்க , ஆட்சி மாறியது. காங்கிரஸ் இந்தியாவின் ஷாங்காய் மும்பை என்ற பெயரில் ஓட்டு கேட்டு வாங்கியது. சிவசேனா ஆட்சியின் கடல்வழி பாலம் கனவை நினைவாக்க முயற்சி செய்தது.

1970-களில் இருந்து கணபதி கருணனையால் மும்பை கடல் ஓரங்களில் இருந்து சுமார் மூன்றறை கி.மி வரை எந்த மீனும் இல்லை( ரசாயண வண்ண கலவை கணபதி சிலைகளால் கடற்கரை ஓர உயிரின சங்கிலி உடைந்து விட்டது- உலகில் முதலில் நடந்த இயற்கை பேரழிவு). சுற்றுப்புற சூழல் துறை என்ன செய்யும் ஏற்கனவே நல்ல முறையில் கெடுத்து விட்டார்கள் இனி கெட்டுபோக என்ன இருக்கிறது என்ற நிலையில் அனுமதி கொடுத்து விட்டது. தற்போதைய மத்திய அமைச்சரும் அன்றைய மராட்டிய மாநில முதல்வருமான

சுசில் குமார் ஷிண்டே பாந்திராவின் அப்போதைய குடிசைவாசிகள் காலையில் சின்ன சின்ன வாளிகளுடன் ஒதுங்கும் பகுதியின் ஒரு மூலையில் 1996-ம் ஆண்டு இதே ஜூலை மாதம் தேங்காய் உடைத்து மண்வெட்டியை தரையில் வெட்டி துவக்கி வைத்தார். ஒரு சில பத்திரிக்கை மட்டும் தான் ஏதோ பாலம் கட்டபோராங்கலாம் என்று படத்துடன் நான்காம் ஐந்தாம் பக்கங்களில் படம் போட்டது. அதே போல்

வேலையை கையில் எடுத்த ஹிந்துஸ்தான் கட்டுமான துறை நிறுவனம் (HCC) ஆமை வேகத்தில் வேலை ஆரம்பித்தது வேலையை பாலம் கடலில் இறங்க கூட இல்லை பணம் பத்தாது என வேலையை ஒத்தி வைத்துவிட்டது. இடையில் அரசியல் குழப்பம், மராட்டிய மாநில முதல்மந்திரிகள் பொம்மைகளை போல் தலைமையால் இவர் சரிபட்டு வருவாரா அவர் சரிபட்டு வருவாரா என முதல் மந்திரி சீட்டில் உட்காரவைத்து உட்காரவைத்து தூக்கி விளையாட்டு காட்டியது.

 

இறுதியாக 2004-ம் ஆண்டு பணம் பட்டுவாடா எல்லாம் முடிந்து வேலை வேகம் எடுத்தது. வேலை நடந்து கொண்டு இருக்கும் போது திடிரென 2008-ம் ஆண்டு உலகம் எங்கும் பொருளாதார வீழ்ச்சி வேலை முடியுமா என்ற கேள்வி எழுந்தது. கடல்வழி பாலம் கட்ட மும்பை வளர்ச்சிக்காக 46000 கோடி இந்திய ரூபாய் ஏற்கனவே ஒதுக்கபட்டு விட்டது. அந்த பணத்தில் இருந்து எடுத்து தான் செலவு செய்கிறோம் அதனால் பாலத்தில் பணியில் தடை ஒன்றும் வராது என வில்லாஸ்ராவ் தேஷ்முக்(அக்டொபர் 2008) சொல்லி விட மும்பை மக்களுக்கு நிம்மதி பெருமூச்சு. ஒருவழியாக ஜனவரி மாதம் ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனம் அரசுக்கு இந்த வருடம் ஜூனில் பணி முடிந்து பாலம் திறக்கப்பட்டு விடும் என்று அறிக்கை கொடுத்தது.

30-ம் தேதி ஜூன் 2009 சோனியா காந்தியின் திருக்கரத்தால் பாந்திரா ஒர்லி பாலம் திறக்க பட்டது. அதுவும் அரைப்பாலம் தான் நிறைவேறி இருக்கிறது அதாவது ஒருவழிப்பாதை போல் வரும் வழி இன்னும் முடிக்கபடவில்லை. அந்த ஒருவழிப்பாதைகூட விசாலமாகத்தான் இருக்கிறது. கார்கள் மட்டும் வந்து செல்லவேண்டும் என்று அறிவுறுத்தால், நோ டூ வீலர்.

பிரபல செய்தி சேனல் தலைமை நிர்வாகி அப்பாஸ¤டன் அவரது ஹொண்டா சிட்டியில் பயணித்தேன் பாந்திராவில் இருந்து கார் கடல்வழிப்பாதையை அடைந்தது. முன்னால் வி..பி க்களில் கார்

சென்று கொண்டு இருந்ததால் எல்லோருக்கும் சிகப்பு விளக்கு லட்சக்கணக்கில் வண்டிகள் முதலில் யார் செல்வார்கள் என போட்டி போட மும்பை போக்கு வரத்து காவல்த்துறை இணை ஆணையர் அமர்ஜீத் சிங்

தனது காரில் டிராபிக் சிக்னல் போலீசாரிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். இவர்கள் ஏதோ திட்டம் போடுவதற்குள் ஒர்லியில் வி..பி கார் பாஸ் ஆகிவிட்டது. அங்குதான் மாநில தலைமை போக்கு வரத்து காவல்த்துறை அலுவலகம் முக்கிய கண்ரோல் ரூம் எல்லாம் இருக்கிறது. சிக்னல் விலக்க பட்டு பச்சை விளைக்கு எரிந்தது. ஆனாலும் போலீசார் சைகை காண்பிக்கவே இல்லை சிலர் மீடியா வாலக்கள் அனைவரும் அமர்ஜித் சாரிடம் சிக்னல் விழுந்து விட்டது என்று சைகை காண்பிக்க அவரும் சிறிய குழப்பத்தில் இருந்த தடையெல்லாம் அகற்றிவிட்டார். முதல் பயணமல்லவா அனுபவித்து வண்டியை ஓட்டி கொண்டு இருந்தார். இரவில் இரண்டு பக்கமும் லேசர் ஒளிமின்ன இடப்புறம் மும்பை கண்சிமிட்ட தூரத்தில் கப்பல்கள் அரபிக்கடலில் பயணம் செய்து கொண்டிருக்க கார் மெல்ல சென்று கொண்டு இருந்தது இந்த பாலம் 5.6 கி.மீ இந்த தூரத்தை கடக்க வெறும் 7 நிமிடம் வேண்டும் ஆனால் என்ன செய்ய பாலம் முழுவதும் சில நிமிடங்களில் கார்களால் நிறம்பி விட்டது. ஒர்லி சிபேஸ் முழுவதும் பார்வையாளர்கள் ,

அங்கிருந்து பாலத்தைகடக்க முயலும் கார்கள் என கூட்டம் அலை மோத போக்குவரத்து போலீசார் தங்களது கடமையை அழகாக செய்து கொண்டிருந்தனர்.முதல் மூன்று நாட்கள் இலவச பயணம் தான் கடல்காற்று பட முதல் முதலில் பாந்திரா ஒர்லி கடல்பாலத்தை கடந்தோம். பாஸ்போர்ட் விசா எதுவும் இல்லாமல் வெளிநாட்டில் கடல்வழி பாலத்தை கடந்த அனுபவம். ஒர்லியில் இறங்கியவுடன் டி.வி டிஸ் வேனில் அமர்ந்து கொண்டு மீண்டும் ஒர்லியில் இருந்து பாந்திரா பயணம் உண்மையில் இட்ஸ் அமோஸிங்

இந்த பாலத்தின் இடையில் உள்ள பெரிய டவரின் மேலே சுற்றுலா பயணிகள் மும்பையை கடல்வழியாக பார்க்க தளம் கட்டும் திட்டம் ஒன்று அரசிடம் இருக்கிறது. விரைவில் மும்பையை இந்த கடல்வழிப்பாலத்தின் மூலம் நாம் பார்க்கலாம்.

இந்த பாலத்தில் பாந்திரா முதல் ஒர்லி வரை சென்று திரும்ப திறந்த மேல்பாக (open deck bus) சுற்றுலா பயணிகளுக்காக விட பெஸ்ட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒரு நபருக்கு டூ.15 முதல் 20 வரை கட்டணமாக வசூலிக்கபடும், முக்கியமாக பல டிராவல் நிறுவனங்கள் தங்களது மும்பை டிராவல் பாயிண்டில் (BWSL) Bandra Worli Sea link) சேர்த்து விட்டது. சரவணா டூர்ஸ் அன்ட் டிராவல் நிறுவனமும் கூட ,

பாந்திரா ஒர்லி கடல்வழிப்பாதைக்கான செலவு இதுவரை ரூ.1650 கோடி இந்திய மதிப்பில், இன்னும் பாதிவேலை பாக்கி இருக்கிறது. இதனுடைய மொத்த செலவு 1800 என எழுதி போட்டு இருக்கிறது, ஆனால் பாதி பாலத்திற்கே இவ்வளவு அதனால் எப்படியும் 4000- தொடும். இந்த பாலத்தின் அலங்கார வேலைக்கு 9 கோடி ரூ செலவழிக்கபட்டு இருக்கிறது.

எல்லாம் என்.ஆர்.ஐ பாடுபட்டும் அனுப்பும் பணம் , வியர்வை சிந்தி உள்ளூர் காரகள் உழைக்கும் பணம்

38000 கி.மி நீள கடல் நீர், அறிக்காத ஸ்டீல் பயன்படுத்த பட்டுள்ளது. மைக்ரோ சிலிக்கா கலந்த சிமிண்ட் இந்தியாவில் முதல் முதலாக பயன்படுத்த பட்டது இந்த பாலத்தில் தான் 5,75,500-டன் காங்கிரீட் பயன்படுத்தபட்டது. பாந்திராவின் அருகிலேயே கல்உடைக்கும் 8 கிரேசர்கள் இதற்காக அமைக்கபட்டு தரமான ஜல்லிக்கற்கள் தேவைக்கேற்ற அளவுகளில் உடனடியாக வந்து சேரும் விகிதத்தில் அமைந்தது. 1200 நேரடி பணியாளர்கள், 27000 மறைமுக பணியாளர்கள், இணைந்து பணியாற்றி இன்று மும்பைக்கு வந்து செல்லும் 1 கோடி மக்களுக்கு மும்பை , மும்பை புறநகரில் வசிக்கும் 4 கோடி மக்களும் பயண்படுத்த போகின்றனர்.

பல நாடுகள் ஒன்றினைந்து கட்டிய பாலம் என்று கதைவிடுவார்கள். உலகிலேயே அதிக மக்கள் சக்தி, தொழில் நுட்ப சக்தி, அதிகம் கொண்ட இந்தியா போன்ற நாடுகள் ஏன் மற்ற நாடுகளிடம் போய் கையேந்த வேண்டும், இது முழுக்க முழுக்க இந்தியாவின் தொழில் நுட்பம், கட்டுமான பொருட்கள் மட்டும் சீனா வின் சாங்காய் புங்சாங் கேபிள் கம்பேனி ஸ்டீல் , நார்வே இல்கேம்ஸ் மைக்ரோ சிலிக்கா நிறுவனம் , போன்றவையிடம் அவசர தேவைக்கு அனுகினார்கள்

இந்த பணியில் 99 சதவீதம் பங்குகள் கட்டுமான நிறுவனமாக ஹிந்துஸ்த்தான் கட்டுமான நிறுவனம்(Hindustan Constrution Compay). மற்றபடி சிமேண்ட் எல் & டி, மற்றும் பிர்லா நிறுவனங்கள், ஸ்டீல் சாயில்(SIAL) Steel Athority of India, and TISCO, இதர கட்டுமான பொருட்கள் அம்பானி பிரதர்ஸின் RINL மற்றும் TELCO போன்ற சுதேசி நிறுவனங்களில் தான் , 700 மெட்ரிக்டன் இதர விலைவுயர்ந்த உலோகங்கள் பயன்படுத்த பட்டு இருக்கிறன. அலுமினியம் மற்றும் தாமிரம், போன்றவை.

ஒரு நாளைக்கு இந்த பாலத்தின் மின்சார செலவு மட்டும் 1,75,000 ஒருவாகணத்திற்கு திங்கள் கிழமையில் இருந்து 50 வசூல் செய்கிறார்கள்.

இந்த பாலத்தால் லாபம் அடைந்தவர்கள், மும்பைக்காரர்களா ? இல்லை ரியல் எஸ்டேட் காரர்கள், பாலம் அமைந்துள்ள பகுதிகளில் சதுர அடி 40000 ஆயிரத்தை தொட்டுகொண்டு இருக்கிறது.

இந்த பாலத்தை ஒரு நாளைக்கு 1,65,000 வாகனங்கள் பயன்படுத்தும் எல்லவற்றையும் விட முக்கியமான விசயம் ரகசியமான விசியமும் கூட இந்த பாலத்தில் வடிவம் சீனாவின் அரபி எழுத்தான பிஸ்மில்லா என்ற எழுத்தின் ஆரம்ப எழுத்தை போல் இருக்கிறது . இது பாந்திரா பகுதியில் இருந்து பார்த்தாலும் சரி , ஒர்லி பகுதியில் இருந்து பார்த்தாலும் சரி .

ஜிம் ரீவர்ஸ் என்ற ஆங்கில தத்துவ மேதை சொல்லி இருக்கிறார், சூரியன் ஒளி ஆற்றின் ஒருகரையில் இருந்து மறுகரைக்கு செல்லும் அழகை விட பாலங்களில் செல்லும் வாகனங்களின் அழகு அற்புதமாக இருக்கிறது

என்று,

இது ஆரம்பம் தான் மும்பை துறைமுக பகுதியான சிவ்ரியில் இருந்து நவி மும்பை உரன் வரை 11 கி.மீ பாலம் கட்டும் திட்டம் நடைமுறையில் இருக்கிறது(12 வருடமாக). எப்படியும் 10 வருடங்களுக்கு பிறகு மும்பையில் டிராபிக் ஜாம் இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் பார்க்கிங்க் ஜாம் கண்டிப்பாக இருக்கும்

மும்பைக்கு வாருங்கள் இந்த அழகை காண

இந்த பாலத்திற்கு ராஜீவ் காந்தியின் பெயரை சூட்டிவிட்டு சோனியா காந்தி சென்று விட்டார்கள்.பாலம் திறந்து கார்கள் பயணித்து கொண்டிருக்க சில உள்ளூர் அரசியல்(மி மும்பைக்கார்) இந்த பாலத்திற்கு சுதந்திர வீரர் சர்வார்கர் பெயர்வையுங்கள், என்று கூச்சல் குழப்பம் இட்டது. ராஜீவ் காந்தி நவீன இந்தியா என்ற கனவு கண்டார் என்ற கண்ணோட்டத்தில் காங்கிரஸ் கட்சிகாரர்கள் வைத்து இருக்கலாம், ஆனால் சாவர்கர் எதற்கு அம்பேத்கார், மகாத்மா புலே, பாலகங்காதர திலகர் எல்லாம் இவர்களுக்கு தெரியவில்லை. முன்பு சிவாஜி சிவாஜி என்றார்கள் கண்ணிற்கு பட்டதெல்லாம் (ஆட்சியில் இருந்த சமயம்) சத்திரபதி சிவாஜி டெர்மினஸ், சத்திரபதி சிவாஜி வீமான நிலையம், சத்திரபதி சிவாஜி மீயூசியம், என வைத்து கொண்டே போனார்கள்.

"பாலம் கட்டி பயணம் போயும் வள்ளமிறங்கி துடுப்பு போடும் பயலுகள் "



 
goldentamilworld (yahoo groups)
 
tamilzan  google groups


Yahoo! recommends that you upgrade to the new and safer Internet Explorer 8.



--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Slide1.JPG
Slide4.JPG
Slide6.JPG
Slide8.JPG
Slide9.JPG
Slide12.JPG
Reply all
Reply to author
Forward
0 new messages