D. K. Pattammal

8 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 16, 2009, 12:03:00 PM7/16/09
to nall...@googlegroups.com

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் காலமானார்

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் இன்று சென்னையில்
காலமானார். அவருக்கு வயது 90.
சிறிது காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் பட்டம்மாள். தாமல்
கிருஷ்ணசாமி பட்டம்மாள் என்கிற டி.கே.பட்டம்மாள் பிறந்தது காஞ்சிபுரம்
நகரில். இவரது தந்தை பெயர் தாமல் கிருஷ்ணசாமி தீக்ஷிதர். பட்டம்மாளின்
தாயார் காந்திமதி என்ற ராஜம்மாவும் ஒரு கர்நாடகப் பாடகியே.
மிகப்பெரிய பாடகி என்றாலும், பட்டம்மாள் முறையாக சங்கீதம் கற்கவில்லை.
கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே தன் திறமையை வளர்த்துக் கொண்டார்.
சுயம்புவாக சங்கீதத்தில் பாண்டித்யம் பெற்றவர் பட்டம்மாள்.
கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்தார். இவரது சம
கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எம்.எல். வசந்தகுமாரிக்கு
மிகச்சிறந்த போட்டியாளராகத் திகழ்ந்தார் பட்டம்மாள்.
அன்றைக்கு இந்த மூவரும் சங்கீத பெண் மும்மூர்த்திகளாகப்
போற்றப்பட்டார்கள். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துஸ்வாமி
தீக்ஷிதரின் பாடல்கள் மற்றும் கீர்த்தனைகளை முழுமையாகக் கற்றவர்
பட்டம்மாள். பின்னாளில் முத்துசாமி தீ்க்ஷிதர், பாபநாசம் சிவன் ஆகிய
மேதைகளின் பாடல்களை மேடைகள் தோறும் பிரபலமாக்கியதில் இவரது பங்களிப்பு
அதிகம்.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் என உலக நாடுகள் பலவற்றில் கச்சேரிகள்
நடத்தியவர் பட்டம்மாள். பல திரைப்படங்களில் பின்னணியும் பாடியுள்ளார்.
கமலஹாஸனின் ‘ஹே ராம்’ படத்தில் வைஷ்ணவ ஜனதோ பாடலை பாடியுள்ளார்
பட்டம்மாள்.
இந்திய அரசின் பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும், சங்கீத
நாடக அகாடமி விருது, சங்கீத சாகர ரத்னா விருது மற்றும் சங்கீத கலாநிதி
விருதினையும் பெற்றவர் பட்டம்மாள். இவரது சகோதரர் டி.கே. ஜெயராமனும்
மிகப்பெரிய கர்நாடக இசைக் கலைஞர்.
பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவருக்கு பேத்தி முறையாவார்.

http://www.paristamil.com/tamilnews/?p=21693

N. Ganesan

unread,
Jul 16, 2009, 12:03:30 PM7/16/09
to nall...@googlegroups.com

On Jul 16, 10:20 am, PENNESWARAN KRISHNA RAO <penneswa...@gmail.com>
wrote:

> வரும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது 19 ஜூலை 2009 அன்று அமரர் பட்டம்மாள் அவர்களின்
> பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன் இசை நிகழ்ச்சி ஒன்றை வடக்கு வாசல் சார்பாக ஏற்பாடு
> செய்திருந்தோம்.
> கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தன் சரித்திரத்தில் இருந்து அனைத்துப் பாடல்களையும்
> பாடுவதாக ஏற்பாடுசெய்திருநதோம்.
> அந்த நிகழ்ச்சியை இப்போது ரத்து செய்து விட்டோம்.
> மறைந்த பட்டம்மாள் அவர்களுக்கு மரியாதை செலு்த்தும் வண்ணம் ஞாயிற்றுக்கிழமை
> வேறு கச்சேரியை நாஙகள் ஏற்பாடு செய்யவில்லை.
> நண்பர்களிடம் ஒரு உதவி.
> பட்டம்மாள் பாடிய பாடலின் இணைப்பை அனுப்பினால் நாளை இசைவிழா துவக்கத்தில்
> அந்தப் பாடலை ஒலிக்கவிட்டு மௌன அஞ்சலி செலுத்தலாம் என்று இருக்கிறேன்
> நாளை மதியத்துக்குள் யாராவது இணைப்பை அனுப்பி உதவுங்கள்

There are 160 songs sung by DKP:
http://www.hummaa.com/music/artist/8750/d+k+pattammal
Click Carnatic or Tamil from this page.

~ NG

The vocalist Damal Krishnaswamy Pattammal (March 28, 1919 - ) is one
of the most popular and respected Carnatic musicians. Pattammal and
her contemporaries M. S. Subbulakshmi and M. L. Vasanthakumari were
popularly referred to as the "female trinity of Carnatic Music". This
trio initiated the entry of women into mainstream Carnatic Music.

Pattammal was born on March 28, 1919 at Kancheepuram in Tamil Nadu,
India. She gave her first public performance in Chennai at the age of
14. She quickly rose to stardom, and her musical career has spanned
more than 65 years.

Pattammal's sweet disposition and humble nature belie the fact that
she started a few revolutionary trends in Carnatic music. She is the
first Brahmin woman to have performed this music publicly, both on
stage and on air. Brahmins ranked as the highest in the caste
hierarchy prevalent in India in the early 20th century, and society
considered it taboo for a Brahmin woman to perform on stage.
Furthermore, Pattammal is also the first woman to have performed
Ragam-
Tanam-Pallavi on stage. Ragam-Tanam-Pallavi (or Pallavi) is the most
difficult concert item in Carnatic music. Before Pattammal, it classed
as a male stronghold. Not only did Pattammal boldly venture into
Pallavi-singing, but she also performed very complex Pallavi-s in
intricate Talas (rhythmic cycles) impressively enough to earn the
respect of her male peers. For this reason, she became dubbed “Pallavi
Pattammal”. Today, many female Carnatic musicians perform Ragam-Tanam-
Pallavi as the main item in their concerts.

Pattammal popularized many compositions of Muthuswami Dikshitar and
Papanasam Sivan. Particularly, she has a reputation as an authority on
the compositions of Muthuswami Dikshitar. She has learnt authentic
versions of Dikshitar's compositions from Ambi Dikshitar (Dikishitar's
grand-nephew) and from Justice T. L. Venkatrama Iyer.

Pattammal has performed in numerous venues throughout India, the
United States, and other countries. Although she received many offers
to sing for films, she only accepted those which involved the singing
of devotional or patriotic songs. She has popularized several
nationalistic compositions of Subrahmanya Bharati, and other
composers.

Pattammal has received several awards and titles throughout her
career. Most notably these include the title “Gana Saraswathi”
bestowed on her by the musician Tiger Varadachariar, the Sangeetha
Kalanidhi (considered the highest accolade in Carnatic music) in 1970,
the Padma Bhushan from the Government of India in 1971, and the Padma
Vibhushan, India's second-highest civilian honor, in 1998.

Pattammal possesses a full-throated voice in the low alto/high tenor
range. Her outstanding musical qualities include an overwhelming
technical expertise, an uncompromising adherence to pitch and rhythm,
and clear enunciation of lyrics. Her performances of shlokas and
viruttams (poetry or verse sung improvisationally without rhythmic
accompaniment) express great emotion. She also has a reputation as a
very disciplined musician. As a child she woke up before dawn and
practised for hours. Throughout her performing career she meticulously
planned her concert items weeks in advance and practised rigorously.

Pattammal's style of singing attracted many students, foremost among
them her younger brother D.K. Jayaraman, who sang with her in several
concerts, and who himself received the Sangeetha Kalanidhi in 1990. A
few of her other popular students include Lalitha Sivakumar, Geetha
Rajashekar, Nithyasree Mahadevan, and Bhavadhaarini Anantaraman.
Pattammal has taught students from several countries.

> www.vadakkuvaa...@gmail.com
> www.penneswa...@gmail.com
> என்னும் முகவரிகளிலும் இணைப்பினை அனுப்பலாம்.  நானும் முயற்சிக்கிறேன்-
> அன்புடன்
> கி.பென்னேஸ்வரன்
> 2009/7/16 N. Ganesan <naa.gane...@gmail.com>

...

read more »- Hide quoted text -

- Show quoted text -- Hide quoted text -

- Show quoted text -

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 21, 2009, 10:33:46 AM7/21/09
to nall...@googlegroups.com
மறைந்த இசை மேதை, சங்கீத கலாநிதி ஸ்ரீமதி பட்டம்மாள் அவர்களைப் பற்றிய ‘யாத்ரா’ என்னும் ஒளிச்சித்திரத்தை இங்கே காணலாம்:
http://www.youtube.com/watch?v=xe1P66B4bXQ
 
அனந்த்
 
2009/7/16 N. Ganesan <naa.g...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages