ராகம் - கரஹரப்ரியா;
தாளம் - சதுஸ்ர ரூபகம் (6) (எடுப்பு 3/4 இடம்)
சந்தக் குழிப்பு:
தந்தன தானான தானன
தந்தன தானான தானன
தந்தன தானான தானன ...... தனதான
கொம்பனை யார்காது மோதிரு
கண்களி லாமோத சீதள
குங்கும பாடீர பூடண ...... நகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர்
செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே
உம்பர்கள் சாமீந மோநம
எம்பெரு மானேந மோநம
ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும்
உன்புக ழேபாடி நானினி
அன்புட னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே
பம்பர மேபோல ஆடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி
பங்கமி லாநீலி மோடிப
யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெ
னும்படி வீறான வேல்தர
என்றுமு ளானேம நோகர ...... வயலூரா
இன்சொல்வி சாகாக்ரு பாகர
செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே!
---------------
குறிப்பு:
முருகனை விசாகன் என்றழைக்கும் திருப்புகழ்.
ஸ்வாமீ என்று பாடினாலும், மூலத்தில்
சாமீ, மானே, மோகா ... ஓரணியாக இருப்பதும்,
டகர ஓசைக்குப் ”பாடீர பூடண” என்பதும் பொருந்துகிறது.
(ஏடுகளைப் பார்க்க இடமுண்டு.)
----------------
பாடல் மூலமும் உரையும்:
http://www.kaumaram.com/thiru/nt0053.html
ஒலிப்பதிவு:
http://www.kaumaram.com/audio_k/grtp0053.html
நன்றி: அனந்த், கனடா
---------------
இன்னும் ஒரு 100 திருப்புகழ்களாவது ஏடுகளில் இருந்து படிக்கப்படாமல்
இருக்கும். தண்டாயுதபாணிக்கு என்று கேட்கப் பிரியம் உள்ளதோ?
அப்போது ஒருவரை/சிலரைக் கொண்டு படிக்க வைப்பான்!
நா, கணேசன்