வலி இனிக்கிறது... கருவறை சுவற்றை
உன் பிஞ்சு காலால் இடிக்கையில்!
இருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி !
நீ வருகையில்... வலி உச்சத்தை தொட்டது...
உச்சத்தை தொட்டது வலி மாத்திரம் அல்ல
மகிழ்ச்சியும் தான்...
வெளிச்சம் உன் கண்ணை
கூசியதோ! வீர்ரென்று
அழுதாய்... வெடுக்கென்று
தூக்கி நெற்றிப் பொட்டில்
முத்தமிட்டேன்... ஸ்பரிசுத்துக் கொண்டே...
இதயத்தை கீறினாய்...
இருந்தாலும் பூரிக்கிறேன்...
இதுவே தாய்மை என்ற
இறுமாப்புடன் ...
சு ரவி.
CONGRATS Fevi… it was like a YAAGAM… keep the tempo… compile into categories/chapters the 2015 creations..