A Discussion - Story for children/Adults

4 views
Skip to first unread message

TSivaramakrishna Iyer

unread,
Jun 17, 2015, 7:44:49 PM6/17/15
to

Hope you can read tamil

தாத்தா  வாசலில்  திண்ணையில்  உட்கார்ந்திருந்தார்.

சைக்கிளில் சென்று கொண்டிருந்த  சம்பந்தம்  அவரைப் பார்த்து விட்டு  இறங்கினார் 

என்ன  சார்  வாசலில் இன்று தரிசனம்?

உள்ளே  கரண்ட் இல்லை.

ஓ  அப்படியா.  அதானே  பார்த்தேன்.  எப்போதும்  ஏதாவது எழுதிக்கொண்டோ  படித்துக் கொண்டோ தானே  இருப்பீர்கள். 
வெளியே காண்பதே  அபூர்வம் ஆயிற்றே.

நீங்கள்  சொன்ன இரண்டும்  இல்லைஎன்றபோது  கண்ணனைப் பற்றி கொஞ்சம்  சிந்திக்கவாவது நேரம் கிடைக்கிறது அல்லவா. இல்லாத  கரண்டுக்கு  நன்றி.

கண்ணன்  என்று சொன்னதும்  ஆவல்  அதிகமாகி விட்டது. நேற்று நீங்கள் என் பேரனுக்கு  ஒரு ராஜா கதை சொன்னீர்கள் வேறு நன்றாக இருந்தது என்றான். எனக்கும் சொல்லுங்களேன்.

ஆஹா அதற்கென்ன.  உட்காருங்கள்.

தாத்தா  தொண்டையைக் கனைத்துக் கொண்டு  சொன்ன கதை இதுதான். 


​                                                                   
                                                                             ராஜாவின் கேள்விகள் ​


​ஒரு  ராஜாவுக்கு  மண்டை வெடித்து விடும்போல  ஆகிவிட்டது.  மூன்று  கேள்விகளுக்கு  விடை  கட்டாயம் தெரியவேண்டுமே  
என்ன செய்வது.  யாரைக் கேட்பது?  வெகுகாலமாக  அந்த கேள்விகள்  அவனைத் துளைத்துக்கொண்டிருன்ததே. 

​தனது அரண்மனை தர்பாரில்  ஒருநாள்  அறிவித்தான். 

​''கடவுள்  எங்கே இருக்கிறார்?

''​எந்த பக்கம்  பார்த்துக் கொண்டிருக்கிறார்?'' 

​''என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்?'' 

''எவனால்  இதற்கு பதில் சொல்ல முடியும்.  கடவுளே  கூட  பதில் சொல்லமாட்டாரே இந்தக் கேள்விக்கெல்லாம்?''

​ஒரு முனிவரைக் கண்டான்  ராஜா.  அவரை அழைத்துக்கொண்டு  அரண்மனைக்கு வந்தான். அவரை  பணிந்து தன கேள்விகளைத் தொடுத்தான். பதிலை எதிர் பார்த்தான்.


'' அரசே,  கடவுள்  எங்கே இருக்கிறார் என்று உனக்கே  தெரியுமே, ஏன் யோசிக்கவில்லை?''

''முனிவரே  எனக்குத் தெரிந்தால்  இத்தனை நாள்  என்  மண்டையில் இது கேள்வியாக முளைத்திருக்காதே சுவாமி.''
 
​''வெண்ணை எங்கே இருக்கிறது எதில் இருந்து வருகிறது தெரியுமா உனக்கு?

''ஆஹா  இது தெரியாதா,  பாலிலிருந்து தான் ''

''பாலைப் பார்க்கும்போது  உனக்கு  அதனுள் இருக்கும்  வெண்ணை தெரிகிறதா மகனே?''

''வெண்ணை அதனுள் இருக்கிறது  என்பது மட்டும் தான் தெரியும்.  வெண்ணை கண்ணுக்கு தெரியாதே சுவாமி''

''அதே போல் தான் அப்பா,  கடவுள் எங்கும் எதிலும் இருக்கிறார், கண்ணுக்குத் தெரிவதில்லை''  புரிகிறதா?

''நன்றாக  விளங்குகிறது சுவாமி ''

​''உனது அடுத்த கேள்விக்கு பதில் சொல்லட்டுமா?  கடவுள் எந்த பக்கம்  பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று கேட்டாய்?  

''ஒரு விளக்கு கொண்டுவா''

''ராஜா, இந்த விளக்கை உன் பக்கம்  பார்த்து வைத்துக்கொள் ''

விளக்கை அப்படியே  வைத்துக் கொண்ட ராஜாவிடம்  
"
​விளக்கை இப்போது ஏற்று '' என்றார்  முனிவர் 

​''தீபம்  சுடர்விட்டு எரிந்தது.''

​''அரசே,  சரியாகப் பார்த்து சொல்  இந்த  தீபம்  தனது ஒளியை  எந்தப் பக்கம் பார்த்து வீசுகிறது?''

​ராஜா  உற்றுப் பார்த்தான்.

''ஒளி  எந்தப் பக்கம்  அப்பா வீசுகிறது ?''

''சுவாமி  தனியாக  எந்த ஒரு பக்கமும்  இல்லை,  எல்லாப் பக்கமும்  தான்  ஒளி  வீசுகிறது''

​''உன் கேள்விக்கும் அதே விடை. நீயே சொல்லிவிட்டாயே.  பகவானின் அருள் ஒளி எல்லாபக்கமும்  எல்லோருக்கும்  சொந்தமானது அப்பனே. எங்கோ எவரோ ஒருத்தருக்கு மட்டும்  அல்ல. அவர் அருள் கடாக்ஷம்  எங்கும் எவருக்கும் உண்டு''

"
​இப்போது  நீயே  சொல்லு  உன்  மூன்றாவது கேள்விக்கு  விடை தெரிகிறதா?  கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று கேட்டாய் அல்லவா?

''ஆமாம் ''

''இப்போது  ஆன்மீகமாக  சில  கேள்விகளை சந்தேகங்களை  நீ கேட்டு நான் உனக்கு  உபதேசித்துக் கொண்டிருக்கிறேன்.  நான் குரு, நீ  சீடன்.  நாம்  இப்போது இடம் மாற்றிகொள்வோமா?''

''சரி என்ற அரசன் சிம்மாசனத்தை விட்டு இறங்கி  கீழே வந்து அமர்ந்தான்.  அரசனின் சிம்மாசனத்தில் முனிவர்.''

​''ராஜா, இதோ பார் கடவுள் என்ன செய்கிறார் என்று. 


​''பெரிய  ராஜாவையே  கீழே இறக்கி சாதாரனனாக்கி விட்டார்.  ஒரு சாதாரண பரதேசியை ராஜா சிம்மாசனத்தில் ஏற்றி விட்டார். 

​ஏழை பணக்காரனாகிறான், பணக்காரன் ஏழையாகிறான். அவர்  எதை வேண்டுமானால் சந்தர்ப்பத்துக்கு தக்கவாறு  அமைத்து  பரிபாலனை செய்கிறார். எங்கும் இதையே சர்வ காலமும் செய்து  சமநிலை அளித்து வருகிறார். 

​புரிந்து கொண்டாயா.  இன்னும்  ஏதாவது சந்தேகமா?

''மகரிஷி  என்னில் எழுந்த கேள்விகளை என்னில் மறைந்திருந்த பதில் மூலம் தெளிவித்தீர்கள்''

ராஜா மகிழ்ந்தான்.  நாமும்  கடவுளைப் பற்றி  அறிந்து கொள்வோம். முனிவர் மாதிரி மற்ற ''ராஜா''க்களுக்கும் எடுத்து சொல்வோமே. 

-- 
Growing together is a sign of Success.
Pranams & Dhanyawad

TSIyer



"Note:-Please discard this mail, if you do not like the contents or received it wrongly.
Reply all
Reply to author
Forward
0 new messages