
உலகில் மிக மலிவான கார்களில் ஒன்றாக விளங்குவது இந்தியாவின் டாடா நிறுவனம் தயாரித்த டாடா நனோ கார். சராசரி விலை 1.40 லட்சம் இந்திய
ரூபாவாகும்.
ஆனால் அதே நிறுவனம் 22 கோடி இந்திய ரூபா (சுமார் 50 கோடி இலங்கை ரூபா) பெறுமதியான தங்கம் சில்வர், பளிங்கு கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட காரை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டு வைத்தது.
முழுமையாக இயங்கும் நிலையிலுள்ள இக்கார் விற்பனை செய்யப்படுவதற்கில்லையாம். டாடா குழும நிறுவனங்களில்
ஒன்றான டைட்டன் இன்டஸ்ரீஸின் ஓர் அங்கமான கோல்ட் பிளஸ் ஜுவலரியின் பெறுமதிமிக்கதும் ஊக்குவிப்பு நடவடிக்கைக்காக இக்கார் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் (இந்திய) ரூபா கார் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட டாடா நனோ கார்களின் தற்போதைய சராசரி விலை 1.40 லட்சம் இந்திய ரூபாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் தங்க நகை தொழிற்துறை வரலாற்றிற்கு 5000 ஆண்டுகள் பூர்த்தியை கொண்டாடுமுகமாக இந்த 'கோல்ட் பிளஸ் நனோ' காரானது தயாரிக்கப்பட்டுள்ளது. உலகின் முதலாவது தங்க நகைக் கார் இதுவெனக் கூறப்படுகிறது.
இக்காரின் உடலமைப்பானது 80 கிலோகிராம் எடையுள்ள 22 கரெட் தங்கம், 15 கிலோகிராம் வெள்ளி, இரத்தினக்
கற்கள் முதலானவற்றின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
நகை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் 14 நுட்பங்கள் இக்கார் தயாரிப்புக் பயன்படுத்தப்பட்டுள்ளன.
'தங்கம் மற்றும் இரத்தினக் கற்களால் உருவாக்கப்படும் நகைகளானது இந்திய பெண்களின் வாழ்வில் ஒருங்கிணைந்த ஒன்றாக காணப்படுகின்றது' என டைடன்
இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் முகாமையாளர் பாஸ்கர் பாட் தெரிவித்துள்ளார்.
மேற்படி கோல்ட்பிளஸ் நனோ காரானது இந்தியாவில் 29 இடங்களிலுள்ள காட்சியறைகளுக்குப் பயனிக்கவுள்ளது.
.jpg)
.jpg)

