2010[[பொதுநலவாய விளையாட்டுக்கள்|காமன்வெல்த்]] போட்டிகளின் போது பல கவலைகள் மற்றும் சர்ச்சைகள் வெளிப்பட்டு [[இந்தியா]] மற்றும் சர்வதேச அளவில் பரவலாக பேசப்பட்டது.
ஏழை மக்கள் பலர் உள்ள போது காமன்வெல்த் போட்டிகளுக்காக பல பில்லியன் டாலர்களை செலவு செய்வதாக பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இத்துடன் விளையாட்டு தொடர்பான பிற பல பிரச்சினைகளை இந்திய புலனாய்வு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் சுட்டிக்காட்டின; இவை அதிகாரிகளின் ஊழல், கட்டுமான தாமதங்கள் , உள்கட்டமைப்பின் தரத்தில் குறைபாடு, பயங்கரவாத தாக்குதல் வாய்ப்பு மற்றும் போட்டிகளின் முன் குறைவான நுழைவுச்சீட்டு விற்பனை ஆகியவற்றை உள்ளடக்கும்.
காமன்
====சமூக மற்றும் பொருளாதார தாக்கம்====
=====நிதி செலவினங்கள்=====
[[File:Azimpremji.jpg|thumb|upright|அஸிம் பிரேம்ஜி, விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனர், இந்தியாவில் பல சமூக பொருளாதார சவால்களை எதிர்கொள்ளுகிறது என்றும் பொதுநலவாய விளையாட்டுக்களில் கவனம் செளுத்துவதை விட மற்ற முக்கியமான சமூக பொருளாதார சவால்களை எதிர்கொள்ள வேண்டும்."]]
சமூக பொருளாதார வளர்ச்சியில் முன்னணி நிபுணரான மிலூன் கோத்தாரி, 2010 காமன்வெல்த் போட்டிகள் நாட்டில் ஒரு "எதிர்மறை நிதி மரபை" உருவாக்கும் என்று கூறினார். "மூன்றில் ஒரு இந்தியர் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளபோது, 40% மக்கள் பசியால் வாடும் போது, 46% குழந்தைகள் மற்றும் 55% பெண்கள் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் உள்ள போது, 12 நாள் விளையாட்டு போட்டிக்காக பல பில்லியன் டாலர்கள் செலவு செய்வது தேசிய அவமானம்" என்று கூறினார்.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறையின் முன்னாள் அமைச்சர் மணி சங்கர் அய்யர் காமன்வெல்த் போட்டிகளை வெளிப்படையாக விமர்சித்தார். ஏப்ரல் 2007 இல், அய்யர் இப்போட்டிகள் "சாதாரண மனிதனுக்கு பொருத்தமுறாதவை"; சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு பெரும் முதலீடு தேவைப்படுகிறபோது விளையாட்டுகளுக்காக பல பில்லியன் டாலர்கள் ஒப்புதல் அளித்ததற்காக இந்திய அரசாங்கத்தை விமர்சித்தார். ஜூலை 2010 ஆம் ஆண்டில், "காமன்வெல்த் போட்டிகள் வெற்றிகரமாக இருந்தால் வருத்தப்படுவேன்" என அவர் குறிப்பிட்டார்.
இந்திய தொழிலதிபர் [[அசிம் பிரேம்ஜி]] 2010 காமன்வெல்த் "பொது நிதியின் வடிகால்" என்றும் நாட்டின் கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் பொது சுகாதாரம் போன்றவற்றவை உள்ள போது இந்தியாவில் அதிக செலவில் விளையாட்டு போட்டிகள் நடத்த முன்னுரிமை கொடுப்பதை நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.
=====சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு=====
தில்லியின் மூன்று பெரிய சேரிகளில் இருந்து கிட்டத்தட்ட 400,000 மக்கள் 2004 முதல் இடமாற்றம் செய்யப்பட்டனர். கெளதம் பான், கலிபோர்னியா-பெர்க்லி பல்கலைக்கழகத்தில் இந்திய நகர்ப்புற திட்ட அமைப்பாளர், 2010 காமன்வெல்த்தின் போது சரியான மீள்குடியேற்றம் இல்லாமல் கண்மூடித்தனமான வெளியேற்றங்கள் அதிக அளவில், அடிக்கடி நடந்ததாக கூறினார்.<ref name=CWGEconomics>[
http://www.livemint.com/2009/10/26205604/The-economics-of-the-Games.html The economics of the Games]</ref>
=====தொழிலாளர் சட்டங்கள் மீறல்=====
இந்தியாவில் பிரச்சாரகர்கள், கட்டுமான தளங்களில் தொழிலாளர் சட்டங்களை அதிக அளவில் மீறுவதாக போட்டி அமைப்பாளர்கள் மீது குற்றம் சாட்டினர். மனித உரிமைகள் சட்டம் வலையமைப்பு பணி தொடங்கியதில் இருந்து கட்டுமான இடங்களில் 70க்கும் மேற்பட்ட சம்பவங்களில் விபத்துகளால் தொழிலாளர்கள் இறந்துள்ளதாக பல்வேறு விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கிறது. அதிகாரப்பூர்வமான எண்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், 415.000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தினசரி கூலி தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் எட்டு மணி நேரம் வேலைக்கு திறனுள்ள தொழிலாளர்களுக்கு 130ரூபாய் மற்றும் திறனற்ற தொழிலாளர்களுக்கு 100ரூபாய் வழங்கப்பட்டது. தொழிலாளர்கள் 12 மணி நேரம் (எட்டு மணி நேரம் மற்றும் கூடுதல் நான்கு மணி நேரம்) வேலைக்கு 150ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். இந்த இரு ஊதியங்களும் எட்டு மணி நேரம் வேலைக்கு தில்லி அரசின் குறைந்தபட்ச ஊதியமான 152 ரூபாயை விட குறைவாகும். விளையாட்டு திட்டங்களில் வேலை செய்யும்போது கிட்டத்தட்ட 50 கட்டுமான தொழிலாளர்கள் இரண்டு ஆண்டுகளில் இறந்துள்ளனர்.
தொழிலாளர் முகாமில் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளை பராமரிக்க வசதியில்லாததால் அபாயகரமான கட்டுமான இடங்களில் சிறு குழந்தைகள் உள்ளதாக பல ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் உள்ளன. காமன்வெல்த் மைதானத்தில் வேலை செய்பவர்களுக்கு கடின தொப்பிகள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டாலும் திறந்த காலுள்ள செருப்புடன் வேலை பலர் வேலை செய்தனர்.
=====குழந்தை தொழிலாளி=====
சிஎன்என், விளையாட்டு அரங்குகளின் கட்டுமான பணிகளுக்கு ஏழு வயது குழந்தைகள் பயன்படுத்தப்படுவதை ஒளிபரப்பியது. சிஎன்என்னுக்கு ஆதாரங்கள் வழங்கிய சித்தார்த் கரா சில நாட்களுக்குள் 14 [[குழந்தைத் தொழிலாளர்|குழந்தை தொழிலாளர்களை]] ஆவணப்படுத்தினார்
[[புது தில்லி]] முதல்வர் ஷீலா தீட்சித் யாரும் தன்னை அணுகவில்லை என தெரிவித்தாலும், சிஎன்என் 23 ஜூலை 2010ல் இருந்து அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்ததாக தெரிவித்தது. பலமுறை முயற்சி செய்த போதிலும் எந்த அதிகாரப்பூர்வ பதிலும் கிடைக்கவில்லை என கூறினர்.
====ஏற்பாடுகளில் குளறுபடிகள்====
=====லஞ்ச ஒழிப்பு தொடர்பான முறைகேடுகள் மற்றும் உயர்ந்த விலைப்பட்டியல்=====
28 ஜூலை 2010ல், மத்திய விழிப்பு ஆணையம், அரசு சார்பான ஊழல்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட ஒரு இந்திய அரசாங்க குழு, 14 காமன்வெல்த் திட்டங்களில் முறைகேடுகள் உள்ளதை ஒரு அறிக்கையில் வெளியிட்டது. அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் படி, 71 நிறுவனங்களின் 129 படைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. விரிவான முதல்நிலை ஆய்வில், அதிக விலையில் பணி ஒப்பந்தங்கள் வழங்கியது, மோசமான தரக்காப்புறுதி மற்றும் மேலாண்மை, மற்றும் தரமற்ற முகவரிடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது போன்ற குளறுபடிகள் கண்டு பிடிக்கப்பட்டன.
விளையாட்டு அரங்குகளின் கட்டமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் வழங்கியது உட்பட பல்வேறு அம்சங்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குயின்ஸ் பேட்டன் ரிலே தொடர்பான நிதி முறைகேடுகளை ஆய்வு செய்த மூன்று பேர் குழுவின் அறிக்கையை தொடர்ந்து, 5 ஆகஸ்ட் 2010ல் கூட்டு இயக்குனர் எஸ் தர்பாரி மற்றும் எம் ஜெயச்சந்திரன் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், அமைப்பு குழுவின் பொருளாளர் அனில் கன்னா, தனது மகனின் நிறுவனத்திற்கு டென்னிஸ் மைதானத்தில் செயற்கை புல் அமைக்கும் ஒப்பந்தம் கிடைத்தது வெளிச்சத்திற்கு வந்தபோது தனது வேலையை ராஜினாமா செய்தார்.
நிழல் அயல்நாட்டு நிறுவனங்கள், போலி மின்னஞ்சல்கள், போலி நிறுவனங்கள் மற்றும் வீண்பெருமிதத்துக்குரிய பில்கள் மூலம் ஓடுபொறியில் இருந்து கழிப்பறை காகிதம் வரை பல பொருட்களின் விலைகளில் குளறுபடி செய்யப்பட்டதாக GlobalPost செய்தி நிறுவனம் தெரிவித்தது. $2 கழிவறை பேப்பர் $80, $2 மதிப்புள்ள சோப்பு டிஸ்பென்சர் $60, $98 மதிப்புள்ள கண்ணாடிகள் $220, $11,830 மதிப்புள்ள அதிக உயர சிமுலேடர் $250,190 என போலியாக விலையிடப்பட்டன.
'''ஆயத்த தாமதங்கள்'''
செப்டம்பர் 2009 இல், CGF தலைவர் மைக் ஃபென்னல்(Mike Fennell) விளையாட்டு அட்டவணையில் பின்தங்கும் ஆபத்து உள்ளதாக மற்றும் "தற்போதைய சூழ்நிலையில் 2010 ல் காமன்வெல்த் விளையாட்டு தீவிர ஆபத்தில் உள்ளது என்று முடிவு செய்வது தவறாகாது" என்று தெரிவித்தார். பல மாதங்களுக்கு பின் இந்திய அரசால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் 19 விளையாட்டு அரங்கங்களில் 13 அரங்கங்களின் கட்டுமான பணி அட்டவணையின் பின்னால் இருந்தது கண்டறியப்பட்டது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா(Times of India) பத்திரிக்கை, அனைத்து திட்டங்களும் மே 2009ல் முடிக்கப்பட்டு, ஒரு வருடம் சோதனை ஓட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டதாக தெரிவித்தது. மேலும், 2010 ஜூலையில்தான் முதல் அரங்கம் சோதனை ஓட்டங்களுக்காக ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தது. லண்டனில் நடந்த 2012 கோடை ஒலிம்பிக் போட்டிகளின் அரங்குகளின் கட்டுமான பணிகள் ஒரு வருடம் முன்னதாகவே முடிக்கப்பட்டன.
22,000 தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களில் 10,000 பேர் போட்டிகளுக்கு ஒரு வாரம் முன்னர் விலகினர்; பலர் தங்களது சீருடைகளை திரும்பி தரவில்லை. பயிற்சி பற்றாக்குறை மற்றும் அளிக்கப்பட்ட பணிகளில் அதிருப்தி இருந்ததால் இவ்வாறு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.
'''மோசமான நுழைவுச்சீட்டு விற்பனை மற்றும் வருகை'''
விளையாட்டு போட்டிகளின் தொடக்கம் மிக குறைவான நுழைவுச்சீட்டு விற்பனையை கண்டது; பல அரங்குகள் காலியாக இருந்தன. ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஏற்பாடு தலைவர் சுரேஷ் கல்மாடி பிரச்சனைகள் இருந்தன என ஒப்புகொண்டு அரங்குகளுக்கு வெளியே டிக்கெட் சாவடிகள் அமைக்காததே அரங்குகள் காலியாக இருந்ததற்கு காரணம் என கூறினார். போட்டியின் இரண்டாவது நாள், 100 க்கும் குறைவான மக்கள் 19,000 இருக்கை கொண்ட MDC ஸ்டேடியத்தில் இருந்தனர். 5,000 இருக்கை டென்னிஸ் ஸ்டேடியத்தில் 20 க்கும் குறைவான மக்கள் முதல் டென்னிஸ் போட்டியை பார்த்தனர்.
நடைப்போட்டி மற்றும் சைக்கிள் பந்தயங்களில் தில்லி சாலைகள் வெறிச்சோடி இருந்தனர்.
==இனவெறி குற்றச்சாட்டு==
==உள்கட்டமைப்பு பிரச்சினைகள்==
====போக்குவரத்து உள்கட்டமைப்பு====
====நிகழும் இடம்====
நியூசிலாந்து, கனடா, ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகள் தங்குவதற்கு தகுதியில்லாத நிலைமைகள் பற்றி கவலை தெரிவித்தன. ஸ்காட்டிஷ் குழு, விளையாட்டு கிராமத்தின் படுக்கையில் வெளிப்படையாக ஒரு நாய் மலம் கழிக்கும் புகைப்படத்தை சமர்ப்பித்தனர்.<ref>{{cite news|author=Rumu Banerjee, TNN, 21 September 2010, 12.29am IST |url=
http://timesofindia.indiatimes.com/sports/events-tournaments/commonwealth-games/top-stories/Commonwealth-Games-Village-unliveable-complain-four-countries/articleshow/6595540.cms |title=Commonwealth Games Village unliveable, complain four countries - The Times of India |publisher=
Timesofindia.indiatimes.com |date= 2010-09-21|accessdate=2010-09-22}}</ref> The [[Times of India]] newspaper reports that the Scottish delegation apparently submitted a photograph of a dog defecating on a bed in the games village.<ref>{{cite news|author=TNN, 22 September 2010, 11.44am IST |url=
http://timesofindia.indiatimes.com/sports/events-tournaments/commonwealth-games/top-stories/Now-smaller-teams-consider-withdrawal-from-Commonwealth-Games/articleshow/6605483.cms |title=Now, smaller teams consider withdrawal from Commonwealth Games - The Times of India |publisher=
Timesofindia.indiatimes.com |date= 2010-09-22|accessdate=2010-09-22}}</ref> அங்கு இருந்த விளையாட்டு வீரர்கள் இருப்பிடங்களில், இருக்கக்கூடாத இடங்களில் மலம் இருந்ததாகவும், அதை சுத்தம் செய்ய வருகை தரும் குழுக்கள் உதவ வேண்டியதாக ஹூப்பர் தெரிவித்தார். பிபிசி, சுவர்கள் மற்றும் தரையில் பழுப்பு நிற பான் கறை, தரையில் திரவங்கள் மற்றும் நாயின் காலடித்தடம் கொண்ட தடகள வீரர்களின் கட்டில்கள் படங்களை வெளியிட்டது.
இதற்கிடையில், பாக்கிஸ்தானும் தனது தடகள வீரர்கள் தங்க மாற்று ஏற்பாடு செய்து தர கோரியது. பாகிஸ்தான் ஒலிம்பிக் சங்க தலைவர் அரிப் ஹசன் "தடகள வீரர்கள் தங்கும் கிராமம் நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். வீரர்கள் தரக்குறைவான இடத்தில் இருக்க முடியாது." என கூறினார். ஆனாலும் ஹசன் போட்டிகளில் பாக்கிஸ்தானின் பங்கேற்பை உறுதி செய்தார்.
====நிகழ்வுகள் போது உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை செயல்பாடு பிரச்சினைகள்====
நீச்சல் போட்டியின் முதல் இரவு, நீச்சல் குளத்தில் சிதிலமடைந்த பொருட்கள் விழுந்தன. கூரையின் ஒரு பகுதி அல்லது அதன் சாயம் சரிந்துள்ளது என நம்பப்படுகிறது.
நீச்சல் போட்டியின் கடைசி இரவின் முன், வடிகட்டும் அமைப்பு பழுதடைந்தது. இறுதியின் போது நீர் கலங்கலாக இருந்தது; ஒரு நீச்சல் போட்டியில் எப்போதும் கண்டிராத அளவிற்கு கலங்கலாக இருந்ததாக விவரிக்கப்பட்டது. பல வீரர்கள் குடல் பிரச்சினை காரணமாக நோய்வாய்ப்பட்டனர். இது நீச்சல்குளத்தின் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த கவலைகளை எழுப்பியது. ஆனால் தென் ஆப்பிரிக்கா உட்பட மற்ற குழுக்கள், இவ்வாறு வீரர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கவில்லை. போட்டி தரக்கட்டுப்பாட்டின் படி தினம் தண்ணீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வீரர்கள் பாதிக்கப்பட்ட செய்தி வெளியான பிறகு, கூடுதல் சோதனைகள் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால் அதில் நீச்சல் குள நீர் சுகாதாரமாக உள்ளதாக தெரிந்தது. ஆஸ்திரேலிய அணியின் தலைமை மருத்துவர், பீட்டர் ஹார்கோர்ட், "பிரச்சினையின் காரணமாக நீச்சல் குள நீர் இருப்பதற்கான வாய்ப்புக்கள் மிக குறைவு" என தெரிவித்தார் மற்றும் தில்லி விளையாட்டு கிராமத்தில் சுகாதாரம் மற்றும் உணவின் தரத்தை பாராட்டினார். இங்கிலாந்தின் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்தில் தங்க பதக்கம் வென்ற நீச்சல் வீராங்கனை ரெபேக்கா அட்லிங்டன்(Rebecca Adlington) நீரின் தரம் மிகவும் நன்றாக இருந்தது என தெரிவித்தார்.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்குவதற்கான குடியிருப்பு வளாகம், '''''விளையாட்டு கிராமம்''''' என்று அழைக்கப்படுகிறது.இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதிய வசதிகள் இல்லை என்றும், வீரர், வீராங்கனைகள் தங்க இயலாத அளவுக்கு இருப்பதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டின.இதனால் போட்டி நடத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது <ref>
http://www.maalaimalar.com/2010/09/23144633/commonwealth-competition-two-c.html</ref>
====விளையாட்டு வீரர்கள் மூலம் விளையாட்டு கிராமத்திர்க்கு எற்பட்ட பாதிப்புகள்====
[[File:Sally Pearson-cropped.jpg|right|thumb|upright|100 மீட்டர் ஓட்டத்தில் தகுதிநீக்கம் முன் பியர்சன்.]]
==பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவலைகள்==
| date= 2010-09-22 | accessdate= 2010-09-22 |publisher=[[The Australian]]}}</ref>[[26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்| 2008 மும்பை தாக்குதலை]] தொடர்ந்து, சில விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் விளையாட்டுகள் போது பாதுகாப்பு அச்சம் தெரிவித்தனர்.ஏப்ரல் 2010 இல், இந்தியன் பிரீமியர் லீக் போது, இரண்டு குறைந்த தீவிர குண்டுகள் [[பெங்களூர்]] [[எம். சின்னசுவாமி அரங்கம்]] வெளியே சென்றுவிட்டோம் வெடித்தது. உயிரிழப்புகள் எதுவும் இல்லை. விளையாட்டின் துவக்கங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.பிரிட்டன் மற்றும் கனடா மேலும் விளையாட்டுகள் போது தில்லி வணிக இலக்குகள் மீது சாத்தியமான தாக்குதல் பற்றி எச்சரித்தார்.<ref>{{Cite news| url=
http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article7105608.ece | work=The Times | location=London | title=Attack alerts in Delhi hit plans to stage Commonwealth Games | accessdate=2010-04-23 | first=Jeremy | last=Page | date=23 April 2010}}</ref><ref>[
http://www.ndtv.com/news/sports/commonwealth-games-security-lagging-behind-20603.php Commonwealth Games security lagging behind]. Ndtv.com. Retrieved on 2010-07-06.</ref>15 வருடங்களில் மிக அதிகமான பருவ மழையால் கட்டுமான தளங்களில் தண்ணீர் தேங்கிருந்தது. அதனால் கொசுக்கள் அதிகமாக இனம்பெறுக்கின. அதனால் கொசுக்கள் கொண்டுவரும் நோய்கள் பரவும் என பயந்தனர். விளையாட்டுக்கு சில நாட்கள் முன்னாடி டெல்ஹியில் 65-70 பேருக்கு [[டெங்கு காய்ச்சல்]] இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. 3 அக்டோபர் முன்னாடி இது 3000பேர் இல்லக்கை தொட்டுவிடும் என எதிற்பர்க்கப்படது.பல நீச்சல் வீரர்களுக்கு உடம்பு சரியில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில், எஸ்பிஎம் காம்ப்ளக்ஸ் நீச்சல் குளங்கள் நீர் தர மீது கவலைகள் எழுப்பப்பட்டன..<ref>{{cite news|title=Delhi's Richest Areas Hit By Dengue as City Prepares for Games|publisher=Bloomberg|date=12 September 2010|url=
http://www.bloomberg.com/news/2010-09-12/delhi-s-wealthiest-areas-hit-by-dengue-outbreak-as-city-prepares-for-games.html|first=Mehul|last=Srivastava}}</ref><ref>{{cite news|title=Dengue cases on the rise |publisher=The Hindu|date=19 September 2010|url=
http://hindu.com/2010/09/19/stories/2010091965210300.htm|location=Chennai, India}}</ref>
சம்மு காசுமீர் கலவரங்கள், பாபர் மசூதி தீர்ப்பினால் எழக்கூடிய கலவரங்கள்,வெளிநாட்டுத் தீவிரவாதிகள் மும்பை சம்பவம் போன்ற தாக்குதல் நடத்தக்கூடிய வாய்ப்பு எனப் பல காரணங்களால் பங்கேற்கும் நாடுகள் கவலையடைந்துள்ளன.பாதுகாப்பு பிரச்னை காரணமாக காமன்வெல்த் போட்டியில் இருந்து இங்கிலாந்தின் "டிரிபிள் ஜம்ப்' வீரர் பிலிப்ஸ் இடோவு விலகியுள்ளனர். இதே போல ஒலிம்பிக் 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற இங்கிலாந்தின் தடகள வீராங்கனை கிறிஸ்டியன் ஒகுருகு, மெல்போர்ன் காமன்வெல்த், 1500 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற லிசா டோப்ரிஸ்கி ஆகியோரும் விலகியுள்ளனர்.<ref>
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=90721</ref>
== மேலும் காண்க ==
{{commonscat|Commonwealth Games}}
* காமன்வெல்த் குளிர் கால விளையாட்டுக்கள்
* காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுக்கள்
* இந்தியப் பேரரசு விளையாட்டுக்கள்
* ஜூயே டெ லா பிராங்கோபோனி
* லுஸோபோனி விளையாட்டுக்கள்
== மேற்குறிப்புக்கள் ==
{{reflist}}
== புற இணைப்புகள் ==
=== விளையாட்டுகளின் அதிகார பூர்வ வ்லைத்தளங்கள் ===
=== நாடுகள் ===