தமிழ்மணம் - தமிழ் இலக்கியங்களில்

20 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 2, 2009, 9:44:17 AM8/2/09
to

தமிழ்மணம் - தமிழ் இலக்கியங்களில்

தமிழ்மணம் ( http://tamilmanam.net  ) 5 ஆண்டுகள் நிறைவுவிழாவை
இன்னும் 3 வாரங்களில் கொண்டாட இருக்கிறது.
தமிழ்மணம் குழுவின் உழைப்பு, நிரல் எழுதுகை,
நிதி நல்கையால் 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன!

தமிழ் இலக்கியங்களில் தமிழ்மணம் என்ற சொல்லாட்சி
உள்ளதா? 20-ஆம் நூற்றாண்டு அல்லது அதன் முன்னர்.
நேற்று பாரதிதாசனின் காதல் பாட்டுகள் நூலில்
கிடைத்த பாடலைத் தருகின்றேன். இணையத்திலே
நேரத்தைச் செலவிடுவதால் மனையாளின்
சீறாட்டு! தமிழ்மணமே கதியென்று இருப்போருக்குப்
பொருத்தம்தான்!

 தமிழ்வாழ்க்கை
 (காதலி கூற்று)

  ~ புரட்சிக் கவிஞர்

தமிழ் வாழ்க்கை
   பாரதிதாசன்

இரண்டடிதான் வாழ்க்கைத்துணை
    என்றானே - என்னை
 ஏறெடுத்துப் பார்க்காமலே
    சென்றானே
திரண்ட பெண்ணைத் திகைக்க வைக்கும்
    கூத்துண்டா - அவள்
சிலம்பொலிதான் தித்திக்கின்ற
    கற்கண்டா?            (இரண்டடிதான்)

மேகலையும் கையுமாக
      வாழ்கின்றான் - என்
  விருப்பம் சொன்னால் சீறி
      என்மேல் வீழ்கின்றான்
சாகையிலும் அவள் அகமே
      தாழ்கின்றான் - அவன்
  தமிழ்மடந்தை புறப்பொருளே
      சூழ்கின்றான்         (இரண்டடிதான்)

தமிழ்மணத்தில் என்னையும்வை
       என்றேனே - அவன்
  தனிமனத்தில் இருநினைவா
       என்றானே
தமியாளும் இந்தி அன்றோ
       என்றேனே - நான்
   தமிழனடி என்று சொல்லிச்
       சென்றானே!
                 
உங்கள் உதவிக்கு நனிநன்றி!
நா. கணேசன்
http://nganesan.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages