'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
மாறும் எல்லாம் மாறும்.....!
அறிவு மாடு உழைப்பு மாட்டின்
மேல் ஏறி சவாரி செய்கிறது
உழவனையும் காணோம் உழவு நிலத்தையும் காணோம்
அவர்களுக்கு நன்றி சொல்ல...
காடு மேடேல்லாம் தேடிப்போனேன்
வெட்ட வெளியில் படுத்திருந்த உழவனிடமும்,உழவு மாட்டிடமும்
பத்திரமாக இருந்தது நன்றி !
உழவன் இருக்கும் வரை... உழைப்பவன் இருக்கும் வரை ...
நன்றி என்ற வார்த்தை செத்துபோகாது என்ற நம்பிக்கை வந்தது...
மாறும் எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையுடன் திரும்பி வந்தேன்....!
_மனிதன்.
(அசல் உழைப்பைத் தரும் உடலுழைப்பாளி அந்த உழைப்பை நகல் எடுக்க முடியாது. நகல் எடுக்கவல்ல உழைப்பைத் தரும் அறிவுழைப்பாளி அதை எத்தனை நகல் வேண்டுமானாலும் எடுத்துப் பணமாக்கிக் கொள்ளலாம்.100
அறிவுழைப்பாளிகள் ஒன்று சேர்ந்து 10 கோடி ரூபாய் செலவில் ஒரு மென்பொருளை
உருவாக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அதைக் குறுந்தகடாக்கி பல
லட்சம் பிரதிகளை எடுத்துப் பலநூறு கோடிகளுக்கு அவற்றை விற்றுக்கொள்ளலாம். )
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...