ஒவ்வொரு மொழிக்கும் சொற்களஞ்சியம், இலக்கணம், இலக்கியம் இருக்குமல்லவா ?
கூகிள் அடையாளம் கண்டுள்ள இந்த மொழிகளை நாம் முதன்மையாக எடுத்துக் கொள்வோம்.
இந்த மொழிகளில் உள்ள சொற்களஞ்சியம், இலக்கணம், இலக்கியம் பற்றிய தகவல்களை அந்த
மொழி அறிந்த அறிஞர்கள் அல்லது அந்த மொழி தெரிந்த தமிழ் ஆர்வலர்கள் இது பற்றித்
தொகுத்து அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன். எடுத்துக் காட்டாக......
தமிழ் மொழிக்கு
சொற்களஞ்சியம் = சூடாமணி நிகண்டு, பிங்கல நிகண்டு, சேந்தன் திவாகர நிகண்டு,
இலக்கணம் = தொல்காப்பியம், நன்னூல், சிந்துப் பாவிலக்கணம்.
இலக்கியம் = சங்க நூல்கள், 19 ஆவது நூற்றாண்டுகள் வரை படைக்கப்பட்ட பல்வேறு நூல்கள் பட்டியல்.
For Tamil Language
Dictionary = soodamani nigandu., pingala nigandu, thivaagara nigandu
Grammer = tholkaapiam, nannool, sinthuppavilakkanam
Literature = sangam literature, from first to 19 th centuary literature list.
ஒவ்வொரு மொழிக்குமான இந்தப் பட்டியலை தமிழ் ஆர்வலர்கள் அல்லது அந்த மொழி தெரிந்த
அறிஞர்கள் திரட்டி மின் அஞ்சல் செய்யவும். அதனைப் பட்டியலாக்கலாம்.
கூகிள் நிறுவனம் இந்த முயற்சியை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். எனவே
கூகிள் நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள் இந்தச் செய்தியை கூகிள் நிறுவனத்திற்கு அனுப்பி
இது பற்றி சிந்திக்குமாறு வேண்டுகோள் அனுப்பவும்.
அன்புடன்
