நாடகம்- சிறுகதை- ஒலிக்கதை

1 view
Skip to first unread message

sisulthan

unread,
Dec 21, 2020, 8:07:01 AM12/21/20
to நாஞ்சில் நாடன் இணைய வட்டம்
அந்தப் பக்கம் நாடக சீசன். வருக்கை சக்கைப் பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், செங்கை வருக்கை மாம்பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், வெள்ளரிக்காய்க்கு ஒரு சீசன் இருப்பது போல், நாடகங்களுக் கான சீசன் அது. எல்லா ஊர்களிலும் சரித்திர சமூக நாடகங்கள் கொடி கட்டிப் பறந்தன. யார் குற்றவாளி? நீதி என் கையில், பண்ணையார் வீட்டுப் பாப்பா, பாவத்தின் பரிசு என்று சமூக சீர்திருத்த நாடகங்கள். தளவாய் வேலுத்தம்பி, ஊமைத்துரை, புலித்தேவன் என்று சரித்திர நாடகங்கள். ஊருக்கு ஊர் ஏதாவது ஒரு திருவிழாவை முன்னிட்டு - முப்பிடாரி அம்மன் கோயில் கொடை, பங்குனி உத்திரம், நம்பிரான் விளையாட்டு, பொங்கல் விழா என்று காரணங்காட்டி, நாடகங்கள் முக்கிய நிகழ்ச்சிகளாயின. 
 
Reply all
Reply to author
Forward
0 new messages