![]() |
தமிழகம்
சிறப்புப்பகுதி
இலங்கை கல்வி / வேலை வாய்ப்பு விளையாட்டு |
|||
சங்கமம் லைவ் செய்திகள்
இன்றைய செய்திகள் மியன்மா நாட்டில் அண்ணா நூற்றாண்டு விழா மியம்மா தமிழர்கள் சிறப்புடன்
கொண்டாடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு
விழா நாளது 29.11.2009ம் நாள் காலை
10.00மணிக்குத் தொடங்கியது.
தொடக்க கல்வி ஆசிரியர் நியமனம் 15 மாவட்டங்களில் டிச.9-ல் கவுன்சலிங் சென்னை, தொடக்க கல்வித் துறையின் கீழ்,
15 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய,
நகராட்சி, அரசு தொடக்கப் பள்ளி,
நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்
நியமனத்துக்கான கவுன்சலிங் 9ம் தேதி
நடக்கிறது.
மாநில வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் 2,039 இடைநிலை ஆசிரியர்கள் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடக்க கல்வித் துறைக்கு அனுப்பி உள்ளது. அவர்களில் 760 பேர் ஆண்கள், 1,279 பேர் பெண்கள். இவர்களுக்கான கவுன்சலிங் அந்தந்த மாவட்டத்திலேயே நடக்கிறது. தமிழகம் முழுவதும் 6500 புதிய ஆசிரியர்கள் நியமனம் சென்னை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி
துறை ஆணையர் ஜீவரத்தினம் நேற்று
வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறையில் 2009-10ம் கல்வி ஆண்டில் 6,522 காலி இடங்கள் உள்ளன. இவற்றில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் ஆங்கில ஆசிரியர்கள் 1,554, கணித ஆசிரியர்கள் 1,422, இயற்பியல் ஆசிரியர்கள் 883, வேதியியல் ஆசிரியர்கள் 882, வரலாறு ஆசிரியர்கள் 567, விலங்கியல் ஆசிரியர்கள் தலா 378, தமிழ் ஆசிரியர்கள் 332, புவியியல் ஆசிரியர்கள் 126 பேர் நியமிக்கப்படுகின்றனர். சமச்சீர்கல்வியை அடுத்த ஆண்டில் அமல்படுத்த பொதுவாரியம் - தமிழக அரசு அவசர சட்டம் சென்னை, சமச்சீர் கல்வி திட்டத்தை
தமிழகத்தில் அமல்படுத்த அவசர
சட்டத்தை கவர்னர் பிறப்பித்துள்ளார்.
அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 4 வகையான பாடத் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி வழங்க சமச்சீர் கல்வி முறை அடுத்த ஆண்டு முதல் கொண்டு வரப்படுகிறது. முதல் கட்டமாக, ஒன்று மற்றும் 6ம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, ஆசிரியர் தேர்வு வாரிய செயலருக்கு நோட்டீஸ் சென்னை, பயோ கெமிஸ்ட்ரி பட்டப்படிப்பு
படித்தவருக்கு பட்டதாரி ஆசிரியர் பணி
வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்
பிறப்பித்த உத்தரவை அமல் படுத்தாத
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்
மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தொடரப்பட்டுள்ளது. இது குறித்து
பதில் மனு தாக்கல் செய்ய செயலருக்கு
நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தை வாசி, தமிழை சுவாசி - மாணவர்களுக்கு நாமக்கல் கலெக்டர் சகாயம் அறிவுரை ![]() ரஷியா இரவு விடுதியில் வாணவேடிக்கையால் வெடி விபத்து 111 பேர் பலி 85 பேர் கவலைக்கிடம். ![]() விருந்து முடிந்ததும் நைட் கிளப் வெளியில் வாண வேடிக்கை நடத்தப்பட்டது. சீறி பாய்ந்த வெடிகளில் இருந்து சிதறிய தீப்பொறி நைட் கிளப் உள்ளே சிதறி விழுந்தது. தென் மாவட்டங்களில் 2 நாள் மழை அதிகரிக்கும் சென்னை, இலங்கை மற்றும் தமிழ்
நாட்டை ஒட்டி உள்ள வங்க கடலில் நிலை
கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை
அதே இடத்தில் இன்னும் நீடிக்கிறது.
7-வது நாளாக தொடரும் உண்ணாவிரதம், சந்திரசேகரராவ் உடல்நிலை கவலைக்கிடம் ஐதராபாத், ஆந்திராவை இரண்டாக பிரித்து
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி
தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி
தலைவரும், முன்னாள் மத்திய
மந்திரியுமான சந்திரசேகரராவ்
சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்
நடத்தி வருகிறார். இன்று அவரது
உண்ணாவிரதம் 7-வது நாளாக நீடிக்கிறது.
ஐதராபாத் நிம்ஸ் ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர் பிரசாதராவ் தலைமையில் 30 பேர் கொண்ட டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இலங்கைக்கு மீண்டும் எம்.பி.க்கள் குழு: பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அறிவிப்பு புதுடெல்லி, இலங்கை அரசியல் நிலைமை
குறித்து மத்திய வெளியுறவு மந்திரி
எஸ்.எம்.கிருஷ்ணா டெல்லி மேல் சபையில்
அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர்,
போரினால் இடம் பெயர்ந்த தமிழர்களை
மறு குடியமர்த்தி மறுவாழ்வு
அளிப்பதில் மத்திய அரசு
முக்கியத்துவம் அளித்து வருவதாகவும்,
இந்த பிரச்சினையில் இலங்கை அரசுக்கு
இந்தியா தொடர்ந்து உதவி செய்யும்
என்றும் தெரிவித்தார்.
|
||||
Click here to end all Your subscriptions | ||||
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள www.sangamamlive.in உடன் இணைந்திருங்கள் |