தமிழ் கற்றல் கையேட்டுக்குப்
பணம் அனுப்புகிறவர்கள் முகவரியும் அனுப்ப வேண்டும் அல்லவா? அருள்கூர்ந்து பணம் அனுப்பி விட்டு உங்களின் அஞ்சல் முகவரியும், உங்கள் தொலைபேசி எண்ணும் குறிப்பிட்டுக் குறுஞ்செய்தியோ, மின் அஞ்சலோ, அனுப்பவும்.
கையேட்டுடன் எப்படி கையேட்டைப் பயன்படுத்துவது என்று ஒரு துண்டறிக்கை வைத்து இருப்பேன். அருள்கூர்ந்து அதைப் படிக்கவும். எப்படிச் செய்வது என உங்களுக்குள் உள்வாங்கவும். (ஒன்றுமே தெரியாதவர்களுக்கு (1,2,3 வகுப்புகள்) ஒரு முறை, தட்டுத் தடுமாறிப் படிப்பவர்களுக்கு (5 முதல் 10 ஆம் வகுப்புவரை) ஒரு முறை என இரண்டு முறைகள் உள்ளன. இரண்டு முறைகளையும் படித்து உங்களுக்குள் உள்வாங்கிக் கொள்ளவும்.
ஓர் ஆசிரியர், எழுத்து எழுதுமுறை, எழுத்து ஒலிப்புமுறை என இணையதளத்தில் தேடி அறிமுகப்படுத்தப் போகிறேன் என்றார். அவை எதுவும் தேவையில்லை. வேறு எந்தக் கற்றல் கற்பித்தல் கருவிகளையும் பயன்படுத்த வேண்டியதில்லை. கையேடுகளை எப்படிப் பயன்படுத்துவது என்ற முறையை நன்கு உள்வாங்கி, அதன்வழி செயற்பட்டாலே போதும். அனைத்து மாணவர்களும் படிப்பார்கள். அனைவரும் செய்தித்தாள் படிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.
இந்த மாணவருக்குப் படிக்க வராது என்று எவரையும் ஒதுக்கி விடாதீர்கள். அந்த மாணவர்தான் நாம் எப்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதற்கு நமக்கு ஆசிரியராக அமைபவர். எனவே அருள்கூர்ந்து அனைவரையும் படிக்க வைக்க இந்தக் கையேட்டினைப் பயன்படுத்தி வெற்றி பெறவும்.
வெற்றி பெற்றவர்கள் தங்கள் பெயரையும், பள்ளி முகவரியையும், வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையையும் அனுப்பினால் அவற்றை என் இணையதளத்தில் (
http://www.pollachinasan.co.in/tt/index.htm) இணைக்கிறேன். உங்களுக்கு என் அன்பு வாழ்த்துகள்.
அன்புடன்
skype ID: pollachinasan1951, தொலைபேசி எண் 97 88 55 2061, 8667 421 322
