(1) சரவணபவன் சொந்தச் செலவில் தனக்கு சூனியம் செய்கிறார். (2)அடைக்கலநாதன் வரலாற்றை மறந்து பேசுகிறார். ரெலோ இராணுவத்துக்கு எதிராக சண்டை பிடித்தது குறைவு. புலிகளோடும் தங்கள் மத்தியிலும் சண்டை பிடித்தது அதிகம்.
(3) சுமந்திரன் தான் வன்முறையை ஆதரிக்கவில்லை என்கிறார். ஆனால் புலிகளின் அர்ப்பணிப்பை மெச்சுகிறார்.
(4) கே.வி. தவராசாவுக்கு தேசியப்பட்டியலில் தனது பெயரை இரண்டாவதாகப் போட்டுவிட்டதால் சுமந்தி்ரன் மீது கோபம். ஒரு பெண்ணுக்கு முன்னுரிமை கொடுத்தது அவருக்கு பிடிக்கலை. கனடா வானொலி ஒன்றுக்கு செவ்வி கொடுத்த தவராசா கொஞ்சம் கூட வெட்கம் துக்கம் இல்லாமல் சுமந்திரனைப் பிறாண்டினார்.
(5) தமிழ் அரசுக் கட்சியில் சேருகிறவர்கள் நாடாளுமன்ற நாற்காலி கனவோடுதான் சேருகிறார்கள். பதவிக்கு ஆசைப்பட்டவர்கள் தமிழ் அரசுக்குள் வரக் கூடாது என்பதுதான் தந்தை செல்வநாயகத்தின் கொள்கை. (6) தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சேனாதிராசா. ததேகூ இன் தலைவர் சம்பந்தன் ஐயா. "எனது தெய்வம், எனது தலைவர் பிரபாகரன் என்று சொல்லும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து விலக வேண்டும். இந்த கருத்து வேறுபாடுகள் பாரதூரமானவை.. சனநாயகக் கட்சிகளில் இருக்கும் வேறுபாடுகள்தான்.
தமிழ்மக்கள் புத்திசாலிகள். அரசியலில் சாணக்கியர்கள்.
கடந்த தேர்தல்களில் வி.புலிகளுக்கு நெருக்கமாக இருந்த கஜேந்திரன், கஜேந்திரகுமார்ஈ பத்மினி, கிஷோர், கனகரத்தினம், தங்கேஸ்வரி போன்றவர்கள் படுதோல்வி அடைந்துள்ளார்கள்.
ஏன் சனநாயகப் போராளிகள் கட்சி 2015 இல் யாழ்ப்பாண தேர்தல்மாவட்டத்தில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்கள். கட்டுக்காசு பறிபோய்விட்டது.
சுமந்திரன் நேர்படப் பேசுகிறார். தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக எழுதும் உதயன் நிறுவனருக்கு நியமனம் கொடுக்கக் கூடாது என்று சொன்னது முற்றிலும் சரியே.
மற்றச் சில நா.உறுப்பினர்கள் போல் சுமந்திரன் சும்மா இருந்தால் அவர் மீது யாரும் குறை சொல்லமாட்டார்கள்.
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும், ஜெனீவாவிலும் தென்னிலங்கையிலும் அவர் ஓயாது கட்சிக்காக உழைக்கிறார்