எழுத்தாளனின் பார்வை

1 view
Skip to first unread message

sisulthan

unread,
Nov 25, 2020, 8:39:55 PM11/25/20
to நாஞ்சில் நாடன் இணைய வட்டம்
கி.ராஜநாராயணனோ, நாஞ்சில்நாடனோ ஒரு பண்பாட்டுக்கு பெருஞ்செல்வங்கள். உலகின் எந்தப் பண்பாட்டுக்கும் அவர்களைப்போன்றவர்கள் அருங்கொடைகள். அவர்கள் அன்றாடம் டிவியில் வந்து புள்ளிவிபர அடிப்படையில் வாதிடுபவர்களில் ஒருவர் அல்ல. அவர்கள் தங்கள் புனைவுகளால் அந்த இடத்தை அடைந்தவர்கள். அப்புனைவுலகை தன் அனுபவ மண்டலத்தால் தான் புனைந்துகொண்ட வாசகர்களிடம் பேசுபவர்கள். மையஓட்ட நம்பிக்கைகளுக்கு, பொதுவான தர்க்கங்களுக்கு அப்பாலுள்ள ஓர் உலகம் அது. அங்கே நின்று அவர்கள் பேசுவது பண்பாட்டின் மற்றொரு குரல். அக்குரலை பண்பாட்டை அறிந்தவர்கள் மதிக்கவேண்டும். 
 
Reply all
Reply to author
Forward
0 new messages