[Oppiliappan] [புல்லாணிப்பக்கங்கள்] இன்று ஒரு புதையல்

5 views
Skip to first unread message

thiruthiru

unread,
Aug 10, 2009, 1:41:37 PM8/10/09
to oppil...@yahoogroups.com
 

திருப்புல்லாணி போன்ற சிறு கிராமங்களில் வசிப்பதில் எத்தனையோ சிரமங்கள் உண்டுதான். ஆனால் பெரு நகரங்களில் அல்லது போக பூமிகளில் சகல விதமான ஸௌகர்யங்களுடனும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பெரிய பாக்யம் அடியோங்களுக்கு உண்டு. அங்கெல்லாம் இருப்பவர்கள் பெரிய யதிகளையோ, ஸம்ப்ரதாயத்தில் சிறந்தாரையோ, கைங்கர்ய சீமான்களையோ தேடிச் சென்று ஸேவிக்க வேண்டியிருக்க, இந்தத் திருப்புல்லாணியிலுள்ளவர்களை எல்லாரும் தேடி வந்து அடியோங்களை ஆஸீர்வதிக்கின்ற மஹா பாக்யம் அது. அதிலும் அடியேன் பித்ருக்கள் செய்த நல்லவைகளால் அடியேனுக்குக் கிட்டிய பெறும் பேறு ஸ்ரீமத் ஆண்டவனே இங்கு ஒரு சாதுர்மாஸயம் அநுஷ்டித்து அனுக்ரஹித்தது. இப்படி வருகின்ற ஆஸீர்வாதங்களால் ஒரு எழுத்தும் அறியாத அடியேன் வசம் அடிக்கடி புதையல்கள் போல பல புஸதகங்கள் வருவதும், அதில் எதுவுமே புரியாமல் யாராவது அர்த்தம் சொல்வார்களோ என்ற ஆசையால் இங்கு அவற்றை இடுவதும் அடியேன் வாடிக்கை என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஸ்ரீமத் ஆண்டவன் மண்டுகளைப் பற்றி "நன்றாக அலம்பி, துடைத்து, கவிழ்த்து வைத்த பாத்திரம் " என்று கூறுவதுண்டு. அதற்கு ஒரு நல்ல உதாரணமான அடியேனுக்கு, பரம காருணிகரான ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹத்தாலும், இங்கு ஆச்ரமத்தில் தங்கி முழு மன நிறைவுடன் ஊர் திரும்புகின்ற பல பெரியோர்களது இதயபூர்வமான ஆசிகளாலும் இன்று எதிர்பாராமல் கிடைத்த ஒரு பொக்கிஷத்தின் ஒரு பகுதியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். சுட்டிகள் மீது க்ளிக் பண்ணி அந்த இன்பத்தை அனுபவிக்கலாம்.

http://tinyurl.com/ma8m2t

http://tinyurl.com/ludm7w

--
Posted By thiruthiru to புல்லாணிப்பக்கங்கள் at 8/10/2009 10:31:00 PM

__._,_.___
Oppiliappan Koil Varadachari Sadagopan
http://www.sadagopan.org
Recent Activity
Visit Your Group
Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.

Y! Messenger

Group get-together

Host a free online

conference on IM.

Yahoo! Groups

Small Business Group

Ask questions,

share experiences

.

__,_._,___
Reply all
Reply to author
Forward
0 new messages