Fwd: ஐ என்பதன் பொருள்கள்

44 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 8, 2009, 7:58:02 AM6/8/09
to housto...@googlegroups.com, nall...@googlegroups.com

On Jun 7, 9:44 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:

> கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
> நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு
> எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
> பசலை உணீஇயர் வேண்டும்
> திதலை அல்குல் என் மாமைக் கவினே

> ஐ எனில் அம்மா?

ஐ என்றால் பாடல் தலைவியின் ஐயன் = காதலன் (தலைவன்).

பயன்படாமல் வீணாகும் ஆவின் பாலைப் போல்
என் பெண்மை எனக்கோ, அன்றி என் காதலனுக்கோ இன்றி
என் பொலிவு குறைகிறது என்கிறாள் தலைவி.

தமிழ் சினிமாவில் இப்பாடல் பாடப்பட்டுள்ளது:
சேட்டுப் பெண் போல :)http://www.youtube.com/watch?v=IDEMeVPdgJ8

விஜயநகர மன்னர்கள் தாபித்த பம்பை (கன்னடத்து ஹம்பி நகரம்)
காணலாம்.
பம்பை = மெதுவாய்ப் பம்பிச் செல்லும் ஆறு.
(தமிழ்நாட்டிலும் பம்பை என்னும் வேறோர் ஆறு உள்ளது)
விஜயநகர மன்னர்கள் தமிழ்நாட்டுக் கலைவடிவுகளை
(உ-ம்: ராஜகோபுரம். திருமங்கை ஆழ்வாருக்குக் கோவில், ...)
அமைத்தமை பம்பைநாதர் விரூபாக்‌ஷர் கோயிலில் காண்க.

இந்த ”ஐ” - பெரியார்வாதிகள் எழுதும் “அய்” உடன் சமானம் அன்று.
ஐ > அய் ஆகாது. இரண்டும் வேறான சொற்கள், ஒலிப்புகள்.
ஐ > அய், ஔ > ஔ என்றெழுதுதல் தமிழின் தொல்காப்பியத்தின்
இரண்டு உயிர் எழுத்தையே நீக்குதல். அது கூடாது.

மேலும் ஒன்று, சீர்மையாளர் சொல்லும் எழுத்து வரிவடிவச் சீர்திருத்தம்
வேறுபட்டது. அது காலம் காலமாக மாறும் தமிழ் *வடிவத்தை*
மாத்திரம் அறிவியல் அமைப்பாக்குவதாகும். எழுத்தையே
நீக்குவதல்ல. உ-ம்: நாம் பயன்படுத்தும் எம்ஜிஆர் எழுத்து.
சாதாரணர்களுக்காக ஏன் எளிய மாற்றம்
எழுத்தில் வேண்டும் என்கிறார் அறிஞர்
வா. செ. குழந்தைசாமி.http://video.google.co.uk/videoplay?
docid=-6588419071760471274
எம்ஜிஆர் எழுத்தாலோ, உயிர்மெய் (உ/ஊ) உடைப்பாலோ
தமிழ் எழுத்தின் ஒலிகள் பிசகுவதில்லை.

நா. கணேசன்

விரூபாக்‌ஷர் சிவன் கோயில் பழனி மலைகளிலும் உண்டு.
அவ்விடத்தில் விளையும் வாழைப் பழம் விருப்பாச்சிப்
பழம் - இப்போது அழிந்தே விட்டது என்கின்றனர்.
விரூபாக்‌ஷன் (முக்கண்ணன்) = விருப்பாச்சன்.
ராஜபக்‌ஷன் = இராயபக்கன்/இராயபட்சன்/இராயபச்சன் (தமிழில்).> --
> வேந்தன் அரசு
> சின்சின்னாட்டி
> (வள்ளுவம் என் சமயம்)
> ”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

N. Ganesan

unread,
Jun 25, 2009, 9:12:02 AM6/25/09
to மின்தமிழ், Santhavasantham, thami...@googlegroups.com, panb...@googlegroups.com, mutht...@googlegroups.com, anb...@googlegroups.com, housto...@googlegroups.com, nall...@googlegroups.com

அன்பின் கவிஞர் ஹரிகிருஷ்ணன்,

நாள்- எனும் வேர் கொண்ட
உங்கள் முன்னோர் “நாளப்பா”
பற்றி ஏற்கெனவே 2001-ல் பேசியுள்ளோம்:
http://www.treasurehouseofagathiyar.net/13800/13800.htm

காளி/காரி, குளம்பு/குரம், ... அதுபோல் நாளணன்/நாரணன்.
கடல்வண்ணனுக்கு மணிவர்ணன் என்னும் பெயர்,
மணிவர்ணன் என்றாலும் கருநீலவண்ணன்
என்றுதானே பொருள். நாளணன்/நாரணன் ‘கருப்பரையன் (அ)
மால்’ பழைய கருமைப் பொருள் மறைந்து
நாராயணன் ஆகி நீர் என்ற சொல்லில் இருந்து
என்கிறார்கள். ஆனால், நாராயணன் என்ற
சொல்லை நீர்- என்பதிலிருந்து வந்தது
’ஒரு தியாலாஜிக்கல் விளக்கம், அவ்வளவுதான்’ என்று வடமொழிப்
பேராசிரியர்கள் சொல்கிறார்கள்.

நாள்- இராவில் தோன்றும் விண்மீன்கள் (தொல்காப்பியம்),
சங்க இலக்கியத்தில் இரவு/கருமை, ....
வேதங்களில் சோம யாகம் போன்றவை இரவிலே
மாத்திரம் நடக்கும் அதிருத்ரம், சிந்துவெளியில்,
வேதங்களில், தமிழ் இலக்கியங்களில் (தனித் தமிழ்ப்
பெயர்களாய்) சுட்டப்படும் விண்ணியல் ஞானம்,
ஈரானிய அவெஸ்தாவில் இந்தியர்களின் இராக்கால
சடங்குகள் பழிக்கப்பட்டமை, ... பார்க்கும்போது.
நள்-/நாள்- என்பதன் கருமை/இருட்டு என்ற பொருள்கள்
பிற்காலத்தில் சற்றே மறக்கப்பட்டுவிட்டதாகத்
தெரிகிறது.

நாளப்பன்/நாளணன் : நாரணன் பெயர்க்
காரணம் அதையே சுட்டி நிற்கிறது என நினைக்கிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்

On Jun 24, 10:54 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:

> இவற்றில் எதுவும் ‘இரவு’ என்ற பொருளைக் குறிக்கவில்லை.  சந்திர நாள் என்ற
> பொருள்கூட, பகற்பொழுதை விடுத்த தனிப்போதில்லை.

> ஆகவே, நாள் என்பது இரவையும் பகலையும் உள்ளிட்ட 24 மணி கொண்ட ஒரு முழுதினத்தைக்
> குறிப்பதாயினும் பெரும்பாலும் பகற்போதையும்; சில சமயங்களில் (அந்தந்தச்
> சந்தர்ப்பத்துக்கேற்ப) இரவையும்  குறிக்கிறது என்றல்லவா பொருளாகிறது!  நீங்கள்
> குறிப்பிட்டுள்ள பாடல்களில் ‘இருள்’ என்ற சொல்லை நீக்கிவிட்டால், அங்கே
> ‘இரவுதான்’ குறிப்பிடப்படுகிறது என்று புரிந்துகொள்ள முடியாதல்லவா?  

விரிவான மடலுக்கு நன்றிகள் பல. குயில்பாட்டு உதாரணம் அருமை.
கம்பன் நாள் என்றால் எங்காவது இருள்/கருப்பு என்ற பொருளில்
பாடியிருக்கிறாரா?

--------------
நாள் என்னும் சொல் “இருள்/இரவு” என்னும்
பொருளில் வரும் இடங்களைச் சங்க இலக்கியங்களில்
முழுமையாய்ப் பார்க்க வேண்டும்.
இரவு, யாமம் (< சியாமம்), இருள்/இரா என்று
குறிப்பிடா இடங்களில் இருக்கிறதா என்று நான்
தேடவில்லை. பெரி. சந்திரா சில உதாரணங்கள்
அகத்தியரில் காட்டியதாகவும் ஞாபகம்.

உ-ம்:

(அ)
நற்றிணை 338
திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ
நடு நாள் வேட்டம் போகி வைகறைக்
கடல் மீன் தந்து கானற் குவைஇ

மீனவர் மீன்பிடிக்க நடு ராத்திரியில் தீப் பந்தம்
கொளுத்திக் கடலுள் போவதைச் சொல்கிறது.
இச்செய்யுளில் இரவு, இருட்டு சொல் இல்லாமலே அப்பொருள்
காணலாம்.

(ஆ) திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன (தொல். எழுத். 286)
இங்கே நாள் என்றால் இரவில் தோன்றும் விண்மீன்
என்று பொருள்.
வளைந்து செல்லும் மலைகள் மிகுந்த நாட்டுக்கு
கொங்கு நாடு என்கிறோம். மலை/கோடு/கொங்கு
தரும் தேனுக்கு கொங்கு என்று ஆகிவருவது போல்,
இராவில் தோன்றும் விண்மீனுக்கு “நாள்” என்றே
பெயர்குறிக்கிறது தொல்காப்பியம்.

---------

இன்னொன்று: அள்ளைக்கை அல்லக்கை ஆவதுபோல்,
நள்ளம் > நல்லம் > அல்- ”இரவு” வெகுகாலம் முன்
ஆகியிருக்கலாம். நல்லம் > அல்- தொடர்பை
திராவிடமொழிகள் வேர்ச்சொல் அகராதி குறிப்பிடுகிறது.

எள்(ளு) என்ற எண்ணெய் வித்தின் ஆதிப் பெயர் என்ன?
நள்(ளு) ”கருப்பு” பேச்சுவழக்கில் ”நெள்ளு”/”எள்ளு” ஆனதோ?
கடா:கெடா, வலம்/பலம்:பெலம், களை:கெளை, ....
பேச்சுவழக்கில். எள் எண்ணெயை நல்லெண்ணெய்
என்கிறோம். நல்லெண்ணெய் < நள்ளெண்ணெய்?
நல்லபாம்பு:நள்ளபாம்பு, வடமொழியில் கிருஷ்ணசர்ப்பம்.
நல்லமலை - கருமலை என்பதுபோல். கிருஷ்ணா நதி
நல்லமலை/நள்ளமலையில் பிறப்பதே.

அன்புடன்,
நா. கணேசன்

> நாற்றம்
> என்பது smell என்று பொருள்படுவதைப் போல் நாள் என்பது day என்று பொருள்படுகிறது
> அல்லவா?  The smell may be good or bad.  There may be a good smell or a bad
> smell; but 'smell' as such does not stand for either good or bad, though its
> Tamil equivalent நாற்றம் has come to be associated with that which is bad.
>  நாள் என்பது அதுபோலவே, இரவு பகல் இரண்டையும் உள்ளிட்ட பொருள்கொண்டது
> என்றாலும், பெரும்பாலும் பகற்பொழுதைக் குறிக்கப்பயன்பட்டிருக்கிறது. சிற்சில
> குறிப்புகளைச் சேர்த்தாலொழிய அதற்கு இரவு என்ற பொருளைத் தனித்துத் தரும் shade
> of meaning எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.  மேற்படி அகராதிக் குறிப்புகளும்
> அவ்வாறு எதையும் சொல்லவில்லை.
> --
> அன்புடன்,
> ஹரிகி.

Reply all
Reply to author
Forward
0 new messages