ஜீரோ ஹீரோ - சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தில்
5வது தூண் நூதன பிரச்சாரம்.
100 பள்ளி, கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான
மாணவர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதி மொழி ஏற்கின்றனர்.
சென்னை, டிசம்பர் 7 : சர்வதேச ஊழல் எதிப்பு நாளான டிசம்பர் 9-ஐ முன்னிட்டு ஊழல் எதிர்ப்பு இயக்கமான 5வது தூண் "ஜீரோ ஹீரோ"
க்கள் என்ற பெயரில் நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த உள்ளது. தமிழகமெங்கும் 100 பள்ளிகள் , 100 கல்லூரிகளை குறி வைத்து இந்த பிரசாரம் நடத்தப்படுகிறது. இக்கல்வி நிறுவனங்களில் காலை கூடுகையின்(Assembly) போது மாணவர்கள் பூஜ்ய ருபாய் நோட்டுகளை கையில் ஏந்தி " நான் லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன் " என்று உறுதி மொழி எடுக்க உள்ளனர். இது தவிர தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
, நடை பயணம், பொது இடங்களில் பூஜ்ய ருபாய் நோட்டு விநியோகம்
முதலான பல்வேறு விழிப்புணர்வு பிரச்சார நிகழ்
ச்
சிகளை ஒரு வாரத்திற்கு (
டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை) நடத்த
5வது தூண் அமைப்பு ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுதியாக உள்ள நாட்டில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எல்லோரும் ஒரிடத்தில் கூடி உறுதி மமொழி ஏற்பது என்பது மிகவும் சவாலானது. எனவே டிசம்பர் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு மக்கள் தங்கள் பணி இடத்திலேயே லஞ்ச, ஊழல் எதிப்பு உறுதி மொழி எடுத்து கொள்ளுமாறு 5வது தூண் அறைகூவல் விடுக்கிறது.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9 ஆம் தேதியை சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான "
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பு"(UNCAC) அறிவித்தது. இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் 5வது தூண் இத்தினத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. தொடக்கம் முதலாகவே 5வது தூண், ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து வருகிறது . ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பின் 5வது சர்வதேச மாநாடு பனாமா
நாட்டின் தலைநகரான பனாமா
நகரில் அண்மையில் நடைபெற்றது. உலகெங்கும் இருந்து 5வது தூண் உட்பட
இவ்வமைப்பில் உறுப்பினராக உள்ள
300க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகள் இதில் கலந்துகொண்டனர். " இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் கருப்பு பணம் சுவிட்சர்லாந்து முதலான
"
ரகசிய வங்கி சட்டம் "
உள்ள
நாடுகளின் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது . இதனை எவ்வாறு கைப்பற்றி அந்தந்த நாடுகளின்
மக்கள்
நலனுக்கே திரும்ப பயன்படுத்துவது என்பது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊழல் எதிப்பு தினத்தை ஒட்டி நடைபெறும் இது போன்ற முயற்சிகள் நம்பிக்கை அளிக்கும்வண்ணம் உள்ளன.
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்பு
சர்வதேச ஊழல் எதிர்ப்பு
தினத்தில் ஊழல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்குமாறு அணைத்து உறுப்பு நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் ஜீரோ ஹீரோ பிரச்சார உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்கள், பொது மக்கள், ஊடக நண்பர்கள் ஆகியோர் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்"என்று 5வது தூண் அமைப்பின் தலைவர் திரு. விஜய் ஆனந்த் தெரிவித்தார்.