Fw: என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்… இலவசம்! – குன்றக்குடி அடிகளார்

26 views
Skip to first unread message

Rakkimuthu

unread,
Apr 5, 2011, 5:35:09 AM4/5/11
to npte...@googlegroups.com
 
 

 
Dear Tamila,

   


Subject: என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்… இலவசம்! – குன்றக்குடி அடிகளார்

என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்… இலவசம்! – குன்றக்குடி அடிகளார் 

ஆனால், ‘ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்!’ என்கிறார் தன்மானத் தமிழர்களைக் காக்கப் பிறந்த தலைவர் கருணாநிதி. 



இலவசங்கள் தொடரும் வரை ஏழைகள் தொடருவார்கள் என்கிற பேருண்மை அந்தப் பெரியவருக்குத் தெரியாதுபோலும். 

பசியில் வாடுபவனுக்கு மீனைக் கொடுக்காதே… மீன் பிடிக்கக் கற்றுக்கொடு! » என்கிற மேலை நாட்டுப் பொன்மொழி இந்த ஏழை நாட்டுத் தலைவர்களுக்கு ஏன் புரியாமல்போனதோ

தொலைக்காட்சி இலவசம்உடுப்பு இலவசம்அடுப்பு இலவசம் என அனுதினமும் ஓர் அறிவிப்பை வெளியிட்டு,கையேந்தும் பெரு​மக்களை பெருக்கிக்கொண்டே போ​கிறது இந்த அரசாங்கம். 




65 ஆண்டு கால சுதந்திரத்தில், 45 ஆண்டுகள் இந்தத் தாய்த் தமிழகத்தை திராவிட இயக்கங்கள் ஆண்டிருக்​கின்றன. இன்றைக்கு இலவ​சத்தை மகத்தான திட்டமாக வாய் வலிக்​கச் சொல்பவர்கள்இத்தனை காலங்கள் ஆண்டும் என் மக்களைக் கையேந்த​வைத்த கயமைக்குப் பொறுப்பு ஏற்பார்களா

கலைஞரின் இளைஞன்’ படம் தமிழ்த் திரையுலகத்தின் புரட்சியாய்புகழாரக் கூட்டத்தால் கொண்டா​டப்படுகிறது. மாக்ஸிம் கார்க்கியின் தாய்’ நாவலைதாய்க் காவியமாக வடித்த முதல்வர் பெருமகனாருக்குச் சொல்கிறேன்அய்யாகார்க்கியின் எழுத்துகள் மேல் நீங்கள்கொண்டு இருக்கும் ஈர்ப்பும் பிரியமும் என்னை வியக்கவைக்கிறது. கார்க்கி எழுதிய சாலச் சிறந்த வாக்கியம் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். 

பிச்சை போடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை!’ 

கார்க்கியின் எழுத்துகளைப் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து உரைத்திருக்கும் நீங்கள்இந்த வரிகளுக்கு என்ன அய்யா பதில் சொல்ல முடியும்உடனேபிச்சைக்கும் இலவசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது எனவழக்கம்போல் விளக்கப் புராணம் பாடாதீர்கள். தனி மனிதனுக்குப் போட்டால் பிச்சை… தமிழ்நாட்டுக்கே போட்டால் இலவசமாஎங்களின் பணத்தை எங்களுக்கே பிச்சையாக்கும் வித்தையை இத்தனை காலம் நீங்கள் பயன்படுத்தாமல் இருந்ததே ஆச்சர்யம்தான். 

இலவசத் திட்டங்களுக்காக அரசாங்கம் இழக்கும் தொகையை நீங்கள் எதன் மூலமாக ஈடுகட்டுகிறீர்கள்மது விற்பதன் மூலமாக… ஏழைக் குடியானவன் சாராயம் காய்ச்சினால்சட்டப்படி அது குற்றம். அரசாங்கமே சாராயம் காய்ச்சினால்அது திட்டம். நல்லா இருக்கிறதய்யா உங்கள் நியாயம்தீபாவளி தினத்தில் மட்டும் 90 கோடிக்கு சாராயம் விற்றதாக இந்த அரசாங்கம் சாதனை அறிக்கை வெளியிடுகிறது. வயிற்றுக்கு விஷம் வைத்துவிட்டு,வாய்க்கு உணவு கொடுப்பதுதான் உங்கள் சாதனையின் மகத்துவமா அய்யா

இலவசம் என்றால் என்ன பொருள் உங்கள் அகராதியில்பல்துறைப்பட்ட வருமானத்தின் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தியதுபோகமீதம் இருக்கும் உபரி வருமானத் தொகையை வைத்து மக்களுக்கு ஏதாவது வழங்​கினால் அதற்குப் பெயர்தான் இலவசம். ஆனால், 80 ஆயிரம் கோடியை தமிழகத்தின் கடனாக ஏற்றிவைத்துவிட்டு,இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்கிற நிலைமையிலும்இலவசத்தை வழங்கினால்அதற்கு உண்மையான அர்த்தம்உள்நோக்கம்’ என்பதுதானே! 

உடனே அறிவார்ந்தவரும் மூத்த அமைச்சருமான அய்யா அன்பழகனார் அறிவிக்கிறார்… ‘தமிழக அரசின் 80ஆயிரம் கோடி கடன் தமிழக மக்களைப் பாதிக்காது!’ அப்படி என்றால்எங்களின் கடனை கன்னடக்​காரன் கட்டுவதாகச் சொல்லி இருக்கிறானாஇல்லை தெலுங்குக்காரன் திரட்டிக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறானா

இலவசங்கள் தொடர்ந்துகொண்டே போகட்டும்… என்றைக்கோ ஒரு நாள் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு,இலவசங்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால்தமிழகத்தின் நிலை என்னாகும் என்பது உங்களின் புத்திக்குப் புலனாகவில்லையா முதல்வரே

இலவசம் இல்லாமல் போனால்பிறர் சவம் என்றாலும்பிய்த்துத் தின்னும் நிலை வந்துவிடாதாஇத்தனை காலம் உண்டபடியே உறங்கியவனைஒரே நாளில் உழைப்புக்குப் பழக்கப்படுத்திவிட முடியுமாகொலை,கொள்ளைவழிப்பறி என இந்த நாடே சுடுகாடாகிவிடாதாஅப்படி ஒரு நிலை வரத்தானே இத்தனை இலவசங்களை அறிவித்துஎம்மக்களின் சொரணைக்குச் சுருக்குப் போட்டுவிட்டீர்கள்

தேர்தல் நெருங்க… நெருங்க… எப்படி எல்லாம் இலவசங்களை அறிவிக்கலாம் என மூளையைக் கசக்கி முப்பொழுதும் யோசிக்கிறீர்கள். வாரம் ஐந்து முட்டை என அறிவித்து குழந்தைகளைக் குதூகளிக்க​வைத்தீர்கள்இத்தனை காலம் ஒரு முட்டை போட்ட கோழிகள் திடீரென ஐந்து முட்டைகள் போட ஆரம்பித்துவிட்டதா அய்யாநாலரை ஆண்டு காலம் ஏழைகள் எந்தக் குடிசையில் வாழ்ந்தாலும் சரி என நினைத்த நீங்கள்இப்போது திடீரென வீடு வழங்கும் திட்டத்துக்கு வித்திட்டு இருக்கிறீர்கள். கடகட வேகத்தில் மூன்று லட்சம் வீடுகளைக் கட்டவைக்கும் நீங்கள்அடுத்த மூன்று லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கான ரசீதைக் கொடுத்து இருக்கிறீர்கள். எங்கள் ஆட்சி மீண்டும் வந்தால்உங்=
Reply all
Reply to author
Forward
0 new messages