=பங்குச் சந்தை=
பங்குச் சந்தை என்பது பொது மக்கள், குழுமத்தின் பங்குப் பரிவர்த்தனையை ஒப்பந்த விலையில் செய்யும் உருவாகும் (பொருளாதாரப் பரிமாற்றங்களின் தெளிவற்ற வலையமைப்பு, நேரடி வாய்ப்பு அல்லது தனிப்பட்ட உரு இல்லை); அவை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பத்திரங்கள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகத்திலுள்ளதாகும். உலக பங்கு சந்தையின் அளவு அக்டோபர் 2008-ன் தொடக்கத்தில் ஏறக்குறைய $ 36.6 டிரில்லியனாகக் கணக்கிடப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=
http://seekingalpha.com/article/99256-world-equity-market-declines-25-9-trillion |title=World Equity Market Declines: -$25.9 Trillion |publisher=Seeking Alpha |date= |accessdate=2011-05-31}}</ref> மொத்த உலக கிளை/வழித் தோன்றிய சந்தை 791 டிரில்லியன் டாலர்கள் முகப்பு அல்லது பண மதிப்பாக மதிப்பிடப்பட்டுள்ளது,<ref>{{cite web|url=
http://www.bis.org/publ/qtrpdf/r_qa0812.pdf |title=Quarterly Review Statistical Annex – December 2008 |publisher=Bis.org |date=September 7, 2008 |accessdate=March 5, 2010}}</ref> உலக பொருளாதாரத்தின் மொத்த அளவைப் போல் 11 முறை உள்ளது.<ref>{{cite web|url=
https://cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2001rank.html |title=Central Intelligence Agency |publisher=Cia.gov |date= |accessdate=2011-05-31}}</ref> வழித் தோன்றிய சந்தைகளின் மதிப்பு, அதை உத்தேசமாக மதிப்பிட்டுள்ளதால், அதை நேரடியாக பங்குடனோ அல்லது பாரம்பரியமாக உண்மையான மதிப்பைக் குறிக்கும் நிலையான பாதுகாப்பான வருமானத்துடன் ஒப்பிட முடியாது. மேலும், பெரும்பாலான வழித்தோன்றல்கள் ஒன்றையொன்று 'ரத்து' செய்து வெளியேற்றுகிறது (ஒரு நிகழ்வில் ஏற்படும் வழித் தோன்றல் 'பந்தயம்', ஒரு ஒப்பிடக்கூடிய வழித்தோன்றலின் 'பந்தயம்' நிகழாததால் ஏற்படுகிறது. இதுபோன்ற பல இழப்பு விளைவிக்கக் கூடிய பத்திரங்கள் நிஜ சந்தையின் மதிப்பில் குறிக்கப்படாமல் மாதிரிக்காகக் குறிக்கப்படுகிறது.
ஒரு அமைப்பின் பங்குகளை மற்றும் பத்திரங்களை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களை ஒன்றாக சேர்க்கும் சிறப்பு தேர்ச்சி பெற்ற ஒரு நிருவனம் அல்லது பரஸ்பர அமைப்பின் பங்குகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்யப்படுகின்றன. சந்தை மூலதனத்தின் மூலம் கணக்கிட்டால், அமெரிக்காவில் மிக பெரிய பங்கு சந்தை, [[நியூயார்க் பங்குச் சந்தை]] (NYSE) ஆகும். கனடாவில், மிக பெரிய பங்கு சந்தை டொரண்டோ பங்கு சந்தை ஆகும். முக்கிய ஐரோப்பிய பங்கு சந்தையின் உதாரணங்களில், ஆம்ஸ்டர்டேம் பங்கு சந்தை, லண்டன் பங்கு சந்தை, பாரிஸ் பங்கு மாற்றகம், டச் பங்கு மாற்றகம்(Deutsche Börse), (பிராங்பேர்ட் பங்கு சந்தை) ஆகியவை அடங்கும். ஆப்பிரிக்காவில், உதாரணங்களில் நைஜீரிய பங்கு சந்தை, ஜேஎஸ்இ லிமிடெட், போன்றவை, ஆசியாவில் உதாரணங்களாக சிங்கப்பூர் சந்தை, டோக்கியோ பங்கு சந்தை, ஹாங்காங் பங்கு சந்தை, ஷாங்காய் பங்கு சந்தை, மற்றும் பாம்பே பங்கு சந்தையை குறிப்பிடலாம். லத்தீன் அமெரிக்காவில், BM & F போவெஸ்பா மற்றும் BMV சந்தைகள் உள்ளன. ஆஸ்திரேலியா அங்குள்ள மக்கள் தொகையின் அளவு காரணமாக ஒரு தேசிய பங்கு சந்தை, ஆஸ்திரேலிய பங்கு சந்தை உள்ளது.
தனிப்பட்ட சில்லறை முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதிகள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் [[ஹெட்ஜ் நிதி]] போன்ற நிறுவன முதலீட்டாளர்கள், மேலும் தங்கள் பங்குகளை வர்த்தகம் செய்யும் பொது வர்த்தக நிறுவனங்கள் ஆகியோர் சந்தை பங்கேற்பாளர்களில் அடங்குவர். தமது சொந்த பங்குகளை வர்த்தகம் செய்யும் நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள், தனிப்பட்ட சில்லறை முதலீட்டாளர்களை விட அதிக ஆபத்து சரிசெய்யப்பட்ட வருவாய்களை பெறுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<ref name="
ssrn.com">Amedeo De Cesari, Susanne Espenlaub, Arif Khurshed, and Michael Simkovic, [
http://ssrn.com/abstract=1884171 The Effects of Ownership and Stock Liquidity on the Timing of Repurchase Transactions] (October 2010). Paolo Baffi Centre Research Paper No. 2011-100.</ref>
==வர்த்தகம்==
[[Image:Paternoster Square.jpg|thumb|left|லண்டன் பங்கு சந்தை]]
[[Image:Photos NewYork1 032.jpg|thumb|left|நியூயார்க் பங்கு சந்தை]]
உலகின் எங்கிருந்து வேண்டுமானாலும் உள்ள சிறிய தனிநபர் பங்கு முதலீட்டாளர்கள் முதல் பெரிய ஹெட்ஜ் நிதி வர்த்தகர்கள் வரை பங்கு சந்தை வரம்பில் பங்கேற்பாளர்களாவர். அவர்களது ஆணைகள் பங்குச் சந்தையில் வழக்கமாக வாங்கும் அல்லது விற்கும் ஆணைகளை செயல்படுத்தும் சிறப்புத் தொழில் வல்லுனரால் முடிவடையும்.
சில சந்தைகள், பொது இடத்திலுள்ள வர்த்தகத் தளத்தில் கூக்குரல் முறைப்படி பரிமாற்றங்கள் நடைபெறும். இந்த வகை ஏலம் பங்கு சந்தைகள் மற்றும் பொருட்கள் சந்தைகளில் பயன்படுத்தப்படுகிறது, அங்கு வர்த்தகர்கள் "வாய்மொழி" ஏலங்களில் பங்குபெற்று உடனடியாக விலைக்குறிப்பீடு செய்கின்றனர். கணினிகளின் வலையமைப்பில், மின்னணு நுட்பத்தின் மூலம் வணிகர்களின் வழியாக பரிமாற்றங்கள் நடைபெறுவது பங்குச் சந்தையின் மற்றொரு மெய்நிகர் வகையாகும்.
உண்மையான வர்த்தகங்கள் ஏல சந்தை மாதிரியை அடிப்படையாக கொண்டவை. அங்கு பங்கு வாங்கும் சாதியமானவர் பங்கிற்கு ஒரு குறிப்பிட்ட விலையை சொல்லியும் சாத்தியமான விற்பனையாளர் ஒரு குறிப்பிட்ட விலையைக் கேட்டும் பரிமாற்றம் செய்கின்றனர். சந்தையில் வாங்குதல் அல்லது விற்றல் என்பது பங்கின் கேட்ட விலை அல்லது ஏல விலையை நாம் ஏற்பது என்று பொருள்). ஏல விலையும் கேட்கப்பட்ட விலையும் பொருந்தி வந்தால், கொடுக்கப்பட்ட விலைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் அல்லது கேட்பவர்கள் இருந்தால், முதலில் வந்தவர்களுக்கு முதலில் வழங்கும் அடிப்படையில் விற்பனை நடைபெறுகிறது.
வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே, பாதுகாப்பு பத்திர பரிவர்த்தனைகளை நடத்தும் சந்தையிடத்தை வழங்குவதுதான் பங்குச் சந்தையின் நோக்கமாகும். பட்டியலிடப்பட்ட பாதுகாப்பு பத்திரங்கள் பற்றிய நிகழ் கால வர்த்தக தகவலான விலை கண்டறியும் வசதியை பங்குச் சந்தை அளிக்கின்றது.
நியூயார்க் பங்குச் சந்தை ஒரு நேரடிச் சந்தை என்றும் பட்டியலிடப்பட்ட சந்தை என்றும் அழைக்கப்படுகிறது. மின்னணு மற்றும் நேரடி வர்த்தகம் நடக்கும் அக்கலப்புச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். வர்த்தக தளத்தில் பெறப்பட்ட ஆணைகள் சந்தை உறுப்பினர்கள் மூலம் தரகர் இருக்கும் தளத்திற்கு அனுப்பப்படும். அந்த பங்கின் வர்த்தக ஆணைகளை இடும் வல்லுநர் இருக்கும் தளத்திற்கு தரகர் செல்வார். திறந்த கூக்குரலில் வாங்கும் மற்றும் விற்கும் ஆணைகளை பொருத்துவதே வல்லுநரின் வேலையாகும். ஒரு விரிவு நிலவினால், எந்த பரிமாற்றமும் உடனடியாக நடக்காது. அந்த சமயத்தில் வல்லுநர் தன்னிடம் இருக்கும் (பணம் அல்லது பங்கு) சொந்த மூலதனங்களை வைத்து அவர் தீர்மானிக்கும் சமயத்தின் பின் உள்ள வித்தியாசத்தை நிகர் செய்ய வேண்டும். ஒரு பரிமாற்றம் நடந்து முடிந்த பின் அதன் விபரங்கள் "நாடா"-வில் பதியப்பட்டு, தரகரின் நிறுவனத்திற்கு அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து ஆணையிட்ட முதலீட்டாளருக்கு குறிப்பு அனுப்பப்படும். இந்த செயல்முறையில் மனித தொடர்பு கணிசமான அளவு உள்ளது என்றாலும், "ப்ரோக்ராம் ட்ரேடிங்" என்ற பங்கு வர்த்தகத்தில் கணினிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
[[நாஸ்டாக்]] ஒரு மறைமுக பட்டியலிடப்பட்ட சந்தையாகும், அங்கு அனைத்து வர்த்தகமும் கணினி வலைதளத்தின் மூலம் நடைபெறுகிறது. நியூயார்க் பங்கு சந்தை போல செயல்படுகிறது. எனினும், வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் மின்னணு நுட்பத்தின் மூலம் பொருத்தப்படுவர். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாஸ்டாக் சந்தை தயாரிப்பாளர்கள், அவர்கள் வாங்கும் அல்லது அவர்களுடைய பங்கை விற்பதற்கு எப்போதும் ஏலத்தில் ஔர் விலையை கேட்பர்.<ref>{{cite web|url=
http://www.investopedia.com/ask/answers/128.asp |title=What's the difference between a Nasdaq market maker and a NYSE specialist? |publisher=Investopedia.com |date= |accessdate=March 5, 2010}}</ref>
பாரிஸ் பங்கு மாற்றகம், இப்போது யுரோநெக்ஸ்ட்-ன் ஒரு பகுதியாக உள்ள இது வரிசையில் இயங்கும் ஒரு மின்னணு பங்கு சந்தையாகும். அது 1980 பிற்பகுதியில் தானியங்கியாக்கப்பட்டது. 1980 க்கு முன், இது ஒரு திறந்த நிலை கூவுதல் சந்தையாகவே இருந்தது. பங்கு தரகர்கள் வர்த்தக தளத்தில் அல்லது பலைஸ் ப்ரொக்னியார்ட் (Palais Brongniart)-ல் சந்தித்தனர். 1986 ஆம் ஆண்டில், CATS (வாடிக்கையாளர் வர்த்தக கணக்கு முறை) வர்த்தக முறை அறிமுகப்படுத்தப்பட்டது, மற்றும் ஆணை பொருத்துதல் பணி முழுமையாக தானியங்கியாக்கப்பட்டது.
காலம் செல்லச் செல்ல தொடர் வர்த்தகம் (குறிப்பாக பெரிய தொகை பாதுகாப்பு பத்திரங்கள்) 'தொடர் செயல்பாட்டு' சந்தைகளில் இருந்து வெளியேற்றப்பட்டது. UBS AG, கோல்டுமேன் சாக்ஸ் குரூப் இங்க், மற்றும் கிரெடிட் சூஸ் குழு ஆகிய பாதுகாப்பு பத்திர நிறுவனங்கள், ஏற்கனவே சந்தைகளில் இருந்து 12 சதவீத அமெரிக்க பாதுகாப்பு வர்த்தகத்தை தங்கள் சொந்த அமைப்புகளுக்கு விலக்கிச் சென்று விட்டன.
பெரிய அறிவிப்புப் பலகைகள், பங்கு சந்தைகளின் மீதமுள்ள பங்குகளின் பட்டியல் போன்றவை உள்ள வர்த்தக கட்டிட தளங்களின் தேவைகளை கணினிகள் குறைத்துக் கொண்டே வருகின்றன. நிறைய ஆணைகளை உள்ளே கொண்டு வருவதின் மூலம், அதனால் வாடிக்கையாளர்கள் அநாமதேயராக பெரிய அளவு பங்குகளை பரிமாற்றம் செய்ய முடியும். அதனால் இடைத் தரகர்கள் குறைவான கட்டணங்கள் செலுத்தி, ஒரு பெரிய பங்காக, 11 பில்லியன் டாலர்கள் அளவுக்கு நிறுவன முதலீட்டாளர்கள் வர்த்தக தரகு செலுத்தும் அளவுக்கு உண்டாக்குகின்றனர்.
==சந்தையில் பங்குபெறுவோர்==
தனிப்பட்ட சில்லறை முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதிகள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் ஹெட்ஜ் நிதி போன்ற நிறுவன முதலீட்டாளர்கள், மற்றும் தங்கள் பங்குகளை வர்த்தகம் செய்யும் பொது வர்த்தக நிறுவனங்கள் போன்றவை சந்தை பங்கேற்பாளர்களில் அடங்கும். தங்கள் பங்குகளை வர்த்தகம் செய்யும் நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை சில்லறை முதலீட்டாளர்களை விட அதிக ஆபத்தில்லாத சரி செய்யப்பட்ட லாபத்தை திரும்பப் பெறுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு, உலகளவில், வாங்குபவர்களும் விற்பவர்களும் வழக்கமாக குறிப்பிட்ட நிறுவனங்களை சேர்ந்த நீண்ட குடும்ப வரலாறுகள் கொண்ட பணக்கார தொழிலாளர்கள் தனிநபர் முதலீட்டாளர்கலாவர். காலப்போக்கில், சந்தைகள் "நிறுவனரீதியில்" மாறிவிட்டன; வாங்குபவர்களும் விற்பவர்களும் பெரும்பாலும் நிறுவனங்கள் (எ.கா.,ஓய்வூதிய நிதிகள், [[காப்பீடு|காப்பீட்டு]] நிறுவனங்கள், [[பரஸ்பர நிதி|பரஸ்பர நிதிகள்]], குறியீட்டு நிதிகள், பங்கு சந்தை வர்த்தக நிதிகள், ஹெட்ஜ் நிதி, முதலீட்டாளர் குழுக்கள், வங்கிகள் மற்றும் பல்வேறு பிற நிதி நிறுவனங்கள்) ஆகும்.
நிறுவன முதலீட்டாளராகள் எண்ணிக்கை அதிகமானதால் சந்தை செயல்பாடுகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அனைத்து முதலீட்டாளர்களுக்கும் "நிலையான" (மற்றும் அளவுகடந்த) கட்டணங்கள் வசூலிப்பது, ஒரு பகுதியாக நிர்வாக செலவுகளிலிருந்து, படிப்படியாக குறைக்கப்பட்டது. ஆனால் தரப்படுத்தப்பட்ட கட்டணம் அமைப்பை பெரிய நிறுவனங்கள் உதவியுடன் சவாலான தரகர்கள் 'ஆதிக்க முறையில்' அணுகினர்.
==பங்கு சந்தை முக்கியத்துவம்==
===செயல்பாடு மற்றும் நோக்கம்===
[[Image:Tokyo stock exchange.jpg|thumb|upright|தற்போது டோக்கியோ பங்கு சந்தையின் முக்கிய வர்த்தக அறையில் அமைந்துள்ள கணினிகள் மூலம் வர்த்தகம் நடைபெறுகிறது.]]
நிறுவனங்கள் பணம் திரட்டுவதற்கான மிக முக்கியமான ஆதாரங்களில் பங்குச் சந்தையும் ஒன்றாகும். இது வணிகத்தில் பொது வர்த்தகம் அல்லது நிறுவனத்தின் உரிமை பங்குகளை பொது சந்தையில் விற்று கூடுதல் நிதி மூலதனத்தை திரட்டுவதற்கு அனுமதிக்கிறது. முதலீட்டாளர்கள் பங்குகளை விரைவாகவும், எளிதாகவும் விற்று பணமாக்கக்கூடிய திறனை சந்தை அளிக்கிறது. ரியல் எஸ்டேட் (வீடு, மனை வாங்குவது அல்லது விற்பது) போன்று குறைவான பணமாக்கும் முதலீடோடு ஒப்பிடுகையில், இது போன்ற பங்குகளில் முதலீடு செய்வது ஒரு அட்டகாசமான அம்சம் ஆகும். சில நிறுவனங்கள் தீவிரமாக தங்கள் பங்குகளை தாங்களே வர்த்தகம் செய்வதன் மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.<ref>{{Cite journal|first=Amedeo De |last=Cesari |first2=Susanne |last2=Espenlaub |first3=Arif |last3=Khurshed |first4=Michael |last4=Simkovic |ssrn=1884171 |title=The Effects of Ownership and Stock Liquidity on the Timing of Repurchase Transactions |year=2010 |work=Paolo Baffi Centre Research Paper No. 2011-100 }}</ref><ref>{{cite journal |first=Michael |last=Simkovic |ssrn=1117303 |title=The Effect of Enhanced Disclosure on Open Market Stock Repurchases |journal=Berkeley Business Law Journal |volume=6 |issue=1 |year=2009 |pages= }}</ref>
பங்குகள் மற்றும் மற்ற சொத்துகளின் விலை பொருளாதார நடவடிக்கையின் மாற்றங்களில் முக்கிய பங்கு வகிப்பதையும், மற்றும் சமூக மக்களின் மனநிலையை வெளிக்காட்டும் அல்லது மாற்றித் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று வரலாறு காட்டுகிறது. பங்கு சந்தை உயர்வு இருக்கும் ஒரு பொருளாதாரம் ஒரு ஏற்றம் வரும் பொருளாதாரம் என்று கருதப்படுகிறது. உண்மையில், பங்கு சந்தை எப்போதும் ஒரு நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் வளர்ச்சியின் முதல்நிலை குறிப்பானாக கருதப்படுகிறது.
உயரும் பங்கு விலைகள், உதாரணத்திற்கு, அதிகரித்த வர்த்தக முதலீடாகவோ மற்றும் இதற்கு நேர்மாறான தொடர்புடையதாகவோ இருப்பதைக் குறிக்கின்றன. பங்கு விலைகள் குடும்பங்களின் செழிப்பு மற்றும் அவர்களது நுகர்வு சுமையை பாதிக்கும். எனவே, மத்திய வங்கிகள், நிதி அமைப்பு செயல்பாடுகள் சுமூகமாக இருக்க, பொதுவாக, பங்கு சந்தையின் கட்டுப்பாட்டுத் திறன் மற்றும் செயல்பாட்டின் மீது ஒரு கண் வைத்துள்ளது. பொருளாதார நிலைத்தன்மை என்பது மத்திய வங்கிகளின் நீடித்து இருத்தலை குறிக்கிறது.
பங்குச் சந்தைகள் ஒவ்வொரு பரிமாற்றத்தின் வெளியேற்றிடமாகவும் செயல்படுகின்றன, அதாவது அவை பங்குகளை வாங்கி வெளியிட்டு, ஒரு பாதுகாப்பு பத்திரத்தை விற்பவருக்கு பணத்துக்கான உத்தரவாதத்தையும் அளிக்கின்றன. இந்த ஒரு தனிநபராக வாங்குபவருக்கு அல்லது விற்பவருக்கு, எதிர் பிரதிதாரர் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆபத்தை அகற்றுகிறது.
இந்த செயல்களின் சுமூகமான செயல்பாடு, குறைந்த செலவு மற்றும் நிறுவனத்திற்கு எதையும் எதிர் கொள்ளும் திறனை ஏற்படுத்தி அத்துடன் பொருட்கள் உற்பத்தி மற்றும் சேவைகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த வகையில் பொருளாதார அமைப்பு செழிப்படைய பங்களிக்கப்பதாகக் கருதப்படுகிறது.
===நவீன பொருளாதார அமைப்புக்கும் பங்கு சந்தைக்கும் உள்ள உறவு===
பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் நிதி அமைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் பெற்றுவிட்டன. இந்த வளர்ச்சியின் ஒரு அம்சம் இடைகுறுக்கிடாததன்மை. சேமிப்பு மற்றும் பொருளாதார நிதியின் ஒரு பகுதி, பாரம்பரிய வங்கி கடன் மற்றும் வைப்பு செயல்களின் வழியாக செல்லாமல், அதற்கு பதிலாக நிதி சந்தைகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. பங்கு சந்தைகளில் நேரடியாகவோ அல்லது பரஸ்பர நிதிகள் மூலமாகவோ பொது மக்கள் முதலீடு செய்வது இந்த செயல்பாடுகளின் முக்கிய கூறாக உள்ளது.
சமீபத்திய சகாப்தங்களில் பங்குகள் பல நாடுகளில் குடும்பங்களின் பொருளாதார சொத்துகளில் பெருமளவில் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 1970 இல், ஸ்வீடன், வீடுகள் 'நிதி செல்வம்', வைப்பு கணக்குகள் மற்றும் பிற மாற்றக்கூடிய சொத்துக்கள் ஏறத்தாழ 60 சதவீதமாக இருந்தது, 2000 இல் 20 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்த நிதிப் பரிமாற்றத்தின் பெரும் பகுதி பங்கு வர்த்தகத்திற்கு நேரடியாகச் சென்றாலும், தனிநபர் குழுக்களுக்கு பல்வேறு முதலீட்டு நிறுவனங்களின் வருகை, எ.கா., ஓய்வூதிய நிதிகள், பரஸ்பர நிதிகள், பெருந்தொகை நிதி, கட்டணக் காப்பீட்டு முதலீடு வடிவம், நிதி இலாக்கா போன்றவை ஒரு நல்ல ஒப்பந்தமாகும்.
அதிக ஆபத்துடன் சேமிக்கக்கூடிய வடிவங்களை நோக்கி போகும் பங்குகள் பெரிய மதிப்பு கொண்ட பத்திரங்களாக, பெரும்பாலான நிதி மற்றும் காப்பீடுகளின் புதிய விதிகளால் புத்துயிர் பெற்றுள்ளது. இதே போன்ற போக்குகள் மற்ற தொழில் ரீதியான நாடுகளிலும் காணப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் போன்று அனைத்து வளர்ந்த பொருளாதார அமைப்புகளில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மற்ற வளர்ந்த நாடுகளிலும் சேமிப்பு பாரம்பரிய (அரசு காப்பீடு) வங்கி வைப்பிலிருந்து ஒரு வகை அல்லது வேறு வகையான அதிக ஆபத்து நிறைந்த பங்கு வர்த்தகத்திற்கு நகர்ந்து வருகிறது.
===அமெரிக்காவில் S & P பங்கு சந்தை லாபங்கள் ===
{| class="wikitable"
|-
! டிசம்பர் 31, 2012 ஆண்டுகளில்
! சராசரி ஆண்டு திருப்பு %
! சராசரி ஆண்டு திருப்பு %
|-
|1
|15.5
|15.5
|-
|3
|10.9
|11.6
|-
|5
|4.3
|10.1
|-
|10
|8.8
|7.3
|-
|15
|6.5
|5.9
|-
|20
|10.0
|6.4
|-
|30
|11.6
|7.3
|-
|40
|10.1
|8.0
|-
|50
|10.0
|8.1
|-
|60
|10.5
|8.2
===பங்கு சந்தையின் நடவடிக்கை===
முதலீட்டாளர்கள் 'தற்காலிகமாக' நிதி நிலையை விட்டு தங்களின் நீண்ட கால மதிப்பீட்டு விலை 'போக்குகள்'-க்கு நகர கூடும் என்று அறியப்படுகிறது. (லாபகரமான அல்லது மேலோங்கும் சூழ்நிலைகள் எருதுச் சந்தைகள் எனக் குறிப்பிடப்படும்; நஷ்டமான அல்லது கீழ் நோக்கிய சூழ்நிலைகள் கரடிச் சந்தைகள் எனக் குறிப்பிடப்படும்.) அதிக (யூபோரியா) அவநம்பிக்கைத்தனம் தேவையில்லாமல் குறைந்த விலைகளை ஏற்றியும் தேவையில்லாமல் விலைகளை குறைப்பதும் ஆகிய கூடுதல் விளைவுகள் ஏற்படும். பொருளாதார வல்லுநர்கள், நிதி சந்தைகள் 'பொதுவாகவே' திறமையானவையா என்று தொடர்ந்து விவாதிக்கிறார்கள்.திறமையான சந்தை கருத்தியலின்படி (EMH), லாபம் அல்லது ஈவுத்தொகை போன்ற லாப விகித கண்ணோட்டம் போன்ற அடிப்படை காரணிகள் மட்டுமே, குறுகிய காலத்தையும் தாண்டி பங்கு விலைகளை பாதிக்கலாம், அந்த அமைப்பில் மாறுபட்ட 'ஒலி' நிலவும்.
பங்கு விலைகள் நாடகத்தில் நடப்பது போல் சரியும் இந்த நிலைக்கு இன்று வரை உறுதியான காரணத்தை கண்டறிய முடியவில்லை: இந்த சரிவிற்கான காரணக் கண்டுபிடிப்பில் "நியாயமான" வளர்ச்சியைக் கண்டறிய முடியவில்லை. (ஆனால் மிக அரிதாகவே இருப்பினும், இது போன்ற நிகழ்வுகள் கண்டிப்பாக ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனியுங்கள்.) பல விலை இயக்கங்கள் ('ரேண்டமாக' நடைபெறாது என்று கணிக்கப்பட்டுள்ளது தாண்டி) புதிய தகவலால் ஏற்படவில்லை என்று பொதுவாக தெரிகிறது; அமெரிக்காவில் போருக்கு பிந்தைய காலத்தில், ஐம்பது மிகப்பெரிய ஒரு நாள் பங்கு விலை ஆய்வுக்குப் பின் இந்த உறுதி தெரிகிறது. <ref name="Cutler, D. Poterba, J. & Summers, L. 1991 520–546">{{cite journal | author = Cutler, D. Poterba, J. & Summers, L. | title = Speculative dynamics | year = 1991 | journal = Review of Economic Studies | volume = 58 | pages = 520–546 }}</ref>
ஒரு 'மென்மையான' EMH, விலை சமநிலை அல்லது அருகில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் இது சந்தை பங்கேற்பாளர்கள் மாறக்கூடிய சந்தை 'இயலாமைகளில்' இருந்து முறையாக இலாபம் ஈட்ட முடியாது என்பது வெளிப்பட்டுள்ளது. EMH அனைத்து விலை இயக்கம் (அடிப்படை தகவலில் மாற்றம் இல்லாத நிலையில்) (அதாவது, மனநிலை சாராது) சீரற்ற என்று கணித்துள்ள போதும், பல ஆய்வுகள் மேற்பட்ட நேரமாக வார காலம் அல்லது அதற்கு மேலும், பங்கு சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க போக்கை எடுத்துக்காட்டுகிறது. பெரிய மற்றும் சீரற்ற முறையில் அல்லாத விலை மாறுதல்களுக்கான பல்வேறு விளக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மதிப்பிடப்பட்டுள்ள லாப அல்லது நஷ்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், இழப்பு நிறுத்தும் வரம்புகள் மற்றும் அபாய எல்லையை தாண்டும் மதிப்பு போன்ற சில உத்திகள் பயன்பாடுகளினால் எதிர்த்துசெயல்படலாம் என்பதை சில ஆராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் சிறந்த விளக்கத்தின் மூலம், பங்கு சந்தை விலை விநியோகம் காஸியன் அல்லாதது என்று தெரிகிறது (இதில் EMH, அதன் நடப்பு வடிவங்கள் கண்டிப்பாக பயன்படுத்தப்படாது.)<ref name="Cutler, D. Poterba, J. & Summers, L. 1991 520–546"/>
மற்றொரு ஆராய்ச்சியில் உளவியல் காரணிகள் மிகைப்படுத்தப்பட்ட (புள்ளியியல் ரீதியாக) பங்கு விலை இயக்கங்களுக்கு (இதுபோன்ற நடவடிக்கைகள் EMH மாறாக எடுத்துக்கொள்ளப்பட்டு 'வெளி நீக்குதல்' உத்தேசிக்கப்படுகிறது)அதில் ) வழிவகுக்கும் என்று காட்டுகிறது. உளவியல் ஆராய்ச்சியில் மக்கள் வடிவங்களை 'பார்ப்பதற்கு' அடிமையாகவும்,வடிவங்கள் உண்மையில் வெறும் ஒலி என்பதையும் பெரும்பாலும் புரிந்து கொள்கின்றனர். (அது மேகங்கள் அல்லது மை படிதல்களைப் பார்ப்பது போன்றது.) தற்போதைய சூழலில் ஒரு நிறுவனத்தை பற்றிய நல்ல செய்தி முதலீட்டாளர்களை கூடுதல் நேர்மறையாக செயல்படுத்த (கிரகிக்கமுடியாத விலை ஏற்றத்திலும்) வைக்கும். நல்ல லாபங்கள் கிடைக்கும் காலமும் முதலீட்டாளர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்து, அவரது (உளவியல்) ரீதியான ஆபத்து மனப்பான்மையை குறையச் செய்யும்.<ref>{{cite book | year = 2006 | author = Mandelbrot, Benoit & Hudson, Richard L. | title = The Misbehavior of Markets: A Fractal View of Financial Turbulence, annot. ed. | publisher = Basic Books | isbn = 0-465-04357-7 }}</ref><ref>{{cite book | year = 2008 | author = Taleb, Nassim Nicholas | title = Fooled by Randomness: The Hidden Role of Chance in Life and in the Markets, 2nd ed. | publisher = Random House | isbn = 1-4000-6793-6 }}</ref>
மற்றொரு உளவியல் நிகழ்வு, ஒரு புறநிலை மதிப்பீடுக்கு எதிராக வேலை செய்வது குழுவாக சிந்தித்தல் தான். சமூக விலங்குகளாக, அது பெரும்பான்மை குழுவின் கருத்தில் இருந்து வேறுபட்ட கருத்தை சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக காலியாக உள்ள ஒரு உணவகத்தில் நுழைய தயக்கம் காட்டுவது ஒரு பழக்கமாகும். மக்கள் தங்கள் கருத்தை ஒரு குழுவின் மற்றவர்களால் சரிபார்க்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஒரு ஆராய்ச்சியில் அதன் எழுத்தாளர்கள் சூதாடுதல் பற்றிய ஒரு ஒப்புமையை கூறுகின்றனர். சாதாரண சூழல்களில் சந்தையானது ரவுலட் விளையாட்டு போலவே செயல்படும்; சாத்தியக்கூறுகள் அனைத்தும் பல்வேறு வகையான முதலீட்டாளரின் தெரிந்த மற்றும் சுதந்திரமான தீர்மானங்கள் ஆகும். சந்தை அழுத்தமான நிலையில் இருக்கையில், ஆட்டம் (மந்தை போன்ற போக்கு நிலவும் போது) போக்கர் (சீட்டு விளையாட்டு) போல் மாறிவிடும். பங்கேற்பாளர்கள் மற்ற முதலீட்டாளர்களின் உளவியளுக்கு, எப்படி அவர்கள் உளவியல் ரீதியாக நடக்க வாய்ப்பு உள்ளது என்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பங்கு சந்தை, மற்ற வணிகம் போலவே, கற்றுக் கொண்டிருப்பவர் செய்யும் தவறுகளுக்கு மன்னிப்பு இல்லை. அனுபவமற்ற முதலீட்டாளர்களுக்கு அரிதாகவே உதவியும் ஆதரவும் கிடைக்கும். 1987 விபத்து நடக்கும் வரை இயங்கிய காலத்தில், 1 சதவிகிதத்துக்கும் குறைவான ஆய்வாளர் பரிந்துரைகள் விற்க இருந்தது (மற்றும் 2000-2002 கரடி சந்தை போது, சராசரியாக 5% ஐ தாண்டவில்லை). 2000 வரையான ஓட்டத்தில், ஊடகங்கள், பங்கு விலைகள் அதிகரிக்கக்கூடிய அறிக்கைகள், ஒரு குறிப்பிட்ட புதிய பொருளாதார பங்குச் சந்தையில் அதிகளவு பணத்தை மிக விரைவாக சம்பாதிக்கலாம் என்றொரு எண்ணம் போன்றவற்றை பரப்பிவிடும். தேவையான லாபப்போக்கை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. (மேலும் பின்னர் 2002 கோடையில், 5000 கீழே வரும் என்ற ஒரு DOW யின் முன்கணிப்புகள் சராசரியாக பொதுவானதாகவே இருந்தன அதனால், 2000-2002 கரடி சந்தை இறங்கிய போது இது மனச்சோர்வு பெருக்கப்படுகிறது.)
===அறிவுக்கு பொருந்தாத நடத்தை===
சந்தை சில நேரங்களில், பொருளாதார அல்லது நிதி செய்திகளுக்கு, அந்த செய்தியினால் பத்திரங்களின் அடிப்படை மதிப்பில் உண்மையாக எந்த பாதிப்பு இல்லை என்ற போதிலும் அறிவுக்கு பொருந்தாத விதத்தில் விளைவை ஏற்படுத்துகிறது. ஆனால், பொதுவாக இது போன்ற செய்தி எதிர்பார்க்கப்பட்டு விட்டதால் இந்த உண்மையான விட அதிகம் மாறுபட்டது, மற்றும் செய்தி எதிர்பார்த்ததை விட (அல்லது மோசமான) சிறப்பாக இருந்தால் ஒரு மாறுபட்ட எதிர்விளைவு ஏற்படலாம். எனவே, பங்கு சந்தை செய்தி வெளியீடு, புரளிகள், நன்னிலை உணர்வு மற்றும் மக்கள் பீதி ஆகியவற்றை தூண்டலாம்.ஆனால் பொதுவாக அனுபவமிக்க முதலீட்டாளர்கள் (குறிப்பாக ஹெட்ஜ் நிதி) சிறிதளவு லாபத்தைக் கூட தற்காலிகமான நாடகமாட்டமாக இருந்தாலும் கூட பயன்படுத்தி கொள்கிறார்கள்.
குறுகிய-காலத்தில், அதிகமான சந்தை மாற்ற சூழ்நிலைகளின் எண்ணிக்கையால், பங்குகள் மற்றும் பத்திரங்கள் உலை அல்லது மிதவையில் அடிக்கப்பட்டு மாற்றிவிடப்படலாம், எனவே பங்குச் சந்தையை முன்கணிப்பது சிரமமானது. உணர்ச்சிகள் விலைகளை அதிகரிக்க மற்றும் இறக்க முடுக்கிவிட முடியும், மக்கள் பொதுவாக அவர்கள் நினைப்பதுபோல் அவ்வளவு பகுத்தறிவுடன் இல்லை, மற்றும் வாங்கும் விற்கும் காரணங்களும் தெளிவற்றவை. முதலீட்டு முடிவுகள் செய்யும் போது முதலீட்டாளர்கள் 'அறிவற்ற விதத்தில்' நடந்து வாதிடுகின்றனர். அதன் மூலம் தவறாக பத்திர விலைகள் நிர்ணயிக்கப்பட்டு, விளைவாக சந்தையை செயல்திறனற்றதாகவும், இதையொட்டி பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படுத்துகிறது.
டோவ் ஜோன்சின் தொழில்துறை சராசரியாக ஒரே நாளில் அதிகம் பெற்றது 936.42 புள்ளிகள் அல்லது 11 சதவிகிதம், இது அக்டோபர் 13, 2008இல் நடைபெற்றது.<ref>{{cite web|url=
http://www.cnbc.com/id/27166818 |title=News Headlines |publisher=Cnbc.com |date=October 13, 2008 |accessdate=March 5, 2010}}</ref>
===வீழ்ச்சிகள்===
[[Image:IE Real SandP Prices, Earnings, and Dividends 1871-2006.png|380px|right|thumb|எஸ் மற்றும் பி தொகுப்பு நிஜ விலை குறியீட்டு ராபர்ட் ஷில்லருடைய, பகுத்தறிவுக்கு ஒவ்வாத உணர்ச்சி இருந்து சம்பாத்தியங்கள், லாப பங்குகள் மற்றும் வட்டி விகிதங்கள், 2d ed.<ref name="IE2">{{cite book |last=Shiller |first=Robert |title=[[Irrational Exuberance (book)|Irrational Exuberance (2d ed.)]]|year=2005 |publisher=[[Princeton University Press]] |isbn= 0-691-12335-7 }}</ref> ]]
[[Image:Price-Earnings Ratios as a Predictor of Twenty-Year Returns (Shiller Data).png|380px|right|thumb|விலை-வருவாய் விகிதங்கள் ராபர்ட் ஷில்லரின் ஊக அடிப்படையில் இருபது வருட வருமான பலன்கள். கிடைமட்ட அச்சு (பணவீக்க சரிசெய்யப்பட்ட ஆதாயங்களின் பத்து வருடங்களுக்கு முந்தைய சராசரி வகுக்கப்பட்ட பணவீக்க சரிசெய்யப்பட்ட விலை) பொருத்தமற்ற பகட்டாக கணக்கிடப்பட்டதன்படி எஸ் மற்றும் பி கலப்பு பங்கு விலை குறியீட்டெண்ணின் உண்மையான விலை-ஆதாயங்கள் விகிதத்தை காட்டுகிறது. செங்குத்து அச்சு எஸ் மற்றும் பி கலப்பு பங்கு விலை குறியீட்டெண் முதலீடு வடிவவியல் சராசரி உண்மை வருடாந்திர ஆதாயத்தை காட்டுகிறது, மறுமுதலீட்டு ஈவுத்தொகைகள் மற்றும் இருபது வருடங்களுக்கு பின்னர் விற்பனை. வெவ்வேறு இருபது வருட காலங்களின் தரவு வண்ணக் குறியிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.<ref name="IE2"/>]]
ஒரு பங்கு சந்தை வீழ்ச்சி பெரும்பாலும் பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளின் விலைகள் தீவிர சரிவை வரையறுக்கப்படுகிறது. பல்வேறு பொருளாதார காரணிகளுக்கு இணையாக, பொது மக்களின் நம்பிக்கை இழப்பு மற்றும் பீதி ஆகியவை பங்கு சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. பெரும்பாலும், பங்கு சந்தை வீழ்ச்சி இறுதியில் ஊக பொருளாதார குமிழிகளுக்கு காரணமாகின்றன.
ஒரு பாரிய அளவில் பில்லியன் டாலர்கள் மற்றும் செல்வம் அழிவுக்கு காரணமாக இருந்த பிரபல பங்கு சந்தை வீழ்ச்சிகள் உள்ளன. சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வுத் திட்டங்கள் வந்ததில் இருந்தும் அவை அதிகமாக தனியாராக்கப்படதில் இருந்தும், பங்குகள் மற்றும் பத்திரங்கள் மற்றும் சந்தையின் பல உருப்புகள் இணைக்கப்பட்டதில் இருந்தும் பங்குச் சந்தையில் பல மக்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. 1929 ஆம் ஆண்டு வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சி 1973-4 பங்கு சந்தை வீழ்ச்சி, 1987 இன் கருப்பு திங்கள், 2000 டாட் காம் குமிழ் மற்றும் 2008 இன் பங்கு சந்தை வீழ்ச்சி போன்ற பிரபலமான பங்கு சந்தை வீழ்ச்சிகள் பல உள்ளன.
மிகவும் பிரபலமான பங்கு சந்தை வீழ்ச்சி ஒரு கறுப்பு வியாழக்கிழமை, அக்டோபர் 24, 1929-ல் தொடங்கியது. டோவ் ஜோன்ஸ் தொழில்துறை இந்த பங்கு சந்தை வீழ்ச்சியின் போது 50% முதலீட்டை இழந்தது. இது பெருமந்தத்திற்கு தொடக்கமாக இருந்தது. மற்றொரு பிரபல வீழ்ச்சி அக்டோபர் 19, 1987 கறுப்பு திங்கள் அன்று நடந்தது. வீழ்ச்சி ஹாங்காங்-ல் தொடங்கி விரைவில் உலகம் முழுவதும் பரவியது.
அக்டோபர் இறுதியில், ஹாங்காங் பங்கு சந்தைகள் 45.5%, ஆஸ்திரேலியா 41.8%, ஸ்பெயின் 31%, ஐக்கிய ராஜ்யம் 26.4%, அமெரிக்காவில் 22.68%, மற்றும் கனடா 22.5% அளவுக்கு வீழ்ச்சி இருந்தது. டோவ் ஜோன்ஸ் பங்குகள் ஒரு நாளில் 22.6% சரிந்தது - கறுப்பு திங்கள் பங்கு சந்தை வரலாற்றில் மிக பெரிய ஒரு நாள் சதவீத சரிவு ஏற்பட்டது. "கறுப்பு திங்கள்" மற்றும் "கறுப்பு செவ்வாய்" ஆகிய பெயர்கள் அக்டோபர் 28-29, 1929 பயன்படுத்தப்படுவதை அடுத்து, பயன்படுத்தப்படும் அச்சம் தருகிற வியாழன்-1929 பங்கு சந்தை வீழ்ச்சி தொடக்க நாள்.
1987-ன் வீழ்ச்சி சில புதிர்களை எழுப்பின - முக்கிய செய்தி மற்றும் நிகழ்வுகள் பேரழிவை யூகிக்கவோ வீழ்ச்சிக்கான காரணங்களை அடையாளம் காட்டவில்லை. இந்த நிகழ்வு பல முக்கியமான அதாவது நவீன பொருளாதார ஊகங்களான மனித நடத்தை பற்றிய பகுத்தறிவு கோட்பாடு, சந்தை மாற்றம் பற்றிய கோட்பாடு மற்றும் திறமையான சந்தை கற்பித கொள்கை ஆகியவற்றைப் பற்றி கேள்விகள் எழுப்பின. வீழ்ச்சியடைந்து சில காலம் கழித்து, வர்த்தகம் மகத்தான அளவு ஒரே நேரத்தில் பெறப் பட்டதால், பரிமாற்ற கணினிகள் நன்கு செயல்படவில்லை. அதனால் உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இந்த வர்த்தக நிறுத்தம் பெடரல் ரிசர்வ் அமைப்பு மற்றும் பல நாடுகளின் மத்திய வங்கிகள் உலகெங்கும் பரவியிருந்த நிதி சிக்கல்களை கட்டுப்படுத்தம் நடவடிக்கைகளை எடுக்க அனுமதித்தது. அமெரிக்காவில் SEC கருப்பு திங்களின் நிகழ்வு மீண்டும் நிகழாத முயற்சியில் பங்கு சந்தையில் கட்டுப்பாட்டையும் பல புதிய நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தியது.
1990 களின் முற்பகுதியில் இருந்து, பல மிகப் பெரிய பங்கு சந்தைகள் திறந்த கூக்குரலுக்கு பதிலாக, வாங்குபவர்கள் விற்பவர்கள் தேவைகளைப் பொருத்தும் மின்னணு 'பொருந்தும் இயந்திரங்களை' மாற்றியமைத்தது. மின்னணு வர்த்தகம் இப்போது பல வளர்ந்த நாடுகளில் உள்ள பெரும்பான்மை வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பங்கு சந்தைகளில் துல்லியமாக மற்றும் கட்டுப்பாட்டு முறையில் மிகப்பெரிய வர்த்தக தொகுதிகளை கையாள கணினி அமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பங்குச் சந்தை ஆணையம் (SEC), பொதுவான பங்குகள், பங்கு தேர்வுகள் மற்றும் எதிர்கால சந்தை ஏற்ற இறக்கம் குறைக்க முயற்சியில் விளிம்புத் தொகை தேவைகளை மாற்றியமைத்தது. நியூயார்க் பங்கு சந்தை மற்றும் சிகாகோ மெர்கண்டைல் எக்ஸ்சேஞ்ச் ஆகியவை சுற்றமைப்பு தகர்ப்பது (சர்கியூட் பிரேக்கர்) என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தின. ஒரு குறிப்பிட்ட கால கெடுவில் குறிப்பிட்ட அளவு புள்ளிகளை விட டோவ் குறைவதாக இருந்தால் சுற்றமைப்பு தகர்ப்பு வர்த்தகத்தில் சிறு நிறுத்தம் செய்கிறது.
{| class="wikitable"
|-
! % இறக்கம்
! இறங்கிய நேரம்
! நெருங்கிய வர்த்தக
|-
| 10
| 2 pm முன்
| ஒரு மணி நேர நிறுத்தம்
|-
| 10
| 2 pm – 2:30 pm
| அரை மணி நேர நிறுத்தம்
|-
| 10
| 2:30 pm பிறகு
| சந்தை தொடர்ந்து திறந்துள்ளது
|-
| 20
| 1 pm முன்
| இரண்டு மணி நேரம் நிறுத்த
|-
| 20
| 1 pm – 2 pm
| ஒரு மணி நேரம் நிறுத்தி
|-
| 20
| 2 pm பிறகு
| இந்த நாள் முடிவடைந்தது
|-
| 30
| நாளின் எந்த நேரத்திலும்
| இந்த நாள் முடிவடைந்தது
|}
==பங்கு சந்தை குறியீட்டெண்==
ஒரு சந்தை அல்லது ஒரு சந்தை பகுதியில் விலை இயக்கங்கள், எஸ் & பி, FTSE மற்றும் யுரோநெக்ஸ்ட் போன்ற பங்கு சந்தை குறியீடுகளின் விலை குறியீடுகளில் குறிக்கப்படுகிறது. இத்தகைய பங்கு குறியீடுகள் எந்த அளவுக்கு பங்காற்றியுள்ளது என்பதன் எடையை கொண்டு, வழக்கமாக கனத்த சந்தை முதலீடு அமைகிறது. மாறும் வர்த்தகத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய பங்குகளை சேர்க்கவும் நிகழ்வில் உள்ள பங்குகளை நீக்கவும் வழி வகுக்கும் வகையில் குறியீட்டின் மாற்றங்களை அடிக்கடி ஆய்வு செய்யப்படுகிறது.
==துணை இயக்கக்கூறுகள்==
பங்குகளின் விலைகளை சாரும் கணக்குத் தீர்வு அல்லது மதிப்புகள் உள்ள புதிய நிதி ஆவணங்கள் நிதித் துறையின் கண்டுபிடிப்பாகும். சில உதாரணங்கள், பங்கு சந்தை வர்த்தக நிதிகள், பங்கு குறியீடு மற்றும் பங்கு [[சூதம்|சூதுகள்]], பங்கு இடமாற்றுகள், ஒற்றை பங்கு எதிர்காலங்கள், மற்றும் எதிர்கால பங்கு குறியீடு ஆகியவையாகும். இந்த கடைசி இரண்டும் எதிர்கால பரிமாற்றங்கள் (இது பங்கு சந்தைகளில் இருந்து வேறுபட்டது - அவற்றின் வரலாறு பொருட்களின் எதிர்கால சந்தைகளில் உள்ளன) அல்லது நேருக்கு நேர் வர்த்தகம் செய்யப் படுவது. இந்த தயாரிப்புகள் அனைத்தும் பங்குகளில் இருந்து வழி தோன்றுவதால், அவை சிலநேரங்களில் (கருத்துக்கோளாக) பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்பதுவதற்கு பதிலாக துணைப் பொருட்கள் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும்.
==ஊக்கப்படுத்தப்பட்ட வியூகங்கள்==
ஒரு வர்த்தகர் தன்னிடம் இல்லாத பங்கை விரைவு விற்பனை மூலம் வர்த்தகம் செய்யலாம்; இதன் மூலம் கிடைக்கும் விளிம்புத் தொகையை கடன் தொகையில் வாங்கும் பங்குகளுக்கு பயன்படுத்தலாம்; இந்த வழியில், மொத்தமான கொள்முதல் அல்லது விற்பனை இல்லாமல் சிறிய அளவு தொகையில் பெருமளவு பங்குகளை நல்ல முறையில் வர்த்தகம் செய்யலாம்.
===விரைவு விற்பனை (ஷார்ட் செல்ல்லிங்)===
விரைவு விற்பனையில், வர்த்தகர் கடனுக்கு பங்குகளை வாங்கி (பொதுவாக வாடிக்கையாளர்களின் பங்குகளை வைத்திருக்கும் அல்லது சொந்த பங்குகளை விரைவு விற்பனையாளர்களுக்கு கடனில் விற்கும் அவரது தரகரிடமிருந்து) அதன் விலை சரியும் என்ற நம்பிக்கையுடன் சந்தையில் விற்பனை செய்வர். வர்த்தகர் இடைப்பட்ட நேரத்தில் விலை குறைந்திருந்தால் பங்குகளை திரும்ப வாங்கி, இடைப்பட்ட காலத்தில் அதன் விலை குறைந்தால் லாபத்தைப் பெற்றும் விலை உயர்ந்தால் பண நஷ்டத்தையும் பெறுவர். பங்கை மீண்டும் வாங்கி விரைவு விற்பனையிலிருந்து வெளியேறுவது "விரைவு நிலையை மூடுதல்" என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலோபாயம் பணமாக்கவியலாத அல்லது ஆரோக்கியமற்ற வர்த்தக சந்தைகளில் நேர்மையற்ற வர்த்தகர்களால் செயற்கையாக ஒரு பங்கின் விலையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே பல சந்தைகள் குறுகிய கால விற்பனைக்குத் தடையோ அல்லது எங்கே, எப்படி குறுகிய விற்பனை ஏற்படலாம் என்பதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. நிர்வாண நடைமுறையில் நடக்கும் விரைவு விற்பனை பெரும்பாலான (ஆனால் அனைத்திலும் இல்லை) பங்கு சந்தைகளில் சட்ட விரோதமான செயலாகும்.
===மார்ஜின் (margin) கொள்முதல்===
மார்ஜின் வாங்கலில், வர்த்தகர் பணத்தை கடன் (வட்டிக்கு) வாங்கி பங்குகளின் விலை உயரும் என்ற நம்பிக்கையில் அதை வாங்குவதாகும். மிகவும் தொழில்மயமான நாடுகளில், மற்ற நேரடி சொந்த பங்குகளை பிணையமாக வைத்து கடன் வாங்குவது என்றால், மற்ற பங்குகளின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே கடன் இருக்கலாம் என்ற ஒரு தேவையான கட்டுப்பாடு உள்ளது.
முதலீட்டாளரின் மொத்த கணக்கு, வர்த்தகத்தின் இழப்பை தாங்க முடியவில்லையென்றால் ஒரு மார்ஜின் அழைப்பு ஏற்படுத்தப்படும். (மார்ஜின் பாதுகாப்புகளின் மதிப்பு குறைந்தால் கணக்கின் பங்கை பராமரிக்க கூடுதல் நிதி தேவைப்படும், மேலும் கடன் நிலைமையை பாதுகாப்பதற்காக மார்ஜின் பாதுகாப்பு அல்லது மற்ற பாதுகாப்புகளை அறிவிப்புடனோ அல்லது இல்லாமலோ தரகரால் விற்கப்படலாம். இது போன்ற கட்டாய விற்பனைக்குப்பின் உள்ள மீதித் தொகையை முதலீட்டாளரே கட்ட வேண்டும்.
1929 வீழ்ச்சிக்குப்பின் மார்ஜின் தேவைகள் சீரமைப்பு (பெடரல் ரிசர்வ் மூலம்) செயல்படுத்தப்பட்டது. அதற்கு முன், பங்கீட்டாளர்கள் வாங்கப்படும் பங்குகளின் மொத்த முதலீட்டில்,10 சதவீதம் (அல்லது குறைவாக) முதலீடு செய்தால் போதும் என்ற நிலை இருந்தது. மற்ற விதிகள் இலவச சவாரிக்கு உள்ள தடையும் அடங்கும்: ஆரம்பத்தில் பணம் செலுத்தாமல் பங்குகள் வாங்குவது (பொதுவாக பங்கு விநியோகத்திற்கு மூன்று நாட்கள் சலுகைக் காலம் உண்டு), ஆனால் அதை விற்று (மூன்று நாள் சலுகைக் காலம் முடியும் முன்னரே)அதில் ஒரு பகுதியை (பங்குகளின் மதிப்பு இடைக் காலத்தில் வீழ்ச்சி அடையாது என்ற அனுமானத்தில்) அசல் தொகையை செலுத்தப் பயன்படுத்துவது ஆகியவை ஆகும்.
==முதலீட்டு உத்திகள் ==
மக்கள் எப்போதும் பங்கு சந்தை பற்றி அறிய விரும்பும் பல விஷயங்களில் ஒன்று, " முதலீடு செய்து நான் எப்படி பணத்தை சம்பாதிப்பது?", என்பதாகும். பலவகையான அணுகுமுறைகள் உண்டு; இரு அடிப்படை முறைகளாக பிரிக்கப்பட்டவை, [[அடிப்படைப் பகுப்பாய்வு]] அல்லது தொழில்நுட்ப பகுப்பாய்வு ஆகும். அடிப்படை பகுப்பாய்வு என்பது SEC பதிவுகளில் உள்ள நிதி அறிக்கைகள், தொழில் நடைமுறைகள், பொது பொருளாதார நிலைமைகள், முதலியவற்றை வைத்து நிறுவனங்களை ஆய்வு செய்வதாகும். வரைபடங்கள் மற்றும் அளவுசார்ந்த உத்திகளை பயன்படுத்தி நிறுவனத்தின் நிதி நிலைமைகளை மற்றும் சந்தைகளில் விலை நடவடிக்கைகளை படிப்பது [[நுட்பப் பகுப்பாய்வு|தொழில்நுட்ப பகுப்பாய்வு]] ஆகும். ஜான் W. ஹென்ரி மற்றும் எட் செய்கோட்டா ஆகியோர் விலை வடிவங்கள், பண நிர்வகிப்பு மற்றும் பயன்படுத்தி ஆபத்து கட்டுப்பாடு மற்றும் நிதி திசைமாற்றுதல் மூலம் போக்கை (trend) பின்பற்றல் முறை தொழில்நுட்ப மூலோபாயத்தின் ஒரு எடுத்துக்காட்டாகும்.
மேலும், பலர் குறியீட்டு முறையை பின்பற்றி முதலீடு செய்ய விரும்புவர். இந்த யுக்தியின் முக்கிய நோக்கமே பன்முகத்தன்மையை அதிகரித்து, அடிக்கடி செய்யும் வர்த்தகத்தின் வரிகளை குறைத்தல், மற்றும் பங்கு சந்தையின் பொது போக்கை நிர்வகிப்பது (இரண்டாம் உலக போருக்கு பின்னர் அமெரிக்காவில் ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 10% கூட்டு விகிதத்தில்) ஆகும்.
==வரிவிதிப்பு==
தேசிய அல்லது மாநில சட்டத்தின்படி, நிதி கடப்பாடுகளில் ஒரு பெரிய வரிசையாக முதலீட்டு இலாபங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. பங்கு சந்தையில் பரிவர்த்தனைகள், ஈவுத்தொகை மற்றும் மூலதன ஆதாயங்கள் குறிப்பாக, பங்கு சந்தைகளில் மாநில அரசால் வரி விதிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த நிதி கடப்பாடுகள் ஒரு சட்ட எல்லையிலிருந்து மற்றொரு சட்ட எல்லையில் மாறுபடலாம். வரிவிதிப்பு ஏற்கனவே பங்கு விலையில் பல்வேறு வரி நிறுவனங்கள் மூலம் மாநில அளவில் இணைக்கப்பட்டிருக்கும் அல்லது பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வரியற்ற பங்கு சந்தை பரிமாணங்கள் நடைபெறும்.
==மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
[[ar:سوق الأسهم المالية]]
[[bn:শেয়ার বাজার]]
[[bg:Фондов пазар]]
[[cv:Тĕплĕх пасарĕ]]
[[da:Aktiemarkedet]]
[[de:Aktienmarkt]]
[[en:Stock market]]
[[es:Mercado de valores]]
[[fa:بازار سهام]]
[[ko:주식 시장]]
[[hi:शेयर बाज़ार]]
[[id:Pasar saham]]
[[lv:Akciju tirgus]]
[[hu:Tőzsde]]
[[mr:समभाग बाजार]]
[[ms:Pasaran saham]]
[[nl:Aandelenmarkt]]
[[ja:証券市場]]
[[pt:Mercado de ações]]
[[ru:Рынок ценных бумаг]]
[[sr:Берза]]
[[fi:Osakemarkkinat]]
[[sv:Aktiemarknad]]
[[te:స్టాక్ మార్కెట్]]
[[uk:Фондовий ринок]]
[[vi:Thị trường chứng khoán]]
[[war:Paralitan han sosyo-puhunan]]
[[yi:סטאק מארקעט]]
[[zh:股市]]