தாலிச் சரண் மறுவாசிப்பு

1 view
Skip to first unread message

sisulthan

unread,
Dec 29, 2020, 11:20:03 PM12/29/20
to நாஞ்சில் நாடன் இணைய வட்டம்
நாகமாகச் சீறியது இரு கை விரல்கள் பிடித்துத் தொங்கிய பொன்னின் தாலி. உலகில் மிகக் குறைந்த நபர்கள் பங்கேற்ற தாலிகட்டுக்கள் அதற்கு முன்பும் நடந்திருக்கும். பின்பும் நடக்குமாக இருக்கும்.கிழக்குப் பார்த்து விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. கிழக்கென்பது அனுமானம் தீர்மானித்தது. காங்கிரீட் அடுக்குப் பெட்டிகளுக்குக் கிழக்கும் மேற்கும் என்பது உழக்கில் கிழக்கும் மேற்கும் போல. ஆனால் வாஸ்து புரோகிதர்கள் உழக்கிற்குள்ளும் ஈசானமூலை, கன்னிமூலை, அக்னிமூலை என வாய்ப்பாடு சொல்வார்கள். 
 
Reply all
Reply to author
Forward
0 new messages