தற்குத்தறம்

1 view
Skip to first unread message

sisulthan

unread,
Feb 6, 2021, 10:07:07 PM2/6/21
to நாஞ்சில் நாடன் இணைய வட்டம்
பாட்டா போரும் கேட்டேரா? காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாரி இப்பிடித் திண்ணா வாற வியாழக்கிழமை கொழுக்கட்டைக் கெழமை ஆயிரும்.." கும்பமுனிக்குக் காந்தாரி மிளகாய் கடித்தது போலச் சுள்ளென்று உறைத்தது. "ஆனா ஆயிற்றுப் போகட்டும்டே! நீ இன்னும் ரெண்டு கொண்டா" என்றார். காடாத்துக்குப் பெரும்பயிறு. பிறகு தோசைக்கிழமை, கொழுக்கட்டைக் கிழமை, பின்னே முறுக்குக்கிழமை... இலேசாக சிரித்துக் கொண்டார். எவன் வச்சு அழப்போறான் நமக்கு? படத்துக்கு முன்னே மாசாமாசம் காலச்சுவடு, உயிர்மை, அந்திமழை, நிலவெளி, கணையாழி, காக்கை எல்லாம் எவன் கொண்டாந்து வைக்கப் போறான். நமக்குத் தயிர்வடை, கட்லெட், சமோசா எல்லாம் வேண்டாம்.. ரெண்டு ரசவடை எந்த நாயி கொண்டாந்து வைக்கப் போகு?" என்று யோசித்துச் சலித்தார்.
Reply all
Reply to author
Forward
0 new messages