Fevi,
365-not a small number!One poem per day--not an easy task too!Hats off to your Himalayan effort of completing 365 poems in a year.We all can understand how much effort it would have necessitated from you,how much time you would have spent on it inspite of you
being busy with your various professional and personal commitments.The varied topics you chose,the context of the poems, the literary elements,the way you conveyed your messages,the way you communicated your feelings were exemplary.It is not the lack of admiration
but the commitments I had kept my hands tied from responding to your poems immediately.The various genres of your poems made us travel through various emotions and feelings of life.
சப்தங்களால் காயப்படாத உன்னத அதிகாலையை,
பனித்துளிகளை துவட்டாது
முகம் சிவந்து நிற்கும்
ரோஜா மொக்குகளின்
நாண நளினத்தைக்,
காட்டிய உனது கவிதை
"நிலமங்கை நித்தம் பறிக்க
வானம் தனில் பூக்கும் வைரப் பூக்கள்.
யார் தூவிச் சென்றார்களோ
வானப் பெண்ணிண் மேனியெல்லாம் வண்ண ஜிகினாவை"
என நட்சத்திரங்களையும் வர்ணித்தது.
ஏரியா ஆன ஏரி எல்லாம் இயற்கையின் படையெடுப்பால் மீண்டும் ஏரியாகும் என இயற்கையின் ஆளுமையை விவரித்தது.
அடைமழை,கனமழை,தொடர் மழை,மாரிமழை என மழையைத் தரம் பிரித்த உனது கவிதைகள் எங்களை மழையில் நனைய வைத்திருக்கின்றன.மழையை "இறைவனின் திரவ நிலை.
கண்ணாடித் தமிழா,
கவிதைகளாக சிதறுகிறதே!"
என எண்ண என்ன ஒரு ஒரு கற்பனைத் திறன் வேண்டும்!
"காகிதங்கள் கப்பலாகும் நேரம்.
குடைகள் மலரும் நேரம்.
நான் கவியாகும் நேரம்."
என உன்னை கவியாக்கிய மழைக்கு நாங்கள் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.ஆயினும் மழையுடனான உனது நெருக்கத்தை ஆய்வு செய்ய இந்தப் பதிவு போதாது.
'தவிகவி-கவிதவி' என உனது கவிதைகள் எதிர்வினையாய் உன்னைத் தவிக்கவிடினும்,
"மாலவன் சூடுவான் என
இருளின் மடியில் விழி மூடி, விடியலில் செந்நிறக்
கதிர்விரல் தொட்டு
நாளும் விழிக்கும்"
மலரின் மணத்தையும் மனத்தையும் நம்பிக்கையையும் புரிய வைத்திருக்கிறது.
"விண்ணை அண்ணாந்து பார்த்து தூங்கும்
கிராமத்தானின் வாழ்க்கையை
வரமென்றென்னுவான்
நகரத்தான்"
என நகரத்து மக்களின் ஏக்கத்தை அறிய வைத்திருக்கிறது.
"நண்பன் என்ற சொல்லின் அர்த்தத்தை
அகராதியில் தேடிக் கொண்டிருக்கையில்
அதன் அர்த்தமாய் என் முன்னே
வந்தவன் நீ"
என நண்பனின் இலக்கணத்தை விளக்கியிருக்கிறது.
"நீ விட்ட ஏவுகணையை பார்க்கச் சென்றாயோ" என கலாமுக்கு கலங்கற்பா பாட நீ மறந்ததில்லை.
"குப்பைத் தொட்டிகள் கூட குழந்தகளை சுமக்கின்றனவே.
என் குறுவயிறுக்கு
கொடுப்பினை இல்லையே.
இறந்த பிறகாவது என் வயிற்றில்
புழுபூச்சிகளை தூவுங்கள்"
என காயாமரத்தின் ஓலத்தை உனது கவிதை புலம்பியிருக்கிறது.
இலக்கியப் பெருவெளியில் உனது நெடும் பயணத்தில்,
"கம்பரையும் வள்ளுவரையும் சந்திக்க
அவ்வையையும் அதியமானையும் காண
அகலிகை கல்லாக
திரௌபதி அமைதி காக்க
மணிமேகலை தவம் செய்ய"
என நீ கடந்து சென்றவரைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறாய்.
"பேருந்து என் ஊரை
அடைந்த நேரத்தில்
எந்த ஊரைச்
சென்றடைந்திருக்கும்
எதிர் திசையில்
ஓடிய மரங்கள்!"
மாறுபட்ட சிந்தனை.இந்த விடை தெரியா வினாவுக்கான விடையை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது என் மனது.
"ஓர் ஊசி வேண்டும்
என் உயிர்தனில் உனைக் கோக்க.
ஓர் பரமபதம் வேண்டும்
உன்னோடு சேர்த்து என்னை உருட்ட.
இளையராஜாவின் இன்னிசை வேண்டும்.
அந்திமாலையில் என் மடியில் நீ இளைப்பாற.
ஒரு தூரிகை வேண்டும்
உன்னுள் கரைந்த என் பெண்மையின் வண்ணத்தில் உனை தீட்ட."
அற்புதம்.மிகச் சுலபமாக இது ஒரு சிறந்த காதல் கவிதையென தகுதி பெறும்.
'வை ராஜா வை' கவிதையோ
"மரங்களை விட்டு வை
செடிகளை நட்டு வை.
நீரினை சேர்த்து வை.
நிம்மதியைத் தேடி வை."
என சமூக நலனை பாடியதோடு
"மாற்றத்தை உணர்ந்து வை.
மரணத்தை அறிந்து வை.
காலனை மதிப்பில் வை.
கடவுளை மனதில் வை"
என நிதர்சனத்தையும் பாடியது.
"பேருந்தில் அடி பட்ட நாயும் எழுந்தோட
கதவில் மாட்டி வாலறுந்த பல்லிக்கும் அதே பாடு.
லாடம் அடித்து பொதி சுமக்கும் மாட்டுக்கும் நிலை இதுதான்.
நீயும் நானும் என்ன விதிவிலக்கு.
போராடு,வாழ்க்கையின் நிர்ப்பந்தம் அதுவே."
என வாழ்க்கையின் போராட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டினாலும்
"நாடி தளர்ந்து போனாலும்
நம்பிக்கை தளர்ந்து போகாதே.
நம்பிக்கை நம்மில் இருக்கும் மட்டும்
நம் கைகள் வெல்லும் மறக்காதே"
என நம்பிக்கையூட்டவும் தவறியதில்லை.
"கொய்யாத மலர்கள் மாலையாவதில்லை
நெய்யாத நூல் சேலையாவதில்லை
காயாத மலரில்லை தேயாத நிலவில்லை
தோல்விகள் தோல்வியல்ல ஏற்றுக் கொள்
வெற்றியை தக்க வைக்க பழகிக் கொள்"
என வெற்றிக்கான படிகளையும் காண்பித்தன உனது கவிதைகள்.
"வானத்தில் வழி நடக்கும் நிலவினைப் போல்
தாமரை இலையில் விழுந்த தண்ணீரைப் போல்
தண்ணீரில் விழுந்த எண்ணைத் துளியைப் போல்
அணிகலத்தில் இருந்து விழுந்த
மணியைப் போல்
வாழ்க்கையில் வரும் இன்பதுன்பங்களில் ஒட்டாமை நன்று"'
என உனது 'ஒட்டாமை' கவிதை கீதையின் சாரத்தை எடுத்துரைத்தது.
"உதித்தல் உதிர்தல் உயிர்களின் நியதி
கொதித்து துடித்துக் குமுறிடலாமோ.
விதியின் வழியே வினையும் முடியும்
துதிப்பாய் நெஞ்சே துணை வரும் இறையே"
என மரணத்தையும் ஒரு எளிமையான நிகழ்வாக்கியது.
இந்த வருடத்திற்கான கவிதைகள் முற்றுப் பெற்றிருக்கலாம்.ஆயினும் உன் வரிகளில் சொல்வதென்றால் கவிதைகள் என்றும் கவிஞனை எழுதச் சொல்லி யாசிக்கும். உன் தூரிகையின் கூர்முனையில் பிரசவிக்க வரிசையாய் ஏராளமாய்க் கவிதைகள் காத்திருக்கின்றன.அவை சுகமாக ஜனனித்து
கவி உலகை வெல்ல எங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் உன்னுடன் என்றும் உண்டு.
Having read your 365th poem,let us all rise to our feet and give you a standing ovation and wish that let the poet in you grow unabated for ever.
Brindha.
இயற்கையின் நியதி
மனிதன்
படையெடுத்தான்
ஏரிகள் எல்லாம்
"ஏரியாக்கள்" ஆயின...
இதோ
இயற்கை
படையெடுத்தது...
"ஏரியாக்கள்" எல்லாம்
திரும்பவும்
ஏரிகள் ஆனது....
My countdown has started I have only 4 more days to cross to achieve the Milestone of 365 Non stop.Kirukkals....
--
Ravi Subramannian,
Chennai. 9710919977