முனியும் முனியும்

1 view
Skip to first unread message

sisulthan

unread,
Oct 21, 2020, 1:10:53 AM10/21/20
to நாஞ்சில் நாடன் இணைய வட்டம்
நான் சிறுவனாக இருந்த காலத்தில் கதை எழுதியவர்களும் சினிமா எடுத்தவர்களும் ரிக்க்ஷாக்காரனுக்கு, வேலைக்காரனுக்கு, காவல்காரனுக்கு, வேலைக்காரிக்கு, பூக்காரிக்கு முனியன், முனியாண்டி எனப் பெயர் சூட்டினர். ஆபீஸ் மேனேஜரின் செக்ரட்டரியாக இருப்பவள், எந்த நேரத்திலும் மேனேஜர் மடியில் ஏறி அமரத் தயாராக இருப்பவள், குட்டைப் பாவாடை போடுபவள், லிப்ஸ்டிக் பூசுபவள் பெயர் அன்றெல்லாம் ஸ்டெல்லா, மேரி, நான்சி என்றே இருக்கும். எப்போதும் வரலட்சுமி, காமாட்சி, செங்கமலம் என்று இருக்காது. அலுவலகம் கூட்டிப் பெருக்கித் துடைப்பவள் முனியம்மா. வாட்ச்மேன் முனிசாமி, ப்யூன் முனியன். இது அன்றைய எழுத்தாளர், சினிமாக்காரர் சமூக நீதி!  

 
Reply all
Reply to author
Forward
0 new messages