|
நினைவுகள்
ஓ வேப்பமரக்குயிலே உன்னை மீண்டும்,
என் வீட்டருகில் காண்பேன் , வேப்பமரம் இருக்கிறது என் வீடெங்கே, எனக்கும் உன் சிறகுகள் கொடு, வேலிகளுக்கு அப்பால் உன்னோடு , பறந்து திரிய பாட்டுப்பாட, வெயிலுக்கு குளுமை தரும்,
நாவல்மரக்காடே என் நிலைகண்டாயா, இந்த வருடம் உன் இடையில் கூட, துப்பாக்கியாமாமே, ஆனாலும் உறுதி உனக்கு , ஒரு குண்டு பட்ட என அப்பன் , மூச்சுவிட்டான் நிறந்தரமான, அன்று நடந்த சன்டைக்கு சாட்சியாக , உன்மீது பட்ட விழுப்புண்களாய், குண்டு பட்ட காயங்கள், முத்து என்றவுடன் தத்தி வரும் ,
நாய் குட்டியே இன்று , என்னையும் அழைத்து செல்வாயா, சிற்றீச்சை பழம் பறித்து , குளிர் ஓடையில் மணல்மேட்டில் இருவரும், மகிழ்ந்தாடுவோம் ஏன் மறந்தாய் எங்களை, அம்மா எங்கே? அப்பா எங்கே?
ஆசையாய் எனக்கு பண்டம் வாங்கிதரும் அக்கா எங்கே? அகதி அகதி என்கிறார்கள் கதியின்றி நிற்கும் என்னை யாரும் அனாதை என்று ஏன் சொல்ல வில்லை? goldentamilworld (yahoo groups)
tamilzan google groups
|