7TH ARTICLE : TAMIL LITERATURE தமிழ் இலக்கியம்

421 views
Skip to first unread message

Sriram Rengarajan

unread,
Apr 17, 2013, 12:43:13 PM4/17/13
to nss_wik...@googlegroups.com, Adhithya Srinivasan, Balaji Kumar
{{Refimprove|date=April 2008}}
தமிழ் இலக்கியம் என்பது தமிழ் மொழியில் உள்ள இலக்கியங்களை குறிக்கிறது. தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று.  தற்போது மிஞ்சி உள்ள பழமையான இல்லகியங்கலே பக்குவம் அடைந்தவை ஆகும். தென்இந்தியாவில் (முக்கியமாக தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் உள்ளவர்கள்) உள்ள தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்கள் தான் தமிழ் இல்லகியத்திற்கு முக்கிய பங்களிப்பாளர்கள். மற்ற இடங்களில் வசித்து வரும் தமிழர்களும் தமிழ் இலக்கியத்திற்கு பங்களித்துள்ளனர்.  மேலும், ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஆசிரியர்களும் முக்கிய பங்களித்துள்ளனர். தமிழ் இல்லகிய வரலாறு தமிழ்நாட்டின் வரலாற்றை நெருக்கமாக பின்பற்றும்.  கி.மு. 2 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்து துவங்கும் ஆரம்ப சங்க இலக்கியம், காதல், போர், சமூக மதிப்புகள் மற்றும் மதம் உட்பட வாழ்க்கையின் பல அம்சங்களை கையாள்வதில் பல்வேறு கவிஞர்களின் தொகுப்பை கொண்டிருக்கும். இத தொடர்ந்து காவியங்கள் மற்றும் தார்மீக இலக்கியங்கள் வந்தன. இவை இந்து,சமய மற்றும் புத்த ஆசிரியர்களால் கி.பி. 5ஆம் நூற்றாண்டு எழுதப்படது.6-12 நூற்றாண்டில் [[நாயன்மார்|நாயன்மார்களும்]] [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களும்]] பல தமிழ் பக்தி பாடல்களை எழுதினர். இது ஒரு பெரிய பக்தி இயக்கத்தை உருவாக்கியது. இது பின்பு இந்திய முழுவதும் பரவியது. இந்த சமயத்தில் தான் புகழ்பெற்ற கம்பராமாயணம் மற்றும் பெரிய புராணம் இயக்கப்பட்டது. சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் புலவர்களை போற்றிவந்தனர். இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ ஆசிரியர்களும் இந்த சமயத்தில் சில இலக்கியங்களை தமிழுக்கு அளித்தனர். சமஸ்கிருததின் குறைவான தாக்கத்தை கொண்ட பழமையான இந்திய மொழி என்றதால் அறிஞர்கள் இம்மொழிமேல் தனி ஈடுபாடு கொண்டு ஆராய்ந்து வருகின்றனர். <ref>Sivathamby, K (December 1974) [http://www.jstor.org/pss/3516448 Early South Indian Society and Economy: The Tinai Concept], Social Scientist, Vol.3 No.5 Dec., 1974</ref>

தமிழ் இல்ல்கியங்கள் 19நூற்றாண்டில் மறுமலர்ச்சி பெற்றது. பாமர மக்கள் புரிந்துக் கொள்ளும் வகையில் இலக்கியங்கள் எழுதப்பட்டதால் இது நடந்தது. நவீன தமிழ் இலக்கிய இயக்கம் சுப்ரமணிய பாரதியால் துவங்கப்பட்டது. பலர் இல்லகியம் மூலம் மக்களிடம் தங்கள் சிந்தனையை தெரிவித்தனர்.  இலக்கிய வளர்ச்சியால் தமிழ் உரைநடை மலர மற்றும் முதிர தொடங்கியது. சிறுகதைகள் மற்றும் புதினங்கள் தோன்ற தொடங்கியது.  நவீன தமிழ் இலக்கிய விமர்சனம் கூட உருவானது. தமிழ் சினிமாவால் தமிழ் இல்லகியங்கள் சில விதத்தில் முன்னேறியுள்ளது. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.

==சங்க காலம்==
{|  style="width:300px; float:right; margin:0 0 1em 1em; background:#f9f9f9; border:1px #aaa solid; border-collapse:collapse; font-size:90%;"

'''குறிஞ்சி - தலைவன் கூற்று'''

யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி யறிதும்

செம்புலப் பெயனீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.

-செம்புலப் பெயனீரார்.

'''Red earth and pouring rain'''<ref>See ''[[Kuruntokai]]'' for a commentary on this poem.</ref>

What could my mother be

to yours? What kin is my father

to yours anyway? And how

Did you and I meet ever?

But in love

our hearts have mingled

as red earth and pouring rain

''([[Kuruntokai]] - 40)''

A poem from the ''[[Ettuthokai|Eight Anthologies]]'' collection.

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.<ref name=majumdar193>See Majumdar, p 193</ref> துரதிருஷ்டவசமாக சங்க காலம் சேர்ந்த தமிழ் இலக்கியங்கள் பலவும் இழக்கப்பட்டது. தற்போது கிடைக்கும் இக்காலத்திய இலக்கியமானது அனேகமாக தமிழ் இலக்கியத்தின் பொற்காலத்தில் படைக்கப்பட்ட இலக்கியத்தின் ஒரு பகுதியே எனலாம்.<ref name=majumdar193/>

இந்தியாவின் தெற்கே இருந்து மறைந்த  ஒரு கண்டத்தில்  மூன்று தொடர் தமிழ்ச்சங்கங்களில் இவை இயற்றப்பட்டதாகத்  தமிழ்ப்  புராணங்கள் கூறுகின்றன.<ref>See Zvelebil, pp 45-47</ref>பொதுவாக இலக்கண புத்தகங்கள் இலக்கியம் வந்ததற்க்கு சில  காலங்கள் கழித்தே எழுதப்படுவதால் தொல்காப்பியத்திற்கு முன்பே குறிப்பிடத்தக்க இலக்கியம் இருந்திருக்கும் எனலாம்.தமிழ் மரபின்படி முதல் சங்க இலக்கியம் பன்னிரண்டு மில்லியன் பழமை வாய்ந்தது. நவீன மொழி ஆராய்ச்சியாளர்கள் செய்யுட்கள் கிமு 1 க்கும் கீ பி 3க்கும் இடைப்பட்டதாகக்  கருதுகிறார்கள்.<ref>The age of Sangam is established through the correlation between the evidence on foreign trade found in the poems and the writings by ancient Greek and Romans such as ''[[Periplus]]''. See Nilakanta Sastri, K.A., History of South India, p 106</ref>

சங்க காலமானது தமிழ் இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படுகிறது.இக்காலத்தில்  தமிழ் நாடானது மூன்று சிறந்த ராஜாக்களான சேர, சோழ பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டது. வெளி அச்சுறுத்தல் இல்லாது நாடானது அமைதியாக இருந்தது.அசோகரின் வெற்றி  தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்ப்படுத்த வில்லை. மக்கள் இலக்கியப் பணியில் ஈடூ பட்டார்கள்.கவின்ஞர்கள் மற்றும் மன்னர்களிடையே சாதாரணமான உறவு இருந்தது. இது பின்னர் காலத்தில் கற்பனை மட்டுமே செய்ய முடியும்.   [[தொல்காப்பியம்]] தமிழ் மொழி ஒழுங்கு முறையில் உருவாகியுள்ளது என நமக்கு காமிக்கிறது.  தொல்காப்பியம் 1602 பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும், அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும், தமிழ்மரபையும் விளக்குகிறது.

சூரியனுக்குக் கீழ் உள்ள எந்த பொருளைப் பற்றியும் கவிதை மனங்கள் விவாதிப்பதற்கு ஏற்றவாறு இலக்கியமானது அகம் புறம் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது.  இது தனிநபர்களால் தான் அனுபவிக்கமுடியும் ஏனெனினில் இது தண்ணிபட்ட வாழ்கையின் உணர்சிகளை விவரிக்கிறது.

மானிட வாழ்கை வெற்றிடத்தில் நடக்க முடியாது. அது இயற்கை வளங்களால் பாடிக்கபடுவதால் அகநிலை தலைப்புகள் இந்த குறிப்பிட்ட வாழ்விடங்களை பற்றி ஒதுக்கப்பட்டது. இதன்படி நிலத்தை ஐந்தாக வகைப்படுத்தலாம்: குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை. இந்த இடங்களில் உள்ள பறவைகள், விலங்குகள், பூக்கள், கடவுளர்கள், இசை, மக்கள், வானிலை, பருவங்கள் மானிட வாழ்கையின் நுட்பமான ஒரு மனநிலையை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் குறுந்தொகை (எட்டுத்தொகையின் சேர்ந்த கவிதைகளின் திரட்டு) சங்க இயற்கையின் ஆரம்ப சிகிச்சை நிரூபிக்கிறது. இது போன்ற சிகிச்சைகள் பின்னர் படிப்புகளான அகநானூறு மற்றும் பரிபாடலில் மிகவும் செம்மையாக தெரிகிறது.

==பிந்தைய சங்க காலம்==

===நீதிபோதனை காலம் ===
{|  style="float:right; width:300px; border:1px #aaa solid; border-collapse:collapse; background:#f9f9f9; margin:0 0 1em 1em; font-size:90%;"

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

"The mark of wisdom is to discern the truth

From whatever source it is heard."

- ''([[Tirukkural]] - 423)''<ref name='kural423'>{{cite web|url=http://acharya.iitm.ac.in/cgi-bin/show_kural_ad.pl?43 |title= Text of Tirukkural: Adhikaram 43 |accessdate=2008-04-24 |first=Thiruvalluvar |coauthors=Rev.G.U.Pope (translation) |work=IITM Software and Multilingual Application Development |publisher=IIT Madras }}</ref>

சங்க வயது பின்னர் மூன்று நூற்றாண்டுகளாக சமஸ்கிருதத்துக்கும் , தமிழுக்கும் உள்ள பரஸ்பர தொடர்பில் உயர்வு கண்டது. ஒழுக்கவியல், தத்துவம் மற்றும் மதம் சார்ந்த வார்த்தைகள் மற்றும் கருத்துக்கள் மொழிகளுக்கு இடையே பரிமாறின. கி.பி. 300யில் தமிழ் நிலம் களப்பிரர்கள் கீழே இருந்தது. களப்பிரர்கள் புத்த மதம் சேர்ந்தவர்கள். நிறைய புத்த ஆசிரியர்கள் இந்த காலத்தில் தழைத்தோங்கினர். சமண மதமும் புத்த மதமும் இந்த சமயத்தில் செழித்தன. இந்த ஆசிரியர்கள்அறநெறியை மற்றும் நெறிமுறைகள் பற்றி தான் அதிகம் எழுதினர். இத அவர்கள் மடங்களின் கண்டிப்பான இயற்கையினால் இருக்கலாம். நிறைய புத்த மற்றும் சமண மத கவிஞர்கள் இந்த நீடிபோதானை படைப்புகளை நமக்கு கொடுத்தனர்.

நெறிமுறைகளை பற்றி உள்ள படிப்புகளில் இந்த காலகட்டத்தில் வந்த [[திருக்குறள்]] தான் சிறந்தது. இதை [[திருவள்ளுவர்]] எழுதினார். இப்புத்தில் ஒழுக்கவியல், ஆட்சி மற்றும் காதல் போன்ற தலைப்புகளில் 1330 குரல்கள் உள்ளன. இதில் 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை.

கலவி, நாலடியார்,இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது போன்ற புகழ் பெற்ற படைப்புகளும் இந்த கால கட்டத்தில் தான் வந்தது.

===இந்து மதத்தின் பக்தி காலம்===

500 கிபி சுற்றி களப்பிரர்கள் வீழ்ச்சிக்கு பின்னர் இதுவரை அடங்கிருந்த இந்துக்களிடமிருந்து எதிர்வினை வந்தது. களப்பிரர்களை தெற்கில் பாண்டியர்களும் மற்றும் வடக்கில் பல்லவர்களும் மாற்றியமைக்கப்பட்டனர். களப்பிரர்கள் வெளியேறிய பிறகும் சமண மற்றும் பௌத்த மதத்தின் தாக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. முற்கால பாண்டிய மற்றும் பல்லவ அரசர்கள் இந்த மதங்களைப் பின்பற்றினர். இந்து மதம் நலிவுறுவதை பொறுத்துக் கொள்ள இயலாத இந்து மதத்தினரின் எதிர்வினைகள் வளர்ந்து ஏழாம் நூற்றாண்டின் பிந்தைய பகுதிகளில் உச்சக்கட்டத்தை அடைந்தன. இந்து மதம் புத்துயிர் பெற்ற சமயத்தில் சைவம் மற்றும் வைணவ இலக்கியங்கள் பல உருவாக்கப்பட்டன. பிரபலமான பக்தி இலக்கியங்கள் வளர்ச்சியடைய பல்வேறு சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தூண்டுதலாக இருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மார்களில் முதலானவராகக் கருதப்படுகிறார். சைவ இறைவாழ்த்து பாடகர்களான சுந்தரமூர்த்தி, திருஞான சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் (மேலும் அப்பர் என்று அழைக்கப்படும்) இந்த காலத்தில் வாழ்ந்தனர்.  அப்பர் பாடிய 4169 வசனங்களில் 3066 தான் பிழைத்தது. 10 ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பி இதை சேகரித்து சைவ நியதியின் முதல் ஆறு புத்தகங்களாகினார். சுந்தரர் எழுதிய திருட்டோண்டர்தொகை 62 நாயன்மார்களின் பெயரை கொண்டுள்ளது. இந்த பின்னர் செக்கிலரின் பெரியபுராணத்தில் விவரிக்கப்பட்டது. 8 வது நூற்றாண்டு சுற்றி வாழ்ந்த மாணிக்கவாசகர் பாண்டிய நீதிமன்றத்தில் ஒரு அமைச்சராக இருந்தார். 600 வசனங்கள் கொண்ட அவரது திருவாசகம் அதன் தீவிர பக்திக்கு குறிப்பிடத்தக்கது . கூட்டாக திருமுறை (திருமுறை) என்று அழைக்கப்படும் இந்த சைவ பாடல்கள் இந்து மதம் பாரம்பரியத்தின் பகவத் கீதாவுக்குப் பிறகு ஆறாவது வேதம் என அழைக்கப்படுகிறது.

சைவ நாயன்மார்களுடன் சேர்த்து, வைணவ ஆழ்வார்களும் கூட பக்தி பாடல்கள் எழுதி மற்றும் அவர்களது பாடல்கள் பின்னர் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என சேகரிக்கப்பட்டது. மூன்று முந்தைய ஆழ்வார்களால் பொய்கை, புடம் மற்றும் பேய் ஆவர். ஒவ்வொருவரும் நூறு வேன்பக்கள் எழுதினார். பல்லவ மகேந்திரவர்மன் I காலத்து திருமலைசாய் ஆழ்வார் நான்முகன்திருவடியான்தடியை எழுதினார். கிபி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆல்வர் ஒரு படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர் மற்றும் அவரது படைப்புகள் திவ்யப்ரபாண்டத்தில் மூன்றில் ஒரு பங்காகும். பெரியாழ்வார் மற்றும் அவரது வளர்ப்பு மகள் ஆண்டாள் வைணவ நியதியில் கிட்டத்தட்ட 650 பாடல்கள் பங்களித்தனர். ஆண்டாள் தூய்மை மற்றும் கடவுள் காதலை உணர்த்தினார். அவர் விஷ்ணுவை காதலனாக நினைத்து அவரது பாடல்களை எழுதினார். வாரணம் ஆயிரம் (ஒரு ஆயிரம் யானைகள்) என தொடங்கும் ஆண்டாளின் பாடல் விஷ்ணுவுடன் தந்து கனவு திருமணத்தைப் பற்றியதாகும். இன்னுமும் இது தமிழ் வைஷ்ணவ திருமணங்களில் பாடப்படுகிறது. 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார், திருவாய்மொழி எழுதினார். இது 1.101 சரணங்கள் கொண்டுள்ளது மற்றும் உபநிடதங்கள் விளங்கப்படுத்தல்லால் பெரும் மதிப்பு கொண்டுள்ளது. இந்த படிப்புகள் நாதாமுனியால் 950 கி.பியில் சேகரிக்கப்பட்டு வைஷ்ணவத்தின் பாரம்பரிய மற்றும் வட்டார அடிப்படையை அமைத்தது.  நாலரிய திவ்யப்ரபந்ததை வைஷ்ணவர்கள் வேதத்துடன் சமமாக கருதப்படுகிறது. ஆதலால் இது திராவிட வேடம் என அழைக்கப்படுகிறது.

===கதை இதிகாசங்கள்===

[[சிலப்பதிகாரம்]] பொது இலக்கியத்தில் ஒரு சிறந்த படைப்பு ஆகும் இப்படைப்பினால் பெருமை பெற்ற இளங்கோஅடிகள் சங்க கால சேர அரசர் செங்குட்டுவனின் சகோதரர் ஆவார். எனினும் சேர மன்னர்களைப்  பற்றிய கணக்கில் அடங்கா பாடல்களில் அச்சகோதரனைப்பற்றிய தகவல் எதுவும் இல்லை. சிலப்பதிகாரம் பண்டைய தமிழ் நாட்டைப்பற்றி தெளிவாக சித்தரித்து தனித்தன்மை வாய்ந்தது ஆகும். அக்காலத்தின் மற்ற படைப்புகளில் இது காணவில்லை.சிலப்பதிகாரமும் அதன் தோழமை காவியமான மணிமேகலையும் புத்த தத்துவத்தை கொண்டது. [[மணிமேகலை]] இளங்கோவடிகளின் சமகாலத்தவரான [[சாத்தனார்]] என்பவரால் இயற்றப்பட்டது. [[இளங்கோவடிகள்]] காலத்தில் வாழ்ந்த சாத்தனார் மணிமேகலையை எழுதினார். மணிமேகலை தர்க்க மூடநம்பிக்கைகளை பற்றி நீண்ட நீண்ட விளக்கங்களை கொண்டதாகும். அது ஐந்தாம் நுற்றாண்டின் சமஸ்கிரத  படைப்பான தின்நாக எழுதிய நியாப்ரவேச என்ற படைப்பை அடிப்படையகக்கொண்டதாகக்  கருதப்படுகிறது.<ref>See KAN Sastri, A History of South India, pp 338</ref> கொங்கு வேளிர் என்ற ஜைன ஆசிரியர்  ப்ரிஹட் கதா என்ற சமக்ரித நூலை அடிப்படையாகக்கொண்டு பெருங்கதையை எழுதினார்.[[வளையாபதி]] மற்றும் [[குண்டலகேசி]] முறையே ஜைன மற்றும் புத்த ஆசிரியர்களால் எழுதப்பட்ட விவரிப்பு கவிதைகளாகும்.இப்படைப்புகளில் வளயாபதியின்  சில கவிதைகளை தவிர மற்றவை தொலைந்துவிட்டன.

==இடைக்கால இலக்கியம்==

இடைக்காலத்தில் முழு தென் இந்தியாவும் சோழர்கள் கீழே இருந்தது.  11 வது மற்றும் 13 வது நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில், சோழ ஆட்சி அதன் உச்சத்தில் இருந்த போது, சில வெளிநாட்டு ஊடுருவல் இருந்தபோதிலும் தமிழ் மக்களின் வாழ்க்கை சமாதானமாவும் சுபீட்சமாகவும் இருந்தது. மக்கள் தங்கள் சொந்த கலாச்சாரங்கள் அப்பால் மற்ற கலாச்சாரங்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது. சோழர்கள் தென் இந்தியாமற்றும் இலங்கையை ஆட்சி செய்து வந்ததால் அவர்கள் தென்கிழக்கு ஆசியா மக்களுடன் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் மக்கள் மற்றற்ற இடத்தில் இருந்தவர்களுடன் தொடர்புகொள்ள முடிந்தது.  சோழர்கள் முக்கியமாக அவர்கலுக்கு பிடித்த கடவுளான சிவனுக்கு பல கோயில்கள் கட்டி, அதை பல பாடல்களால் கொண்டாடினர். பிரபந்த எனும் கவிதை முறை மேலாதிக்கம் பெற்றது. {சைவ மற்றும் வைணவ தரப்பு மத கோட்பாடுகள் முறையாக சேகரிக்கப்பட்டுத்தி வகைப்படுத்தவும் தொடங்கிவிட்டன. முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி என்பவர் சைவ நூல்களை ஒன்றாக திரட்டி திருமுறைகள் என்ற பதினோரு புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்.  சைவ சமயத்தைச் சார்ந்த  [[பெரியபுராணம்]] சிவனடியார்களின் பெருமையையும் அவர்கள் வரலாற்றையும் எடுத்துக்கூற எழுந்த நூலாகும். குலோத்துங்க சோழர் காலத்து சேக்கிழார் இதை தரப்படுத்தினார். வைணவ பிரிவின் மத நூல்கள் பெரும்பாலும் இந்த காலத்தில் சமஸ்கிருதத்தில் தான் எழுதப்பட்டது.. பெரும் வைணவ தலைவர் ராமனுஜ அதிராஜேந்திர சோழ மற்றும் குலோத்துங்க சோழன் I காலத்தில் வாழ்ந்து வந்தார். சைவ சமய பிரிவை சார்ந்த சோழர்களிடமிருந்து மத அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கம்பர் எழுதிய ராமவதாரம் தமிழின் மிகப் பெரிய படைப்பாகும். இவர் குலோத்துங்க சோழர் III காலத்தில் தழைத்தார்.  குழந்தைகளுக்கான பாடல்களை எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட ஔவையார் கம்பரின் சமகாலத்தவராவார். அவரது படைப்புகள், ஆத்திசூடி மற்றும் கொன்றைவேந்தன் க இப்போது கூட பொதுவாக தமிழ்நாடு பள்ளிகளில் படித்து கற்றுத்தரப்படுகிறது. அவரது மற்ற இருண்டு படைப்புகளான மூதுரை மற்றும் நல்வழி சற்று வயதான குழந்தைகளுக்கு எழுதப்பட்டதாகும்.  அவரது நான்கு படைப்புகளும் நீதிபோதனை தன்மை உடையது. இவ்வுலகில் வாழத் தேவையான அடிப்படை அறிவை விவரிக்கிறது.
புத்த மற்றும் சமண மதங்கள் பற்றிய புத்தகங்களில் "ஜிவக சிந்தாமணி" என்ற புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இதை சமண மதத்தை சேர்ந்த திருடக்கதேவர் 10ஆம் நூற்றாண்டில்  வசனங்கள் முதல் முறையாக விருத்தம் பாணியில் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது .  முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன.  தமிழ் இலக்கணத்தை பற்றி பல நூல்கள் எழுதப்பட்டன. யப்பெருன்கலம் மற்றும் யப்பெருங்கலகரிகை என்ற இரண்டு புத்தகங்கள் சமண மதத்தின் அமிர்டசகரா எழுதினார். புத்தமித்ரா வீரசோழியம் என்று தமிழ் இலக்கணம் பற்றி வீரராஜேந்திர சோழ மன்னர் காலத்தில் எழுதினார். வீரசோழியம் தமிழ் மற்றும் சமசுகிருத மொழிகளின் இலக்கணத்தில் உள்ள தொடர்புகளை நமக்கு சொல்லுகிறது. தமிழ் இலக்கத்தை பற்றி பவணந்தி எழுதிய நன்னுள், நேமினதா எழுதிய வச்கானண்டி மலை மற்றும் ஐயனாரிதனார் எழுதிய புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய புத்தகங்கள் இந்த கால கட்டத்தில் எழுதப்பட்டன.

வாழ்க்கை மற்றும் அரசியல் பணிகள் பற்றி ஜெயம்கொன்டாரின் [[கலிங்கத்துப்பரணி]] போல் சில படைப்புகள் எழுதப்பட்டன. இது களிங்காவின்மேல் குலோத்துங்க சோழரின் படையெடுப்பை பற்றி எழுதப்பட்டது.  கம்பர் காலத்தின் ஓட்டகுட்டன் விக்கிரம சோழா,குலோத்துங்க சோழா II மற்றும் ராஜராஜ சோழாவை பற்றி "மூன்று உலா" எழுதினார்.

==விஜயநகர் மற்றும் நாயக்கர் காலம் ==

1300 கிபி முதல் 1650 வரை தமிழகத்தில் நிரந்தர அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்த காலமாகும். தமிழ்நாடானது டெல்லி சுல்தான்களால் படையெடுக்கப்பட்டு, பாண்டவ ராஜ்ஜியம் தோற்கடிக்கப்பட்டது. டெல்லி சுல்தான்களின் வீழ்ச்சி பாமணி சுல்தான்களின் உயார்வுக்கு வழிவகுத்தது.  விஜயநகரப்  பேரரசு ஹோய்சலர்கள் மற்றும் சாளுக்கிய பேரரசுகளின் சாம்பலில் இருந்து எழுந்து முடிவில் தெனிந்தியா முழுவதும் பிடித்தது.விஜயநகர பேரரசர்கள் மாகான ஆளுனர்களை நியமித்து ஆட்சி செய்தார்கள்.தமிழ்நாடு மதுரை நாயக்கர்கள், தஞ்சாவூர் நாயக்கர்கள் மற்றும் செஞ்சி நாயக்கர்களால் ஆளப்பட்டது. இக்காலத்தில் நிறைய தத்துவ படைப்புகள், வியாக்கியானங்கள், காவிய படைப்புகள் மற்றும் பக்தி பாடல்கள் உருவாகின. ஹிந்து மதத்தின்  பல பிரிவினர்கள்  நிறைய மட ங்களை நிறுவினார்கள். இவை மக்களை படிப்பிக்க முக்கிய பங்காற்றியது.நிறைய ஆசிரியர்கள் சைவ வைணவர்களாக இருந்தார்கள்.விஜய நகர அரசர்களும் அவர்களின் ஆளுநர்களும் தீவிர ஹிந்துக்களாக இருந்தார்கள் அவர்கள் இந்த மடங்களை ஆதரித்தார்கள்.அரசர்களும் ஆளுனர்களும் கன்னட மற்றும் தெலுங்கு மொழி பேசுவர்களாக இருந்தாலும் அவர்கள் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை ஆதரித்தார்கள்.இக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி குறையாததில் இருந்து இது தெரிகிறது.

தத்துவம் மற்றும் மதம் சார்ந்த, மெய்கண்டரின் சிவானனபோதம் போன்ற படைப்புகள் உருவாகின, 14ம் நூற்றாண்டின் இறுதியில் ச்வருபானந்த தேசிகர்  அத்வைதத்தின் தத்துவத்தினைக் குறித்து சிவப்ரகசப்பேரிண்டிரட்டு என்ற நூலை எழுதினார். 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் [[திருப்புகழ்|திருப்புகழை]] எழுதினார். 1360 வரிகளில் தனிப்பட்ட சந்தமுடைய இப்பாடல்கள் முருகனைப்பற்றியதாகும். மதுரை நாயக்கர்களின் அவையில் இருந்த மடை திருவேங்கடுனத்தார் அத்வைத வேதாந்தத்தைக்குறித்து மெய்ஞான  விளக்கம் என்ற நூலை எழுதினார். சிவபிரகாசர் 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சைவ தத்துவத்தினைக் குறித்து நிறைய நூல்களை எழுதினர். இவற்றில்  குறிப்பிட த் தத்தக்கது தார்மிக நெறிகளைக் கொண்டுள்ள நன்னெறி என்ற நூலாகும். மத மற்றும் தத்துவ இலக்கியங்களுக்கு நிகராக புராணங்கள் மற்றும் சொல்லப்பட்ட கதைகள் உருவாகின. இவைகள் தமிழ்நாட்டில் உள்ள பல கடவுள்களைப் பற்றி எழுதப்பட்டவை ஆகும். இவை நாட்டுப்புறக்கதைகளையும் சரித்திரத்தையும் அடிப்படையாகக்கொண்டு, ஸ்தல புராணங்கள்  என அழைக்கப்பட்டன. மிக முக்கியமான காவியம் வில்லிப்புத்தூரார் எழுதிய மகாபாரதம் ஆகும். அவள் வியாசரின் காவியத்தை தமிழில் மொழி பெயர்த்து வில்லிபாரதம் எனப் பெயரிட்டார். 15ம் நூற்றண்டில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார்  முறுகக்கடவுளைக்குறித்து  கந்தபுராணத்தை எழுதினார். இப்படைப்பு சமஸ்க்ரிதத்தில் இருந்த ஸ்கந்த புராணாவை அடிப்படையாகக்கொண்டது. இக்கலத்ஹ்டில் வாழ்ந்த வரதுங்கராம பாண்டியன் என்ற பாண்ட்யா மன்னன் சிறந்த இலக்கியவாதியாவார் அவர் படிற்றுப்பட்ட ந்தாதியை எழுதினார். மேலும் அவர் பாலுணர்வு உள்ள கொக்கொஹா என்ற சமஸ்க்ருத நூலை தமிழிலில் மொழி பெயர்த்தார்.

இக்காலத்தில்  பண்டைக்கால தமிழ் படைப்புகளைப் பற்றிய வியாக்கியானங்கள் வெளி வந்தது. அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரதைக்குறித்து  குறிப்பு எழுதினார் . சேனவராயர் தொல்காப்பியம் குறித்த வியாக்கியானத்தை எழுதினார். பின்பு இன்றும் சிறந்ததாகக்கருதப்படுகின்ற  பரிமேழகரின் திருக்குறள் உரை வந்தது. சிறந்த குறிப்பாசிரியர்களான பேராசிரியர், நச்சினார்க்கினியர் சங்க இலக்கியங்கள் குறித்து வியாக்கியானங்களை எழுதினார்கள் . முதல் தமிழ் அகராதியைத் தொகுக்க முற்ப்பட்டு நிகண்ட சூடாமாணி என்ற அகராதியை  உருவாக்கினார். 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த தாயுமானுவர் தத்துவம் நிறைந்த சிறு பாடல்களுக்கு புகழ் பெற்றவர் ஆவார்.

17ம் நூற்றாண்டில் முதல் முறையாக கிறித்துவ  மற்றும் இஸ்லாமிய ஆசிரியர்களின் படைப்புகள் உருவாகின. டெல்லி சுல்தான்களின் ஆதரவோடும் ஐரோப்பிய மிஷனரிகளின் துணையோடும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தமிழிலில் சீதக்காதி என்று அழைக்கப்பட்ட சையத் காதர் கான் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரிய தமிழ்ப்புரவலர் ஆவார். அவர் நபி நாயகத்தின் சரித்திரத்தை எழுத தொடங்கி வைத்தார். தமிழிலில் உமறுப்புலவர் என்று அழைக்கப்பட்ட ஓமர் முகம்மதின் வாழ்க்கையைப்பற்றி  சீறாப்புராணத்தை எழுதினர்.<ref>[http://www.international.ucla.edu/southasia/article.asp?parentid=27779 The Diversity in Indian Islam]</ref> கோச்டன்சோ' கிசெப்பெ பேச்சி (1680 1746) என்ற வீரமாமுனிவர் தமிழின் முதல் அகராதியைத் தொகுத்தார். அவரது சதுகராதி தமிழ் சொற்களை அகர வரிசையில் முதன் முதலாகக் கொடுத்தது. இயேசு கிறிஸ்த்துவின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்ட தேம்பவாணி என்ற காவியத்திற்காக வீரமாமுனிவர் நினைவு கொள்ளப்படுகிறார்.

== தற்கால இலக்கியம் ==
18ஆம், 19ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[அரசியல்]], மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. [[குன்றக்குடி]], [[திருவாவடுதுறை]], [[திருப்பனந்தாள்]] போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது.அன்னிய ஆட்சியாலும், அவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களாலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும், [[ஆங்கிலம்|ஆங்கில மொழியின்]] செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்; பின்னர் அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான [[ஆங்கிலேயர்]] ஆட்சியும், அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற [[வளர்ச்சி]], நவீன [[சிந்தனை]]களின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும்,இலக்கியமும் இக் காலகட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலகட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடத்தக்க விடயங்களாவன:

* சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.
* உரைநடையில் எழுதுவது அறிமுகமானது. (19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி)
* புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது. (20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)
* மணிப்பிரவாள நடை ஒழிந்தது.(20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)

அச்சியந்திரங்களின் வருகையால் [[ஏடு]]களில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் [[உ. வே. சாமிநாதையர்]],[[ஆறுமுக நாவலர்]], [[சி. வை. தாமோதரம்பிள்ளை]] போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது.

===தமிழ் புதினங்கள்===

புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றன. தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது. இது பொதுவாக நூல் வடிவில் வெளியிடப்படுகின்றது. எனினும் புதினங்கள் வார, மாத சஞ்சிகைகளில் தொடராக வெளிவருவதும் உண்டு. இது தமிழில் 19 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டில் வந்தது. மேற்கத்திய கல்வி மற்றும் பிரபல ஆங்கில புனைகதைகளுக்கு வெளிப்பாடு கொண்ட தமிழர்களின் மக்கள் வளரும்.எண்ணிக்கை வளருவதால் இது பிரபலமடைந்தது.நாவல் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இலக்கியவடிவம் உரைநடையில் அமைந்த நீள்கதை. இது புத்திலக்கியவகையாக ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. ஆனால் பத்தாம் நூற்றண்டிலேயே சீனாவில் நாவல்கள் இருந்துள்ளன. இது சீனப் பெருநாவல் மரபு எனப்படுகிறது. நாவல் என்பது தமிழில் திசைச்சொல்லாக அப்படியே கையாளப்படுகிறது. புதினம் என்றும் சொல்லப்படுகிறது. தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் 1879 ல் வெளிவந்த பிரதாப முதலியார் சரித்திரம். இது மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டதாகும். இந்த நீதிக்கதைகள், நாட்டுப்புற கதைகள் மற்றும் முக்கிய நோக்கம் என ரீடர் பொழுதுபோக்கு எழுதியுள்ளார் கூட கிரேக்கம் மற்றும் ரோமன் கதைகள், ஒரு வகைப்படுதல் ஒரு காதல் இருந்தது. சில வருடங்களுக்குள் வெளிவந்த பிற இரு நாவல்களும் முன்னோடிகளாக கருதப்படுகின்றன. அவை ராஜம் அய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம், அ. மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரம். இவை இரண்டும் 19த நூற்றாண்டில் வாழ்த்த கிராமப்புற பிராமணர்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் பற்றி இருந்தது.து. சித்தி லெப்பை மரைக்காயர் எழுதிய அசன்பே சரித்திரம். தமிழில் நாவல் கலை பெரும் வளர்ச்சியைக் கண்டுவருகிறது. தமிழ்நாவல்களின் வரலாற்றை சிட்டி, சிவபாதசுந்தரம் எழுதிய தமிழ்நாவல் வரலாறு என்ற நூலில் காணலாம்.  ஜெயகாந்தன் நவீன தமிழ் புதினங்களின் போக்கை தீர்மானித்தார்.  அவர் "சில நேரங்களில் சில மனிதர்கள்" என்ற புகழ் பெற்ற புதினத்தை எழுதியுள்ளார்.
1990லிலிருந்து பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் ஒரு முக்கிய பிரமுகர்களாக தோன்றினர். இவர்களில் சிலர் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா.<ref>{{cite web
|title = Style as Substance
|accessdate = 2008-12-14
|author = Kala Krishnan Ramesh
|date = 2008-12-20
}}</ref>

மற்றொரு குறைவாக அங்கீகரிக்கப்பட்ட உயர் இலக்கிய பணி -தமிழில் உள்ளது. இது பிற மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட புதினங்கல்லாகும். இதை தமிழ் பண்டிதர்கள் புறக்கணிக்கின்றனர். இவற்றில் சில :உருமாற்றம் (ப்ரன்ழ் கல்பாவின் "தி மேடாமார்போசிஸ் மொழிபெயர்ப்பு), தொங்கும் சாத்தன் (குகி எழுதிய "டெவில் ஆன் தி கிராஸ்" மொழிபெயர்ப்பு), தொங்கும் அழகிகளின் இல்லம் (யசுனாரி கவபடவின் "ஹவுஸ் ஒப் ச்லீபிங் பியூடீஸ்" மொழிபெயர்ப்பு).  அமரந்தா, லதா ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் இந்த பணிகளில் பங்களிக்கின்றனர்.

===பருவ இதழ்கள்===

படித்தவர்களின் தேவைக்கு ஏற்றவாறு நிறைய இதழ்களும் பருவ இதழ்களும் வெளி வந்தன. இவை படைப்பாளிகள் தங்கள்  படைப்புகளை வெளியிட களம் அமைத்துக்கொடுத்தது . {1855 இல் வெளிவந்த ராஜவிரித்தி போதினி  மற்றும் தின வர்த்தமானி, சேலம் படகால நரசிம்ஹலு நாயுடுவின் இரு வர கால இதழ்கள் , 1878 இல் வெளி வந்த சேலம் தேசாபிமானி , 1880 இல் வந்த கோயம்புத்தூர் கலாநிதி ஆகியவை ஆரம்பகால தமிழ் இதழ்களாகும். 1882 இல் ஜி.சுப்ரமணிய அய்யர் ஸ்வதேசமித்ரன் என்ற செய்தித்தாளை தொடங்கினார். இது 1889 ஆம் ஆண்டு முதல் தமிழ் தினசரி மாறியது.இதுவே  தமிழிலில் வெளி வந்த நாளிதழ் ஆகும்.  இதுவே  பல இதழ்கள் வெளிவரவும் பல கதாசிரியர்கள் தங்கள் கதைகளை தொடர்களாக அவ்விதழ்களில் வெளியிடவும் தொடக்கமாக அமைந்தது.  1929 இல் எஸ்.எஸ்.வாசனால் தொடங்கப்பட்ட நகைச்சுவை பத்திரிக்கை தமிழில் மிகச்  சிறந்த கதாசிரியர்களை உருவாக்க உதவியாய் இருந்தது.[[கல்கி]] கிருஷ்ணமூர்த்தி (1899-1954) தனது சிறுகதைகளையும் நாவல்களையும் ஆனந்தவிகடனில் வெளியிட்டு பின்பு தனது சொந்த பத்திரிக்கை கல்கியை தொடங்கி அதில் நிலைத்து புகழ்பெற்ற நாவல்களான பார்த்திபன் கனவு, சிவக்மியின் சபதம் மற்றும் பொன்னியின் செல்வனை எழுதினார்.  கல்கி கிருஷ்ணமுர்த்தி அவரது சிறுகதைகள் மற்றும் புதினங்களை அனந்த விகடனில் வெளியிட்டார். பின்பு அவர் கல்கி எனும் அவருடைய சொந்த வார் இதழை ஆரம்பித்து பார்த்திபன் கனவு, [[சிவகாமியின் சபதம்]] மற்றும் [[பொன்னியின் செல்வன்]] போன்ற பிரபலமான புதினங்களை எழுதினார். [[புதுமைப்பித்தன்]] (1906-1948) மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஆவார். அவர் தொடர்ந்து  வந்த பல ஆசிரியர்களுக்கு தூண்டுகோலாக இருந்தார். தனது வுரைநடை கவிதையில் பாரதியால் முன்னோடியாக வுருவாகப்பட்ட   புதுக்கவிதையானது மேலும் இலக்கிய இதழ்களான மணிக்கொடி மற்றும் எழுத்து களால ( ஆசிரியர் சி.சு.செல்லப்பா ) விரிவாக்கப்பட்டது. மு. மேத்தா போன்ற கவிஞர்கள்   இவ்விதழ்களுக்கு பங்களித்தார்கள்.
தமிழ் கிறிஸ்துவ கவிஞர்களும்  தமிழ் இலக்கியத்துக்கு பங்கு சேர்த்தார்கள்.  பாவலர் இன்குலாப் மற்றும் ரொக்கயா போன்ற இஸ்லாமிய கவிஞர்களும்  சமூக  சீர்திருத்தத்திற்கு குறிப்பிடத்தக்கபங்களித்துள்ளர்கள். முன்னோடியான இரு வர இதழான சமரசம் 1981 இல் ஆரம்பிக்கப்பட்டு பாரம்பரிய தமிழ் இஸ்லாம் பிரிவினர்களின் பிரச்னைகளை அலசவும் எடுத்துக்காட்டவும் வுதவியது.தமிழ் நாவலில் மற்றொரு குறிப்பிடத்தக்க பங்களித்தவர் மு. வரதராசனார் (அகல்விளக்கு, கரித்துண்டு) ஆவார்.முடிவாக தனித்துவம் வாய்ந்த எழுத்தாளர் மற்றும் சமுக சீர்திருத்தவாதி [[அகிலன்]] அவரது படைப்புகளான சித்திரப்பாவை, வேங்கையின் மைந்தன் மற்றும் பாவைவிளக்கு போன்றவைகளுக்கு பிரபலம் ஆவார் .

==தமிழ் இதழியல்==

தமிழில் வந்த முதல் பத்திரிக்கை கிறிஸ்துவ ரிலிஜியஸ் டராக்ட் (Religious Tract) சமுதாயத்தால் 1831ல் தி தமிழ் மகசின் (The Tamil Magazine)என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதனால் நிறைய ஆசிரியர்கள் அவர்களின் படைப்புகளை வெளியிட்டனர். 1855ல் வந்த ராஜாவ்ரிட்டி போதினி மற்றும் தின வர்த்தமானி, 1878ல் வந்த சேலம் பகடல நரசிம்ஹலு நாய்டு'ச போர்நைட்லைஸ் மற்றும் சேலம் தேசபிமினி மற்றும் 1880ல் வந்த கோயம்பத்தூர் கலாநிதி தமிழில் முதலில் வந்த பத்திரிகைகள் ஆகும்.

தமிழில் முதலில் வந்த வழக்கமான செய்தித்தாள் ச்வதேசிமித்திரன். இது 1882ல் சுப்ரமணிய ஐயரால் துவங்கப்பட்டது. இவர்தான் "தி ஹிந்து"  என்ற செய்தித்தாளின்  ஆசிரியர் மற்றும் ஆதரவாளர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினர் ஆவார். அவர் ஒரு புதிய தமிழ் அரசியல் சொல்லகராதியை உருவாக்கினார். ஆவர் ஆங்கிலம் அறிந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கிறார்கள் என்றும் இந்திய மொழி அறிந்தவர்களே அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்றும் தெளிவாக அறிந்தார். அவர் மக்களிடம் ஆங்கிலேயர் ஆட்சியால் நம் மொழிமேல் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி சொல்லாவிட்டால் நம்முடைய அரசிய அறிவு வளராது என்று எண்ணினார். அவர் 1898ல் "தி ஹிந்து"வை விட்டு வெளிய வந்த பொது ச்வதேசிமிற்றனில் அவரது முழு நேரத்தை செலுத்தினார். 1899 ஆம் ஆண்டு வந்த முதல் தமிழ் தினசரி. இது 17 ஆண்டுகளில் இந்த நிலை அனுபவிக்க இருந்தது.

சுப்ரமணிய ஐயரின் சண்டை பிடிக்கும் பாணி மற்றும் வார்த்தைகள் பயன்பாட்டினால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சவதேசிமித்திரனை வாங்கினர். சுப்ரமணிய பாரதி இதில் சேர்ந்த போது இது இன்னும் பிரபலம் ஆகியது. அதற்கு அடுத்த வருடம் லாலா லஜ்பட் ராய் கைது செய்யப் பட்ட போது ஆகிலேயர் ஆட்சியின் மேல் அவரது அணுகுமுறை மாறியது. அவர் இந்த ராகியத்தை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.  அவர் நாம் சுய ஆட்சியை நோக்கி வேலை செய்வோம் என்று சொல்வார். தமிழில் அரசியல் அறிவியல் மற்றும் நிர்வாகத்தில் புது வார்த்தைகளை கொண்டு வந்த பெருமை ச்வதேசிமிற்றனுக்கு தான் சேரும். அப்போ இருந்த செய்தித்தாள்களில் இதுவே விரிவான செய்தியை கொண்டிருக்கும்.

1917 ல்,தேசபக்தன் என்ற தமிழ் தினசரி துவங்கியது. இதன் ஆசிரியர் தி.வி.கல்யாணசுந்தர மேனன் ஆவார்.  அவருக்கு அடுத்து விவிஎஸ் ஐயர் அந்த பொறுப்பை ஏற்றார். அவர் சவர்க்கார் சகோதரர்களுடன் வேலை செய்தார். இவர்கள் இருவரும் இயற்கையாகவே நன்றாக எழுதுவர். அவர்கள் எழுதுவதை எளிமையாக புரிந்துக் கொள்ளலாம். இவர்கள் திறமையாக எழுதுவர்.

சுதந்திர இயக்கம் மற்றும் கன்ப்ஹியின் வருகை தமிழ் இதழிலை மாற்றியது. நவசக்தி என்ற பருவ இதழை வி.கல்யாணசுந்தரம் இயக்கினார். சி ராஜகோபாலாச்சாரி விமோசனம் என்ற இதழை துவங்கினார்.

1933 ம் ஆண்டில் ஜெயபாரதி என்ற எட்டு பக்க பத்திரிக்கை கால் அணாவுக்கு கிடைத்தது. 1940யில் இது மூடப்பட்டது.

செப்டம்பர் 1934ல் சடனந்த் தினமணி என்ற தமிழ் தினசரியை துவங்கினர். தி.எஸ்.சொக்கலிங்கம் இதன் பதிப்பாசிரியர் ஆவார். அது 6 பைசாவுக்கு விற்கப்பட்டது. இது பிரகாசமான அம்சங்களை கொண்டது. இது பயமில்லாமல் விமர்சித்தது. அது மிகவும் வெற்றிகரமாக இருந்தது மற்றும் அதன் சுழற்சி மற்ற அனைத்து தமிழ் நாளிதழ்கள் மொத்த சுயர்சியை விட அதிகம் . விரைவில் 'இந்தியா' தினமணியுடன் இணைக்கப்பட்டது. தினமணி ஆய்வு செய்து செரியான முயற்சியுடன் அது வெளியிடும் கருத்துக்கள் புதிதாக படித்தவர்களுக்கும் புரியும் படி செய்தது.
1935 ல், விடுதலை என்ற இதழ் தொடங்கியது. இது பெரும்பாலும் கருத்துக்களையே வெளியிட்டது.
நான்-பிராமன் இயக்கமும் (Non-Brahman Movement) தமிழ் இதழியலுக்கு தூண்டுதலாக இருந்தது. 'பாரத் தேவி' போன்ற செய்தித்தாள்கள் இந்த இயக்கத்தை வலுவாக ஆதரித்தார்கள்.

1920-30களில் நிறைய பத்திரிக்கைகள் துவங்கின. ஆனந்த விகடன் என்ற நகைச்சுவை பத்திரிகை 1929 இல் வாசநல துவங்கப்பட்டது. 80 ஆண்டுகளுக்கு பிறகு இது இன்றும் வெற்றிகரமான இயங்கிவருகிறது. இது சுட்டி விகடன், ஜூனியர் விகடன், மோட்டார் விகடன் மற்றும் மற்ற சிறப்பு வட்டி இதழ்களை வெளியிடுகிறது. ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவரது சிறு கதைகள் மற்றும் புதினங்களை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இறுதியில் அவர் கல்கி என்ற வார இதழை துவங்கினார்.  கல்கி விஷ்ணுவின் வரவிற்கும் பத்தாவது அவதாரத்தை குறிக்கிறது. அவர் இந்தியாவின் விடுதலை கொண்டு வருவதற்காக இந்த பெயரை உபயோகித்தார்.

1942ல் தின தந்தி மதுரையில் தொடங்கியது. அதே நேரத்தில் மெட்ராஸ்,சேலம் மற்றும் திருசிரப்பல்லியிலும் இது தொடங்கியது.  இது எஸ்.பி.அடித்தனரால் துவங்கப்பட்டது. இவர் பிரிட்டன்னில் வழக்குரைஞராக பயிற்சி பெற்றார். அவர் "தி டெய்லி மிரர்" (The Daily Mirror) என்ற ஆங்கிலேய பத்திரிக்கை போல் இதை அமைத்தார். அவர் பொது மக்கள் படிக்கும் படி ஒரு பத்திரிக்கையை உரவக்க நினைத்தார். அந்த பத்திரிக்கை மக்களிடையே படிக்கும் பழக்கம் உருவாக்கும் படி இரக்க வென்றும் என எண்ணினார். கடந்த காலத்தில், சென்னையில் அச்சிடப்பட்ட தினசரி செய்தித்தாள் குறைந்தது ஒரு நாள் பிறகு தான் தெற்கு தமிழ்நாடு பகுதியியை சென்றடையும். தந்தி பொது பேருந்து அமைப்பை உபயோகித்து தெற்கு தமிழ்நாட்டுக்கு பத்திரிகை வழங்கியது. நிதி கட்டுப்பாடுகள் காரணமாக, அதன் சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி பதிப்புகள் சில நேரத்திற்கு மூடப்பட்டது. தந்தி உள்ளூரில் நடக்கும் குற்றங்கள் மற்றும் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளில் மேல் அதன் கவனத்தை செலுத்தியது. அதை விரிவாக புகைப்படங்களை பயன்படுத்தியது. இது பேனர் தலைப்பை தமிழ் இதழியலில் கொண்டு வந்தது.    தந்தி தமிழ் மக்களின் குற்றம் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் மேல் உள்ள ஆர்வத்தை அறிந்தது. இது மிகவும் பிரபலமாக இருந்தது. இதை படிக்கவே நிறைய பேர் தமிழ் படிக்க கற்றுக்கொண்டனர்.

தின தந்தி சிறு வருடங்களிலே சுழற்சி அடிப்படியில் மிக பெரிய தமிழ் பத்திரிகை என்ற பெருமையை பெற்றது. 1960ல்லிருந்து அது இந்த பெருமையை கொண்டுள்ளது. இன்று 14 பதிப்புகளில் உள்ளது. இது பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரியில் அதிகமாக விற்பனையாகும் தமிழ் தினசரி ஆகும். அது ஆண்டின் இரண்டாவது பகுதியில் ஒவ்வொரு புதன்கிழமையும் 10 என்று ஒரு புத்தகம்மற்றும் +2 வின விடை என்ற பத்திரிக்கைகளை வெளியிடுகிறது. 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் படிக்கும் பாடங்களின் மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் முந்திய ஆண்டுகளின் வின தாள்களை வெளியிடுகிறது.

===பிரபல புனைகதை===

குற்றம் மற்றும் துப்பறியும் புனைவுகள் 1930 முதல் தமிழ்நாடு முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. மக்கள் இந்த வகை புனைவுகளை விரும்பி படிக்கின்றனர். சுதந்திரத்திற்கு முன் இருந்த பிரபல எழுத்தாளர்கள் குரும்பூர் குப்புசாமி மற்றும் வடுவூர் துரைசாமி ஐயெங்கர் ஆவர். 1950 மற்றும் 60 ம் ஆண்டுகளில் தமிழ்வாணனின் துப்பறியும் நாயகன் சங்கர்லால் தமிழ் வாசகர்களை வெளிநாட்டு இடங்களுக்கு கொண்டு சென்றார். ஆனாலும் அவர் சுத்த தமிழ் சொற்களை தான் பயன் படுத்தினார். குறைவான ஹிந்தி மற்றும் ஆங்கில கடன்சொற்களை பயன்படுத்தினார். 1980 முதல் தற்போது வரை உள்ள முன்னணி எழுத்தாளர்கள் சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் ராஜேஷ் குமார் ஆவர். இந்த எழுத்தாளர்கள் அனைவரும் திறமையானவர்கள். இவர்கள் நூறு அல்லது ஆயிரம் சிறு கதைகள் எழுதியுள்ளனர். மாதத்திற்கு ஒரு சிறுகதையை இவர்கள் வெளியிடுகின்றனர். இந்திரா சௌந்தர் ராஜன் இந்து சமணம் சார்ந்த இயற்கைக்கு மீறிய க்ரைம் திரில்லர்கள் நிறைய எழுதியுள்ளார். இவர் மிகவும் புகழ் பெற்றவர் ஆவர்.<ref>{{cite book
| last = Chakravarthy
| first = Pritham
| title = The Blaft Anthology of Tamil Pulp Fiction
| origdate =
| origyear =
| origmonth =
| url =
| accessdate =
| edition =
| series =
| date =
| year = 2008
| month =
| publisher = Blaft Publications
| location = Chennai, India
| isbn = 978-81-906056-0-1
| page = 46
| chapter =
| chapterurl =
| quote =
| ref =
}}</ref>

1940 மற்றும் 1950 களில் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வரலாற்று மற்றும் சமூகம் சார்ந்த புனைகதைகள் குறிப்பிடத்தக்கதாகும்.

1950 மற்றும் 60 களில், [[சாண்டில்யன்]] இடைக்கால இந்தியாவில் அல்லது மலேஷியா, இந்தோனேஷியா மற்றும் ஐரோப்பாவுடன் இடைக்கால வர்த்தக பாதைகளில் பல வரலாற்று சிறப்புமிக்க காதல் கதைகளை எழுதியுள்ளார்.

அருணா நந்தினி தற்போது வந்த ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் பல தமிழ் வாசகர்களின் மனதில் அவருடைய புதினத்தினால் இடம்பிடித்துஉள்ளார். அவரது புதினங்கள் வாசகர்கள் ஓய்வு நேரத்தில் அனுபவிக்க நகைச்சுவையாக, ​​குடும்ப பொருள் கொண்டு, காதலை உள்ளடக்கி, உண்மையான கதை போல் இருக்கும்.

நவீன காதல் புதினங்கள் அதிகமாக விற்பனையாகும் ரமணிச்சந்திரன்னின் காதல் புதினங்கள் போல் இருக்கும்.

தமிழ் புதினங்களின் செழுமையாக இருந்த மத்திய 1990யிலிருந்து விற்பனை குறைந்த்துளது. பல எழுத்தாளர்கள் இன்னும் இலாபகரமான தொலைக்காட்சி தொடர் சந்தைக்கு மாறிவிட்டார்கள்.<ref>{{cite web
|title = Meet Rajesh Kumar, Author of 1500 Novels
|accessdate = 2008-09-11
|author = Samanth Subramaniam
|date = 2008-09-07
}}</ref>

===புதிய ஊடகங்கள்===

[[இணையம்|இணையதளத்தின்]] முன்னேட்ட்த்தால் தமிழ் வலைப்பதிவுகல் மற்றும் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைககளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் சிறப்பு போர்டல்கள் வளர்ச்சி அடைந்த்டுள்ளன. தமிழ் இல்லகியங்கள் மொபைல் புத்தகங்கலாக கூட கிடைக்கிறது.

==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ் உரை நூல்கள்]]
* [[தமிழ் உரைநூல் ஆசிரியர்கள்]]
* [[தமிழ் இலக்கியப் பட்டியல்]]
* [[கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்]]

== வெளி இணைப்புகள் ==

[[பகுப்பு:தமிழ் இலக்கியம்|*]]
[[பகுப்பு:AFTv5Test‎]]

==குறிப்புகள்==
{{reflist}}

==குறிப்புகள்==

* {{cite book | first= George L. | last= Hart | authorlink= | coauthors= | year=1975 | title= The poems of ancient Tamil : their milieu and their Sanskrit counterparts | edition= | publisher= University of California Press | location= Berkeley| isbn= 0-520-02672-1}}
* {{cite book | first= R.C | last= Majumdar| authorlink= | coauthors= | origyear= | year= 1987| title= Ancient India |edition= | publisher= Motilal Banarsidass Publications | location= India| isbn= 81-208-0436-8}}
* {{cite book | first= K.A.  | last= Nilakanta Sastri | authorlink= | coauthors= | year=2000 | title= A History of South India | edition= | publisher=Oxford University Press | location= New Delhi| id= | isbn= 0-19-560686-8 }}
* {{cite book | first= K.A.  | last= Nilakanta Sastri | authorlink= | coauthors= Srinivasachari | year=2000 | title= Advanced History of India | edition= | publisher= Allied Publishers Ltd | location= New Delhi| id= }}
* {{cite book | first= Kamil V.| last= Zvelebil | authorlink= | coauthors= | year=1973 | title= The smile of Murugan: on Tamil literature of South India | edition= | publisher= Brill| location= Leiden| isbn= 90-04-03591-5}}
* {{cite web | title= The beginning of Tamil journalism | work= S. Muthiah, ''The Hindu'', Jul 23, 2003 | url= http://www.hinduonnet.com/thehindu/mp/2003/07/23/stories/2003072300090200.htm | accessdate=2006-05-23}}
* {{cite web | title= Portrait of a novelist as a social reformer | work= S. Viswanathan, ''Frontline'', Volume 22 - Issue 17, Aug 13 - 26, 2005 | url= http://www.hinduonnet.com/fline/fl2217/stories/20050826000807700.htm | accessdate=2006-05-23}}

{{commons category}}
{{Tamil language}}

{{DEFAULTSORT:Tamil Literature}}
[[Category:Tamil literature| ]]

Reply all
Reply to author
Forward
0 new messages