நீங்கள் பெற்றோரா ? ஆசிரியரா ? மக்கள் நலம் விரும்புபவராா ? உங்களிடம் ஓர் அன்பான வேண்டுகோள்.
இளம் தலைமுறையினரை நாம் தான் முறைபடுத்த வேண்டும். 10 முதல் 15 வயதுவரை உள்ள இவர்களிடம் தமிழ்ச் செய்தித்தாளைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். படித்து விட்டார்கள் என்றால் வாழ்த்துங்கள். படிக்கத் தடுமாறுகிறார்கள் அல்லது படிக்கவே தெரியவில்லை என்றால் என்ன செய்யப் போகிறீர்கள் ? இது பள்ளியின் வேலை நான் என்ன செய்வது என்று வீணே இருக்கப் போகிறீர்களா ? அல்லது எப்படியாவது இவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிடுகிறீர்களா ? ஒவ்வொருவரும் தன் அருகில் உள்ள ஒருவரைச் செய்தித்தாள் படிக்க வைத்தால் போதும். நீங்கள் அவருக்குக் கண் கொடுத்தவராகிறீர்கள் ? நான் சொல்வது சரி என்றால் இயங்குங்கள். தவறு என்றால் கவலைப் படாமல் உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்.