Re: கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே...இன்று கண்ணதாசன் பிறந்தநாள்(24/06/09)

10 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 24, 2009, 8:14:52 PM6/24/09
to மின்தமிழ், Santhavasantham, tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, panb...@googlegroups.com, housto...@googlegroups.com, thami...@googlegroups.com, nall...@googlegroups.com

On Jun 24, 7:03 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலைக் கட்டி வைத்தவன்  யாரடா - அவை
> எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்  சோறு போட்டவன் யாரடா
>
> ஆஹா என்ன ஒரு அருமையான  பாடல்
>

கேட்கக் கிடைக்குமா?

> கண்ணதாசன் அவர்கள் கூறினார்கள்
>
> நாத்திகத்தில் இருந்த வரை  எழுதுவதற்கு ஒன்றுமில்லை
> ஆத்திகத்துக்கு வந்த பின்னர்  எழுத  நேரம் போதவில்லை என்று
>

இளமையிலே நாஸ்திகராய் இருந்து, பின்னர் ஆஸ்திகராய் மாறிய
கவிச்சக்கிரவர்த்தி ஒருவர் நம் கண்ணதாசனுக்கு 900 ஆண்டுகளுக்கு
முன்னம் வாழ்ந்திருக்கிறார். கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார்
அவர்.

இளமையில் பாடிய நாத்திக (உலகாயத) நூல் கொங்குநாட்டில் வாழ்ந்த
பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரால் காத்தளிக்கப்பட்டது.
அதனை ப்ராஜக்ட் மதுரைக்கு அளித்துள்ளேன்:
பிஎம் 60: காராணை விழுப்பரையன் வளமடல்.

இருவருமே தமிழக அரசாங்கங்களால் அவர்கள் வாழ்ந்த காலங்களில்
‘கவிச்சக்கிரவர்த்தி’ என்று கொண்டாடப்பட்டவர்கள்.
உணர்ச்சிகளை, காதலை, போரை - இருவரும் நன்றாகப் பாடியுள்ளனர்.

தமிழனைப் பார்த்து கண்ணதாசன் கேட்ட கேள்வியை
உரத்து ‘தமிழருவி’ மணியன் கேட்டுவருகிறார் இன்று:
http://www.nerudal.com/nerudal.7811.html

பாண்டியனின் வழி நீயா? இமயக் கோட்டில்
பறந்திருந் தது உன் கொடியா? இலங்கை நாட்டை
ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை
அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத்
தாண்டியவர் பரம்பரையா? புட் பகத்தில்,
சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ?
மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும்
மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?
~
கண்ணதாசன்!

அன்புடன்,
நா. கணேசன்


> எப்படிப்பட்ட அனுபவக் கவிஞர்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>

N. Ganesan

unread,
Jun 24, 2009, 8:51:18 PM6/24/09
to மின்தமிழ், Santhavasantham, nall...@googlegroups.com

http://www.raaga.com/player4/?id=123575

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
(ஒரு...)

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன் - நான்
காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனிமனிதன்
நான் படைப்பதனால் என்பேர் இறைவன்
(ஒரு...)

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் - நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் - நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை
(ஒரு...)

படம் : ரத்த திலகம்
பாடியவர் : TM சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : KV மகாதேவன்

Reply all
Reply to author
Forward
0 new messages