
எனக்கு கீழே கண்ட ஒற்றை வரி மின்னஞ்சல் ஒன்று...
அந்த இமயத்திடம் இருந்து வந்திருந்தது.
நாம் எப்போ அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினோம்?
ஒன்றும் புரியவில்லை.!
ஒரு வேளை நம் இ-மெயில் குழுவில் இருக்கிறாரோ ?
இ-மெயில் குழுவின் முகப்பு பக்கம் போய் அவரின் மின்னஞ்சல் முகவரியை போட்டுத் தேடினேன்.
ஆம்,அவரும் அதில் உறுப்பினர்
http://groups.google.com/group/beyouths/browse_thread/thread/94297e825524a7a5/d1218292b25b268f?hl=ta&lnk=gst&q=wrv9745%40gmail.com#d1218292b25b268f
அந்த பாசத் தலைவன் இப்ப நம்மோடு உயிரோட இல்லை!
அழுகை முட்டிக் கொண்டு வந்தது !
காலம் எவ்வளவு கொடுமையானது?
டபிள்யூ.ஆர். வரதராஜன்
--- On
Thu, 11/2/10, Varada Rajan W R <wrv...@gmail.com>
wrote:
From: Varada Rajan W R
<
wrv...@gmail.com>
Subject: Fwd: From Varada Rajan W R
To:
Date:
Thursday, 11 February, 2010, 2:19 PM
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்
வரதராஜன் உடல் இன்று பிரேத பரிசோதனை
சென்னை, பிப். 22
கம்யூனிஸ்ட்
தலைவர் வரதராஜனின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பின்
உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
மார்க்சிஸ்ட்
கட்சியின் மாநில மற்றும் மத்திய குழு உறுப்பினராக டபிள்யூ.ஆர். வரதராஜன்
இருந்தார். வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான இவர், சிஐடியூ
தொழிற்சங்கத்தில் முக்கிய தலைவராகவும் பணியாற்றி வந்தார். சென்னை
அண்ணாநகரில் மனைவி, மகனுடன் வசித்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி, ரிசர்வ்
வங்கியில் அதிகாரியாக உள்ளார். கட்சியிலும் தீவிர உறுப்பினராக செயல்பட்டு
வந்தார்.
இந்நிலையில், கணவரின் கொடுமையில்
இருந்து காப்பாற்றக் கோரிய ஒரு பெண்ணுக்கு சட்ட ரீதியான உதவிகளை செய்து
வந்தார் வரதராஜன். இதனால், அவரது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு
வந்தது.
சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில்
வரதராஜனை விசாரித்த கட்சி மேலிடம், மத்திய குழுவில் இருந்து அவரை சஸ்பெண்ட்
செய்தது. கடந்த 11, 12, 13ம் தேதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்
குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கும் வரதராஜன் வரவில்லை; வீட்டிலும்
இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மாநகர போலீஸ் கமிஷனர்
ராஜேந்திரனிடம் சரஸ்வதி புகார் செய்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு
துணை கமிஷனர் ஸ்ரீதர் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி
அலுவலகத்துக்கு இரண்டு கடிதங்கள் வந்தன. டபிள்யூ.ஆர்.வரதராஜன் எழுதுவதுபோல
அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு கடிதத்தில், ‘என் உடலை மருத்துவ
ஆய்வகத்துக்கு கொடுத்து விடவும். மகள் வாங்கிக் கொடுத்த லேப்டாப்பை கட்சி
அலுவலகத்துக்கும், வீட்டில் உள்ள புத்தகங்களை ‘தீக்கதிர்’ பத்திரிகை
மற்றும் கட்சி நூலகத்துக்கும் வழங்கி விடுங்கள். இரு வங்கிக் கணக்கில்
இருக்கும் பணத்தை கட்சிக்கு கொடுங்கள்‘ என்று கூறப்பட்டிருந்தது. எனது
இல்லம் உள்பட எங்கும் எனக்கு படத்திறப்பு நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்றும்
அதில் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் அவருடைய கையெழுத்து இல்லை.
மற்றொரு கடிதத்தில், ‘மயிர் நீப்பின் வாழா கவரிமான்
அன்னார் உயிர் நீப்பார் மானம் வரின்‘ என்ற குறளை எழுதி, அதன்கீழ், ‘தற்கொலை
செய்து கொள்பவன், கம்யூனிஸ்ட்டே அல்ல. உட்கட்சி போராட்டத்தில் எத்தனையோ
இடர்பாடுகளை என்னால் எதிர்கொள்ள முடிந்தது. ஆனால் வாழ்க்கை போராட்டத்திலோ
நிலைகுலைந்து வீழ்ந்து விட்டேன்... இனி.. ஏது?’ என்றும் எழுதப்பட்டுள்ளது.
தனது உடலை மருத்துவ ஆய்வுக்கு தரவேண்டும் என்றும்,
சொத்துக்கள் பற்றியும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதால், அவர் தற்கொலை
செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இந்நிலையில், போரூர் ஏரியில் கடந்த 13ம் தேதி ஒரு
சடலத்தை போலீசார் கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனையில் வைத்திருந்தனர்.
இது வரதராஜனின் உடலாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, உடலை
அடையாளம் காட்ட உறவினர்கள் வரவழைக்கப்பட்டனர். வரதராஜனின் மனைவி சரஸ்வதி,
நேற்று காலை தனது கணவரின் உடல்தான் என்று உறுதி செய்தார். அவர்
அணிந்திருந்த டிரவுசர், பனியன் ஆகியவற்றை வைத்து அடையாளம் காட்டினார்.
11&ம் தேதியே அவர் ஏரியில் விழுந்திருக்கலாம். அதனால் அவரது உடல்
அழுகியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அதனால் அவரது உடலை
உடனடியாக அடையாளம் காண் பதில் சிக்கல் இருந்தது. காலை முதல் மாலை வரை
ராயப்பேட்டை மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. மாலையில்தான் அவரது உடலை
சரஸ்வதி அடையாளம் காட்டினார்.
இன்று காலை
வரதராஜனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனைக்குப்
பிறகு அவரது உடல் மனைவியிடம் ஒப்படைக்கப்படும். வரதராஜன் மரணத்தை
மர்மச்சாவு என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டபிள்யூ.ஆர். வரதராஜன்
இன்று இறுதி நிகழ்ச்சி
மறைந்த தோழர். உ.ரா. வரதராசன் அவர் களின் உடல் கட்சித் தோழர்கள் மற்றும்
பொதுமக்களின் அஞ்சலிக்காக செவ்வா யன்று (23.2.2010) காலை 11 மணியளவில்
கட்சி யின் மாநிலக்குழு அலுவலகத்தில்
(பி.ராம மூர்த்தி நினை வகம், 27
வைத்தியராமன் தெரு, தி. நகர், சென்னை - 17) வைக்கப்படும். அதன் பின்னர்
இறுதி நிகழ்ச்சி மாலை 3 மணியள வில் நடைபெறும் என்பதை மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தெரிவித்துக்
கொள்கிறோம்.
செங்கொடி தாழ்த்தி அஞ்சலி
தோழர். உ.ரா. வரதராசன் அவர்கள் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினராகவும்,
சிஐடியு அகில இந்திய செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராக வும் திறம்பட
செயல்பட்டவர். சென்னை நகரத்திலும், அகில இந்திய அள விலும் பல தொழிற்சங்கப்
போராட்டங்களில் தலைமையேற்று செயல்பட்டவர். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்.
அவருடைய மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், இடதுசாரி இயக்கத்திற்கும்
ஈடுசெய்ய முடியாத பேரிழப் பாகும். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ
னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி
செலுத்துகிறது.
அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்சி கொடியை மூன்று தினங்
களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு துக்கம் கடைப்பிடிக்குமாறு கட்சி
அணிகளை தமிழ் நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
பன்முகத்திறன் படைத்த
தோழர் உ.ரா.வரதராசன்
தோழர் உ.ரா. வரதராசன் 9.7.1945 அன்று, அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள
உள்ளியநல்லூர் என்ற கிராமத்தில் ஒரு மத்திய தர வர்க்க குடும்பத்தில் முதல்
பிள்ளையாகப் பிறந்தார். அவரது தந்தை ரயில்வே நிலைய அதிகாரியாகப்
பணியாற்றியவர்.
சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். கல்லூரிக்
காலத்திலேயே அவ ருக்கு இலக்கியம் மீதும், அரசியல் மீதும் ஈடுபாடு ஏற்
பட்டது. சர்வோதயா இயக்கத்திலும் பின்னர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.
தலைமையிலான தமிழரசு கழகத்திலும் இணைந்து பணியாற்றினார். அவர் நடத்தி வந்த
“செங்கோல்” பத்திரிகைக்கு உறுதுணையாக இருந்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து
வேறுபாடு காரணமாக தமிழரசு கழகத்தில் இருந்து வெளியேறினார்.
தோழர் உ.ரா. வரதராசன் சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், மொழிப்
பெயர்ப்பாளர், “பார்வதிபுரம்” என்ற நாவலை எழுதி சர்வோதயா இயக்கத்தின்
பரிசினைப் பெற்றவர். “அருவி” என்ற இலக்கிய சிற்றிதழையும் மாணவப்
பருவத்திலேயே நடத்தியுள்ளார். இதில் தமிழகத்தின் ஏராளமான எழுத்தாளர்கள்
எழுதியுள்ளனர்.
1967ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கிப் பணியில் சேர்ந்த அவர் 17 ஆண்டுகள் வங்கிப்
பணியில் இருந்தார். அப்போது, ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய
செயலாளராக பணியாற்றியுள்ளார். வங்கி ஊழியர் சம்மேளனத்தை உருவாக்குவதில்
ஈடுபட்ட முன்னணித் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அதுபோல்
கூட்டுறவு ஊழியர்களை அணி திரட்டு வதிலும் பெரும் பங்காற்றினார்.
ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிலாளர்களின் போராட்டத்தின் போது, ரிசர்வ் வங்கி
ஊழியர் சங்கம் அந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது.
அந்த போராட்டக் களத்தில் மார்க்சியத்தால் ஈர்க்கப் பட்ட அவர், 1969ஆம்
ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்தார்.
1984ஆம் ஆண்டு, வங்கிப் பணியைத் துறந்து, கட்சி யின் முழுநேர ஊழியராக
பணியாற்றத் துவங்கினார். கட்சி யின் சென்னை மாவட்டக்குழு உறுப்பினராக
தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார்.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் வேட் பாளராக வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு
அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சென்னையில் உள்ள ‘பி அண்ட் சி’ ஆலை, பெஸ்ட் அண்ட் கிராம்ட்டன், ஓட்டிஸ்
லிப்ட் கம்பெனி, மெட்டல் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் தலை
வராக தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு தொழிலாளர் போராட் டங்களை தலைமை ஏற்று
நடத்தியவர்.
சிஐடியு மாநிலச் செயலாளர்களில் ஒருவராக செயல் பட்டு வந்த அவர்,
தொழிற்சங்கப் பணிக்காக தில்லி சென் றார். சிஐடியுவின் அகில இந்திய
செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக தேர்வு
செய்யப்பட்ட அவர், தில்லி தொழிற் சங்கப் பணிக்காக சென்ற பிறகு கட்சியின்
மத்தியக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
அகில இந்திய வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) வாரியத் தின் உறுப்பினர்களில்
ஒருவராக பணியாற்றியுள்ளார்.
வெண்மணி கொடுமை, இலங்கைப் பிரச்சனை, தமிழக தொழில் வளர்ச்சி உள்ளிட்ட
பல்வேறு சிறு நூல்களை எழுதியுள்ளளார். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழி
களில் சிறந்த புலமை பெற்றவர்.
தீக்கதிர் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். பல்வேறு நாளேடுகளில்
தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார்.
இவருடைய மனைவி சரஸ்வதி ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கி ஊழியர். இவர் திருமணம்,
கலப்புத் திருமணம். மறுமணம் என சீர்திருத்த சிறப்புகள் கொண்டது. இவருக்கு
பிரசாந்த் என்ற வளர்ப்பு மகனும், அமுதன் என்ற மகனும் உள்ளனர்.
-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தமிழ்நாடு மாநிலக்குழு
http://www.theekkathir.in/index.asp