அதிகாலை நேரம் கடற்கரை ஓரம் ....!
மிதமான காற்று மெதுவாய் தீண்ட,
மெல்லிய இசையால் பறவைகள் பாட,
மிதந்திடும் படகும் சூரியனுக்கு துதி போட !
கண் திறவென்று கணநேரம் கூச,
கண்ட காட்சி கரைத்தது என்னை ! ஏன் எல்லோரையும் தான்
விரல் போன்ற மேகங்கள் மெதுவாய் உரச,
வெட்கத்தில், தழுவிய மேகத்தின் கைகோர்த்து,
வெள்ளி மழை பூவாய் தூவியது !
விழிகளின் கனவுகள் மணவாளனை தேட,
விடிந்ததா ? என்று என் கரம் பிடித்தான்,
விடியலின் அழகும்,மழையின் சிரிப்பும் கோர்த்து,
விண் எட்டிய மரங்களும் கவி பாடியது !!!
ஆனந்தத்தின் உச்சத்தில் அலைகடலும் கூவ
அனைத்து மர செடிகொடிகளும் மலர் தூவ
அதற்காகவே காத்திருந்த பறவைக்கூட்டம் பாட்டிசைக்க
எங்களால் இயன்றது என்று மரங்களும் பக்கவாத்யம் சேர்த்தன ........
இயற்கையின் சங்கமித்தல் செவ்வனே உதயமானது .
காலத்தின் கட்டாயமாய் காலந்தோறும் நடக்கின்றது
கூத்தாடும் ஈசனும் குலமகள் அன்னையும் பார்த்து ரசிக்க
தம் பதம் நாடும் அன்பரும் பருகி மகிழ ஆண்டவன் ஆடினான்.... .இயற்கையாய்
சு ரவி