அமெரிக்கா முதலாளித்துவ நாடு. சீனா கம்யூனிச நாடு. கொள்கை அடிப்படையில் இரண்டுமே இரு துருவங்கள். ஆனால் சர்வதேச அரசியலில் அதிகாரம், ராணுவ பலம், வலுவான பொருளாதாரம் போன்ற விஷயங்களில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று போட்டிதான். இந்தப் போட்டி, அடுத்த நாடுகளில் ராணுவ தளங்களை அமைப்பதிலும் வந்துவிட்டது.
உலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டும்தான் தங்கள் நாடுகளில் மட்டுமல்லாது மற்ற நேச நாடுகளிலும் ராணுவ தளங்களை வைத்துள்ளன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்துவிட்ட பிறகு, அந்த ஏவுகணைகளை ஆரம்பத்திலேயே அழிப்பதற்கும் ராணுவ தளங்கள் இருக்கும் நாடுகளின் பாதுகாப்புக்கும் இது அவசியமாகிவிட்டது. இந்த ஆசை இப்போது சீனாவுக்கும் வந்துவிட்டது. பாகிஸ்தானில் ராணுவ தளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளது சீனா.
சீனாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள உக்கூர் பிராந்தியத்தில் தீவிரவாதப் பிரச்னை இருக்கிறது. தனி நாடு கேட்டுப் போராடி வரும் இந்தப் பகுதி தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிய, பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள வடமேற்கு மாகாணத்துடன் சீனா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது அந்தப் பகுதியில் ஒரு ராணுவ தளத்தை அமைப்பதன் மூலம் தீவிரவாதிகளை அடக்குவது சீனாவுக்கு எளிதாகிவிடும். இது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகி விடும் என்பதுதான் பிரச்னை.
பாகிஸ்தான் தனக்குத் தேவையான ராணுவ தளவாடங்களில் 70 சதவீதத்தை சீனாவிடம்தான் வாங்கி வருகிறது. சப்ளையை நிறுத்திவிடுவேன் என மிரட்டியே காரியத்தை சாதிக்கலாம். இந்தியாவை மிரட்ட இதையும் ஒரு வாய்ப்பாக பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம். தனக்கும் பாதுகாப்பு, சீனாவுக்கும் உதவி செய்தது போல் ஆகும் என்பதால் பாகிஸ்தானும் ராணுவ தளம் அமைத்துக் கொள்ள அனுமதிக்கும்.
பாகிஸ்தானில் தொடங்கி, அப்படியே மியான்மர், இந்தப் பக்கம் இலங்கை, அந்தப் பக்கம் வட கொரியா, அப்புறம் நேபாளம் என செம்படைகளின் தளங்களை விரிவடையச் செய்வதுதான் சீனாவின் நோக்கம¢.
உலகம் முழுக்க ராணுவ தளங்கள் வைத்திருக்கும் அமெரிக்காவை விமர்சனம் செய்துவந்த சீனா, இப்போது இதுபோன்ற ராணுவ தளங்கள் மூலம் பிராந்திய ஒற்றுமை அதிகரிக்கும் என புதிய விளக்கம் கூறி வருகிறது.
http://dinakaran.com/masterdetail.aspx?id=4890
போலீஸ் லஞ்சம் கேட்டால்....
‘‘போலீசார்
லஞ்சம் கேட்டால் அல்லது காவல் துறை தொடர்பான பிரச்னைகள் இருந்தால்,
நேரடியாக எனது செல்போன் 98409 83832 என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்’’சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்.
http://www.dinakaran.com/nagaramdetail.aspx?id=4903
உலகமெங்கும் வசூலில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் Avatar திரைப்படம் எவ்வாறு உருவாக்கப்பட்டது சம்பந்தப்பட்ட சில புகைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவற்றை இங்கு பதிவின் மூலம் பகிர்கின்றேன்....
http://techbyvarma.blogspot.com/2010/01/avatar.html
விடுதலை புலிகளின் புதிய இணையதளத்தை நடத்துபவர் மோசடி பேர்வழி-ஜெகத்
கஸ்பர் போடும் புது குண்டு..
மறக்க முடியுமா..என்னும் கட்டுரையை நக்கீரனில் எழுதி வரும் ,ஜெகத்
கஸ்பர் பாதிரியார் இந்த வார இதழில் .புலிகளின் புதிய தமில் இணைய தளமான
www.lttepress. com பற்றி சர்ச்சை க்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார் ,
அதாவது,தான் ஒரு விடுதலை புலியிடம் ,பேசியதாகவும்..அவரிடம் இந்த தளத்தை
பற்றி கேட்ட போது ..இது புலிகளால் நடத்தபடுவதில்லை.இது இந்திய,இலங்கை
அரசு உளவுதுறை வேலை என்றும்...கூறினாராம்.
மேலும் அடுத்த வரியிலேயே,இது லண்டனில் உள்ள ஒரு மோசடி பேர்வழியால்
நடத்தபடுகிறது..என்றும் அவர் அங்கே ஆள்கடத்தல் தொழில் செய்து
சம்பாதிப்பதாகவும் இந்த இணையத்தை மக்கள் யாரும் பொருட்படுத்த வேண்டாம்
எனவும் அந்த விடுதலை புலி கூறியதவும் எழுதி உள்ளார்.
விடுதலை புலிகளின் தளபதி போல...ஜெகத் கஸ்பர் விடும் பீலாவுக்கு அளவு
இல்லாமல் போய்விட்டது.
இந்த ஆளுக்கு எழுத இடம் கொடுத்து ஊக்குவிக்கும் நக்கீரனுக்கு ஈழமக்கள்
கண்டணம் தெரிவிக்க வேண்டும்.
இல்லையேல் ...ஈழமக்களுக்கு இனி நீதான் தலைவர் என பிரபாகரன் தன்னிடம்
கூறியதாக கதையும் விடுவார்.இந்த நல்லவர்.
இவரை பற்றி ,
www.envazhi. com என்வழி இணையதளத்தில் வந்த ஒரு கட்டுரை படித்து பாருங்கள்..!
ஜெகத் கஸ்பர் நல்லவரா கெட்டவரா? அதிர்வு இணையதளம் ஏன் அவரைக் காய்ச்சி எடுக்கிறது?
(பால் பழனி)
முதல் கேள்விக்கு ‘நாயகன்’ பாணி ‘தெரியலியே…’தான் பதில்!
kasperஎனவே அடுத்த கேள்விக்குப் போய்விடலாம்…
ஜெகத் கஸ்பர் ராஜ் நக்கீரனில் மறக்க முடியுமா? தொடரை ஆரம்பித்த புதிதில்
தமிழீழம், விடுதலைப் புலிகள் பற்றிய எழுத்துக்களோடு, பிற அனுபவங்களையும்
அவர் எழுதி வந்தார். பின்னர் இறுதிப் போரின் இறுதிக் கட்டமான மே 17-ம்
தேதிக்குப் பிறகுதான் தொடர்ந்து பிரபாகரன் குறித்த கட்டுரைகளை அவர்
தீவிரமாக எழுதத் துவங்கினார்.
பிரபாகரன் பேட்டி என ஆரம்பித்தவர், 80 அத்தியாயங்களுக்கு இந்தத் தொடரை
இழுப்பதற்காக இலக்கில்லாமல் பல விஷயங்களைச் சுற்றி வளைத்து எழுதுவதாகவே
தமிழுணர்வாளர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இது மேலோட்டமான
அவதானிப்புதான்.
ஆனால் ஜெகத் கஸ்பரின் உண்மையான முகம் என்ன என்பது இன்னும் பலருக்கு
புலப்படவில்லை. பிரபாகரனை தேசியத் தலைவர் என்று உயர்த்திப் பிடிக்கும்
இந்த மனிதருக்கு, இறுதி நாளில் நிகழ்ந்த துயரத்தில் ஏதோ ஒரு பங்கிருப்பதை
புலம்பெயர் தமிழர்கள் உரக்கச் சொல்ல ஆரம்பித்துள்ளனர். இவரைப்
போன்றவர்கள் பேச்சை நம்பித்தான் நடேசன், புலித்தேவன் போன்றோர் வெள்ளைக்
கொடிகளோடு போய் சிங்களவனின் துப்பாக்கி குண்டுகளில் சிக்கி ரத்த
வெள்ளத்தில் கிடந்தார்கள் என்ற உண்மையை கஸ்பரே சுற்றி வளைத்து ஒப்புக்
கொள்கிறார்.
அந்த நாளில் சிங்களத்துக்கு உதவிய இந்திய அரசுக்காக, அல்லது இந்திய
அரசின் சார்பில் இயங்கியவர்களுக்காக கனிமொழியுடன் இணைந்து சில வேலைகளைச்
செய்துள்ளார் கஸ்பர் என்றும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் பிரபாகரனை இவர் தமிழீழத்தில் சந்தித்தது வெறும் 6
நிமிடங்கள் மட்டுமே என்றும், இவருக்கு பிரபாகரன் பிறந்த நாள் வாழ்த்துக்
கூறினார் என்பதைத் தவிர வேறு தொடர்புகள் இல்லை என்றும் அதிர்வு
கூறுகிறது. இந்த 6 நிமிடச் சந்திப்பை வைத்துக் கொண்டு, புலிகள்
இயக்கத்துக்கே தான்தான் காட்பாதர் என்ற ரேஞ்சுக்கு கஸ்பர் பேசி, எழுதி
வருவது ஏமாற்று வேலை என்பது அதிர்வின் வாதம்.
ஈழத் தமிழர்களுக்காக உண்மையான உணர்வோடு போராடி சிறைவாசம் அனுபவித்த
நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்களை விமர்சிக்கையில் ‘விபச்சாரம்’
போன்ற வார்த்தைகளை கஸ்பர் பயன்படுத்தியதோடு, ஈழப் போராட்டத்தையும்
பிரபாகரனையும் தவறாக வழிநடத்தியவர்கள் என அவர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
‘ஈழப் போராட்டத்தை இந்தியாவின் காலடியில் வைக்கும் கஸ்பரின் முயற்சி
பலிக்காததால் வந்த ஆத்திரத்தின் விளைவு இது’ என்கிறது அதிர்வு.
ஆனால் ஜெகத் கஸ்பரோ, அந்த அதிர்வு தளமே இலங்கை அரசின் ஏஜென்ட் என்று ஒரே
போடாகப் போடுகிறார். அதற்கு பல விளக்கங்களை இந்த வார நக்கீரனில் ‘இணைய
தளப் புல்லுருவிகள்’ என்ற தலைப்பில் தந்துள்ளார். பிரபாகரன் தன்னுடன்
எவ்வளவு நேரம் பேசினார் என்பதற்கு வீடியோவுடன் விரைவில் ஆதாரம்
தருவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இது முறையான பதிலல்ல. லாவணி மாதிரிதான் தெரிகிறது. கேட்ட
கேள்விக்கு பதில் சொல்லாமல், ‘ உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா… எடுத்து
விடட்டுமா?’ என்று மிரட்டுவது அருட்தந்தைக்கு அழகல்ல.
தன்னைச் சுற்றிய பல சந்தேகக் கேள்விகளுக்கு கஸ்பர் பதில் சொல்லித்தானாக வேண்டும்.
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பது வேறு நடவடிக்கைகளில் சரியாக
வரலாம். ஆனால் ஒரு இனத்தின் விடுதலைப் போரில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும்
தோழன், அவர்களை நசுக்கத் துடிக்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களான கனிமொழி,
கார்த்தி சிதம்பரத்துக்கும் நண்பன் என்ற தனது நிலைப்பாட்டின் வெளிப்படைத்
தன்மையை அவர் தெளிவாகச் சொல்லியாக வேண்டும். இல்லாவிட்டால் இவருக்கும்
ராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்திய திருமாவளவனுக்கும் என்ன
வித்தியாசமிருக்கிறது?
‘இந்தியாவின் உதவியோடு போர்நிறுத்தம் செய்து கொண்டிருக்க வேண்டும்
புலிகள்’ என்று இப்போது சொல்கிறார் கஸ்பர்.
2008 மாவீரர் தின உரை தொடங்கி, போரின் இறுதிக் கணம் வரை ‘இந்தியாவே எமது
நண்பன். இந்தியாவின் மூலம் போர் நிறுத்தம் வேண்டும்’ என்றுதானே தமிழீழ
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், அரசியல் பிரிவுத் தலைவர்
நடேசனும் கூறிவந்தார்கள். அதை இந்தியா குறைந்தபட்சம் செவிமடுக்கக் கூட
தயாராக இல்லையே… மாறாக புலிகளை பயங்கரவாத இயக்கம் என்றுதானே கடுமையாகப்
பேசினார்கள் பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள்?
இறுதிநாளில், கஸ்பரும் சம்பந்தப்பட்ட அந்த சரணடைவு நிகழ்வில்,
அளிக்கப்பட்ட உறுதியை மீறி தமிழர் தலைவர்கள் கொல்லப்பட்டதற்கான பொறுப்பை
யார் ஏற்பார்கள்?
கஸ்பர் கருத்து சொல்வது தவறல்ல… ஆனால் இங்கே அதோடு நிற்கவில்லை. அந்தக்
கருத்து சொல்லலின் நீட்சி களப்பலியில் அல்லவா முடிந்திருக்கிறது
இசையால்... .... இணையட்டும் உலகம்...!
http://youthsmp3.blogspot.com/
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...