எனது நண்பர்களுக்கு
ஓர் அன்பான வேண்டுகோள்.
உங்களிடம் ஆன்டிராய்டு கைபேசி
உள்ளது அல்லவா.
இணைப்பில் உள்ள தமிழ்கற்பிக்க உதவுகிற
32 அட்டைகளுக்கான பிடிஎப்ஃ (PDF) படவடிவக்
கோப்பை இறக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இதைத் திறக்க acrobat reader வேண்டும்.
உங்கள் பகுதியில் 6 முதல் 10 வகுப்பு படிக்கும்
மாணவர்களிடம் (தனியார் பள்ளி/ அரசுப் பள்ளி எங்கு
படித்தாலும் சரி) தமிழ்ச் செய்தித்தாளைக் கொடுத்துப்
படிக்கச் சொல்லவும். படித்து விட்டார்கள் என்றால்
வாழ்த்துங்கள். படிக்கவில்லை என்றால் இறக்கி
வைத்துள்ள பிடிஎப்ஃ (PDF) படவடிவக் கோப்பைத்
திறந்து ஒவ்வொன்றாகப் படிக்கச் சொல்லவும்.
32 அட்டைகளையும் வரிசையாக முழுமையாகப்
படிக்கச் சொல்லவும். எந்த அட்டையில் படிக்கத்
தடுமாறுகிறார்களோ அந்த அட்டையில் உள்ள
எழுத்துகள் அவர்களுக்குத் தெரியவில்லை.
அந்த எழுத்தை மட்டும் சொல்லிக் கொடுத்தால்
போதும். அவர்கள் படித்து விடுவார்கள்.
படிக்கத் தெரியாத ஒருவரை நீங்கள் படிக்க
வைத்துவிட்டால், நீங்கள் அவருக்குக் கண்
கொடுத்தவராகி விட்டீர்கள். உங்களை அந்த
மாணவர் மறக்கவே மாட்டார். அருள்கூர்ந்து
முயன்று பார்க்கவும். படிக்கத் தெரியாத
10 மாணவர்களை நீங்கள் படிக்க வைத்து
விட்டாலே நீங்கள் தமிழுக்குத் தொண்டு
செய்தவராகி விட்டீர்கள்.
வாழ்த்துகளுடன்
