♥ உலகத் தலைவர்...! ♥

7 views
Skip to first unread message

♥ மனிதன் ,சென்னை ♥

unread,
Dec 13, 2009, 6:52:30 AM12/13/09
to

ஓடும் நதி.....!

http://odumnathi.blogspot.com/2009/12/blog-post_2128.html#links


'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்






♥ உலகத் தலைவர்...! ♥

முதலாம் ஆண்டு பெரியார் திரை குறும்படப் போட்டி

 http://3.bp.blogspot.com/_0XidROab6yk/SVPVA8yuLVI/AAAAAAAAN3Q/pDilvs4XVAc/s400/periyar7.jpg


http://www.boogiewoogieindia.com/wp-content/uploads/2009/02/movie-making.jpg






பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் 
முதலாம் ஆண்டு பெரியார் திரை குறும்படப் போட்டிக்காக 
குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.



முதல் பரிசு: ரூ.10000/-
இரண்டாம் பரிசு: ரூ.5000/-
மூன்றாம் பரிசு: ரூ.3000/-


போட்டிக்கான விதிமுறைகள்:
1. பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பிரதிபலிப்பதாக குறும்படம் இருத்தல் வேண்டும்.


2. குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித்துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன்(Subtitles) இருப்பின் நலம். தரமான DVD அல்லது CD வடிவில் குறும்படத்தின் இரண்டு பிரதிகள் 
அனுப்பப்பட வேண்டும்.


3. ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட குறும்படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி விண்ணப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.


4. இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரமும், ஏற்கெனவே பரிசு பெற்றிருந்தால் அது பற்றிய விவரமும் இணைத்து அனுப்பப்பட வேண்டும். 


5. குறும்படத்தின் கதைச் சுருக்கம், முக்கியக் காட்சிகளின் ஒளிப்படங்கள் (Photos) மற்றும் இயக்குநரின் ஒளிப்படம் ஆகியவை வரவேற்கப்படுகின்றன. 


6. போட்டியில் கலந்து கொள்ளுவதற்கான ஒப்புதல் கடிதம் படத்தின் உரிமையாளரிடமிருந்து பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். (அல்லது) போட்டிக்காக குறும்படத்தை அனுப்புகிறவர் எந்த உரிமையில் அதனை அனுப்புகிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.


7. போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் அனைத்தும் "பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை" நடத்தும் திரையிடல் நிகழ்வுகளில் திரையிடப்படும்.


8. குறும்படங்கள் 2007-2009 ஆம் ஆண்டுக்குள் எடுக்கப்பட்டனவாக இருக்க வேண்டும்.


9. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. 


10. போட்டி முடிவுகள் விடுதலை, உண்மை இதழ்களிலும் பிற நாளிதழ்களிலும் செய்தியாக டிசம்பர் இறுதியில் 
வெளியிடப்படும். 


11. ஆவணப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.


12. தேர்வு செய்யப்படாத குறும்படங்களைத் திருப்பி அனுப்புதல் இயலாது.


13. விண்ணப்பங்களை www.viduthalai.com  -இல் பதிவிறக்கிக் கொள்ளலாம்.


14. போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை.


15. போட்டிக்கு குறும்படங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: டிசம்பர் 20, 2009.




குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
அமைப்பாளர்,
பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை,
பெரியார் திடல், 50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7




மேலும் தொடர்புகளுக்கு:

செல்பேசி: 9444210999, 9940489230



http://www.readingconnections.org/newsletters/movie-camera.gif


நண்பர்களே...!
தோழர் "முத்துநிலவன்" அவர்கள் ஆறாம் வகுப்பு பாடத்திட்டத்துக்கு...
  உலகத் தலைவர் பெரியார்,
  ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சாமிநாதர்.
வாழ்க்கை வரலாற்றை 
எழுதியிருக்கிறார்.
இன்று மாலை எட்டு மணிக்குள் ஏதேனும் மாற்றம்,உங்கள் கருத்துக்களை தெரிவிக்க...


http://1.bp.blogspot.com/_KrCjUAJLEME/SLK0Fwe1ROI/AAAAAAAABe4/s_futsUNGHE/s400/images.jpg

முத்துநிலவன்,
புதுக்கோட்டை

தமிழ் நாடு .

மின்னஞ்சல் முகவரி:
muthuni...@gmail.com

கைப்பேசி எண்

+91- 94431 93293






"பெண்கள் மாநாடு
ஒன்றில் பெண்களாகச் சேர்ந்து அவரது 59 வயதில் கொடுத்ததுதான் ‘பெரியார்’
எனும் பட்டப்பெயர்!..."






சமச்சீர் கல்வி
ஆறாம் வகுப்பு : தமிழ்ப்பாட நூல்
உரைநடை எண்:    4

தந்தை பெரியார்!

அவர்தாம் பெரியார்!
பெரிய தாடி வைத்த பெரியவர்களை நீங்கள் பார்த்தது உண்டா?
பார்த்திருப்பீர்கள். நம் சொந்தத் தாத்தாவே தாடிவைத்திருப்பதும் உண்டல்லவா?

தாடிவைத்த பெரியவர்கள்; உலகம்முழுவதும் நிறையப்பேர் உண்டு.
இந்திய நாட்டுவாழ்த்து -ஜனகணமன- பாடலை எழுதிய கவி தாகூர், உலகப்பேரறிஞர் மார்க்ஸ், இவர்களைப் போலப் பலரும் பெரிய தாடி வைத்திருந்தார்கள்! உலகப்புகழ்பெற்ற தமிழ்நாட்டுத் தாடிக்காரர்கள் இருவர்!

ஒருவர்2000ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்து, திருக்குறளை எழுதிய திருவள்ளுவர்.மற்றவர், கடந்த20ஆம் நூற்றாண்டில்; வாழ்ந்த தந்தைபெரியார்.புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெரியாரைப் பற்றிய தனது பாடல் ஒன்றில் -

‘தொண்டு செய்து பழுத்த பழம்,
தூய தாடி மார்பில் விழும்,
மண்டைச் சுரப்பை உலகு தொழும்,
மனக் குகையில் சிறுத்தை எழும் - அவர்தாம் பெரியார்’ -

என்று பாடுவார்.
தாடியென்பது ஓர் அடையாளம் அவ்வளவுதான். நாள்தோறும் காலையில் தாடி-மீசையை
மழிப்பது தன்வேலைகளுக்குப் பெரியஇடைஞ்சலாக இருப்பதாக நினைத்துத்தான்
பெரியார் தாடியை வளரவிட்டார். அப்படி ‘நேரம்கிடைக்காத அளவிற்கு
எந்தவேலையை அவர் பார்த்தார்? மக்களுக்கு என்ன செய்தார்? என்று தெரிந்து
கொள்வதே அவரது வரலாற்றைத் தெரிந்து கொள்வதாகும்.


நாம் எல்லாரும் எப்படிப் பிறந்தோம்?
தவறானசெய்திகளை ‘இது தவறு’ என்று மறுக்கத் கற்றுக் கொடுத்தவர் பெரியார்.
நாமும் நம் நண்பர்கள் தவறு செய்கிறபோது, ‘வேண்டாம், இது தவறு’ என்று
சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும் அல்லவா? அதுதானே உண்மையான அன்பு? அந்த
அன்பைத்தான் பெரியார் செய்தார்.
ஒருமுறை தொண்டர் ஒருவர் பெரியாரிடம் கேட்டார் : “அய்யா மனிதர்கள்
எல்லாரும் பிரம்மனின் உடலில்இருந்து பிறந்தார்கள் என்கிறார்களே, அது
உண்மையாஅய்யா? சிலர்; பிரம்மனின் தலையில் பிறந்தார்களாம்! சிலர் மார்பில்
பிறந்தார்களாம்! சிலர்; தொடையில்  பிறந்தார்களாம்! வேறு பலரோ பிரம்மனின்
காலில் பிறந்தார்களாம்!  இது உண்மைதானா அய்யா? நாம் எப்படிப் பிறந்தோம்?”
ஏன்று கேட்டார். அதற்குப் பெரியார் சொன்னார்: ‘அது எப்படி தலையிலும்,
மார்பிலும், தொடையிலும், காலிலும் பிறக்க முடியும்? சும்மா கதைவிடுறாங்க
வெங்காயம்! நாம்எல்லாருமே அவங்கவுங்க அம்மா-அப்பாவுக்குத்தான் பொறந்தோம்’
-என்று, உண்மையை எளிமையாகப் பேசியவர் பெரியார். உண்மை எளிமையாகத் தானே
இருக்கும்?


‘என் பெயர் லண்டன்..!’
ஒருமுறை தன்குழந்தைக்குப் பெயர்வைக்கச் சொல்லித் தொண்டர் ஒருவர்
மேடைக்குவந்தார் பெரியார் ‘லண்டன்’என்று குழந்தைக்குப் பெயர்வைத்து
வாழ்த்தினார். வந்தவருக்கோ திகைப்பு! தன்பிள்ளையை ‘ஏ,லண்டா!’ என்று
எப்படிக்கூப்பிடுவது?’ என்று குழப்பத்துடன் போனவர் மீண்டும் மேடைக்கு
வந்தார். வேறொரு நல்லபெயர் வைக்கச் சொல்லித் தயங்கித் தயங்கிப்
பெரியாரிடம் கேட்டுக்கொண்டார். பெரியார் சிரித்துக்கொண்டே சொன்னார் :
“என்ன? ஊர்ப் பெயரை எப்படிக் கூப்பிடுறதுன்னு பார்க்கிறிங்களா?
திருப்பதி, பழனி, சிதம்பரம் எல்லாமே ஊர்ப்பெயர்கள்தாம் அதுவும்
மதம்சார்ந்த பெயர்கள்! சாதி-மதம் கடந்து எதிர்காலப் பிள்ளைகளாவது
முன்னேறட்டுமே என்றுதான் ‘லண்டன்’ ‘மாஸ்கோ’ என்றெல்லாம் பெயர்
வைக்கிறேன்” என்றார்! பிறகு அந்தப் பிள்ளைக்கு ‘காமராசு’-என்று பெயர்
வைத்துவிட்டு, ‘தமிழ்ப்பிள்ளைகள் எல்லாருமே படிக்கவேண்டும’; என்பதற்காக
ஏராளமான பள்ளிக்கூடங்களைத் திறந்த காமராசர் பெயரைவிட வேறுநல்லபெயர்
எனக்குத் தெரியாதப்பா!’ என்றுசொல்லி அனுப்பினார் பெரியார். நம்ஊரில்,
பெயரில்கூட எவ்வளவு இருக்கிறது பாருங்கள்! இதுபோல எல்லாவற்றையும்
சிந்தித்து மாற்றியதால்தான் பெரியாரைச் ‘சிந்தனையாளர்’ என்கிறார்கள்!
இப்போது நாம் எழுதும் ‘லை’ ‘னை’ போலும் எழுத்;துகள் ‘பெரியார் ‘லை’ என்று
சொல்லும் அளவிற்கு தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றியும் சிந்தித்தவர்
பெரியார்.

இதைத்தான் மக்கள்கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,

‘சிந்தித்துப் பாத்து செய்கையை மாத்து,
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ– தவறு சிறுசா இருக்கையில்
திருத்திக்கோ’– 

என்கிறார்!


ஈ.வெ.இரா., ‘பெரியார்’ ஆனார்…
ஈரோட்டில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பெரியாருக்குப் பெற்றோர்
வெங்கட்டர்-சின்னத்தாய் இருவருமாக வைத்தபெயர் இராமசாமி என்பது. ஏழைகளும்,
சாதிமத வேற்றுமைகளால் பாதிக்கப்பட்டவர்களும், எல்லாசாதிக்குள்ளும்
இழிந்தசாதியாய் நம்;குடும்பங்களில் நடத்தப்படும் பெண்களும்
முன்னேறுவதற்காகவும் பெரியார் பாடுபட்டார். அதனால்தான் பெண்கள் மாநாடு
ஒன்றில் பெண்களாகச் சேர்ந்து அவரது 59 வயதில் கொடுத்ததுதான் ‘பெரியார்’
எனும் பட்டப்பெயர!; ஈ.ரோடு வெங்கட்டர் மகன் .இராமசாமி இப்படித்தான்
இராமசாமி, பெரியார் ஆனார். பின்னர் ஈ.வெ.இராமசாமி எனும் இயற்பெயரை விட
’ஈ.வெ.இரா.பெரியார்’-என்னும் பெயரே நிலைத்துவிட்டது!
‘சாதியும் இல்லை, சாமியும் இல்லை’ என்ற பெரியார்...
“பக்தி தேவையா ஒழுக்கம் தேவையா என்றால், நான் ஒழுக்கம்தான் தேவை என்பேன்.
ஏனெனில், பக்தி இல்லாமல் மனிதர்கள் இருந்துவிடலாம், ஒழுக்கம் இல்லாமல்
யாரும் இருக்க முடியாது. தேவையில்;லாமல் மனிதர்களிடம் வேற்றுமையை
வளர்க்;கும் சாதியை மதம்தான் காப்பாற்றுகிறது. மதத்தை சாமி
காப்பாற்றுகிறது, ஆதிகாலத்தில் சாமியும், மதமும் சாதியும் இல்லாமல்தான்
மனிதர்கள் இருந்திருக்கிறரர்கள். எனவே சாதி-மதங்களுக்கு அடிப்படையான
சாமியை நான்கும்பிடுவதில்லை”என்றவர் பெரியார். ‘கடவுள்இல்லை’யென்பதில்
கடைசிவரை அவரும் உறுதியாக இருந்தார். அவரது உண்மைத்தொண்டர்களும்
இருந்தார்கள், இருக்கிறார்கள்.
தமிழகத்தின் -காங்கிரஸ்கட்சி அல்லாத- முதல் முதல்வரான அறிஞர் அண்ணாவும்,
அவரை அடுத்து முதல்வராகி, தற்போது ஐந்தாவது முறையாகவும் தமிழக
முதல்வராகியிருக்கும் கலைஞர் கருணாநிதியும,; தமிழகத்தின் முன்னாள்
முதல்வர்களான எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும்கூட
பெரியாரின்மீதும் அவரதுகொள்கைகள் மீதும் பெரும் மரியாதை
வைத்திருந்தார்கள், இன்றும் வைத்திருக்கிறார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.


‘இடஒதுக்கீடு’ கிடைக்கப் போராடிய பெரியார்...
பலநூறு ஆண்டுகளாகக் கல்வியும், கௌரவமான வேலைவாய்ப்பும் இல்லாமலே கிடந்த
உழைக்கும் மக்களுக்காக ‘இடஒதுக்கீடு’ கேட்டுப் பெரும் போராட்டங்களை
நடத்தி, இந்திய அரசியல் சட்டத்திலேயே முதல்திருத்தம் செய்யவைத்த, உலகில்
வேறெங்கும் காணமுடியாத, சிந்தனையாளராகவும் செயல்வீரராகவும் ஒருசேரத்
திகழ்ந்தவர் பெரியார்தான்.
இப்போது நம் 11,12ஆம்வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெறுகிறார்கள் அல்லவா?
‘தாழ்த்தப்பட்ட’, ‘பிற்படுத்தப்பட்ட’ வகுப்பில் பிறந்து, நன்றாகப்
படிப்பவர்க்;;;;;;;;;;;;;;;கு உயர்கல்வி, மற்றும் வேலைவாய்ப்பில்
‘இடஒதுக்கீடு’ கிடைக்கிறது அல்லவா? இவற்றைத் தமிழக அரசும் மத்தியஅரசும்
தரக்காரணமாகஇருந்த பெரும்போராட்டங்களை நடத்தியவர்தான்; பெரியார்;. இன்றைய
மாணவர்களும் இளைஞர்களும், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ, சிந்தனைமிகுந்த
பெரியாரின் நூல்களைப் படிக்க வேண்டும், அடுத்த தலைமுறைக்கும் முன்னோடியாக
வாழவேண்டும். அதுதான் சிறந்த வாழ்க்கை.
-----------------000---------------
சிறுசிறு கட்டங்களில் பொருத்தமான பின்னணி வண்ணப் படங்களுடன்; வரவேண்டிய
குறிப்புகள்…
-------------------------------------------------------
சமூகநீதி-பகுத்தறிவுக் கருத்துகளைப் பிரச்சாரம்செய்து அதற்காகப்
போராடிக்கொண்டே  வாழ்ந்த பெரியார், தனது 94 வயதில்கூட 177நாள்
பயணம்செய்து, 229 கூட்டங்களில் பேசினார்!
------------------------------------------------------
பெரியார் தான் வகித்த 29பதவிகளைத் துறந்து பொதுவாழ்வை ஏற்றுக்கொண்டது
முதல், எந்த அரசுப் பதவியையும் ஏற்கவில்லை. 1940,மற்றும் 1942 ஆண்டுகளில்
தன்னைத் தேடிவந்த தமிழக முதல்வர் பதவியை இருமுறையும் ஏற்க மறுத்த
பெருந்தகையாளர் பெரியார்.
---------------------------------------------------------
தன் தங்கை மற்றும் மனைவியை நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபடுத்தியவர்
பெரியார். தன்; தாயைக் கூட இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒருபகுதியாக
கைத்தறி உடுத்தச் செய்தவர்!
------------------------------------------------------------
பெரியார் வாழ்ந்த காலம் : 17-09-1879 – 24-12-1974 (94ஆண்டுகள்) -------
------------------------------------------------------------
மேலும் தெரிந்துகொள்ள…
இணைய தளம் : hவவி:ஃஃறறற.pநசலையச.ழசபஃ
‘ஈ.வெ.ரா.சிந்தனைகள்’ மூன்று தொகுதிகள் - வே.ஆனைமுத்து(தொகுப்பு)-1974
‘பெரியார் புரட்சிமொழிகள்’-நூற்றாண்டு நினைவு த.நா.அரசு வெளியீடு(1979)
‘உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு’-இரண்டுபாகங்கள் - கி.வீரமணி(2007)





 =========================================================
















"‘ஓலைச்சுவடிகளை நெருப்பில்இடுவதால் புண்ணியம் என்று
ஆகமம் சொல்லுமானால், அந்த ஆகமங்களை அல்லவா நெருப்பில் இடவேண்டும’;
என்றவர்தான் நம் உ.வே.சா!"





சமச்சீர் கல்வி
ஆறாம் வகுப்பு : தமிழ்ப்பாட நூல்
உரைநடை எண்:    1

‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சாமிநாதர்.

குழந்தைகளுக்குத் தாத்தாவைப் பிடிக்கும்.
கதைசொல்லும் தாத்தாவைக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
நம் தாத்தாவையே பிடிக்கும் என்றால் தமிழ்த்தாத்தாவைப் பிடிக்காதா என்ன?
அவர் யார்?;
தமிழ்மொழியைச் செம்மொழி என்று உலகம் இப்போது கொண்டாடுகிறது. தமிழின்
தொன்மைக்குச் சான்றாக விளங்கும் சங்க இலக்கியம், சிந்தாமணி,
சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் பல தலைமுறைகளாக
ஓலைச்சுவடிகளிலேயே கிடந்தன. அவற்றை எல்லாம் பலபாடுபட்டுத் தேடிஎடுத்து,
அச்சிட்டுத் தந்த ஒருவர் போன நூற்றாண்டில் வாழ்ந்தார். அவர்தாம்
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர்!


உ.வே.சா.
இன்றைய திருவாரூர்மாவட்டம் உத்தமதானபுரம் என்னும் ஊரில் பிறந்தவர்.
பெற்றோர் வைத்தபெயர் வேங்கடராமன். ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சி
சுந்தரனார்தான் வேங்கடராமன் பெயரை சாமிநாதன் என்று மாற்றினார்.
உத்தமதானபுரம் வேங்கடராமன் சாமிநாதன் இதன் சுருக்கமே உ.வே.சா.


ஒரு முக்கியமான திருப்பம்!
தமிழறிஞரும் நீதிபதியுமான சேலம் இராமசாமிஅவர்களைக் கும்பகோணத்தில்
சந்தித்தது பெரிய திருப்பமாயிற்று. அவர் இவரிடம், ‘சிந்தாமணி,
சிலப்பதிகாரம் போலும் பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடிப்படிக்க
வேண்டும்’என்றார். அன்று தொடங்கியது சாமிநாதரின் பழந்தமிழ்ச்சுவடி தேடும்
வேட்கை…!


ஓலைச் சுவடிகளைத் தேடி…
இப்போதெல்லாம் பக்கத்துத் தெருவில் இருக்கும் பாட்டியைப் பார்க்க
வேண்டுமானால் கூட நாம் மிதிவண்டி கேட்கிறோம். ஆனால், நூற்றைம்பது
ஆண்டுகளுக்குமுன் போக்குவரத்து எப்படி இருந்திருக்கும்?  விரைவுத்
தொடர்வண்டியோ, மகிழ்வுந்தோ இல்லாத காலம்அது! பெரும்பாலும்
மாட்டுவண்டிகளில் சென்று, தமிழ்இலக்கிய ஓலைச்சுவடிகளைத் தேடித்தொடங்கிய
பயணம், அவரது 87வயது வரை நீண்டது!
கொடுமுடி என்னும் ஊரில், ஒருவரிடம் சுவடிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு
ஓடோடிச் சென்ற சாமிநாதர், அவற்றைக் கேட்டுப்பார்த்தார். சுவடியில்
இருக்கும் பழந்தமிழ் இலக்கியத்தைப் படித்துப் படிஎடுத்தபின்
தந்துவிடுவதாகச் சொல்லிக் கெஞ்சிப்பார்த்தார். அவரோ, “நாளை
ஆடிப்பெருக்கு, பொங்கிவரும் புதுவெள்ளத்தில் ஓலைச்சுவடிகளை விடுவதுதான்
புண்ணியம்” என்று, ஓலைச்சுவடி களைத் தரமறுத்துவிட்டார்;. இவரோ,
ஓலைச்சுவடிகளை எப்படியாவது பார்த்துவிட வேண்டும்எனும் ஒரே நோக்கத்தோடு,
பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல், திண்ணையிலேயே படுத்துவிட்டார்!
விடிகாலை! ஓலைச்சுவடிகளை ஆற்றில்விட்டவர்கள் போனபிறகு, அந்தச் சுவடிகளைத்
திரட்டிக் கொண்டுவந்துவிட்டார் நம்சாமிநாதர். நனைந்திருந்த
ஓலைச்சுவடிகளின்; ஈரத்தை மேலாடையால் ஒற்றி எடுத்தார், அவ்வளவும்
பழந்தமிழ்ச் சுவடிகள்! அவரடைந்தமகிழ்ச்சிக்கு அளவேஇல்லை! பிஞ்சுக்
குழந்தைகளைக் கொஞ்சுவதுபோலத் தமிழ்;ச்சுவடிகளைக் கொஞ்சிகொஞ்சி
மகிழ்ந்தார் நம்தமிழ்த்தாத்தா!
இதுபோலவே கறையான்களுக்கு இரையாகவிருந்த பல சுவடிகளையும் காப்பாற்றினார்.
அப்படியும் வளையாபதி, குண்டலகேசி உள்ளிட்ட இலக்கியங்களில் பெரும்பகுதி
கிடைக்காததுபற்றிப் புலம்பிக் கொண்டே இருப்பாராம். வேறுசிலர், ஆகமம்
சொல்வதாகச் சொல்லி, பழையசுவடிகளை அடுப்பில்இட்டு வெந்நீர்வைத்துக்
குளிப்பார்களாம். ‘ஓலைச்சுவடிகளை நெருப்பில்இடுவதால் புண்ணியம் என்று
ஆகமம் சொல்லுமானால், அந்த ஆகமங்களை அல்லவா நெருப்பில் இடவேண்டும’;
என்றவர்தான் நம் உ.வே.சா!


‘டிங்கினானே டிங்கினானே’
பெரும்புலவரான உ.வே.சா.அவர்கள், தமது ஆழ்ந்த தமிழறிவைக்கொண்டு எளியஉரைநடை
நூல்களை சாதாரணப் படிப்புள்ள எல்லார்க்கும் புரியும்படிப் பேசினார்,
அவ்வாறே எழுதினார்.
“சூளாமணியை+த் தலையிலும், சிந்தாமணியை மார்பிலும், வளையாபதியைக்
கையிலும்,  மேகலையை இடுப்பிலும், குண்டலகேசியைக் காதிலும்
அணிந்திருக்கும் தமிழ்த்தாய், தன் காலில் சிலம்பை அணிந்து கம்பீரமாகக்
காட்சிதருகிறாள”; எனும் அவரது எளியபேச்சு எவரையும் கவர்ந்துவிடும்!
தாம் எழுதிய கட்டுரை ஒன்றுக்கு அவர்வைத்த தலைப்பு ‘டிங்கினானே’-என்பதாகும்!
தெருக்கூத்துப் பாடகர் பாடிய பாட்டின் ஒருபகுதி அது! ‘பீமசேன மவராசா’
என்று பாடகர்பாட, தொடர்ந்து பின்பாட்டுக்காரர் ‘மவராசா மவராசா’ என்று
பாடினார். அடுத்து, ‘மரத்தேபூ’ என்றதற்கும் ‘மரத்தேபூ மரத்தேபூ’ எனத்
தொடர்ந்தது. கடைசியாக, ‘டிங்கினானே’யும் அவ்வாறே ‘டிங்கினானே டிங்கினானே’
என்று பாடப்பட்டது. ‘பீமராசா மரத்தைப் பிடுங்கினானே’ என்பதைத்தான் பாடகர்
அப்படிச் சுவைபட இழுத்துப் பாடினார். சாதாரணப் படிப்புள்ள
பாமரத்தமிழனிடமும் கற்றுக் கொள்ள ஏதோ இருக்கத்தான் செய்கிறது என்றுகருதிய
எளிமைதான் உவேசா அவர்களின் பெருமை!


தாத்தாவின் பணிகள் பேரப் பிள்ளைகளால் தொடரட்டும்…
ஓலைச்சுவடிகளிலிருந்து படியெடுத்து, வேறுபல படிகளுடன் சரிபார்த்து,
பொருள்குறிப்புத் தந்து, முதன்முதலாக அச்சில்ஏற்றுவது ஒன்றும் சாதாரணமான
வேலையன்று.  ஓலை எழுத்துகளில் புள்ளி இருக்காது, ஒற்றைக்கொம்பு
இரட்டைக்கொம்பு வேறுபாடும் தெரியாது! ‘பேரன்’ என்பதை ‘போன’ என்றும்
படிக்கலாம், ‘பொன்’ என்றும் படிக்கலாம். அடுத்துள்ள சொல், அந்தச் சூழல்,
அந்த இலக்கியப் போக்கு முதலிய பலவும் தெரிந்திருந்தால்தான் சரியாகப்
படியெடுக்க முடியும். அப்படி அவர் பலபாடுபட்டுத் திரட்டி, அச்சிட்டுத்
தந்த பழந்தமிழ் இலக்கியநூல்கள் நூற்றுக்கும் மேலே உள்ளன!
87வயதில் ‘என் சரித்திரம்’ எனும் தன் வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கும்
போதே தமிழ்த்தாத்தா அவர்கள் காலமானது, தமிழர்க்குப் பெரிய இழப்பாகும்!
அவர் வளர்த்த செம்மொழித்தமிழ், பலதுறையிலும் வளர நாமும் தொடர்ந்து
பாடுபடுவதே தமிழ்த்தாத்தாவுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான
மரியாதையாகும். தாத்தாவின் வழியில் பேரப்பிள்ளைகள் மேலும் மேலும்
முன்னேறுவோம்தானே?
--------------------------------------------------------------
தொடர் பார்வைக்கு :
‘என் சரித்திரம்’ -- உ.வே.சா. இணையம் :
www.uvesalibrary.org
‘தமிழ்ச் சுடர் மணிகள்’: பேரா.வையாபுரியார்,
‘டாக்டர் உ.வே.சா.அவர்களின் உரைநடை நூல்கள்’ - நான்கு தொகுதிகள்
‘இந்திய இலக்கியச் சிற்பிகள் - தமிழ்த்தாத்தா’ – கி.வா.ஜகந்நாதன்
-சாகித்திய அகாதெமி
‘உ.வே.சா.--பன்முக ஆளுமையின் பேருருவம்’ – பெருமாள் முருகன் (தொகு)- காலச்சுவடு
‘சுமயம் கடந்த தமிழ் - உ.வே.சா.’-- சு.வெங்கடேசன்- பாரதி புத்தகாலயம்.
-------------------------------------------------------------------
உவே.சா அவர்கள் பதிப்பித்த நூல்களில் சில :
1.சீவகசிந்தாமணி, 2.பத்துப்பாட்டுநூல்கள், 3.சிலப்பதிகாரம், 4.புறநானூறு,
5.மணிமேகலை, 6.எட்டுத்தொகை நூல்களில் சில, 7.பெருங்கதை,
8.புறப்பொருள்வெண்பா மாலை, 9.நன்னூல், 10.பிரபந்தங்கள் பல,
‘மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் சரித்திரம்’ உள்ளிட்ட
தமிழறிஞர் வரலாறுகள் என இவர்கள் வெளியிட்ட நூல்கள் நூற்றுக்கும் மேல்.
---------------------------------------------------------------------
காலம் : 19-02-1855 – 28-04-1942 சிறப்பு : சென்னையில் உ.வே.சா.
அவர்களால் நிறுவப்பட்ட ‘டாக்டர் உ.வே.சா.நூலகம்’ இன்றும்
நூல்வெளியீடுகளுடன் தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. இவரது
பதிப்புகளுக்கு இன்றளவும் தமிழர்களிடையே பெரும் மதிப்பு உள்ளது.
----------------------------------------------------------------
சங்க இலக்கியம்: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய பதினெட்டு நூல்கள்




எட்டுத்தொகை நூல்கள்:
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குநுறூறு
ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார்ஏத்தும் கலியோடு அகம்புறம்என்று
இத்திறத்த எட்டுத் தொகை


பத்துப்பாட்டு நூல்கள்:
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
புhலை கடாத்தொடும் பத்து.


Photobucket


பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...










smail

http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg


Update me when site is updated





ஓடும் நதி.....!

http://odumnathi.blogspot.com/2009/12/blog-post_2128.html#links




Reply all
Reply to author
Forward
0 new messages