You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to Nallisai Group
கல்கத்தா
கிருஷ்ணமூர்த்தி நினைவாக இரண்டு நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது
"கர்னாடிகா" அமைப்பு. முதல் நாள் இரண்டு கச்சேரிகளுக்கு நடுவே சற்று
பேசினார் பாடகர் பி.எஸ்.நாராயணசாமி (அதாவது வி.கே.மணிமாறன் கச்சேரி
முடிந்து சுகுணா வரதாச்சாரி கச்சேரி தொடங்கும் முன்) தம் ஐம்பதாண்டுக் கால
நண்பரை, "மிகத் திறமை வாய்ந்தவர், கச்சேரிகள் இல்லையே என்று குமைந்து
கொண்டிருக்காதவர்" என்று பாராட்டினார் பி.எஸ்.என். சிரமமாக இருக்கும்
பாடல்களுக்குக் கூட எளிதாக இசையமைத்துவிடுவாராம்.
இரண்டாம் நாள்
பேச்சு எதுவும் கிடையாது என்றாலும், சசி கிரண் - கணேஷ் நிகழ்ச்சிக்குப்
பிறகு பாட வந்த வேதவல்லி, ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார்.
"பெண் கொடுத்தவர் யாரையா, முருகையா, உமக்கு" என்று நிந்தாஸ்துதி வகையைச்
சேர்ந்த குந்தலவராளி இராகப் பாடல் ஒன்றைக் கேட்டுவிட்டு, மிக நன்றாக
இருக்கிறதே என்று ஒரு பாடகரிடம் எழுதி வாங்கிக் கொண்டு பாட ஆரம்பித்தாராம்
வேதவல்லி. ஆனால் பாடலை எழுதியது யார் என்று தெரியவில்லை.
கடைசியில் ஒரு
நாள் இவர் அந்தப் பாடலை ஒரு கச்சேரியில் பாடுவதைக் கேட்ட கல்கத்தா
கிருஷ்ணமூர்த்தியே,
"இதை யார் எழுதியது தெரியுமோ?" என்று கேட்டாராம்.
"அதுதான் தெரியவில்லை. நானும் பலரிடம் கேட்டுவிட்டேன்" என்றாராம்
வேதவல்லி. தாம் தான் அதை எழுதியவர் என்று சற்று சங்கோஜத்துடன் சொன்னாராம்
கிருஷ்ணமூர்த்தி. ஆர்ப்பாட்டம் சிறிதும் இல்லாத அபூர்வமான குரு அவர்
என்றார் வேதவல்லி. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பல பாடல்களுக்கு
கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி அழகாக மெட்டமைக்க, சஞ்சய், செளமியா எல்லோரும்
பாடி சி.டிக்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றைக் கேட்பவர்கள் கல்கத்தா
கிருஷ்ணமூர்த்தியின் ஆற்றலை நிச்சயம் பாராட்டுவார்கள். --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மொழிபெயர்ப்பு என்றே
தெரியாத அளவுக்கு,
தாகூரையும்
தாராசங்கர் பானர்ஜியையும்
சரத்
சந்திரரையும்
பங்கிம் சந்திரரையும்
தமிழ் வாசகர்களுக்கு
அறிமுகப்படுத்திய
பெருமை த.நா.குமாரசாமிக்கு உண்டு. (பூந்தோட்டம், விடுதலை, ஒட்டுச் செடி,
வீட்டுப் புறா, அன்பின் எல்லை, குறுக்குச் சுவர் என்று பல நாவல்கள்,
"கன்யாகுமரி" என்ற சிறுகதைத் தொகுப்பு என தாமே அசலாகப் படைத்த ஆசிரியர்
த.நா.குமாரசாமி!)
சாந்தி நிகேதன் போய் இரவீந்திரநாத் தாகூரிடமே
கல்வி கற்றவர். அதனால்தானோ என்னவோ,
என்று எத்தனை எத்தனை வங்காள ஆசிரியர்களை அறிமுகம்
செய்திருக்கிறார் த.நா.குமாரசாமி!
இத்தனை வகைவகையான எழுத்தாளர்களின்
படைப்புகளை, வேறு எந்தத் தமிழ் எழுத்தாளரும் மொழிபெயர்த்திருப்பதாகத்
தெரியவில்லை.
சமீபத்தில் அவருடைய நூற்றாண்டு வந்து போனது எப்படி
எவருக்கும் தெரியாமல், பெரிய விழா ஏதும் இல்லாமல் போயிற்றோ, அதேபோல அவர்
பணிகளும் யார் கவனத்தையும் ஈர்க்காமல் போய்விடக்கூடாது. (பொதுவாகவே
எழுத்தாளரோடு அவர் படைப்புகளும் மறக்கப்பட்டுவிடும்!) என்றாலும், அவர்
நூற்றாண்டைத் தொடர்ந்து "அல்லயன்ஸ்" வெளிச்சத்துக்குக் கொண்டு
வந்திருக்கும் இத்தனை நூல்களையும் ஒரு சேர இந்த வாரம் பார்க்க நேர்ந்த
போது, த.நா.குமாரசாமியின் உழைப்பு பிரமிக்க வைத்தது.
ஒரு முறை
"அல்லயன்ஸ்" நிறுவனர் குப்புசாமி அய்யர் திருவண்ணாமலை போய் இரமணரையும்,
அண்ணாமலை தீபத்தையும் தரிசித்துவிட்டு வந்ததும், த.நா.குமாரசாமியிடம் தம்
நிறுவனத்துக்குச் சின்னமாக மலையும்,தீபமும் இருக்க வேண்டும் என்று
விருப்பம் தெரிவித்தாராம். குமாரசாமி அதை "அறிவே விளக்கு" என்று
உருவாக்கிக் கொடுத்தாராம். அதற்காக குப்புசாமி அய்யர் அவருக்கு வெகுமதி
வழங்கினாராம்.